இன்றைய போட்டோ

06 Dec 2022
1hours ago
1 / 40
கார்த்திகை தீபா விழாவை முன்னிட்டு திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் கோயிலில் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் ஜொலித்தன.
2 / 40
சென்னை வடபழனி ஆண்டவர் கோயில் கோபுரங்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. விழாவை முன்னிட்டு கோவிலில் பாரம்பரிய முறைப்படி பக்தர்களுக்கு இனிப்பு கார்த்திகை பொரி உருண்டை பிரசாதமாக வழங்கப்பட்டது
3hours ago
3 / 40
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் கோபுரத்தின் மேல் மகாதீபம் ஏற்றப்பட்டது.
3hours ago
4 / 40
சென்னை வடபழனி ஆண்டவர் கோயில் கோபுரங்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.முன்னதாக கார்த்திகை தீபங்களுக்கு கோயில் கொடி மரம் முன்பாக சிறப்பு பூஜை செய்யப்பட்டது
3hours ago
5 / 40
கார்த்திகை தீபத்தை ஒட்டி கோவை மருதமலை சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
4hours ago
6 / 40
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா பத்தாம் நாளான 2668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபத்தை அருணாசலேஸ்வரர் கோவில் தங்க கொடி மரத்திலிருந்து ரசித்த பக்தகோடிகள்
4hours ago
7 / 40
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
4hours ago
8 / 40
குரோம்பேட்டை குமரன்குன்றம் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிநாதர் சுவாமி கோயிலில் வான வேடிக்கையுடன் மகாதீபம் ஏற்றப்பட்டன.
4hours ago
9 / 40
சங்கரா ஹாலில் ராஜஸ்தான் கலைக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள சிலைகளை ஆர்வமுடன் பார்வையிடும் பெண்.
4hours ago
10 / 40
பச்சை நிறமே...பச்சை நிறமே...: பசுமை போர்த்திய புல்தரை போல் கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் வண்ணம் ரம்யமாக காட்சியளிக்கும் நெற்பயிர்கள். இடம்: குச்சனூர்.
5hours ago
11 / 40
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த பயணிகளின் பைகளை சோதனையிட்ட போலீசார்.
5hours ago
12 / 40
வங்கக் கடலில் புதியதாக உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து. கடலூரில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சொல்லாமல் விசைபடகுகளை கரையோரத்தில் நிறுத்தி வைத்துள்ளார் இடம். முதுநகர் கடலூர்.
5hours ago
13 / 40
மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியை சேர்ந்த 18 ஆயிரம் மீனவர்களுக்கு மறு உத்தரவு வரும் வரை யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என புதுச்சேரி மீன்வளம் மீனவர் நலத்துறை சார்பில் மீனவர்கள் மொபைல் எண்ணிற்கு (எஸ்எம்எஸ்) குறுஞ்செய்தி அனுப்பும் பணி நடந்தது.
5hours ago
14 / 40
திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி செல்லும் பைபாஸ் சாலையில் எறையானூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் டாரஸ் லாரி மோதியதில் இருசக்கர வாகனம் லாரியில் சிக்கிக்கொண்டது.
5hours ago
15 / 40
சென்னையில் நாளுக்கு நாள் அதிகாலையில் பனிப்பொழிவு அதிகளவில் காணப்படுகின்றன.இடம்: பெரம்பூர் ரயில் நிலையம்.
6hours ago
16 / 40
புதுச்சேரி உப்பளம் ராஜிவ் உள் விளையாட்டு அரங்கில் நடந்த தேசிய அளவிலான கபடி போட்டியில் சோழா வீரன்ஸ் - ஆரவள்ளி ஆரோஸ் அணிகள் மோதின.
6hours ago
17 / 40
திரு கார்த்திகையை முன்னிட்டு குன்றத்தூர் முருகன் கோயிலுக்கு சாமி தரிசனத்திற்க்கு வந்த பக்தர்கள் இடம் : குன்றத்தூர் .
6hours ago
18 / 40
கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ பணிமனையில் நள்ளிரவில் ரயில்களில் நடக்கும் பராமரிப்பு மற்றும் தூய்மை பணிகள்.
7hours ago
19 / 40
கிண்டி ராஜ்பவனில் இறைதேடி சுற்றித்திரியும் மான்கள். இடம்: கிண்டி, சென்னை
7hours ago
20 / 40
விழுப்புரம் ஸ்ரீ ஜெயந்திரா சரஸ்வதி வித்யாலயா மணிவிழா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தினமலர் பட்டம் சார்பாக வினாடி வினா போட்டி நடைபெற்றது. பள்ளியின் செயலாளர் திரு பி கே ஜனார்த்தனன் அவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து பரிசுகளை வழங்கினார் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர் .
7hours ago
21 / 40
சென்னையில் புயலின் முன்னெச்சரிக்கையாக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லதடைவித்தையொட்டி மீன் வலைகள் பின்னும் பணியில் ஈடுபட்டிருக்கும் மீனவர்.இடம்: காசிமேடு.
7hours ago
22 / 40
கடலூர் அடுத்த திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத பிரமமோற்சவத்தை யொட்டி தேர் திருவிழா நடந்தது.
7hours ago
23 / 40
மாண்டஸ் புயல் எச்சரிக்கை முன்னெடுப்பு நடவடிக்கையில் குறித்து, புதுச்சேரி தலைமை செயலகத்தில் கலெக்டர் வல்லவன் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
24 / 40
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு செல்வதற்காக புதுச்சேரி பஸ்நிலையத்தில் பக்தர்கள் மற்றும் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
25 / 40
புதுச்சேரியில் விபத்தில் காயம் பட்டவர் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலன் இன்றி இறந்ததால் தாய் மற்றும் உறவினர்கள் முற்றுகையில் ஈடுபட்டனர்.
7hours ago
26 / 40
சென்னையில் நிலவிய வானிலை மாற்றத்தால் நண்பகல் வரை நீடித்த பனிப்பொழிவு.இடம் : அடையாறு.
7hours ago
27 / 40
புதுச்சேரியில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மார்க்கெட்டில் பூக்களின் விலை உச்சத்தில் உள்ளது முள்ளரும்பூ பூ 100 கிராம் நூறு ரூபாய்க்கு விற்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் உதிரி பூக்களுக்கு திசை திரும்பினர்
7hours ago
28 / 40
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடந்தது
7hours ago
29 / 40
மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையிலான இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. இடம் : கொளத்தூர் - ரெட்டேரி சந்திப்பு.
8hours ago
30 / 40
மெரினா கடற்கரையில், சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தர பாதையை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
8hours ago
31 / 40
சென்னை , கிண்டி ராஜ்பவன் வளாகத்தில் அபம்பேத்கார் 66 வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திரு உருவ சிலையை திறந்து வைத்து மரியதை செலுத்திய கவர்னர் ரவி. உடன் அவரது மனைவி மற்றும் மத்திய அமைச்சர் முருகன் , தமிழக அமைச்சர் கயல்விழி , தலைமை செயலர் இறையன்பு உள்ளனர். இடம் : கிண்டி .
8hours ago
32 / 40
சென்னையில் புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்களின் படகுகளை கிரேன் மூலமாக கரையோரத்தில் பாதுகாப்பாக எடுத்து செல்லப்படுகின்றன.இடம்: காசிமேடு மீன்பிடி துறைமுகம்.
8hours ago
33 / 40
மானாமதுரை சிப்காட் மின்வாரிய அலுவலகப் பகுதியில் ஒரே அளவு உயரமுள்ள மின்கம்பங்கள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
9hours ago
34 / 40
மார்கழி மாதத்தையொட்டி வீடுகளில் வண்ணக் கோலங்கள் போடுவதற்காக கலர் கோலமாவுகள் தயார் செய்து காய வைக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளி. இடம். திண்டிவனம் அடுத்த அருவாப்பாக்கம்.
9hours ago
35 / 40
ஊட்டி தாவரவியல் பூங்கா முன்பு, நகராட்சி சார்பாக நடைபாதை வியாபாரிகளுக்காக கடைகள் கட்டப்பட்டு வருகிறது.
10hours ago
36 / 40
ஊட்டி தாவரவியல் பூங்கா, கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கும் மலர்கள்.
10hours ago
37 / 40
அம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் திண்டிவனம் மாவட்ட செயலாளர் ஜெயராஜ்.
13hours ago
38 / 40
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீபத் திருவிழா பத்தாம் நாளில் முக்கிய நிகழ்வாக ஏற்றப்பட்ட பரணி தீப மடக்கில் குருக்கள் கையில் தீபஜோதியாய் பிரகாரம் வலம் வந்து போது 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என பக்தி கோஷத்துடன் தரிசனம் செய்த பக்தர்கள்.
15hours ago
39 / 40
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா பத்தாம் நாளான இன்று அதிகாலை கருவறை முன் ஏற்றப்பட்ட பஞ்சமுக தீபம் காட்சியளித்தார்.
16hours ago
40 / 40
வடபழனி ஆண்டவர் கோயிலில் நேற்று கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு 108 குத்து விளக்குகள் பக்தர்களால் ஏற்றி வைக்கப்பட்டது
Advertisement