சம்பவம்ஆல்பம்:

06-பிப்-2018
1 / 9
திருப்பூர் அருகே பெருந்துறையில் இருந்து திருப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் கல்லூரி வாகனம் கூலிபாளையத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
2 / 9
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கண்டித்து கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 / 9
டில்லி பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள காந்திசிலை முன்பு தெலுங்குதேச கட்சியினர் ஆந்திரபிரதேசத்தை காக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4 / 9
பஸ் கட்டண உயர்வை கண்டித்து திண்டுக்கல்லில் தமாகா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது
5 / 9
பழனி பாதயாத்திரை செல்லும் போது, அரசு பஸ் மோதி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, நிவாரணம் வழங்கக்கோரி, குடும்பத்துடன் திருப்பூர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
6 / 9
கோவை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்காக நினைவு தூண் அமைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு தூண்களை கொண்டு வந்த பாரத் சேனாவினர்.
7 / 9
புதுச்சேரி அலியான்ஸ் பிரான்சே பிரெஞ்சு பள்ளியில் வகுப்பு நடைபெறும் நேரத்தை மாற்றி அமைத்ததை கண்டித்து பெற்றோர் சங்கத்தினர் சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்பாட்டம் நடந்தது.
8 / 9
பீகார் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததாக கூறி மாநில அரசைக் கண்டித்து ராஷ்டிரிய ஜனாததள எம்.எல்.ஏ.,வும் லாலு பிரசாத் மகனுமான தேஜ் பிரதாப் யாதவ் கட்சியினருடன் நேற்று பாட்னாவில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
9 / 9
புதுக்கோட்டை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
Advertisement