புகைப்பட ஆல்பம்:

படம் தரும் பாடம்
1 / 202
சாப்பிடுவது துாங்குவது இவற்றோடு இந்த வெயில் நேரத்தில் இடையிடையே குளிப்பது கொரோனா காலப் பழக்கமாகிவிட்டது.இடம்:ஆக்ரா.உ.பி.
2 / 202
நாட்டின் அபரிமிதமான இளைஞர் சக்தி ஒருவர் சாப்பாட்டை இருவர் சாப்பிட்டு வீணாகிக்கொண்டு இருக்கிறது.-கவுகாத்தி,அசாம்1
3 / 202
இன்றைக்கு தெருவில் நடமாட அனுமதி வேண்டும் என்றால் முதலில் மாஸ்க் அணியவேணடும், பஸ்சிற்கு காத்திருக்கும் குடும்பம்.-சன்டிகர்,பஞ்சாப்.
4 / 202
டில்லியில் கொரோனாவை விட கொடுமையாக வெயில் உணரப்படுகிறது ஆகவே வண்டி வண்டியாக ஏர்கூலர் வாங்கிச் செல்லப்படுகிறது.
5 / 202
கொஞ்சம் கொஞ்சமாய் ரயில்கள் ஒடப்போகின்றன அதற்கேற்ப ரயில்களை சுத்தம் செய்யும் பணி நடக்கிறது.-பாட்னா,பிகார்
6 / 202
குடும்பத்தின் மீது கொண்ட அக்கறை காரணமாக த்ன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட புலம் பெயர்ந்த தொழிலாளி-பிகார்.
7 / 202
அடுத்த மாதம் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் தேரோட்டத்திற்கு தயராகும் பக்தர்கள்
8 / 202
கர்நாடாகா மாநிலத்தில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட இருப்பதை முன்னிட்டு பெங்களூருவில் உள்ள ஒரு கோவிலை எம்எல்ஏ தலைமையிலான பக்தர்கள் சுத்தம் செய்கி்ன்றனர்
9 / 202
நடந்து கொண்டே இருக்கும் அம்மாவின் பாரமும் துாரமும் குறைவது எப்போது என் கவலையை கண்ணில் தேக்கியிருக்கும் குழந்தை-ைஹதராபாத்.
10 / 202
என்னதான் நெருங்கிய உறவின் மரணம் என்றாலும் சுடுகாட்டில் தள்ளி நின்றுதான் ்அழவேண்டும்-காரத்,மகராஷ்ட்ரா
11 / 202
புதிய இயல்பு வாழ்க்கைக்கு மாறிக் கொண்டு இருப்பதன் அடையாளம்தான் இந்த புகழ்பெற்ற ஹவுரா பால போக்குவரத்து-கோல்கத்தா
12 / 202
ரயிலில் வந்தது போலவே பஸ்சிலும் போக நினைத்தால் எப்படி தாங்கும்?-பாட்னா,பிகரர்.
13 / 202
கொளுத்தும் வெயிலில் தங்கள் சொந்த ஊரை நோக்கி நடக்கும் புலம் பெயர்ந்த இளைஞர்கள்-காஜியாபாதி,ம.பி.
14 / 202
கெ்ாரோனா,புயல்,வெட்டுக்கிளி படை எடுப்பு,தகிக்கும் வெயில் இவற்றோடு தற்போது தண்ணீர் பிரச்னை-ஜபல்பூர்,ம.பி.
15 / 202
ரோட்டின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் தன்னை மறந்து வாகன சத்தத்திற்கு நடுவிலும் உறங்குகிறார் என்றால் பசி மயக்கமாக இருக்கவேண்டும் அல்லது நடந்த களைப்பாக இருக்கவேண்டும்-டில்லி1
16 / 202
கொரோனா பணியில் ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர் பணிமுடிந்த பிறகு கிருமி நாசினி தெளிக்கச் செ்ய்து கொள்கிறார்-ஆமதபாத்,குஜராத்
17 / 202
எல்லோருக்கும் ஒரு நாள் முதுமை வரும் என்று தெரிந்தவரால் தாகம் தீர்க்கப்படுகிறது.இடம்:சன்டிகர்,பஞ்சாப்
18 / 202
மக்கள் பிரதிநிதி என்றால் இப்படித்தான் இருககவேண்டும் முககவசம் அணிந்து களம் இறங்கிவிட்டார் இந்த உ.பி அமைச்சர் சுரேஷ் கண்ணா.
19 / 202
தகுந்த பாதுகாப்புடன் மாணவர்களின் தேர்வுத்தாள் திருத்தும் ஆசிரியர்-ராஞ்சி,ஜார்ஹண்ட்.
20 / 202
கொரோனாவால் இறந்தவர்களுக்கு கடைசி காரியத்தைக்கூட இப்போதுமாநகராட்சி ஊழியர்கள்தான் செய்கின்றனர்-காரத்,மகராஷ்ட்ரா
21 / 202
ஆபரேஷன் தியேட்டர் எல்லா்ம கிடையாதுங்க அழகு நிலையம்தான் பாதுகாப்பா செயல்படறாங்களாம்-விஜயவாடா,ஆந்திரா
22 / 202
இப்படி நெருக்கியடித்து கூட்டமாய் பூண்டு வாங்கினால் கொரோனா இலவசம்-சூரத்,குஜராத்.
23 / 202
கொரோனாவுடன் வாழப் பழகணும்னா முதல்ல ‛மாஸ்க்' கட்டி பழகிக்கணும்-பிரயாக்ராஜ்.உ.பி.
24 / 202
பசுவுக்கு குழந்தைக்கும் நடுவே இருக்கும் உணவை சொந்தம் கொண்டாட இருவருக்கும் இடையே நடக்கும் பசிப் போராட்டம்-டில்லி
25 / 202
சொந்த ஊர் போவதற்குள் ஊர் ஊராக சுற்றிய அசதி குழந்தையை அசரவைத்துவிட்டது.-கவுகாத்தி,அசாம்
26 / 202
கொரோனாவுடன் கூடுதலாக புயலும் ஏற்படுத்திய சிரமத்தை தாங்கிக்கொண்டு ரிக்சா இழுக்கும் தொழிலாளி-கொல்கத்தா.
27 / 202
வட மாநிலங்களில் ஐம்பது டிகிரி அளவிற்கு வெயில் கொளுத்துகிறது தவித்துப் போன குரங்குகள் குழாயோடு போராடுகின்றன-ராஜஸ்தான்.
28 / 202
கிடைக்கிற சாப்பாடை கிடைக்கிற இடத்துல சாப்பிட்டு நடந்து கொண்டு இருக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர் குடும்பம்-டில்லி.
29 / 202
சொந்த மாநிலத்திற்கு திரும்பிவிட்ட சந்தோஷத்தில் தந்தையின் முதுகில் பிள்ளை சாய்ந்தாடி சந்தோஷம் கொள்கிறது-பிரயாக்ராஜ்
30 / 202
சிறப்பு ரயில்,பஸ்,விமானம் என்று இருந்தாலும் புலம் பெயர்ந்தவர்கள் சிலர் இன்னும் பிள்ளைகள் சுமந்தபடி நடக்கின்றனர்-காசியாபாத்.
31 / 202
அதிகரிக்கும் கொரோனா காரணமாக எல்லை பகுதி மூடப்பட்டதை அடுத்து வாகனங்கள் நீண்டு காணப்பட்டன-டில்லி
32 / 202
எளிய முறையில் திருமணம் நடக்கிறது அபார்ட்மெண்ட் மக்கள் வாழ்த்த மணமக்கள் மாலை மாற்றிக் கொள்கின்றனர்-சோலாப்பூர்.
33 / 202
கூடுதல் முன் எச்சரிக்கையுடன் விமான நிலையம் வந்த பயணியர்.ராஞ்சி,ஜார்ஹண்ட்
34 / 202
விமான நிலையத்தில் விலகியிருப்போம் ரயில் நிலையத்தில் நெருங்கியிருப்போம்-டில்லி
35 / 202
கடமையே கண் என கருதி நீண்ட நாட்கள் மருத்துவமனையில் இருந்துவிட்டு வீடுதிரும்பியவருக்கு வழியனுப்பு-அசாம்.
36 / 202
அம்பான் புயலால் பாதிக்கப்பட்ட நகரை மீட்டெடுக்கும் முயற்சியில் நம் ராணுவத்தினர்-கோல்கத்தா,மே.வங்கம்.
37 / 202
நாங்க எல்லோரும் ஊர் போய்ச் சேர்ர வரை பஸ்ல ஏர் சஸ்பென்ஷன் வேலை செய்யும்ல-பாட்னா,பிகார்
38 / 202
மீண்டும் கருவாட்டுக் கடையை திறந்துட்டேன்னு சொல்ல வேண்டியதே இல்லை மாஸ்க்கை தாண்டி வாடை வந்துருச்சு-மும்பை
39 / 202
நம்ம ரயில் வர்ர வரைக்கும் வெயில்ல நிற்காம உள்ளே வாங்க பிள்ளைகளா-தானாபூர்,பிகார்.
40 / 202
ஊர் போக வேண்டியவங்க யாரும் ஏரியாவுல மிச்சம் இருக்கீங்களாப்பா-தாராவி.மும்பை
41 / 202
நடக்க இயலாத தந்தையை தோளில் சுமந்தபடி நடக்கும் தனயன்-பிரயாக்ராஜ்,உ.பி.
42 / 202
நாலு நாள் தள்ளிப் போனாலும் பராவாயில்லை சைக்கிள்ளேயே போயிருவோம்-நலபாரி,பிகார்.
43 / 202
மைசூரு ரயில் நிலைய வாசலில் நிறுத்தப்பட்டுள்ள பொம்மைகள் மூலமாக மாஸ்க் அணிவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
44 / 202
எங்கே நடக்க விட்டுருவாங்களோன்னு பார்த்தேன் நல்லவேளை விமான சர்வீசை துவக்கிட்டாங்க:இடம்:ராஞ்சி,ஜார்ஹண்ட்.
45 / 202
தண்ணீருக்காக ஜன்னலுக்கு வெளியே வந்துவிடாதே வெயிலில் வெந்து விடுவாய்-ஜபல்பூர்,ம.பி.
46 / 202
ஊரடங்கு தளர்ந்தால் கூட ஊருக்கு போகவேண்டும் என்ற இவர்களது உத்வேகம் தளராது போலிருக்கிறது.இடம்:பெங்களூரு
47 / 202
இப்படி ஒரு காட்சிய பார்த்த பிறகு கோரானாவிற்கு ரோசம் வந்தால் ரயிலின் மறுவாசல் வழியாக குதித்து ஒடிவிடும்.இடம்:பாட்னா,பிகார்
48 / 202
மேட்சிங் மாஸ்க் வாங்கலாம் வாங்க,காலத்திற்கு ஏற்ற வியாபாரம்-பிகானீர்,ராஜஸ்தான்.
49 / 202
பூங்காக்கள் திறந்ததும் உடற்பயிற்சி செய்ய குவிந்த மக்கள்-டில்லி1
50 / 202
மேற்கு வங்கம் பர்த்மான் என்ற இடத்தை கரை கடந்த அம்பான் புயல் கடக்கு முன் ஊரை துவம்சம் செய்துவிட்டது.
51 / 202
கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் நகைக்கடைகள் திறக்கப்பட்டன.
52 / 202
எல்லை வரை வந்து விடுங்கள் அதன்பிறகு தொல்லை இல்லாமல் கூட்டிச்செல்கிறோம் என்று உ.பி.மாநிலம் நொய்டா எல்லையில் கொண்டுவந்து நிறுத்தப்பட்ட பஸ்கள்
53 / 202
மகராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் நின்று போயிருந்த மெட்ரோ ரயில் பணிகள் மீண்டும் துவக்கப்பட்டது
54 / 202
கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் பயணிகள் பஸ் போக்குவரத்தை துவங்குவதற்கு முன்னோட்டம் பார்க்கப்பட்டது
55 / 202
குஜராத் மாநிலம் சூரத்தில் வைரத்தொழிற்சாலை தனது உற்பத்தியை துவங்கியது
56 / 202
நமக்கு ்அலங்கரிக்கப்பட்ட காரும் வராது தேரும் வராது டூ வீலர் கிடைச்சதே பெருசு -ஜம்மு
57 / 202
ரோடே எங்களுக்கு வீடாகிப்போயிருச்சு-தானே,மகராஷ்ட்ரா
58 / 202
வெயில் காலத்தில் பாலத்தின் அடியில் இருக்கும் நிழலில் கொஞ்ச நேரம் தஞ்சம்-தானே,மகராஷ்ட்ரா
59 / 202
ரயில் வந்துச்சா வந்துச்சான்னு சும்மா வநது வந்து பார்க்கமுடியல அதான் ரயில் வரும்வரை இங்கேயே படுத்து்க்குரேன்-மும்பை
60 / 202
மனைவி பத்து மாதம் சுமந்தது போல நானும் முடிந்த வரை சுமக்கிறேன்-டில்லி
61 / 202
கர்ப்பிணி பெண்கள் நடப்பது நல்லதுதான் ஆனால் நடந்து கொண்டே இருப்பது நல்லதல்ல-டில்லி
62 / 202
எல்லையில்லா விசுவாசம்-பெங்களூரு
63 / 202
குடும்பம் கொஞ்சம் பெருசு அதுனால யாரையும் விட்டுட்டு போகமுடியாது-கர்நுால்,அரியானா
64 / 202
எப்படியோ ஊர் கொண்டு வந்து சேர்த்திட்டீங்க ரொம்ப நன்றிங்க-ராஞ்சி,ஜார்ஹண்ட்
65 / 202
மேடம் காவல் துறையின் சிறப்பான பணிக்கு அவர்களில் ஓருவரான உங்களை பூத்துாவி வாழ்த்துகிறோம்-பெங்களூரு,கர்நாடாகா.
66 / 202
சாப்பாடு முக்கியம் பாஸ் இந்தக்கையை விட்டாலும் அந்தக் கையை விட்டுறாதீங்க-ஜபல்பூர்,ம.பி.
67 / 202
அம்மா,உன்னையும் தம்பியையும் நான் பார்த்துக்குவேன்- ஹைதரபாத்,தெலுங்கானா
68 / 202
மாலத்தீவில் இருந்து கப்பலில் சொந்த நாடு திரும்பியவர்களை பரிசோதிக்கப்பட்டனர்-கொச்சி,திருவனந்தபுரம்
69 / 202
பை வாங்க காசு இல்லீங்கண்ணா அதான் லுங்கியில வாங்கிட்டு போறேன்
70 / 202
மாநில எல்லையில் அடிச்சீங்க இப்ப மாவட்ட எல்லையிலும் அடிக்கிறீங்க எப்பதான் அடிக்கிறத விடப்போரீங்க-மும்பை,மகராஷ்ட்ரா
71 / 202
ஊர் போய்ச் சேரும் வரை இந்த செருப்பு தாங்குமா என அதில் விழுந்துள்ள ஒட்டையை வைத்து அளவிடுகிறார்-ைஹதரபாத்,தெலுங்கானா
72 / 202
கொளுத்தும் வெயிலில் ஒரு பிஞ்சு தந்தையின் கைபிடித்து நடக்கிறது -காசியாபாத்,உ.பி.
73 / 202
அழத்தான் முடியும்:வாகன விபத்தில் சிக்க உயிரிழந்த புலம் பெயர்ந்தவர்களின் உறவுகள் துக்கத்தில்-வைசாலி,பிகார்
74 / 202
கல்லையும் கரையவைக்கும் கண்ணீர்: சோறு தண்ணீர் இல்லாமல் நடந்துவரும் சோகத்தை பகிர்ந்து கொள்கிறார்- புதுடில்லி.1
75 / 202
மொட்டை மாடியில் சைக்கிளிங் உடற்பயிற்சி -கோல்கத்தா,மேற்குவங்கம்
76 / 202
டிரெய்ன வரப்போகுது சாப்பிடுன்னு சொல்லியே நாலு நாளா சொல்றே ஆனா டிரெய்ன் வரவே மாட்டாங்குதே-தானே,மகராஷ்ட்ரா
77 / 202
நடந்தே ஊர் போகிறவர்களுக்கு தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ள புதுச்செருப்புகளை தானம் செய்துள்ளனர்-போபால்,ம்.பி.
78 / 202
ஊர் போய்ச் சேர்வதற்குள் என்னவெல்லாம் சாகசம் செய்யவேண்டி உள்ளது-டில்லி
79 / 202
சமூக இடைவெளியில் தண்ணீர் சப்ளை-ஜபல்பூர்,ம.பி.
80 / 202
இங்கேயும் அப்பர் பர்த் ‛வசதி' உண்டு-லக்னோ,உ.பி.
81 / 202
நடந்த களைப்பில் குழந்தைகள் உறங்குகின்றனர் அம்மா துாக்கம் துறந்து குழந்தைகளை பாதுகாக்கிறார்-டில்லி
82 / 202
நடந்து செல்லும் புலம் பெயர்ந்தவர்களுக்கு அடு்த்த சோதனையாக வழியில் புயல் காற்று வீசியது மழையும் பெய்தது-நொய்டா,டில்லி.
83 / 202
நடந்து செல்லும் புலம் பெயர்ந்தவர்களுக்கு மேலும் சோதனையாக வழியில் புயல் காற்றுடன் மழை பெய்தது-நொய்டா,உ,பி.
84 / 202
கோடை விடுமுறையில் குதுாகலத்தை தொலைத்த குழந்தைகளில் ஒன்று-பெங்களூரு
85 / 202
தண்ணீருக்கும் பிரச்னை:பாட்டில் மூடியில் தண்ணீர் கொடுத்து தம்பியை சமாளிக்கும் சகோதரி -டில்லி
86 / 202
சிறப்பு ரயிலில் வந்த பிள்ளையை ரொம்ப நாளைக்கு பிறகு ஆரத்தழுவப் போகிறேன் கொரோனாவே குறுக்கே வராதே-பெங்கூளூரு.
87 / 202
தன்னை விட தன் ஆட்டின் மதிப்பு அதிகம் என்று நினைக்கிறார் போலும்-விஜயவாடா,ஆந்திரா
88 / 202
நடந்து நடந்தே செருப்பை தேய்த்தவர்களுக்கு புதுச்செருப்பு வழங்கும் போலீஸ் அதிகாரி-டில்லி
89 / 202
இவர்களுக்கு ஒரு நிம்மதியான பயணத்திற்கு ஏற்பாடு செய்யவேண்டும் நடந்த களைப்பில் கிடைத்த இடத்தில் ஒய்வு எடுக்கின்றனர்-ஜலந்தர்,பஞ்சாப்
90 / 202
ரயில்,பஸ் போகாத ஊர்களை சேர்ந்தவர்கள் லாரி போன்ற வாகனங்களில் பயணம் மேற்கொள்கின்றனர்-மும்பை,மகராஷ்ட்ரா
91 / 202
விழிப்புணர்வையும் பயத்தையும் ஏற்படுத்திய கொரோனா பொம்மைகள் தற்போது திருஷ்டி பொம்மைகள் போலாகிவிட்டன-அகர்தலா,திரிபுரா
92 / 202
தங்கள் சொந்த ஊருக்கு போக உதவிய அதிகாரிகளுக்க நன்றி தெரிவிக்கும் குழந்தைகள்-ஹீப்ளி,கர்நாடகா
93 / 202
தொழில் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை துவங்கியுள்ளது செல்போன் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள்-நொய்டா,உ.பி.
94 / 202
சில வித மாற்றங்கள் செய்யப்பட்ட பஸ்சில் மக்கள் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர்-கோல்கத்தா,மேற்குவங்கம்.
95 / 202
எங்களுக்காக உழைக்கும் உங்களுக்கு உலக செவிலியர் தின வாழ்த்துக்கள்
96 / 202
சிறப்பு ரயிலில் பயணிப்பவர்கள் போதுமான சமூக இடைவெளியுடன் பயணிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது-டில்லி
97 / 202
எப்படியும் ஊர் போகவேண்டும் என்பற்க்காக லாரியில் பயணிப்பவர்கள்-ரேவா,அரியானா.
98 / 202
சிறப்பு ரயிலில் பயணம் செயவதர்க்காக திரண்ட புலம் பெயர்ந்தவர்கள்-ஜலந்தர்,பஞ்சாப்.
99 / 202
மாருதி கார் நிறுவன ஊழியர்கள் தங்கள் வேலைக்கு திரும்பினர்-குர்ஹாம்,அரியானா
100 / 202
சொந்த மாநிலத்திற்கு திரும்பிய புலம் பெயர்ந்தவர்களை சமூக இடைவெளியுடன் சொந்த ஊருக்கு செல்கின்றனர்.-மும்பை
101 / 202
பிரெஞ்ச் கட்டெல்லாம் எங்களுக்கு தெரியாது சார் உசிரை வாங்காதா-கோல்கத்தா மேற்குவங்கம்.
102 / 202
இதுதான் சிறப்பு சும்மா சோறு போட்டு சோம்பேறியாக்குவதை விட ரிக்சா வாங்கிக் கொடுத்து பிழைக்க வைப்பது-ராஞ்சி,ஜார்ஹண்ட்
103 / 202
எங்களுக்கு பாதுகாப்பு ட்ரஸ் கொடுத்தது எல்லாம் சரி கூடவே குப்பை அள்ள ஒரு வண்டி கொடுத்திருக்கலாம்-பாட்டியலா,பஞ்சாப்.
104 / 202
தொட்டிக்குள்ளார நான் ஏற்கனவே முழுசா பார்த்துட்டேன் ஒண்ணும் இல்ல வேஸ்ட் பெரியவரே-ஜம்மு,காஷ்மீர்.
105 / 202
ரயில் ஒடப்போகுது தண்டவாளத்தில் உட்காருங்காதீங்க தம்பிகளா-ஆமதபாத்,குஜராத்
106 / 202
நாளை முதல் ரயில்கள் ஒட இருக்கும் நிலையில் தண்டவாளங்கள் சீர் செய்யபடுகின்றன-மும்பை
107 / 202
கட்டிலின் நிழலை பிள்ளைக்கு தந்துவிட்டு வெயிலில் செங்கல் சூளையில் வேலை செய்யும் அன்னையர்களின் தியாகத்திற்கு அளவே இல்லை-ஜம்மு,காஷ்மீர்.
108 / 202
சோதனை மேல் சோதனை:டில்லியில் திடீரென புயல் காற்று வீசியதை அடுத்து தெருவில் நடமாடிய மக்கள் சிரமப்பட்டனர்
109 / 202
உயிரற்ற பொருள்களை ஒழுங்காக அடுக்கி எடுத்துச் செல்வர் இங்கே உயிருள்ள மனிதர்களை ்அள்ளிப்போட்டுச் செல்கின்றனர்-மும்பை
110 / 202
கண்களில் வழியும் இந்த கனத்த சோகத்திற்கு காரணம், ஊருக்கு போய் என்ன செய்வது என்பதால் இருக்குமோ?-டில்லி.
111 / 202
வண்டி வாகனமில்லாத இந்த நேரத்தல ரோட்டை நல்லாவே போடுவோம்-அகர்தலா,திரிபுரா
112 / 202
எவ்வளவு நாளாச்சு பீடா போட்டு ரோட்டுல துப்பி நாலு செட் கொடு சேட்-பிரயாக்ராஜ்,உ.பி.
113 / 202
வெளிநாட்டு இந்தியர்களை விமானத்தில் கூட்டிட்டு வர்ரீங்க, ஆனா எங்களை இன்னும் நடக்கவிடுறீங்களே-ஆமதாபாத்,குஜராத்.
114 / 202
கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த தாய்-மகன் சிலை பயன்படுகிறது- ஐதராபாத்
115 / 202
எவ்வளவு பஸ் ரயில் விட்டாலும் நாங்க எங்க ஊருக்கு நடந்துதான் போவோம்-மும்பை
116 / 202
இலவச உணவு தரும் இடத்தில் பயனாளிகள் தங்களது வரிசையை இப்படி ரிசர்வ் செய்து வைத்துள்ளனர் -டில்லி
117 / 202
இது நல்ல ஐடியாவா? அ்லலது பட்ஜெட் பிரச்னையா?-ராஞ்சி,ஜார்ஹண்ட்.1
118 / 202
எங்க மீன் வாங்கினாலும் நாங்க இப்படித்தான் எதையும் பார்க்காமல் ஒண்ணு கூடிவிடுவோம்-கோழிக்கோடு,கேரளா
119 / 202
விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு சம்பவத்தில் காப்பாத்த வந்தவர்களையே காப்பாற்ற வேண்டிய நிலமை
120 / 202
நம் உழைப்பை பார்த்து கொரோனா ஒடி ஒளிய வேண்டும் -கோல்கத்தா,மேற்குவங்கம்.
121 / 202
இப்ப அந்த ‛தண்ணிக்கு' பிரச்னையே இல்லை ஆனால் குடிதண்ணீருக்குதான் வரிசையில் காத்திருக்கணும்-டில்லி
122 / 202
காய்கள் காய்வதற்குள் மார்கெட்டிற்கு கொண்டு சென்றால்தான் நாலு காசு பார்க்கமுடியும் என்பதற்காக கூடையுடன் ஒடுகின்றனர்-பாட்னா,பிகார்.
123 / 202
விசாகப்பட்டினம் விஷ வாயுவில் பாதிக்கப்பட்ட மகனை காப்பாற்ற மருத்துவமனை நோக்கி ஒடும் தந்தை.1
124 / 202
கொரோனாவிற்கு நான் மருந்து கண்டுபிடிச்சுட்டேன்-பெங்களூரு.
125 / 202
அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்பது பெற்றோர்களுக்குதான் கவலை குழந்தைகளின் சந்தோஷத்திற்கு ஒரு ஜன்னல் ஒரம் போதும்-ஜலந்தர்,புஞ்சாப்.
126 / 202
எல்லோரும் ஊரடங்கு முடிஞ்ச மாதிரி சுத்திக்கிட்டு இருக்காங்க இவரு இப்பதான் ஸ்கேன் பண்ணவே ஆரமபிச்சுருக்காகு-சன்டிகர்,பஞ்சாப்.
127 / 202
அடுத்டுத்த வேலையை பார்ப்போம் என்று பாதியில் நிற்கும் பால வேையை கையில் எடுத்துக் கொண்ட தொழிலாளர்கள்-லக்னோ,உ.பி.
128 / 202
சரக்கு வாங்கப் போறவங்க சுத்த பத்தமா போங்கோ- பரிதாபாத்,அரியானா.
129 / 202
தாய் மண்ணே வணக்கம் ஒரு வழியாக வந்து சேர்ந்துவிட்டோம்-ராஞ்சி,ஜார்கண்ட்.
130 / 202
நாங்க நல்லாயிருக்கோம் பாருங்க அரசாங்கம் எ்ங்களுக்கு சீல் வைச்சுருக்கு-பாட்னா,பிகார்
131 / 202
எதுக்கு ரிஸ்க் எல்லாத்தையும் துவைச்சு காயவைச்சே உபயோகிப்போம்-கவுகாத்தி,அசாம்.
132 / 202
இந்த ஏர்கூலரா எடுத்துட்டு ஏசியா பிட் பண்ணுங்கப்பா வெயிலுக்கு இது சரிப்பட்டு வரல.-நாக்பூர் மிருகக்காட்சி சாலை,மகாராஷ்ட்ரா.
133 / 202
என் கடன் பணி செய்து கிடப்பதே என்பதற்கு ஏற்ப நகரை சுத்தமாக்க சாக்கடையை அள்ளுவதில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்கள்-மும்பை
134 / 202
சோறு தண்ணி இல்லை என்றாலும் சொந்த மண்ணையும் மக்களையும் பார்த்தால் மகிழ்ச்சிதான-பாட்னா,பிகார்
135 / 202
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று வாழ்ந்த சாதுக்களும் சாமியார்களும் கூட கொரோனா காரணமாக சொந்த ஊர் திரும்பிவிட்டனர்,ஹூக்ளி,மேற்கு வங்கம்.
136 / 202
ஆமா..சார்‛ சரக்கு 'வாங்கிற கூட்டம் அதிகமாயிட்டே போகுது கூடுதலா போர்ஸ் அனுப்புங்க -டில்லி
137 / 202
ரத்த தான முகாம் நடக்காததால் மருத்துவ மனைகளில் ரத்தத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது ராணுவத்தினர் முன்வந்து தானம் செய்கின்றனர் -பெங்களூரு.
138 / 202
சொந்த ஊருக்கு போக முடியாத ஆ்த்திரத்தில் தீ வைப்பு மற்றும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள்-சூரத்,குஜராத்.
139 / 202
மொத்தமா( ஊருக்கு) போறதுன்னு முடிவு எடுத்து இருக்காங்கலாம்-பெங்களூரு.
140 / 202
இது போதும் எனக்கு மே 17 வரை இது போதும் எனக்கு..ததும்பி வழியும் சரக்கு மற்றும் உற்சாகத்துடன் நாட்டின் எதிர்காலம்-டில்லி
141 / 202
ஊரடங்கு தளர்த்தியவுடன் ஆர்வமுடன் வேலைக்கு திரும்பியவர்கள் அல்ல மதுவாங்கும் ஆர்வத்தில் நீ..ண்ட வரிசையில் நிற்பவர்களே-டில்லி
142 / 202

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் உயர்ந்த நோக்குடன் மதுக்கடை முன் கூடிய குடிமகன்களை' இப்படி ஒட ஒட அடித்து விரட்டலாமா?-டில்லி.


143 / 202

சுதந்திரம் வாங்க அடிபட்டது முந்தைய தலைமுறை மது வாங்க அடிபடுவது இன்றைய தலைமுறை-டில்லி


144 / 202
மலர்ந்த முகமே வாழ்க்கையில் இன்பம்.மீண்டும் டில்லியில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
145 / 202
கொரோனாவிற்கு எதிரான போரில் இரவு பகலாக போராடிவரும் மருத்துவர்களுக்கு, கப்பல் படையினர் இரவு வெளிச்சம் பாய்ச்சி மரியாதை செய்தனர்-மும்பை.
146 / 202

இந்த சூழ்நிலையில் கூட எல்லையில் தொல்லை தரும் எதிரிகளை அழித்தொழிக்க கடமை அழைக்கிறது -பிரயாக்ராஜ்,உ.பி.


147 / 202

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? ஏரியில இருந்துக்கிட்டு காய்கறி விக்கிறீங்க.வஞ்சிரம்,வாலை,ஏரான்னு எதுவும் இல்லையாம்மா-ஸ்ரீநகர்,காஷ்மீர்.


148 / 202

நல்ல துாக்கம் திடீர்னு சென்னையில் எல்லாத்தையும் தளர்த்திட்ட மாதிரி பயங்கரமான கனவு துாக்கிவாரிப்போட்டுருச்சு துாக்கமும் கலைஞ்சு போச்சு


149 / 202

இத்தனை நாளாய் எங்கு இருந்தாய்


நீண்ட இடைவெளிக்கு பிறகு திறக்கப்பட்ட மதுக்கடையில் மதுப்பிரியர்-கவுகாத்தி,அசாம்.


150 / 202
இப்ப நாங்க ஸ்டடி'யா நிப்போம் நீண்ட இடைவெளிக்கு பிறகு திறக்கப்பட்ட மதுக்கடை முன் மதுப்பிரியர்கள்-கவுகாத்தி,அசாம்
151 / 202

இந்த மாதமும்வீட்டு வாடகையை தள்ளுபடி செய்வாங்களா? கரண்ட் பில் கட்ட காலக்கெடு தருவாங்களா? என்பது போன்ற எந்த பிரச்னையும் இல்லை என்ன முழிச்சுக்கிட்ட பசிக்குது துாங்குற மாதிரியே நடிச்சு வயித்தை சமாதானப்படுத்த வேண்டியிருக்கு அது மட்டும்தான் பிரச்னை-டில்லி


152 / 202

நம்ம கிட்ட இருககிற லக்கேஜ்க்கு பஸ் சரிப்படாதாம் லாரி அனுப்புறேன் ஆபிசர் சொல்லிப் போயிருக்காரு -பெஜவார்,ராஜஸ்தான்


153 / 202

சமூக விலகலை பிரமாதமா கடைப்பிடிச்சு பஸ் ஏறுறீங்க பலே பலே-பெங்களூரு,கர்நாடாகா


154 / 202
நாடு முழுவதும் உள்ள நமது நாயகர்களான மருத்துவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்கள் பணியாற்றும் மருத்துவமனைகள் மீது நமது இந்திய ராணுவ விமானங்கள் இன்று மலர் துாவி கவுரவித்தது.- புதுடில்லி.
155 / 202
ஏத்துறா சைக்கிள நடு வழியில பஸ் நின்னாலும் நாம சைக்கிள ஒட்டிட்டு ஊர் போய்ச் சேர்ந்துவிடுேவோம்-பிரயாக்ராஜ்.
156 / 202
போறதுன்னு முடிவு பண்ணீட்டிங்க எப்படிபோறதுன்னும் நீங்களே முடிவு பணணிட்டீங்க நாங்க தடுத்தால் கேட்கவா போரீங்க-ஜபல்பூர்.
157 / 202
அந்த நாலு பேருக்கு மன்னிக்கவும் காடு வரை கடைசி வரை வந்த சுகாதார பணியாளர் ஒருவருக்கு மட்டும் நன்றி-டில்லி
158 / 202
சேர்ந்தே போவோம் சேர்ந்ே வருவோம் சேர்ந்தே கொரோனாவ வாங்குவோம்-டில்லி
159 / 202
இன்னும் ரோடு எங்க கண்ட்ரோல்லதான் இருக்கு அவசரப்படாதீங்க மே 17 க்கு பிறகு பார்ப்போம்-டில்லி
160 / 202
ஊர் போற வரை இந்த எல்லையை தாண்டி நீங்களும் வரக்கூடாது நாங்களும் வரமாட்டோம்-பிரயாக்ராஜ்.
161 / 202
சொந்த மண்ணை பார்க்கப் போகும் மகிழ்ச்சி: நாடு முழுவதும் புலம் பெயர்ந்தவர்கள் பஸ் ரயில் மூலம் அவரவர் இடத்திற்கு செல்கின்றனர்-பிரயாக்ராஜ்.
162 / 202
தம்பி அடங்குங்க, கிருஷ்ணகிரியும் இப்ப ஆரஞ்சு மண்டலமாயிடுசசு ‛கடை' திறக்க வாய்ப்பில்லை
163 / 202
அண்ணா..அண்ணா...இன்னும் பதினைந்து நாள் தாக்குப்பிடிககணும் அந்த வாழைப்பழத்தை எனக்கு கொடுங்கண்ணா-பிரயாக்ராஜ்.
164 / 202
மக்கள் ராத்திரியில் வெளியே வர்ரதா தகவல் வந்தது அதுனால நைட் ரோந்த ஆரம்பிச்சுட்டோம்-ஆமதபாத்
165 / 202
ரயிலே எதிர்பார்த்தா நடக்காது பிரதர் நம்ம சைக்கிளிலேயே கிளம்பிடுவோம்-முசாப்பூர்நகர்
166 / 202
வரிசையில் வைக்க என்கிட்ட தட்டு இல்ல,இருந்த தட்ட ராத்திரி சாப்பாட்டு வரிசையில வச்சுட்டேன் -மும்பை
167 / 202
சாதம் வெந்திருக்கு சாம்பார்ல பருப்பு இருக்கு அமைச்சருங்கோ யாரோ அன்னதானம் பண்ணியிருக்காங்க-கோல்கத்தா
168 / 202
ஒய்வு ஊதியம் வாங்கிறதுக்கு பாங்கின் வாசலில் காத்து கிடந்தே ஒய்வு காலம் முடிஞ்சுடும் போல இருக்கே-பீகானீர்.
169 / 202
இனத்தாலும் மதத்தாலும் வேறுபட்டு இருந்தாலும் எங்கு காய்கறி வாங்கும் போது நாம் இந்தியர் என்று ஒன்றுபட்டு நிற்போம்-டில்லி
170 / 202
தொழிலாளர் தின வாழ்த்து எல்லாம் இருக்கட்டும் வெயில் அதிகமாக இருக்கு ஐந்து ரூபாய் கூடக்கொடுங்க அது போதும்.
171 / 202
கொஞ்சம் கோதுமை மாவை இரண்டு கல் எரிக்க விறக மட்டும் கொடுத்துட்டு எத்தனை நாள் வேணும்னாலும் ஊரடங்க நீட்டிச்சுங்குய்யா-சண்டிகர்.1
172 / 202
எதுக்குத்தான் போலீசுக்கு பயப்படறதுன்னு விவஸ்தை இல்லாம போயிடுச்சு சீக்கிரம் முடிவெட்டிவிடுப்பா-பெங்களூரு.
173 / 202
கொஞ்சம் காற்று வாங்க நடக்க விடுங்கப்ப, வீட்டிற்குள்ளேயே இருந்து மூட்டு வலி இடுப்பு வலி எல்லாம் வந்துடுச்சு- டில்லி
174 / 202
என்னை தாங்கிப் பிடிக்க இத்தனை பேர் இருக்கும் போது எத்தனை பேர் தாக்கினாலும் தாங்குவேன் என்கிறார் இந்த பஞ்சாப் போலீஸ் அதிகாரி-அமிர்தசரஸ்
175 / 202
ரொம்ப நாள் கழித்து பஸ் ஒட்டுறோம் இப்பல்லாம் ‛மோட்டல்' இருக்காது ஒழுங்கா இங்கேயே சாப்பாடு வாங்கிட்டு போயிடுவோம்- பிரயாக்ராஜ்.
176 / 202
ஒரு வழியா சொந்த ஊருக்கு போறதுக்கு நானும் பஸ் ஏறிட்டேன்-பிரயாக்ராஜ்.
177 / 202
செங்கல் சூளையில் தங்கள் வேர்வையைச் சிந்தி உழைக்க களம் இறங்கிவிட்ட தொழிலாளர்கள்-பாட்னா
178 / 202
காய்கறி வாங்கும் உற்சாகத்தில் பெண்கள்- ைஹதரபாத்.
179 / 202
உழைப்பு தரும் உற்சாகத்திற்கு எது நிகர் என்பதை உணர்ந்த தொழிலாளர்கள் சாலையோர வேலையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்-கவுகாத்தி.
180 / 202
போக்குவரத்து நேரத்தில் உபயோகித்த நடை மேம்பாலத்தை நீண்ட இடைவெளிவிட்டு ஒருவர் பயன்படுத்த நினைக்கிறார்-பெங்ளூரு.
181 / 202
சொந்த ஊர் தரும் நம்பிக்கையை மட்டுமே சுமந்து கொண்டு நடந்தே ஊர் திரு்மபும் மக்கள் ஆங்காங்கே ஒய்வு எடுக்கின்றனர்-தானே.
182 / 202
கொரோனா போரில் வெறறி பெற்ற இந்தியா கொஞ்சம் கொஞ்சமாய் இயல்பு நிலைக்கு திரும்புகிறது,வேலைக்கு திரும்பும் ஊழியர்கள்-போபால்.
183 / 202
வாழ்த்துகிறோம் மருத்துவர்களே:கொரோனா போர் வீரர்களான மருத்துவர்களை மலர்துாவி வாழ்த்துக்கின்றனர்-அமிர்தசரஸ்.
184 / 202
உழைப்பு தந்த களைப்பு காரணமாக வீதி ஒரத்தில் அப்படியே படுத்து உறங்குகிறார் காவலர் ஒருவர்- பிரயாக்ராஜ்.
185 / 202
பிகார் மாநிலத்தில் இருந்து வெளியே வேலைக்கு சென்றவர்கள் சொந்த ஊருக்கு சைக்கிளிலேயே திரும்ப வந்து சேர்ந்தனர்.
186 / 202
தட்ட ஒழுங்கா பிடிங்கம்மா
187 / 202
வீட்டைவிட்டு வெளியே வந்தா எமன் நான் பிடிச்சுட்டு போயிருவேன் உள்ளே போ-டில்லி
188 / 202
வீட்டு அத்தியாவசிய தேவைக்கு காய்கறி வாங்கிட்டு போறார் வேற ஒண்ணுமில்லை
189 / 202
அடுத்தடுத்து கஸ்டமர் வெயிட்டிங்ல இருக்காங்க அதுனால கட்டிங் மட்டும்தான் நோ சேவிங்...
190 / 202
கோல்கத்தாவில் ஒரு நாள்:சொன்னா நம்புங்க சார் வீட்ல நடக்கமுடியாத புள்ள இருக்கு அதுக்கும் சேர்த்து இன்னோரு கரண்டி போடுங்க ஐயா
191 / 202
கோல்கத்தாவில் ஒரு நாள்:இன்னும் கொஞ்ச துாரம்தான் போனால் சாப்பாடு வாங்கிட்டு திரும்பிரலாம்...
192 / 202
கோல்கத்தாவில் ஒரு நாள்:நேத்து எல்லாம் இந்த நேரம் சாப்பாடு வந்துருச்சு இன்னைக்கு இரண்டு மணி நேரமாச்சு இன்னும் வரலை
193 / 202
கோல்கத்தாவில் ஒரு நாள்:எப்படியும் அம்மாவும் அப்பாவும் சாப்பாடு வாங்கிட்டு வந்துருவாங்கல்ல
194 / 202
கோல்கத்தாவில் ஒரு நாள்:ஆகா..இன்னைக்கு சாப்பாடு கிடைச்சுருச்சு
195 / 202
வாழ்க்கை சக்கரம் ஒட என் வண்டி சக்கரம் ஒடித்தானாக வேண்டும்-கோல்கத்தா
196 / 202
கூட்டமாய் விளையாடுபவர்களை டிரோன் கேமிராக்கள் பறந்து பறந்து விரட்டிப்பிடிக்காத இடம் இப்போதைக்கு இந்த குப்பைகிடங்குதான் -மும்பை
197 / 202
நிற்க நேரமில்லாமல் வாடகை டாக்சி ஒட்டிக்கொண்டு இருந்தவர்கள் இப்போது கால்கடுக்க நிற்கின்றனர் உணவுக்காக-கோல்கத்தா
198 / 202
அழும் குழந்தைகளுக்காக தடைகள் பல தாண்டி சைக்கிளில் பால் கொ்ணடு செல்பவர்-பிரயாக்ராஜ்.
199 / 202
சாப்பிடறோம் துாங்குறோம் சாப்பிடறோம் துாங்குறோம் -பிரயாக்ராஜ்.
200 / 202
உண்டா மயக்கம் இல்லீங்க உண்ணாததால் ஏற்பட்ட மயக்கமுங்க- ைஹதரபாத்
201 / 202
காய்கறியோடு கொரோனாவையும் சேர்த்து கொண்டுவர்ர மாதிரி இருக்கே மினிமம் பாதுகாப்பு நடவடிக்கை கூட கிடையாதா?-பாட்னா
202 / 202
யாருப்பா அது என்னை கொண்டுவந்து நடுரோட்டில் போட்டது உங்களுக்கு பொழுது போகலைன்னா நான்தான் கிடைச்சேனே-கோல்கத்தா