அரசியல்ஆல்பம்:

15-அக்-2019
1 / 9
கோவை - பழனி இடையே ரயில் சேவை துவக்க விழா கோவை ரயில் நிலையத்தில் நடந்தது. இதில் எம் பி ., நடராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார் அருகில் எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன், ராஜ்யசபா எம்.பி.,க்கள் செல்வராஜ், பாலசுப்ரமணியம், உள்ளிட்டோர்.
2 / 9
விக்கிரவாண்டி சட்டசபை இடைத் தேர்தலையொட்டி திருவாமாத்தூரில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்.
3 / 9
ஹரியானா சட்டசபை தேர்தலையொட்டி, அம்மாநிலத்தில் உள்ள சர்கி தத்ரி என்ற இடத்தில் பிரதமர் மோடி, பிரசாரத்தில் ஈடுபட்டார். உடன், மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்.
4 / 9
உயிரிழந்த கமாண்டோ வீரர்களின் குடும்பத்திற்கு மரியாதை செலுத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இடம்: குருகிராம்.
5 / 9
உ.பி., மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.
6 / 9
மஹாராஷ்டிர மாநிலம் வர்தாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட காங்., எம்.பி., ராகுல்.
7 / 9
மஹாராஷ்டிராவில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின், பா.ஜ., செயல் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் அம்மாநில முதல்வர் பட்னவிஸ் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இடம்: மும்பை.
8 / 9
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். இடம்: புதுடில்லி.
9 / 9
மஹாராஷ்டிர சட்டசபை தேர்தலையொட்டி, நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே. இடம்: இஸ்லாம்பூர், சாங்லி.