சம்பவம்ஆல்பம்:

24-Sep-2012
1 / 9
அசாம் மாநிலத்தில் கனமழை பெய்வதால், பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ள நீர் கவுகாத்தி நகருக்குள்ளும் புகுந்துள்ளது. வீதிகளில் ஓடும் தண்ணீரில் நடந்து வரும் உள்ளூர்வாசிகள்.
2 / 9
சிவகங்கை, திருப்புத்தூர் அருகே மணல் லாரி மீது, டூவீலர் மோதி விபத்திற்குள்ளானதில், லாரிக்குள் சிக்கியுள்ள டூவீலர்.
3 / 9
சிக்கிம் மாநிலத்தில் கடும் மழையால், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பீகாங் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை சீரமைக்கும் பணியில், கிராமத்தினர் ஈடுபட்டனர்.
4 / 9
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையில், கொதிகலன் வெடித்ததில் அப்பகுதி முழுவதும் சிதறிக்கிடக்கிறது.
5 / 9
மதுரை தத்தனேரியில், 3 மாடி கட்டடம் இடிந்த தரைமட்டமானது. இடிபாடுகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
6 / 9
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் ரோட்டில் திடீரென யானை கூட்டங்கள் ரோட்டை கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
7 / 9
மழையின்றி வைகை ஆறு வறண்டு வருவது ஒருபுறம் என்றால், தனியார்கள் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் திருடுவது மறுபுறம். டீசல் மோட்டார் மூலம் தண்ணீர் திருடி தோட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. (இடம்) திண்டுக்கல் மாவட்டம், சித்தர்கள்நத்தம்.
8 / 9
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில், தோட்டத்தில் புகுந்த புள்ளி மான் குட்டி வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
9 / 9
விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செந்நாய் கடித்து பலியான புள்ளி மான்.