இன்றைய போட்டோ

27 Mar 2023
1hours ago
1 / 23
கோரிமேடு அன்னை தெரசா அறிவியல் கல்வி பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவர்களின் ஒளி விளக்கு ஏற்றி உறுதிமொழி எடுக்கும் விழாவில், விளக்கேற்றி உறுதிமொழி எடுத்த மாணவிகள்.
1hours ago
2 / 23
பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறார் இலக்கியத் திருவிழா துவங்கியது இதில் இடம்பெற்ற மாணவ - மாணவியரின் நடன நிகழ்ச்சி.இடம் : கோட்டூர்புரம்.
1hours ago
3 / 23
திருப்பூர், ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் தமிழ்நாடு மாநில தலைவர் பதவியேற்பு விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன் பேசினார். அருகில் நிறுவனத் தலைவர் கோபிநாதன், மாநில தலைவர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள்.
2hours ago
4 / 23
சென்னை வண்ணாரப்பேட்டை சின்ன சேனியம்மன் அம்மன் கோவிலில் தீச்சட்டி திருவிழா வெகு விமர்சையாக நடந்தது.
2hours ago
5 / 23
பிரிட்டிஷ் ராயல் நேவீ கடற்படைக் கப்பல், HMS TAMAR, சென்னை துறைமுகம் வந்துள்ளது. நட்பு, நல்லுறவு, கலாச்சாரம், சேவை மற்றும் சுற்றுலா ஆகிய நோக்கத்துடன் ஒரு வாரம் சென்னையில் உள்ளனர். இது குறித்து கருணாலயா தெருவோர குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் ஓவியங்கள் வரைந்தனர்.இடம்: தண்டையார்பேட்டை.
3hours ago
6 / 23
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆத்மார்த்த பூஜைக்கு என வைக்கப்பட்டிருக்கும் மிகச்சிறிய உடையவர் லிங்கம் இன்று கருவறையில் இருந்து எடுத்துவரப்பட்டு உற்சவர் மண்டபத்தில் அபிஷேக ஆராதனை நடந்தது. ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே பங்குனி உத்திர திருவிழாவில் நடக்கும் உற்சவ உடையவர்லிங்க ஆராதனையை பெண்கள் தரிசித்தால் தீர்க்க சுமங்கலியாய் வாழ்வார்கள் என்பது ஐதீகம்...
4hours ago
7 / 23
தேனியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகம் விரிவாக்க கட்டட பணியின் போது இடது ஓரம் மேல்தளம் இடிந்து விழுந்தது.
5hours ago
8 / 23
திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டியில் நெல் வயலில் நாத்து நடும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.
5hours ago
9 / 23
வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் திருநெல்வேலி மாவட்டம் வடக்கு கழுவூரில் உள்ள குளத்தில் குட்டை போல் தேங்கிய தண்ணீரை தேடி வரும் ஆடுகள்.
6hours ago
10 / 23
சென்னை வடபழனி மேம்பாலத்தின் சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்.
6hours ago
11 / 23
உடுமலை செங்குளத்தில் படர்ந்து காணப்படும் தாமரை இலைகளில் பிரதிபலிக்கும் மரம்.
7hours ago
12 / 23
வெளி மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக தக்காளி பெட்டிகளில் பழங்களை அடுக்கும் தொழிலாளர்கள். இடம்.உடுமலை நகராட்சி சந்தை.
8hours ago
13 / 23
கோவை பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரியில் நடந்த மாவட்ட அளவிலான முதல் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில் விளையாடிய ராமகிருஷ்ணா மில்ஸ் மற்றும் ராமகிருஷ்ணா கிரிக்கெட் டிரஸ்ட் அணியினர்.
8hours ago
14 / 23
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
9hours ago
15 / 23
சென்னை ஶ்ரீ ஸித்தி புத்தி ஸமேத ஶ்ரீ கற்பக விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இடம்: ராஜா அண்ணாமலை புரம்.
10hours ago
16 / 23
உடுமலை நேருவீதி காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட பக்தர்கள்.
11hours ago
17 / 23
உடுமலை நேருவீதி காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.
12hours ago
18 / 23
2023 - 24ம் நிதியாண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார்.
12hours ago
19 / 23
காங்கிரஸ் எம்.பி., ராகுல் தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து தலைமைச் செயலகத்தில் நடக்கும் பட்ஜெட் கூட்டத்திற்கு கருப்பு சட்டை அணிந்து பாதகையை ஏந்திவந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்.
14hours ago
20 / 23
விழுப்புரம் அடுத்த கானை பகுதியில் விவசாயிகள் நெல் பயிரிட்டு அறுவடைக்கு தயாராக உள்ளது .
14hours ago
21 / 23
கோடையின் துவக்கத்தில் இலையுதிர்ந்து நிற்கும் மரங்கள். இடம்: கோவை வேளாண் பல்கலை அருகே.
14hours ago
22 / 23
புதுச்சேரி மெரினா கடற்கரையில் இந்திரா காந்தி தேசிய கலை மையம் சார்பில், பாரம்பரிய நாட்டுப்புற இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடந்தது.
21hours ago
23 / 23
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், சென்னை மெரினாவில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளத்தில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்த சிறுவர்கள்.
Advertisement