அரசியல்ஆல்பம்:

26-Feb-2013
1 / 12
முதல்வர் ஜெ.பிறந்த நாளை முன்னிட்டு,விருதுநகர் ஒன்றிய தலைவர் கலாநிதி தலைமையில்,முதியோர் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அருகில் நகராட்சி துணைதலைவர் மாரியப்பன்.
2 / 12
'டில்லியின் சிறந்த புகைப்படம்' என்ற போட்டியில் வெற்றி பெற்றவர்கள் உற்சாக போஸ் கொடுத்த டில்லி முதல்வர் ஷீலா தீட்சித்.
3 / 12
குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற கூட்டத்தில் பஞ்ச்மால் மாவட்டம் கூட்டுறவு பால் உற்பத்தி மையத்தை சேர்ந்த பெண்களுடன் முதல்வர் நரேந்திர மோடி உரையாடினார்.
4 / 12
சென்னை அருகே உள்ள ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஸ்ரோ நிறுவனம் பி.எஸ்.எல்.வி. சி-20 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியை நேரில் காண வந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி, ஆந்திர கவர்னர் நரசிம்மன்.
5 / 12
டில்லி வந்துள்ள ஜப்பான் கடலோர தற்காப்பு படையின் தளபதிக்கு நினைவு பரிசு வழங்கிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி.
6 / 12
மேற்கு வங்க மாநிலம் பிரெசர்கஞ்ச் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.
7 / 12
மத்திய ரயில்வே துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் இன்று ரயில்வே பட்ஜெட்டினை தாக்கல் செய்துள்ளார். பட்ஜெட் தயாரிப்பில் தமக்கு உதவிய அதிகாரிகளுடன் உற்சாக போஸ் கொடுத்த பன்சால்.
8 / 12
ஆந்திர மாநிலம் சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்துவிட்டு திரும்பும் அவரது மனைவி பாரதி.
9 / 12
பீகார் தலைநகர் பாட்னாவிலுள்ள தமது மனைவி மஞ்சு குமாரி ஷின்காவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் முதல்வர் நிதிஷ் குமார்.
10 / 12
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான்.
11 / 12
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் மனித உரிமை மீரல் தெடர்பான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பது மற்றும் அடுத்த மாதம் டில்லியில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்வது உள்ளிட்ட ஆலோசனை கூட்டம் தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் அதன் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள்.
12 / 12
தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராக வந்த, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கட்சியினரின் பாதுகாப்புடன் விழுப்புரம் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
Advertisement