சம்பவம்ஆல்பம்:

27 மார்ச் 2020
1 / 4
திருப்பூர், மாநகராட்சியில் பணியாற்றும் தனியார் துப்புரவு தொழிலாளர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதுகாத்துக்கொள்ள தங்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை என கோவில்வழியில் தங்கவைக்கப்பட்டுள்ள இடத்தில் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் உள்ளனர்.
2 / 4
நாடே கொரோனாவை கண்டு அஞ்சி ஓடும் நிலையில், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய இளைஞர்கள் சாலையில் நின்று செல்ஃபி எடுக்கும் அவலம் உள்ளது. இடம் : விழுப்புரம் நான்கு முனை சிக்னல் அருகில்.
3 / 4
ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியே வரும் வாகன ஓட்டிகள் ஓரம்கட்டப்பட்டனர். இடம்: தாம்பரம்
4 / 4
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் மீறி சென்றதால் கார், இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இடம்: சிவகங்கை ரயில்வே மேம்பாலம் அருகே.