இன்றைய போட்டோ

14 Aug 2022
13sec ago
1 / 36
75 வது சுதந்திர தின அமிர்த பெருவிழாவையொட்டி திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் நிர்வாகிகள் தேனி மாவட்டம் வைகை அணையில் தேசியக் கொடியுடன் பாரத நாட்டின் பெருமை குறித்து பாடல் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
43sec ago
2 / 36
கேரள மாநிலம் செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால் நீண்ட வரிசையில் பல மணி நேரமாக காத்திருந்த பயணிகள். இடம்: கோவை உக்கடம் பஸ் ஸ்டாண்ட்.
48sec ago
3 / 36
தினமலர் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி இணைந்து வழங்கும் உங்களால் முடியும் டி.என்.இ.ஏ., தமிழ்நாடு இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி குன்றத்தூரில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி , கிண்டி பொறியியல் கல்லூரி பேராசிரியர் ராஜேந்திர பூபதி மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் ஸ்ரீ ராம் .
23sec ago
4 / 36
தட்சிண பாரத் ஹிந்தி பிரசார சபா சார்பில் உடுமலை ஆர்.கே.ஆர்.கிரிக்ஸ் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதும் மாணவிகள்.
35sec ago
5 / 36
தினமலர் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி இணைந்து வழங்கும் உங்களால் முடியும் டி.என்.இ.ஏ., தமிழ்நாடு இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி குன்றத்தூரில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் மாணவ ,மாணவியர்கள் தங்களது பெற்றோர்களுடன் திரளாக கலந்து கொண்டனர்.
47sec ago
6 / 36
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தங்கள் ஆட்டோக்களில் தேசிய கொடியை பறக்கவிட்டுள்ள ஆட்டோ ஓட்டுனர்கள்.இடம்: ராயப்பேட்டை, சென்னை.
57sec ago
7 / 36
தினமலர் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி இணைந்து வழங்கும் உங்களால் முடியும் டி.என்.இ.ஏ., தமிழ்நாடு இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி குன்றத்தூரில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கல்லூரிகள் மற்றும் பாடபிரிவுகள் குறித்து கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசினார் .
24sec ago
8 / 36
தினமலர் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி இணைந்து வழங்கும் உங்களால் முடியும் டி.என்.இ.ஏ., தமிழ்நாடு இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி குன்றத்தூரில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் திறன் வளர்ப்பு குறித்து சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் ஸ்ரீ ராம் பேசினார்.
43sec ago
9 / 36
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தேசியக்கொடி பட்டொளி வீசி பறந்தது.
1hours ago
10 / 36
75 சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிவகங்கை அருகே காளையார்கோவிலில் வளாகத்தில் தேசிய கொடிகள் பறந்தது.
1hours ago
11 / 36
விடுமுறை நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள்
1hours ago
12 / 36
கோவை, ராம் நகர் ஸ்ரீ ஐயப்ப பூஜா சங்கத்தில் நடந்து வரும் ஆடி உத்ஸவ் ஸ்ரீ ஜெயதேவர் அஷ்டபதி நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பக்தர்கள்.
1hours ago
13 / 36
விடுமுறை நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள்
1hours ago
14 / 36
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயில் கோபுரத்தில் அனுமதி இன்றி தேசிய கொடி ஏற்றிய பா.ஜ.,கட்சி பிரமுகர்கள்.
1hours ago
15 / 36
விடுமுறை தினத்தையொட்டி சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்.
1hours ago
16 / 36
சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை குறிச்சி குளத்திற்கு நடுவே கட்டப்பட்டுள்ள தேசியக்கொடி.
2hours ago
17 / 36
மூன்று நாள் அரசு விடுமுறையொட்டி புதுச்சேரி வருகை தந்த வெளி மாநில சுற்றுலாப் பயணிகள்.
2hours ago
18 / 36
தொடர் விடுமுறை காரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய கொளுத்தும் வெயிலும் பொருட்படுத்தாமல், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
2hours ago
19 / 36
75 வது சுதந்திர தின விழாவையொட்டி அனைவரது இல்லங்களிலும் தேசிய கொடியை ஏற்ற வலியுறுத்தி மூன்றாம் வகுப்பு மாணவர் தேவேஷ்சாய் திருவண்ணாமலை கிரிவலப் பாதை மலையடிவாரத்தில் பெரிய பாறையின் மீது அமர்ந்து தேசிய கொடி ஏந்திய படி பல்வேறு யோகாசனங்களை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
2hours ago
20 / 36
இது பனிமூட்டம் அல்ல...:: மதுரை ஆனையூர் தமிழ்நகர் மெயின் ரோட்டில் வாகனங்கள் செல்லும்போது எழும் தூசி தான்.
2hours ago
21 / 36
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனல் தலைமையில் பா.ஜ., வினர் அமைதி ஊர்வலமாக சென்றனர்.இடம்: தி.நகர்.
2hours ago
22 / 36
தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டு புகைப்பட கண்காட்சியை துவக்கிவைத்து பார்வையிட்ட மத்திய இணை அமைச்சர் முருகன்.இடம்: கீழ்ப்பாக்கம், சென்னை.
2hours ago
23 / 36
தேனி மாவட்டம் வைகை அணை முழு அளவு எட்டியுள்ளதால் மதுரை திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் நிர்வாகிகள் தேசியக்கொடியுடன், மலர் தூவி மரியாதை செய்தனர்.
3hours ago
24 / 36
தொடர் விடுமுறையை அடுத்து தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
3hours ago
25 / 36
நாட்டின் 75 வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பிரிவினைவாத அதிர்ச்சி தின நினைவு நாள் கோவை கூட்செட் ரோட்டில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது, இதையொட்டி நடந்த புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட மாணவிகள்.
4hours ago
26 / 36
தினமலர் நாளிதழ் சார்பில் இன்று(ஆக.,14) திருப்பூரில் நடந்த சுதந்திர தின பவள விழா மெல்லோட்டத்தில், கொண்டு வரப்பட்ட 450 உயரம் கொண்ட தேசியக்கொடி.
4hours ago
27 / 36
தினமலர் நாளிதழ் சார்பில் இன்று(ஆக.,14) திருப்பூரில் நடந்த சுதந்திர தின பவள விழா மெல்லோட்டத்தில் பல்லாயிரகணக்கானோர் கலந்து கொண்டனர்.
5hours ago
28 / 36
கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் 75 வது சுதந்திர தின விழாயொட்டி போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.
6hours ago
29 / 36
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி மாணவர்கள், தேசிய கொடிகளை ஏந்தி பேரணியாக சென்றனர். இடம் : அண்ணா ஆர்ச்.
7hours ago
30 / 36
ஊட்டியில், ஜெயின் சங்கத்தினர் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஊர்வலமாக வந்து கொண்டாடினர்.
4mins ago
31 / 36
தினமலர் சார்பில், திருப்பூரில் நடந்த சுதந்திர தின பவள விழா மெல்லோட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
7hours ago
32 / 36
சுதந்திர தினத்தை முன்னிட்டு உடுமலை நக்கீரர் வீதியில் உள்ள வீடுகளில் தேசிய கொடி ஏற்றியுள்ளனர்.
8hours ago
33 / 36
ஊட்டியில், ஜெயின் சங்கத்தினர் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஊர்வலமாக வந்து கொண்டாடினர்.
8hours ago
34 / 36
75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை வ.உ.சி., மைதானத்தில், போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.
14hours ago
35 / 36
கோவை செஞ்சிலுவை சங்கம் ரவுண்டானா சுதந்திர தினத்தை முன்னிட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
18hours ago
36 / 36
சுதந்திர தினத்தை முன்னிட்டு கடலூர் கலெக்டர் அலுவலகம் மூவர்ண கொடி நிறத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
Advertisement