இன்றைய போட்டோ

25 Mar 2023
1hours ago
1 / 19
கொடைக்கானல் அடுக்கம் ரோடு செய்தி படம் மட்டும். கொடைக்கானல் அடுக்கம் பெரியகுளம் ரோட்டில் மண்சரிவு, பாறைகள் அகற்றாமல் உள்ளது.
2hours ago
2 / 19
கொடைக்கானல் அடுக்கம் பெரியகுளம் ரோட்டில் ஏற்பட்டுள்ள விரிசல்.
2hours ago
3 / 19
விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு சம உரிமை நீதி சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு மகளிர் தினம் திறந்தவெளி கருத்தரங்கம் நடந்தது.
3hours ago
4 / 19
பத்மஶ்ரீ விருது பெற்ற பேராசிரியர் மோகன் காமேஸ்வரன் மருத்துவத் துறையில் ஆற்றிய சிறந்த சேவைகள் மற்றும் சாதனைகளுக்காக பாராட்டு விழா கவர்னர் மாளிகையில் நடந்தது இதில் பேராசிரியர் மோகன் காமேஸ்வரனுக்கு பரிசினை வழங்கி பாராட்டிய தமிழக கவர்னர் ரவி உடன் இடமிருந்து பேராசிரியர் மோகன் காமேஸ்வரன் மனைவி இந்திரா, ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி, தமிழக கவர்னர் ரவியின் மனைவி லட்சுமி மற்றும் முன்னாள் ஒடிசா கவர்னர் ராஜேந்திரன்.இடம் : கிண்டி.
3hours ago
5 / 19
திருப்பூர், முன்சிபால்டி ரோட்டில் வாகனங்கள் பார்க் செய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
6 / 19
கோவை பா.ஜ., சிந்தனையாளர் பிரிவு சார்பில் ஆர்.கே., ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையத்தில் நடந்த தமிழக பட்ஜெட் குறித்த கருத்து கூட்டத்தில் பா.ஜ., மாநில துணை தலைவர் கனகசபாபதி பேசினார். அருகில் (இடமிருந்து) மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி, மாவட்ட சிந்தனையாளர் பிரிவு தலைவர் ராஜசேகரன் உள்ளிட்டோர்.
5hours ago
7 / 19
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சாலையோர மரங்களில் இலைகள் உதிர தொடங்கி வறட்சியாக காணப்படுகிறது. இடம்: பெரிய கோட்டாங்கல், திருவண்ணாமலை
5hours ago
8 / 19
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகே பிரதான சாலை மத்தியில் பாதுகாப்பு தடுப்புகள் இன்றி உள்ள மின் விளக்கு கம்பங்களால் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
7hours ago
9 / 19
சிவகங்கையில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
8hours ago
10 / 19
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.எஸ்., புரம் வ.உ.சி., வீதியில் இறகு பந்து மைதானத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்து, இறகு பந்து விளையாடினார்.
9hours ago
11 / 19
கோடைகாலம் துவங்கிய நிலையில் தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதியில் உள்ள உப்பளங்களில் உப்பு உற்பத்தி பணிகள் துவங்கியுள்ளன.
10hours ago
12 / 19
கேலோ இந்தியா மகளிர் தடகள போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் 800 மீ ஓட்டத்தில் பங்கேற்ற வீராங்கனையர். இடம்: பெரியமேடு.
10hours ago
13 / 19
ஊட்டி தாவரவியல் பூங்காவில், பூங்கா ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
11hours ago
14 / 19
கோடை வெயிலின் கொடுமை தாங்க முடியாதவர்களுக்கு, பசுமை படர்ந்த இந்த பச்சை பசேல் என்ற நெல் வயல் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும். இடம் : கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வயல் பகுதி.
13hours ago
15 / 19
எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., விற்கான நுழைவுத் தேர்வு கோவை தடாகம் ரோட்டிலுள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் நடந்தது.
15hours ago
16 / 19
திருவள்ளூர் மாவட்ட ஆரணி அருகே உள்ள அகரம் கிராமத்தில் தயார் செய்யப்பட்ட மண் பானைகளை வெயிலில் காய வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி.
16hours ago
17 / 19
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் தெப்பகுளத்தின் தண்ணீரில், கட்டடங்களின் பிம்பங்கள் ரம்மியமான காட்சியளிக்கிறது.
21hours ago
18 / 19
மீனம் ராசியில் பிரவேசித்த குரு பகவானை நெருங்கிய தேய்பிறையான சந்திரன் ஒரே நேர்கோட்டில் சந்தித்தது ஆச்சரியமான நிகழ்வு.
21hours ago
19 / 19
ராகுலுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அறிவித்ததை கண்டித்து புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு முன்னாள் எம்எல்ஏ அமர்ந்த ராமன் தலைமையில் மௌன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement