இன்றைய போட்டோ

22 Mar 2023
1hours ago
1 / 18
கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவமனையை காணொளி காட்சி மூலம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார்.
1hours ago
2 / 18
ஆய்வு: விழுப்புரம் மாவட்டம் குண்டலிபுலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணைய குழுவினர் ஆய்வு செய்ய வந்தனர்.
1hours ago
3 / 18
ஆர்ப்பாட்டம்: புதுச்சேரி சுகாதாரத்துறை அலுவலகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4 / 18
இடிப்பு: சென்னை தேனாம்பேட்டையில் பழைய கட்டடத்தில் இயங்கி வந்த தீயணைப்புநிலைய கட்டடம் இடிக்கும் பணி நடைபெறுகிறது.
1hours ago
5 / 18
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் துவக்க விழா கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும் தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர் கூட்டம் நடந்தது.உடன் கட்சி நிர்வாகிகள்.
1hours ago
6 / 18
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் துவக்க விழா கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.இதில் கலந்து கொண்டஅமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள்.
1hours ago
7 / 18
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி, ஊழியர்கள் போராட்ட குழு சார்பில் சுதேசிமில் எதிரில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
1hours ago
8 / 18
மத்திய நிலத்தடி நீர் வாரியம் சார்பில் உலக நீர் தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற நீர் நெருக்கடியை தீர்ப்பதற்கான நிகழ்வு மற்றும் கண்காட்சியை (இடமிருந்து)தமிழக நீர்வளத்துறை கூடுதல் செயலர் கண்ணன் துவக்கி வைத்து பார்வையிட்டார். இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய வானிலை மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் மற்றும் மத்திய நிலத்தடி நீர் வாரிய இயக்குனர் சிவக்குமார்.இடம் : பெசன்ட் நகர்.
1hours ago
9 / 18
கோவை கலெக்டர் அலுவலம் எதிரே நோ பார்க்கிங்கில் கார்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
1hours ago
10 / 18
ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு, விடுமுறை நாளான இன்று(மார்ச் 22) ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
2hours ago
11 / 18
யுகாதி பண்டிகையையொட்டி உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேசபெருமாள் கோவிலில் நடந்த திருக்கல்யாணத்தில், ரேணுகாதேவியம்மன் திருமண கோலத்தில் அருள்பாலித்தார்.
3hours ago
12 / 18
யுகாதி பண்டிகையையொட்டி, உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேசபெருமாள் கோவிலில் தங்ககவச அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார்.
7hours ago
13 / 18
தெலுங்கு புத்தாண்டு முன்னிட்டு சென்னை பிராட்வே கன்னிகா பரமேஸ்வரி கல்லூரியில் விளக்கேற்றி கொண்டாடிய மாணவிகள்.
7hours ago
14 / 18
திண்டுக்கல் மலையடிவார பத்ரகாளியம்மன் கோயிலில் காமதேனு வாகனத்தில் அம்மன்.
10hours ago
15 / 18
இரவு நேரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார். இடம் கோவை சுந்தராபுரம் சந்திப்பு.
13hours ago
16 / 18
மீனவர்களின் வாழ்வியல் குறித்து, தனியார் தொண்டு நிறுவனம், சென்னை மாநகராட்சியுன் இணைந்து. பட்டினப்பாக்கம் மீனவர் குடியிருப்பு சுவரில் பிரம்மாண்ட ஓவியம் வரையப்பட்டு வருகின்றன.
13hours ago
17 / 18
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி விழாவில் கையில் இரு குழந்தைகளுடன் பூ இறங்கிய பக்தர்.
13hours ago
18 / 18
இந்தியா - ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டி நடைபெற உள்ள நிலையில், பத்திரிக்கையாளர்களை சந்தித்த இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட். இடம் : சேப்பாக்கம், சென்னை.
Advertisement