இன்றைய போட்டோ

05 Feb 2023
1hours ago
1 / 21
தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.இடம்: பூங்கா நகர், பிராட்வே.
2hours ago
2 / 21
சென்னையில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்படும் நிலையில், மெரினா அருகே கடலில் அலையோடு விளையாடும் சிறுவர்கள்.
2hours ago
3 / 21
புதுச்சேரி வம்பா கீரப்பாளையம் பகுதியில் உள்ள லைட் ஹவுஸ் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட உள்ளது.
2hours ago
4 / 21
சென்னையில் அதிகாலை வேளையில் பனிப்பொழிவில் ஊர்ந்து செல்லும் ரயில்.இடம்:எர்ணாவூர்.
2hours ago
5 / 21
தைப்பூச திருவிழாவையொட்டி கோவை மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
2hours ago
6 / 21
தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை கந்தகோட்டம் கோவிலில் முத்துகுமாரசாமி உற்சவர் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இடம்: பூங்கா நகர், பிராட்வே.
7 / 21
சுவாமி விவேகானந்தா சிலம்பக்கூடம் சார்பில், ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக இரட்டை கம்பு சிலம்பம் சுற்றி உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற மாணவ- மாணவியர்.. இடம் : ஷெனாய் நகர், சென்னை.
4hours ago
8 / 21
சுவாமி விவேகானந்தா சிலம்பக்கூடம் சார்பில், ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக இரட்டை கம்பு சிலம்பம் சுற்றி உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற மாணவ- மாணவியர்.. இடம் : ஷெனாய் நகர், சென்னை.
5hours ago
9 / 21
கடலூர் புதுப்வண்டிப்பாளையம் சுப்பிரமணியர் சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களின் கூட்டம்.
6hours ago
10 / 21
தை பூசத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் அறுபடை வீடு முருகன் கோவிலில் வழிபாடு செய்வதற்கு குவிந்த பொதுமக்கள் கூட்டம்.
7hours ago
11 / 21
உடுமலையில் விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது.
3mins ago
12 / 21
தைப்பூசத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள, வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
7hours ago
13 / 21
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை உக்கடம் பகுதியில் நேரடி கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் கொள்முதலுக்காக கொண்டுவரப்பட்ட நெல்மணிகளின் ஈரப்பதத்தை, தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில், கூடுதல் செயலர் ராதாகிஷ்ணன்,. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் .
7hours ago
14 / 21
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை புத்தூர் பகுதியில் பருவம் தவறி பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாரான சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது. அதனை, விவசாயிகள் வேதனையுடன் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியிடம் காண்பித்தனர். அருகில், கூடுதல் செயலர் ராதாகிஷ்ணன்,. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் .
7hours ago
15 / 21
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை புத்தூர் பகுதியில் பருவம் தவறி பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாரான சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது. அதனை, விவசாயிகள் வேதனையுடன் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியிடம் காண்பித்தனர். அருகில், கூடுதல் செயலர் ராதாகிஷ்ணன்,. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் .
10hours ago
16 / 21
கடலூர் புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணியர் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆறாம் காலை யாகசாலை பூஜை நடந்தது.
11hours ago
17 / 21
கடலூர் மாவட்டம் வடலூரில் ராமலிங்க அடிகளார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
13hours ago
18 / 21
வடலூரில் இராமலிங்க அடிகளார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
13hours ago
19 / 21
வடலூரில் இராமலிங்க அடிகளார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண திரண்ட பக்தர் கூட்டத்தில் ஒரு பகுதி
15hours ago
20 / 21
புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி குபேரன் நகரில் ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோயிலில் பத்தாம் ஆண்டு கும்பாபிஷேக விழாவில் மூன்றாம் கால மூல மந்திர ஜபம் ஹோமம் நடந்தது.
17hours ago
21 / 21
புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி குபேரன் நகரில் ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோயிலில் பத்தாம் ஆண்டு கும்பாபிஷேக விழாவில் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
Advertisement