இன்றைய போட்டோ

18 Aug 2022
1day ago
1 / 21
கப்பல் வருகை எப்போது பொதுமக்கள் எதிர்பார்ப்பு...ஒரே நேரத்தில் இரண்டு கப்பல்கள் நிறுத்து வைக்க வசதியாக பிரத்யோகமாக அமைக்கப்பட்டுள்ள கப்பல் அணையும்தளம் பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ளது. இடம். கடலூர் துறைமுகம் முதுநகர்.
1day ago
2 / 21
கானல் நீர் : பகல் முழுவதும் சுட்டெரித்த வெயிலில் சாலையில் தோன்றிய கானல் நீர். இடம் : தேனி மாவட்டம் க.விலக்கு - மதுரை ரோடு.
1day ago
3 / 21
ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா மற்றும் நிப்போ இண்டோ நேஷனல் இணைந்து நடத்தும் 11வது ஸ்ரீ ஜெயந்தி இசை விழாவில் விவேக் சதாசிவம் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது.
1day ago
4 / 21
ஊட்டி அருகே தொட்டபெட்டா சிகரத்திலிருந்து, இயற்கை காட்சிகளை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்.
1day ago
5 / 21
சென்னை, கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணன், ராதை வேடமணிந்து வந்த சிறுவர், சிறுமியர்கள்.
1day ago
6 / 21
ஒளி வெள்ளம்: இரவில் வாகனங்களின் விளக்கொளியில் வண்ணமயமாக ஜொலித்த திண்டுக்கல்- திருச்சி ரோடு ரவுண்டான.
1day ago
7 / 21
மெட்ரோ பக்கத்திற்கான ஸ்டோரி : பாரம்பரியம் மிக்க தஞ்சை ஓவியங்களுக்கு உயிர் கொடுக்கும் கைவினைஞர்கள்.
1day ago
8 / 21
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ள கிருஷ்ணர் பொம்மைகள்.
1day ago
9 / 21
முறைகேடாக இயங்கும் குவாரிகளை மூடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மணல் லாரி, எம்சாண்ட் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை.
1day ago
10 / 21
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கொளத்தூரில் உள்ள ஜெயகோபால் கரோடியா பள்ளி மாணவிகள் கோலாட்டம் ஆடி கிருஷ்ண ஜெயந்தியை மகிழ்ச்சியாக கொண்டாடினர். இடம்.சென்னை
1day ago
11 / 21
கோவை, காளப்பட்டி கெட்டிமேளம் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.
1day ago
12 / 21
76 வது மாநில அளவிலான சீனியர் பிரிவு நீச்சல் போட்டி வேளச்சேரி நீச்சல் குள வளாகத்தில் நடந்தது. இதில் கலந்துகொண்ட நீச்சல் விளையாட்டு வீரர்கள்.
1day ago
13 / 21
எப்பொழுதும் பரபரப்பாக இயங்கும் ஓ.எம்.ஆர் சாலையில் நடை மேம்பாலம் அருகில் இருந்தும் அதனை பயன்படுத்தாமல் ஆபத்தான முறையில் சாலையை கடக்கும் பொதுமக்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.இடம் : கந்தஞ்சாவடி.
1day ago
14 / 21
செஞ்சி தாண்டாசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த 95 வயதுடைய மூதாட்டி சவுரியம்மாள் தனது சொத்துக்களை மீட்டுத் தர விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் வந்தபோது நடக்க முடியாமல் சிரமப்பட்ட மூதாட்டிக்கு கலெக்டர் மோகன் உடனடியாக புதிய மூன்று சக்கர சைக்கிள் வழங்கி உதவினார்.
1day ago
15 / 21
சென்னையில் நிலவும் வறட்சியான வானிலையால் நீர் வற்றி காட்சியளிக்கும் பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் இரைக்காக காத்திருக்கும் பறவைகள்.இடம் : பெரும்பாக்கம்.
1day ago
16 / 21
கோவை செட்டிபாளையம் கோல்ப் கிளப் மைதானத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்.
1day ago
17 / 21
திருப்புவனம் ஒன்றியம் கிளாரி காலனியில் குளியல் தொட்டி குடி நீராகவும் பயன்படுத்துகிறார்கள்.பாதுப்பு இன்றி சுற்றிலூம் புதருக்குள் உள்ளது.
1day ago
18 / 21
மக்காச்சோளம் பயிரிட உழவு பணி நடைபெற்று வருகிறது. இடம்: எரிச்சநத்தம்.
1day ago
19 / 21
வெளிமாநில இருந்து வந்த கார் மற்றும் வேன்களுக்கு ஆன்லைன் பர்மிட் கிடைக்காததால் புதுச்சேரி எல்லையான கோரிமேடு போக்குவரத்து சோதனை சாவடியில் பல மணி நேரமாக காத்திருந்த ஓட்டுநர்கள்.
1day ago
20 / 21
பஸ் படியில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்கள். இடம்: கோவை ஆத்துப்பாலம்
1day ago
21 / 21
கோவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இடம்: கொடிசியா ரோடு
Advertisement