புகைப்பட ஆல்பம்:

படம் தரும் பாடம்
1 / 50
பூக்களில் தேன் உறிஞ்சும் பறவைகள். மாநிலம்: அசாம் .
2 / 50
அசாம் சாகித்ய சபாவின் 76வது அமர்வின் கலாச்சார பேரணியில் கலந்து கொண்ட பெண்கள். இடம்: அசாம், லக்கிம்பூர்
3 / 50
இப்படி வாகனங்கள் ஆக்கிரமித்து கொண்ட நகரம் புதுடில்லி தேசிய நெடுஞ்சாலை.
4 / 50
டில்லியில் இருந்து திரும்பிய பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று (பிப்-3) அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் பழனிசாமியை சந்தித்து பேசினார்.
5 / 50
கேரள மாநிலத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான, 'கால்வரி மவுன்ட்' பகுதியில் இருந்து இடுக்கி அணையின் நீர்த்தேக்கத்தை ரசித்த சுற்றுலா பயணியர்.
6 / 50
அயோத்தியில் ராமர் கோயிலில் ராமர், ஜானகி சிலை நிறுவ நேபாளத்தில் இருந்து புனித கற்கள் வந்தன. பலரும் பூஜை செய்தனர்.
7 / 50
குளிர்காலத்திற்கு உகந்த உணவான மக்காச்சோளம் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள பெண். இடம்: ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகர்.
8 / 50
உ.பி., மாநிலம் ஆக்ராவில் நடைபெற உள்ள 'ஜி-20' மாநாட்டுக்கான முதல் கூட்டத்தின் பிரதிநிதிகளை வரவேற்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குடை அலங்காரம்.
9 / 50
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சாந்தி நிகேதன் மையம் வந்திருந்த மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, அங்கிருந்த டீக்கடையில், 'டீ' தயாரித்து மகிழந்தார். இடம்: கோல்கட்டா.
10 / 50
இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது, 'டி-20' போட்டி ஆமதாபாத்தில் இன்று நடக்கிறது. இதில் ஜொலிக்க பவுலிங் பயிற்சிக்கு தயாரான, இந்தியாவின் ஷிவம் மாவி, உம்ரான் மாலிக்.
11 / 50
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்கியதும் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார்.
12 / 50
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்கியதும் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார்.
13 / 50
மத்தியபிரதேசம் போபாலில் நடந்த கெலோ இந்தியா என்ற விளையாட்டு திருவிழாவில் பங்கேற்ற கலைஞர்கள்.
14 / 50
சுற்றுலாவுக்கு புகழ் பெற்ற சிம்லா நகரின் பனி சூழ்ந்த சாலைகளில், குதிரைகளில் சவாரி செய்த சுற்றுலா பயணிகள்.
15 / 50
விவசாய பணிகள் மும்முரமாக மேற்குவங்கத்தில் நடக்கிறது.
16 / 50
தென் ஆப்ரிக்காவில் நடந்த, 19 வயதுக்கு உட்பட்ட 'ஜூனியர்' பெண்கள் அணிக்கான உலக கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இந்திய அணியினர்.
17 / 50
குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்த கலச யாத்திரையில் உற்சாகத்துடன் பங்கேற்ற பெண்கள், சிறுமியர், முளைப்பாரி எடுத்து வந்து வழிபட்டனர்.
18 / 50
ம.பி., மாநிலம் மொரேனா என்ற இடத்தில் விபத்துக்குள்ளான சுகோய் சூ-30 மற்றும் மிராஜ் 2000 ரக போர் விமானத்தை பார்வையிடும் பொது மக்கள்.
19 / 50
பட்டம் பறக்கவிடப்பட்ட நரம்பு நூலில் சிக்கிய பருந்து. இடம்: ஜலந்தர், பஞ்சாப்.
20 / 50
குடியரசு தின விழாவில் கலை நிகழ்ச்சி நடத்தியவர்கள் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டனர். இடம்: ஜனாதிபதி மாளிகை, புதுடில்லி.
21 / 50
பழநி மலை முருகன் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பின் இன்று (ஜன.,27) காலை மஹாகும்பாபிஷேகம்
22 / 50
பாரத்பயோடேக் நிறுவனத்தின் மூக்கு வழி செலுத்தப்படும் தடுப்பு மருந்தான இன்கோவேக் தடுப்பூசியை மத்திய அமைச்சர்கள் மண்சுக் மாண்டவியா, ஜிகேந்தர் சிங் டில்லியில் அறிமுகம் செய்தனர்.
23 / 50
குடியரசு தினத்தை முன்னிட்டு, புதுடில்லியில் உள்ள கடமைப்பாதையில் லெப்டினன்ட் கமாண்டர் திஷா அம்ரித் தலைமையில் அணிவகுத்து சென்ற கடற்படை வீரர்கள்.
24 / 50
குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தியா வந்துள்ள எகிப்து அதிபர் அப்தெல் பதா அல் சிசி, டில்லி ராஜ்காட்டில் உள்ள மஹாத்மா காந்தி சமாதியில் மரியாதை செலுத்தினார்.
25 / 50
ஜம்மு - காஷ்மீரின் பாட்னிடாப்பில் கடும் பனிப்பொழிவை சமாளிக்க, குளிருக்கு இதமான சூடான உணவை ருசித்த சுற்றுலா பயணியர்.
26 / 50

உள்ளே எதிரி... வெளியே நட்பு ?


குடியரசு தின விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை பார்வையிட வந்த டில்லி துணை நிலை கவர்னர் வி.கே. சக்சேனாவை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். இடம்: புதுடில்லி.
27 / 50
குடியரசுதின ஒத்திகையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படை வீரர். இடம் ; பெங்களூரு
28 / 50
குடியரசுதின ஒத்திகையில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கவிருக்கும் எகிப்து படையினர் டில்லியில் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
29 / 50
குடியரசுதின ஒத்திகையில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கவிருக்கும் எகிப்து படையினர் டில்லியில் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
30 / 50
ஜம்முவில் உள்ள புகழ்பெற்ற ரகுநாத் கோவிலுக்குச் சென்ற காங்கிரஸ் எம்.பி., ராகுல், சாமி தரிசனம் மேற்கொண்டார்.
31 / 50
கர்நாடக மாநிலம் கம்பாலாவில் எருது ஓட்டம் நிகழ்ச்சி நடந்தது.
32 / 50
கர்நாடக மாநிலம் கம்பாலாவில் எருது ஓட்டம் நிகழ்ச்சி நடந்தது.
33 / 50
டில்லியில் நடந்த டைரக்டர் ஜெனரல் மற்றும் ஐ.ஜி. மாநாட்டில் பங்கேற்ற உயர் அதிகாரிகள் , பிரதமர் மோடியுடன் குரூப் போட்டோ எடுத்து கொண்டனர்.
34 / 50
போக்குவரத்து நெரிசல் காரணமாக, நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள். இடம்: அரியானா, குருகிராம்
35 / 50
திரிபுரா சட்டசபைக்கு பிப்.,16 ல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு சிஆர்பிஎப் வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர். இடம்: அகர்தலா.
36 / 50
கங்கை நதியில் புனித நீராடும் பக்தர்கள்.
37 / 50
திண்டுக்கல் அருகே கொசவபட்டி ஜல்லிக்கட்டில் மல்லுக்கட்டிய வீரர்.
38 / 50
பனிப்பாறையில் பூங்காவில் டிரக்கில் செல்லும் மக்கள். பெய்ஜீங் நகரம், சீனா.
39 / 50
திரிபுராவின் அகர்தலாவில் நடந்த பாரம்பரிய விழாவில் மலை வாழ் மக்கள் நடனமாடினர்.
40 / 50
காஷ்மீரில் பனியில் உறைந்து போன நீர்வீழ்ச்சியை பார்வையிட்ட சுற்றுலா பயணிகள். இடம்: திரங், பாரமுல்லா.
41 / 50
ஜம்மு- காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் டாங்மார்க்கின் அமைந்துள்ள உறைந்த நீர்வீழ்ச்சியை போட்டோ எடுக்கும் பெண்.
42 / 50
மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவியர் 'ஹெல்மெட்' அணிந்து பங்கேற்றனர்.
43 / 50
குடியரசுதின ஒத்திகையில் பங்கேற்ற எல்லை பாதுகாப்பு படையினர் ஒட்டகத்தில் சவாரி செய்தபடி செல்லும் காட்சி.
44 / 50
டில்லியில் நடக்கும் பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி திறந்த காரில் நின்றபடி பேரணியாக சென்றார்.
45 / 50
பொள்ளாச்சி அருகே டாப்ஸ்லிப்பில் யானை பொங்கல் விழா நடந்தது. அதில், விநாயகரை வணங்கி வழிபட்ட வளர்ப்பு யானைகள்.
46 / 50
ராஜஸ்தானில் நடந்த ஒட்டக திருவிழாவில் நடந்த பாரம்பரிய நடனம்.
47 / 50
மகரசங்கராந்தியை முன்னிட்டு கங்கை நதிக்கரையில் சிறப்பு ஆரத்தி நடந்தது.
48 / 50
பாரம்பரிய தலையாட்டும் மாட்டுடன் நடந்த போகிப்பண்டிகை. இடம்: ஐதராபாத்
49 / 50
ஆயுதபடை வீரர்கள் தினத்தை முன்னிட்டு டில்லியில் உள்ள போர் நினைவு சின்னத்தில் முப்படை தளபதிகள் மரியாதை செலுத்தினர்.
50 / 50
உ.பி. மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், துவங்கியுள்ள ஆட்டோ எக்ஸ்போ -23 கண்காட்சியில் இடம் பெற்றுள்ள வாகனங்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பார்வையிட்டார்
Advertisement