இன்றைய போட்டோ

29 Sep 2022
1day ago
1 / 11
புதுச்சேரி தமிழ் சங்கத்தில் புதுவை தமிழ் சங்கம் கவிஞர் தமிழ் ஒளி விழாவில் சிறந்த சேவைக்கான விருதை வழங்கப்பட்டது.
1day ago
2 / 11
மதுரையில் நடந்த அ.தி.மு.க., இடைக்கால பொதுசெயலாளர் பழனிச்சாமி பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசிய தேர்தல் அறிக்கை ஒளிப்பரப்பட்டது.
1day ago
3 / 11
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருகல்யாண மண்டபத்தில், நவராத்திரி நான்காம் நாள் விழாவில், மனோன்மணி அலங்காரத்தில் பராசக்தியம்மன் அருள் பாலித்தார்.
1day ago
4 / 11
வடபழனி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி சக்தி கொலு நான்காவது நாள் விழாவை, பழம்பெரும் நடிகை சச்சு மற்றும் கோவில் குருக்களின் இல்லத்தரசிகளும், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
1day ago
5 / 11
மின் துறையை தனியார் மாயமாக்குவதை கண்டித்து மின் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் புதுச்சேரி கடற்கரை சாலையில் மின்விளக்குகள் தெரியாமல் இருண்டு கிடைக்கிறது.
1day ago
6 / 11
தண்ணீரில் முகம் காட்டும் வெண்மேகங்கள்.இடம்: திருப்புத்தூர் சாம்பா ஊரணி.
1day ago
7 / 11
புதுச்சேரியில் ஏற்பட்ட மின்தடையால் மறைமலை அடிகள் சாலை புதிய பஸ் நிலையம் எதிரில் அப்பகுதி பொதுமக்கள் 5 மணி நேரமாக சாலை மறியல் செய்தனர்.
1day ago
8 / 11
உலக இதய தினத்தை முன்னிட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இருதவியல் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இடம்: கோவை கலெக்டர் அலுவலகம் அருகில்.
1day ago
9 / 11
மின்கட்டணம் உயர்வு,விலைவாசி உயர்வை கண்டித்து விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த அ.தி.மு.க.. பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் பழனிச்சாமி.
1day ago
10 / 11
சூரியன் தன் பொன்னான கதிர்களால் பூமியைத் தொட்டு அழகு படுத்திய இடம் கோவை குறிஞ்சி குளம்.
1day ago
11 / 11
திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு பிரேமா பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
Advertisement