சம்பவம்ஆல்பம்:

11-செப்-2018
1 / 14
பழநி அருகே ஆளில்லா ரயில்வே கிராஸிங்கை கடக்க முயன்ற மண் அள்ளும் இயந்திரம் ரயில் மோதியதில் சேதம் அடைந்தது. இதில் இருவர் காயம் அடைந்தனர்.
2 / 14
பெட்ரோல் விலை உயர்வு குறித்து நடந்த போராட்டத்தில் பீகார் மாநிலம் பாட்னாவில் கார் ஒன்றை சேதப்படுத்திய ஜன அதிகார் கட்சியினர்.
3 / 14
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் பெட்ரோல் விலையை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கான போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ரோட்டில் டயர்களை கொளுத்தினர்.
4 / 14
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் சி.பி.எம்., கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி மற்றும் டி.ராஜா., கட்சியினர் கலந்து கொண்டனர். இடம்: புதுடில்லி
5 / 14
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஜபல்பூரில் நடந்த பந்த் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் பைக் ஒன்றிற்கு தீ வைத்தனர்.
6 / 14
தானேயில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண்கள்.
7 / 14
மேற்கு வங்க மாநிலம் பிர்பும்மில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் குண்டு வெடித்ததால் இடிந்தது.
8 / 14
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கேரள மாநிலம் கொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.
9 / 14
பெட்ரோலிய பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்
10 / 14
சிம்லா பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக ரயில்வே தண்டவாளத்தில் மரம் ஒன்று விழுந்தது. அதன் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
11 / 14
பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக கோல்கட்டாவில் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.யு.சி.ஐ., அமைப்பினர் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
12 / 14
திண்டுக்கல்லில் அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியூறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
13 / 14
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திண்டுக்கல்லில் காங்., தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
14 / 14
கடலூர் தலைமை தபால் நிலையம் முன்பு காங்., மற்றும் கூட்டணி கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
Advertisement