பொதுஆல்பம்:

21-மே-2019
1 / 10
ஊட்டியில், நாவா சார்பாக நடைபெற்ற பழங்குயினர் தொழில் முனைவோர் கருத்தரங்கில் , தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் கலந்துக்கொண்டு பேசினார்.
2 / 10
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில், உயரமான மலைப் பகுதியில், லால்குல் மாவட்டத்தில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட, ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் , இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் மூலம், பாதுகாப்பாக, ஓட்டு எண்ணும் இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
3 / 10
ஆமதாபாத்தில் லாரி ஒன்றிலிருந்து தண்ணீர் பிடிக்கும் பொதுமக்கள்.
4 / 10
சங்கிலியில் அரசுக்கு எதிரான போராட்டம் ஒன்றின் போது கால்நடைகளுக்கு குடிக்க நீர் வழங்கப்படுகிறது.
5 / 10
திருப்பூர் விஸ்வேஸ்வரர் மற்றும் வீரராகவப்பெருமாள் கோயில் வைகாசி விசாக தேர் திருவிழாவை ஒட்டி கவிநயா நாட்டியாலயா குழுவினரின் அறுபடைவீடு நாட்டிய நாடக நிகழ்ச்சி நடந்தது
6 / 10
விழுப்புரம் வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் நேற்று நடந்த விடையாற்றி உற்சவத்தில் உதிரிப்பூக்கள் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத வைகுண்ட பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
7 / 10
சென்னை வடபழநி ஆண்டவர் கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு நேற்று வீரமணி ராஜு-அபிஷேக் வீரமணி ராஜு குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது
8 / 10
புதுச்சேரி தலைமைச் செயலகம் எதிரே உள்ள செயற்கை கடற்கரையில் மாலை வேளையில் சுற்றுலாப் பயணிகளுடன் உள்ளூர் மக்களும் குடும்பத்துடன் கடல் கரையில் கடல் நீரில் குளித்தும் விளையாடியும் மகிழ்ந்தனர்
9 / 10
பம்மல் நகராட்சிக்குட்பட்ட எச்.எல். காலணியில் உள்ள சென்னை குடிநீர் பகிர்மான நிலையத்தில் குடிநீர் பிடிக்க நூற்றுக்கனக்கான குடங்கள் வரிசையில் வைக்கப்பட்டிருந்தன. இடம் : பம்மல்
10 / 10
கோடைக் காலம் துவங்கியுள்ளதால், நாடு முழுவதும் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. உ.பி., மாநிலம், பிரயாக்ரா ஜில், தண்ணீர் எடுப்பதற்காக, காலி கேன்களுடன் , இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள்.