புகைப்பட ஆல்பம்:

படம் தரும் பாடம்
1 / 344
மழை காரணமாக ரோடுகளில் நீர் வெள்ளம் போல பாய்ந்தாலும் வாழ்வாதாரம் கருதி ரிக்சா இழுத்து செல்பவர்கள்-கோல்கட்டா
2 / 344
அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மக்கள் படகு மூலமாக பத்திரமான இடத்திற்கு செல்கின்றனர்.
3 / 344
கிராமத்தை விட்டு வந்த மக்களின் மனது இப்போது கிராம வாழ்க்கையை தேடுகிறது மே.வங்க மாநிலம் நடியா கிராமத்து குழந்தைகள் மாலைப்பொழுதை மகிழ்வோடு கொண்டாடுகின்றனர்.
4 / 344
விவசாயத்திற்கு கேடு ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் உ.பி.,மாநிலம் ஆக்ராவிற்கு இன்று படையெடுத்தது.
5 / 344
மேற்கு வங்க மாநிலம் பிர்கும் மாவட்டதில் உள்ள பழங்குடி மக்கள் தங்களுக்கான விழாவினை குதுாகலமாக கொண்டாடினர்.
6 / 344
கொரோனா நோய் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வீடு வீடாக சோதனை செய்யப்படுகிறது.
7 / 344
ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து முடங்கிய நிலையில் தனியார் வாகனங்களில் தொற்றியபடி பயணிக்கும் மக்கள்-பிவார்,ராஜஸ்தான்.
8 / 344
பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்ணடித்து மாட்டு வண்டியில் பயணம் செய்யும் போராட்டம் நடத்திய காங்கிரசார்-பாட்னா,பிகார்.
9 / 344
கன மழை காரணமாக கோயிலுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் கோவில் பணியாளர்கள்-கோராக்பூர்,உ.பி.,
10 / 344
தலைநகர் டில்லி மக்களை பலவித துயரங்கள் வாட்டுகின்றது அதில் குடிநீர் பிரச்னையும் ஒன்று.
11 / 344
உ.பி.,யில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளில் வெளியானது அதில் வெற்றி பெற்றவர்களின் கொண்டாட்டம்.
12 / 344
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதயில் வெயிலின் சூட்டை தாங்க முடியாத சிறுமி அங்குள்ள குழாயில் கொட்டும் தண்ணீரில் குளிக்கிறார்.
13 / 344
ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து படையெடுத்து வரும் வெட்டுக்கிளி கூட்டம் டில்லி அருகில் உள்ள குருகிரகம் வரை வந்துவிட்டது.
14 / 344
அசாமில் பெய்துவரும் கனமழை காரணமாக தண்ணீர் பெருகி வரும் குளங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒருவர்.
15 / 344
மனிதர்களை கவனிக்கவே நேரமில்லை நம்மை யார் கவனிக்க போகிறார்கள் உனக்கும் எனக்கும் இந்த பழைய பெட்டிதான் ஆறுதல்
16 / 344
வட மாநிலங்களில் இது மழைக்காலம் எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்பதன் அடையாளமாக மேகங்கள் சூழ்நது இருக்கும் இடம் ஜெய்ப்பூர்.
17 / 344
கோல்கத்தாவில் தெருவோர வியாபாரி தனது பொருளை விற்பதற்கு தயராக இருந்தாலும் வாங்குவதற்குதான் ஆட்கள் இல்லை
18 / 344
பிள்ளைகளை எப்படியாவது படிக்கவைக்க வேண்டும் என்பதற்காக ஸ்ரீநகரில் திறந்த வெளி வகுப்புகள் நடத்தப்படுகின்றன
19 / 344
லடாக்கில் இறந்த நம் ராணுவ வீரர்களுக்கு காங்.கட்சியினர் நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வை நடத்தினர்-டில்லி.
20 / 344
அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக பாலத்தின் அடியில் ஒடிக்கொண்டு இருக்கும் வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட லாரி
21 / 344
பருவநிலை மாற்றம் காரணமாக கர்நாடகா மாநிலம் மங்களூர் கடற்கரையில் வீசும் கடுமையான காற்று.
22 / 344
மற்றவர்களுக்கு சமூக இடைவெளி குறித்து பாடம் நடத்த வேண்டிய பத்திரிகையாளர்களே படம் எடுக்க இப்படி நிற்கின்றனர்- ைஹதரபாத்
23 / 344
தேர்வு அறைக்குள் நுழைந்த இந்த மாணவியின் கண்ணில் தெரியும் பயத்தி்ற்கு காரணம் தேர்வா? கொரோனாவா?
24 / 344
அசாமில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தில் தப்பிப் பிழைத்துவரும் குடும்பம்
25 / 344
போலீஸ் அணிவகுப்ப போல இது சுகாதார பணியாளர்களின் அணிவகுப்பு -மும்பை
26 / 344
கொரோனா சோதனை செய்தவர்களுக்கு விரல்களில் அடையாள மை வைக்கப்படுகிறது-டில்லி
27 / 344
சீனப்பொருட்களுக்கான எதிர்பபை தனது முககவசம் மூலமாக தெரியப்படுத்துகிறார் .-போபால்.
28 / 344
கொரோனா நோயாளிகளுக்கான அவசர சிகிச்சை பிரிவுகள் டில்லியில் துவக்கப்பட்டன.
29 / 344
பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் நுாதன போராட்டம் நடத்தினர்.-ைஹதரபாத்
30 / 344
சுற்றுலா பயணியரை ஈர்க்கும் விதத்தில் ஜெய்ப்பூரில் சுற்றுலா தளங்கள் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளது.
31 / 344
கொரோனாவிற்கு எதிரான இரு ஆயுர்வேத மருந்துகளை யோகாகுரு பாபா ராம்தேவ் அறிமுகம் செய்தார்
32 / 344
ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை துவங்கியது.
33 / 344
பூரி ஜெகநாதர் கோவில் தேரோட்டத்தை நடத்தலாம் என தீர்ப்பு வந்ததை அடுத்து அர்ச்சகர்கள் மகிழ்ச்சி ஆராவாரம் செய்தனர்.1
34 / 344
கொரோனா காரணமாக ஒடாமல் நிற்கும் பஸ்சை வீடாக்கி சமைத்து சாப்பிடும் ஊழியர்கள் இடம்: கோல்கட்டா.
35 / 344
சீனாவிற்கு எதிராக டிலல்யில் நடைபெற்ற போராட்டத்தில் எரிக்கப்பட்ட சீன அதிபரின் படம்
36 / 344
மிசோராம் மாநிலம் சம்பாங்கி என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சேதமடைந்துள்ள வீடு
37 / 344
ஐதராபாத்தில் சூரிய கிரகண காட்சி.
38 / 344
சென்னையில் சூரிய கிரகணம்..
39 / 344
டில்லியில் வளைய சூரிய கிரகண தோற்றம்
40 / 344
சிக்கமில் உள்ள நம் வீரர்களின் யோகா பயிற்சி
41 / 344
சர்வதேச யோக தினமான இன்று டில்லியில் கூட்டாக யோகாபயிற்சியில் ஈடுபட்டவர்கள்
42 / 344
சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு பிரபல மணல் சிற்பக்கலைஞர் ஒடிசா மாநில கடற்கரையில் அமைத்துள்ள மணல் சிற்பம்.
43 / 344
ைஹதரபாத்தில் இன்று நடைபெற்ற இந்திய விமான படையின் சாகச நிகழ்ச்சியில் விண்ணைக்கிழித்துக் கொண்டு பறந்த விமானங்கள்
44 / 344
கொரோனா காரணமாக முடங்கிப் போன குடும்பத்து குழந்தை ஒன்று சமூக ஆர்வலர்கள் வழங்கம் சாப்பாட்டை பெற்று திரும்புகிறது-மும்பை
45 / 344
மகராஷ்ட்ரா மாநிலம் காரத் மருத்துவமனையில் இருந்து இன்று இருநுாறு பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்
46 / 344
காஷ்மீர் மாநிலம் கத்துவா எல்லையில் சுடடு வீழ்தப்பட்ட பாக்.நாட்டு டிரோனை நம் வீரர்கள் எடுத்து வருகின்றனர்.
47 / 344
பிகார் மாநிலம் பாட்னா மருத்துவமனையில் உ்ள்ள கொரோனா நோயாளிகளுக்கான தனி வார்டில் மழை வெள்ளம் புகுந்தது1
48 / 344
சீனாவிற்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன,தர்மசாலாவில் சீன நாட்டு கொடியினை எரித்து எதிர்ப்புகாட்டியவர்கள்
49 / 344
ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் உள்ள புகழ் பெற்ற வாட்டர் ஸ்போர்ட்ஸ் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.
50 / 344
காசியில் பெய்துவரும் கனமழை காரணமாக தெருக்களில் மழை நீர் வெள்ளம் போல ஒடுகிறது.
51 / 344
சீன ராணுவத்தினர் செய்த அட்டுழியம் காரணமாக மக்களின் கோபம் சீனப்பொருட்கள் மீது திரும்பியுள்ளது.சீன டி.வி.யை மிதித்து துவம்சம் செய்கின்றனர்-லக்னோ,உ.பி.
52 / 344
திட்டமிட்டபடி பெங்களூருவில் பியூசி தேர்வு நடைபெறுகிறது,மாணவர்கள் தேர்வு அறைக்குள் வரும் முன் கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்கின்றனர்.
53 / 344
மும்பையில் மழைக்காலம் துவங்கிவிட்டது ஆனந்தமாய் நனைந்தபடி ஆட்டம் போடும் சிறுவன்.
54 / 344
84 வயது பெரியவர் டில்லியில் உள்ள பூங்காவில் யோகா பயிற்சி மேற்கொண்டு வருகிறார் ஆரோக்கியமான உடல் இருந்தால் எந்த நோயும் அருகில் வராது.
55 / 344
மக்களிடம் மாஸ்க் அணியவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பெங்களூருவில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
56 / 344
லடாக்கில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களில் ஒருவரான ராமநாதபுரத்தைச் சேர்ந்த பழனியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
57 / 344
வரவிருக்கும் சர்வதேச யோகதினத்தை கொண்டாட யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.-ஜம்மு.
58 / 344
மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள கடுமயைான உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர்.-ஜம்மு.
59 / 344
கொரோனாவில் இருந்து மீண்ட போலீசார் ஒய்வு எடுக்காமல் மீண்டும் பணிக்கு திரும்பியதை அடுத்து மலர்துாவி வரவேற்கப்பட்டனர்.
60 / 344
மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
61 / 344
நாடு முழுவதும் சீனாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் கொழுந்துவிட்டு எரிகிறது -பிகானீர்,ராஜஸ்தான்.
62 / 344
அதிகரித்துவரும் கொரோனா நோயாளிகளை தங்க வைக்க மருத்துவமனையில் இடம் இல்லாத சூழலில் தனியார் ஒட்டல்கள் தயார் செய்யப்படுகி்ன்றன.-டில்லி.
63 / 344
விழித்திருப்பதும்,வீட்டில் இருப்பதும்,விலகியிருப்பதும் மட்டும் போதாது ஆரோக்கியமாகவும் இருக்கவேண்டும் அதற்கு உடற்பயிற்சி அவசியம்
64 / 344
கொரோனாவிற்கு எதிரான பிரம்மமாண்ட யாகத்தில் கலந்து கொண்ட கர்நாடகா முதல்வர் எடியூரப்பா.
65 / 344
ஊரடங்கே தேவையில்லை உன்னை வெளியே விட்டால் போதும் ஊர்ல ஒரு பய வெளியே இருக்கமாட்டான் -அசாம்
66 / 344
ரேசன் பொருட்கள் வாங்க வந்தவர்கள் வெயிலில் நி்ற்க முடியாமல் தங்களுக்கான இடத்தை பை போட்டு நிரப்பிவிட்டு பக்கத்தில் உள்ள நிழலில் நிற்கின்றனர்.-ஜெய்ப்பூர்
67 / 344
கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டோம் எனக்கூறியபடி உற்சாகத்துடன் வீடு திரும்பும் மக்கள்-காரத்,மகாராஷ்ட்ரா
68 / 344
மும்பையின் நெரிசலை குறைக்க மீண்டும் அந்த ஊரின் பிரதான போக்குவரத்தான மின்சார ரயிலை ஒடவிட்டாச்சு.
69 / 344
வாய் இல்லாத ஜீவன்களான தெரு நாய்களுக்கு உணவளிக்கின்றனர்-பிகானீர்,ராஜஸ்தான்.
70 / 344
குழந்தைகளிடம் சமூக இடைவெளிவிட்டு .உட்காரணும் என்று சொன்னால் புரியாது நடுவில் பொம்மைகளை வைத்துவிடவேண்டியதுதுான்-நாடியா,மே.வங்கம்
71 / 344
மருத்துவர்க்ளும் ஒரு சீரான இடைவெளிவிட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகின்றனர்.-ஸ்ரீநகர்.
72 / 344
டில்லிக்குள் நுழையும் வாகனங்கள் மிகுந்த கட்டுப்பாட்டிற்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.-நொய்டா.
73 / 344
மும்பை கடற்கரை பொதுமக்கள் உபயோகித்துக் கொள்ள மீண்டும் அனுமதிக்கப்பட்டதை அடுத்து ஜாக்கிங் செய்கிறார் இவர்.
74 / 344
மாஸ்க் இல்லாமல் வாக் போன நடிகை மல்லிகா ெஷரவாத் , தடுக்கவேண்டிய போலீசுடன் செல்பியும் எடுத்துக்கொள்கிறார்-மும்பை
75 / 344
தொற்றுப் பராவாமல் இருக்க இப்போது காய்சல் கண்டு பிடிக்கும் மெஷினுடன் ரோபட் நிற்கிறது.-புனே
76 / 344
கிராம மக்களின் வாழ்க்கை இப்போது நகர மக்களை ஏக்கம் கொள்ள வைக்கிறது -பிர்ஹாம்,மே.வங்கம்
77 / 344
மாநிலங்களுக்கு இடையே பிராயணம் மேற்கொள்வதில் இப்போது பிரச்னை இல்லை ஆனால் மாநிலங்களுக்குள் பிராயணம் செய்வதுதான் பிரச்னை-அமிர்தசரஸ்,பஞ்சாப்.
78 / 344
பசி போக்கும் சமூக ஆர்வலர்கள் எண்ணிக்கை குறைவதும், பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கை கூடுவதும் கவலைதருகிறது.-கோல்கத்தா
79 / 344
பழமையும் பெருமையும் மிக்க டிராம் வண்டிகள் மீண்டும் ஒடுகிறது மனதில் உற்சாகம் பெறுகிறது-கோல்கத்தா
80 / 344
புலம் பெயர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு போவது இன்னும் முடிவிற்கு வராதது வேதனையாகவே இருக்கிறது-டில்லி.
81 / 344
உடல் நன்றாக இருந்தால் உள்ளமும் நன்றாக இருக்கும்,யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள்-ஜம்மு
82 / 344
நல்ல விஷயமாக கொரோனா நோயாளிகள் அதிகளவில் குணமடைந்து திரும்புகின்றனர்-காரத்,மகராஷ்ட்ரா
83 / 344
தண்டவாளங்களை சீரமைக்கும் பணியல் ரயில்வே தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.-நாடியா,மே.வங்கம்
84 / 344
கொரோனா பாதித்த 97 வயது பெரியவரை குணமாக்கி மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு அனுப்பிவைக்கின்றனர்-ஆக்ரா.உ.பி.
85 / 344
வடமாநிலங்களில் மழைக்காலம் துவங்கிவிட்டது கொரோனா கவசங்களுடன் கூடுதலாக ஒரு குடையையும் எடுத்துக்கொண்டு செல்கின்றனர்-கோல்கத்தா
86 / 344
அதிகமாகிவரும் கொோனா நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தற்காலிக மருத்துவமனை கட்டப்பட்டுவிட்டது.-மும்பை.
87 / 344
சொந்த ஊர் போகப்போகும் மகிழ்ச்சியில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் -ஜம்மு
88 / 344
ஈரானில் இருக்கும் இந்தியர்கள் கப்பல் மூலமாக மீட்கப்பட்டு குஜராத் மாநிலம் போர்பந்தர் கொகண்டு வரப்பட்டனர்.
89 / 344
பூரி ஜெகநாதர் ஆலய தேரோட்ட விழாவினை முன்னிட்டு சுவாமி சிலைகள் விற்பனைக்கு தயார் செய்கின்றனர்.-நாடியா,மேற்குவங்கம்.
90 / 344
பொது மக்களுக்கான பஸ் போக்குவரத்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்படுகிறது.டிப்போவை விட்டு வரும் பஸ் கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்படுகிறது.-நாக்பூர்,மகராஷ்ட்ரா.
91 / 344
நடிகர் அமிதாப்பச்சன் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விமானங்களில் புலம் பெயர்ந்தவர்கள் பிராயணம் செய்து அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றனர்-லக்னோ.உ.பி.
92 / 344
கொரோனாவில் சிறப்பாக பணியாற்றி வரும் சமூக சுகாதார ஆர்வலர்களை பாராட்டி கவுரவித்தனர்.-பெங்களூரு.
93 / 344
ஒரு பக்கம் கொரோனாவிற்கு மருந்து இன்னோரு பக்கம் மலேரியாவிற்கு மருந்து அடிக்கப்படுகிறது-மும்பை
94 / 344
விவசாய தொழிலாளர்கள் புலம் பெயர்ந்து விட்டதால் குறைந்த ஆட்களை வைத்தே விவசாயம் நடைபெறுகிறது.-பதின்டா,பஞ்சாப்
95 / 344
அத்துமீறும் கொரோனா நோயாளிகளால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் நடுரோட்டில் நடத்திய போராட்டம்-ைஹதரபாத்
96 / 344
ஜவுளிக்கடை வாசலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பொம்மைகள் நவீன உடைகளுக்கு பதிலாக கவச உடையணிந்து நிற்கின்றன-பெங்களூரு.
97 / 344
ஆரோக்கியத்திற்கு வித்திடும் ‛ஜிம் 'எனப்புடும் உடற்பயிற்சி கூடத்தை திறக்க அனுமதி கேட்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டம்-டில்லி
98 / 344
தனது வயலில் கொத்து கொத்தாக வந்து செத்துக்கிடந்த வெட்டுக்கிளிகளை காட்டும் விவசாயி-ஆஜ்மீர்.ராஜஸ்தான்.
99 / 344
பறிமுதல் செய்யப்பட்ட குண்டுகளை வெடித்து அழிக்கும் இடத்தில் இருந்து ஒரு குழந்தையை பாதுகாத்து அழைத்து செல்கிறார்-காஷ்மீர்.
100 / 344
காசியில் இருப்பதே ஆனந்தம் திறக்கப்பட்ட காசி விசுவநாதரை பார்க்கப் போவது பரமானந்தம்-காசி.
101 / 344
திறக்கப்பட்ட மிருகக்காட்சி சாலைக்குள் நுழைந்த பார்வையாளர் மயிலை பார்த்து மகிழ்கிறார்-லக்னோ.உ.பி.
102 / 344
இது கொரோனா கால தள்ளுபடி மூவாயிரம் ரூபாய்க்கு பொருள் வாங்கினால் ஐம்பது மாஸ்க்குகள் இலவசம்-அமிர்தசரஸ்,பஞ்சாப்.
103 / 344
வாழ நினைத்தால் வாழலாம் பனை ஒலை விசிறி விற்றும் வாழலாம்-பிர்ஹாம்,மே.வங்கம்
104 / 344
முக கவசம் இனி உயிர் கவசம் என்பதை மக்களிடம் வலியுறுத்தும் வகையில் மகாத்மாவிற்கும் ஒரு ‛மாஸ்க்'-ஜெய்ப்பூர்.
105 / 344
உணவகங்கள் திறக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளிவிட்டு உட்காரவைக்கப்பட்டனர்-டில்லி
106 / 344
சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவிலும் திறக்கப்பட்டது.-பஞ்சாப்
107 / 344
முஸ்லீம்களின் வழிபாட்டுத்தலங்கள் பலவும் திறக்கப்பட்டன-டில்லி
108 / 344
பல கிறித்தவ தேவாலயங்களும் திறக்கப்பட்டன இது கோல்கத்தாவில் உள்ளது.
109 / 344
கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த கோவில்கள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து பக்தர்களை அமர்க்களமாக வரவேற்றனர்-டில்லி
110 / 344
கேரளாவில் இறந்த யானைகளுக்கு ஆன்ம தீபம் ஏற்றி வழிபட தினமலர் விடுத்த வேண்டுகோளை ஏற்ற மக்கள்-சென்னை
111 / 344
கேரளாவில் ஜலசமாதியான யானையின் ஆன்மா சாந்தி பெற இன்று தமிழகத்தில் பலர் விளக்கேற்றினர்.
112 / 344
தானத்தில் சிறந்தது இன்றைய தேதிக்கு ரத்ததானம்தான் எந்த மருத்துவமனையிலும் ரத்தம் இல்லை தானம் செய்வீர் உயிர் காப்பீர்-மும்பை1
113 / 344
பெரிய மீசைக்கும் ஆசை அந்த மீசையை தொந்திரவு செய்யாமல் மாஸ்க் போடவும் ஆசை-பிகானீர்,ராஜஸ்தான்.
114 / 344
பசுக்களை பார்ப்பதும் வணங்குவதும் புண்ணியம் தரும் என்பதை உணர்ந்தவரோ இவர்-ஆஜ்மீர்,ராஜஸ்தான்.
115 / 344
இவங்களோட கடைசி என நினை்த்தால் இ்ன்னும் புலம் பெயர்ந்தவர்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்-ராஞ்சி,ஜார்ஹண்ட்
116 / 344
மன உளைச்சலுக்கு ஒரே மருந்தான வழிபாட்டுத்தலங்களை திறக்கப்போவதால், சுத்தம் செய்யும் பணி நடக்கிறது-டில்லி
117 / 344
அன்னாசி பழத்தில் குண்டு வைத்து கொல்லப்பட்ட கேரளா யானையின் நினைவாக நாடு முழுவதும் அஞ்சலி நடக்கிறது.-கோல்கத்தா.
118 / 344
ஆலயம் திறப்பது சாலவும் நன்று என்று உணர்ந்த பல மாநில அரசுகள் கோவிலை திறப்பதில் ஆர்வமாக உள்ளன-காஜியாபாத்,உ.பி.
119 / 344
மன உளைச்சலுக்கு மருந்து குழு விளையாட்டுதானே இங்கே கிரிக்கெட்டை கையில் எடுத்துக்கொண்டுள்ளனர்-கோல்கத்தா
120 / 344
கொரோனாவின் கோராப்பிடியில் இருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டி சிறப்பு பிரார்த்தனை-பிரம்மபுத்திரா நதிகரையில,கவுகாத்தி.
121 / 344
நாட்டிற்கு அழகு காஷ்மீர் என்றால் காஷ்மீருக்கு அழகு தால் ஏரி ஆனால் இப்போது குப்பைகள் கிடங்காக மாறிவருகிறது.
122 / 344
கொரோனா நோயாளிகளுக்காக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் தற்காலிக மருத்துவமனை-கவுகாத்தி,அசாம்.
123 / 344
வீட்டுக்காக மரத்தை வெட்டுவோர் மத்தியில் மரத்திற்கு தேவையான இடத்தை விட்டுவிட்டு வீடுகட்டியுள்ள மரநேயர்-ஜபல்பூர்,ம.பி.
124 / 344
கொரோனா சிகிச்சைக்கு தேவைப்பட்டால் ரயில் பெட்டிகளையும் உபயோகிக்க தயார் நிலையில் வைத்துள்ளனர்-டில்லி.
125 / 344
உழைப்பை பெருக்கினால் உற்பத்தியும் பெருகும் கூடுதலாக உழைப்போம் கொரோனாவை வெல்வோம்-கோல்கத்தா
126 / 344
தீமை தரும் பிளாஸ்டிக் மீண்டும் பரவலாகி வருகிறது அதற்க மலை போல குவிந்து இருக்கம் இந்த பிளாஸ்டிக் பாட்டில்களே சாட்சி-உ.பி
127 / 344
கொரோனா நல்ல பல விஷயங்களை கற்றுக் கொடுத்து வருகிறது தண்ணீரை வீணாக்காமல் உபயோகிக்கவும் கற்றுக் கொடுக்கட்டும்-பஞ்சாப்.
128 / 344
வருமானமும் வரணும் மக்கள் சந்தோஷமாகவும் இருக்கணும் என்றால் இப்படி சுற்றுலா தலத்தை திறக்கிறதுதான் நல்லது-ஜெய்ப்பூர்,ராஜஸ்தான்.
129 / 344
பஸ் பார்த்து பயப்படும் மக்கள் ரயில் பயணத்து மேலே இப்ப பிரியமாயிட்டாங்க-கோல்கத்தா.
130 / 344
கொரோனா காரணமாக பசி பஞ்சத்துல நடந்தோம் இப்ப நிசார்கா புயல் காரணமாக தஞ்சம் தேடி நடக்கிறோம்-மும்பை
131 / 344
கவலைப்படாம போங்க எல்லாம் நல்லபடியாக என்று நம்பிக்‛கை' தருகிறார்-ஜம்மு.
132 / 344
கொரோனா பயத்தை விட்டுட்டு அதோட வாழப் பழகுறதுன்னு முடிவு எடுத்துட்டாங்க போல-இடம்:ஜபல்பூர்,ம.பி.
133 / 344
சுப விழாக்களில் வாத்தியம் வாசிக்கும் கலைஞர்கள் வருமானமில்லாததால் நிவாரணம் கேட்டு சோக கீதம் இசைக்கின்றனர்-பிகானீர்,ராஜஸ்தான்.
134 / 344
‛நிசார்கா' புயலில் தங்கள படகுகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பத்திரமான இடத்திற்கு கொண்டு வரும் மீனவர்கள் -மும்பை
135 / 344
பானிபூரி சாப்பிடற அளவிற்கு தைரியம் வந்த பிறகு கொரோனாவை ஒரு கை பார்த்துவிடலாம்தான் -டில்லி
136 / 344
புலம் பெயர்ந்த தொழிலாளர்களால் பல இடங்களில் வேலை காலியாக உள்ளது அங்கெல்லாம் உடனடி வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.-கவுகாத்தி,அசாம்.
137 / 344
எங்களால முடியல நீங்களே உங்களயும் பாதுகாத்துக்குங்க மற்றவர்களையும் பார்த்துக்குங்க என்று எழுதிப்போட்டுவிட்டனர்-மும்பை.
138 / 344
விட்டால் எல்லோரையும் விடுவது இல்லையேல் எல்லையையே மூடுவது இது டில்லி மக்களின் அன்றாட தொல்லையாகிப் போய்விட்டது.
139 / 344
உடம்பு புத்துணர்வு பெற்றால் உள்ளம் புத்துணர்வு பெறுமே காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள நடையாளர்கள்-அமிர்தசரஸ்,பஞ்சாப்
140 / 344
புனிதமான கங்கையை வணங்கும் கங்கா துஷ்ரா விழாவினை முன்னிட்டு கங்கைக்கு பக்தர்கள் ஆரத்தி காட்டுகின்றனர்-பிரயாக்ராஜ்,உ.பி.
141 / 344
வீடு தேடி வருகிறது வீட்டு உபயோகப் பொருட்கள்-ஜபல்பூர்,ம.பி.
142 / 344
பொதுப் போக்குவரத்தில் முதலிடம் வகிப்பது எப்போதுமே பஸ்தான் பல ஊர்களில் ஒடத்துவங்கியுள்ளது.-சிம்லா,இமாசல்பிரதேஷ்
143 / 344
நாட்டின் அபரிமிதமான இளைஞர் சக்தி ஒருவர் சாப்பாட்டை இருவர் சாப்பிட்டு வீணாகிக்கொண்டு இருக்கிறது.-கவுகாத்தி,அசாம்1
144 / 344
இன்றைக்கு தெருவில் நடமாட அனுமதி வேண்டும் என்றால் முதலில் மாஸ்க் அணியவேணடும், பஸ்சிற்கு காத்திருக்கும் குடும்பம்.-சன்டிகர்,பஞ்சாப்.
145 / 344
டில்லியில் கொரோனாவை விட கொடுமையாக வெயில் உணரப்படுகிறது ஆகவே வண்டி வண்டியாக ஏர்கூலர் வாங்கிச் செல்லப்படுகிறது.
146 / 344
கொஞ்சம் கொஞ்சமாய் ரயில்கள் ஒடப்போகின்றன அதற்கேற்ப ரயில்களை சுத்தம் செய்யும் பணி நடக்கிறது.-பாட்னா,பிகார்
147 / 344
குடும்பத்தின் மீது கொண்ட அக்கறை காரணமாக த்ன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட புலம் பெயர்ந்த தொழிலாளி-பிகார்.
148 / 344
அடுத்த மாதம் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் தேரோட்டத்திற்கு தயராகும் பக்தர்கள்
149 / 344
கர்நாடாகா மாநிலத்தில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட இருப்பதை முன்னிட்டு பெங்களூருவில் உள்ள ஒரு கோவிலை எம்எல்ஏ தலைமையிலான பக்தர்கள் சுத்தம் செய்கி்ன்றனர்
150 / 344
நடந்து கொண்டே இருக்கும் அம்மாவின் பாரமும் துாரமும் குறைவது எப்போது என் கவலையை கண்ணில் தேக்கியிருக்கும் குழந்தை-ைஹதராபாத்.
151 / 344
என்னதான் நெருங்கிய உறவின் மரணம் என்றாலும் சுடுகாட்டில் தள்ளி நின்றுதான் ்அழவேண்டும்-காரத்,மகராஷ்ட்ரா
152 / 344
புதிய இயல்பு வாழ்க்கைக்கு மாறிக் கொண்டு இருப்பதன் அடையாளம்தான் இந்த புகழ்பெற்ற ஹவுரா பால போக்குவரத்து-கோல்கத்தா
153 / 344
ரயிலில் வந்தது போலவே பஸ்சிலும் போக நினைத்தால் எப்படி தாங்கும்?-பாட்னா,பிகரர்.
154 / 344
கொளுத்தும் வெயிலில் தங்கள் சொந்த ஊரை நோக்கி நடக்கும் புலம் பெயர்ந்த இளைஞர்கள்-காஜியாபாதி,ம.பி.
155 / 344
கெ்ாரோனா,புயல்,வெட்டுக்கிளி படை எடுப்பு,தகிக்கும் வெயில் இவற்றோடு தற்போது தண்ணீர் பிரச்னை-ஜபல்பூர்,ம.பி.
156 / 344
ரோட்டின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் தன்னை மறந்து வாகன சத்தத்திற்கு நடுவிலும் உறங்குகிறார் என்றால் பசி மயக்கமாக இருக்கவேண்டும் அல்லது நடந்த களைப்பாக இருக்கவேண்டும்-டில்லி1
157 / 344
கொரோனா பணியில் ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர் பணிமுடிந்த பிறகு கிருமி நாசினி தெளிக்கச் செ்ய்து கொள்கிறார்-ஆமதபாத்,குஜராத்
158 / 344
எல்லோருக்கும் ஒரு நாள் முதுமை வரும் என்று தெரிந்தவரால் தாகம் தீர்க்கப்படுகிறது.இடம்:சன்டிகர்,பஞ்சாப்
159 / 344
மக்கள் பிரதிநிதி என்றால் இப்படித்தான் இருககவேண்டும் முககவசம் அணிந்து களம் இறங்கிவிட்டார் இந்த உ.பி அமைச்சர் சுரேஷ் கண்ணா.
160 / 344
தகுந்த பாதுகாப்புடன் மாணவர்களின் தேர்வுத்தாள் திருத்தும் ஆசிரியர்-ராஞ்சி,ஜார்ஹண்ட்.
161 / 344
கொரோனாவால் இறந்தவர்களுக்கு கடைசி காரியத்தைக்கூட இப்போதுமாநகராட்சி ஊழியர்கள்தான் செய்கின்றனர்-காரத்,மகராஷ்ட்ரா
162 / 344
ஆபரேஷன் தியேட்டர் எல்லா்ம கிடையாதுங்க அழகு நிலையம்தான் பாதுகாப்பா செயல்படறாங்களாம்-விஜயவாடா,ஆந்திரா
163 / 344
இப்படி நெருக்கியடித்து கூட்டமாய் பூண்டு வாங்கினால் கொரோனா இலவசம்-சூரத்,குஜராத்.
164 / 344
கொரோனாவுடன் வாழப் பழகணும்னா முதல்ல ‛மாஸ்க்' கட்டி பழகிக்கணும்-பிரயாக்ராஜ்.உ.பி.
165 / 344
பசுவுக்கு குழந்தைக்கும் நடுவே இருக்கும் உணவை சொந்தம் கொண்டாட இருவருக்கும் இடையே நடக்கும் பசிப் போராட்டம்-டில்லி
166 / 344
சொந்த ஊர் போவதற்குள் ஊர் ஊராக சுற்றிய அசதி குழந்தையை அசரவைத்துவிட்டது.-கவுகாத்தி,அசாம்
167 / 344
கொரோனாவுடன் கூடுதலாக புயலும் ஏற்படுத்திய சிரமத்தை தாங்கிக்கொண்டு ரிக்சா இழுக்கும் தொழிலாளி-கொல்கத்தா.
168 / 344
வட மாநிலங்களில் ஐம்பது டிகிரி அளவிற்கு வெயில் கொளுத்துகிறது தவித்துப் போன குரங்குகள் குழாயோடு போராடுகின்றன-ராஜஸ்தான்.
169 / 344
கிடைக்கிற சாப்பாடை கிடைக்கிற இடத்துல சாப்பிட்டு நடந்து கொண்டு இருக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர் குடும்பம்-டில்லி.
170 / 344
சொந்த மாநிலத்திற்கு திரும்பிவிட்ட சந்தோஷத்தில் தந்தையின் முதுகில் பிள்ளை சாய்ந்தாடி சந்தோஷம் கொள்கிறது-பிரயாக்ராஜ்
171 / 344
சிறப்பு ரயில்,பஸ்,விமானம் என்று இருந்தாலும் புலம் பெயர்ந்தவர்கள் சிலர் இன்னும் பிள்ளைகள் சுமந்தபடி நடக்கின்றனர்-காசியாபாத்.
172 / 344
அதிகரிக்கும் கொரோனா காரணமாக எல்லை பகுதி மூடப்பட்டதை அடுத்து வாகனங்கள் நீண்டு காணப்பட்டன-டில்லி
173 / 344
எளிய முறையில் திருமணம் நடக்கிறது அபார்ட்மெண்ட் மக்கள் வாழ்த்த மணமக்கள் மாலை மாற்றிக் கொள்கின்றனர்-சோலாப்பூர்.
174 / 344
கூடுதல் முன் எச்சரிக்கையுடன் விமான நிலையம் வந்த பயணியர்.ராஞ்சி,ஜார்ஹண்ட்
175 / 344
விமான நிலையத்தில் விலகியிருப்போம் ரயில் நிலையத்தில் நெருங்கியிருப்போம்-டில்லி
176 / 344
கடமையே கண் என கருதி நீண்ட நாட்கள் மருத்துவமனையில் இருந்துவிட்டு வீடுதிரும்பியவருக்கு வழியனுப்பு-அசாம்.
177 / 344
அம்பான் புயலால் பாதிக்கப்பட்ட நகரை மீட்டெடுக்கும் முயற்சியில் நம் ராணுவத்தினர்-கோல்கத்தா,மே.வங்கம்.
178 / 344
நாங்க எல்லோரும் ஊர் போய்ச் சேர்ர வரை பஸ்ல ஏர் சஸ்பென்ஷன் வேலை செய்யும்ல-பாட்னா,பிகார்
179 / 344
மீண்டும் கருவாட்டுக் கடையை திறந்துட்டேன்னு சொல்ல வேண்டியதே இல்லை மாஸ்க்கை தாண்டி வாடை வந்துருச்சு-மும்பை
180 / 344
நம்ம ரயில் வர்ர வரைக்கும் வெயில்ல நிற்காம உள்ளே வாங்க பிள்ளைகளா-தானாபூர்,பிகார்.
181 / 344
ஊர் போக வேண்டியவங்க யாரும் ஏரியாவுல மிச்சம் இருக்கீங்களாப்பா-தாராவி.மும்பை
182 / 344
நடக்க இயலாத தந்தையை தோளில் சுமந்தபடி நடக்கும் தனயன்-பிரயாக்ராஜ்,உ.பி.
183 / 344
நாலு நாள் தள்ளிப் போனாலும் பராவாயில்லை சைக்கிள்ளேயே போயிருவோம்-நலபாரி,பிகார்.
184 / 344
மைசூரு ரயில் நிலைய வாசலில் நிறுத்தப்பட்டுள்ள பொம்மைகள் மூலமாக மாஸ்க் அணிவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
185 / 344
சாப்பிடுவது துாங்குவது இவற்றோடு இந்த வெயில் நேரத்தில் இடையிடையே குளிப்பது கொரோனா காலப் பழக்கமாகிவிட்டது.இடம்:ஆக்ரா.உ.பி.
186 / 344
எங்கே நடக்க விட்டுருவாங்களோன்னு பார்த்தேன் நல்லவேளை விமான சர்வீசை துவக்கிட்டாங்க:இடம்:ராஞ்சி,ஜார்ஹண்ட்.
187 / 344
தண்ணீருக்காக ஜன்னலுக்கு வெளியே வந்துவிடாதே வெயிலில் வெந்து விடுவாய்-ஜபல்பூர்,ம.பி.
188 / 344
ஊரடங்கு தளர்ந்தால் கூட ஊருக்கு போகவேண்டும் என்ற இவர்களது உத்வேகம் தளராது போலிருக்கிறது.இடம்:பெங்களூரு
189 / 344
இப்படி ஒரு காட்சிய பார்த்த பிறகு கோரானாவிற்கு ரோசம் வந்தால் ரயிலின் மறுவாசல் வழியாக குதித்து ஒடிவிடும்.இடம்:பாட்னா,பிகார்
190 / 344
மேட்சிங் மாஸ்க் வாங்கலாம் வாங்க,காலத்திற்கு ஏற்ற வியாபாரம்-பிகானீர்,ராஜஸ்தான்.
191 / 344
பூங்காக்கள் திறந்ததும் உடற்பயிற்சி செய்ய குவிந்த மக்கள்-டில்லி1
192 / 344
மேற்கு வங்கம் பர்த்மான் என்ற இடத்தை கரை கடந்த அம்பான் புயல் கடக்கு முன் ஊரை துவம்சம் செய்துவிட்டது.
193 / 344
கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் நகைக்கடைகள் திறக்கப்பட்டன.
194 / 344
எல்லை வரை வந்து விடுங்கள் அதன்பிறகு தொல்லை இல்லாமல் கூட்டிச்செல்கிறோம் என்று உ.பி.மாநிலம் நொய்டா எல்லையில் கொண்டுவந்து நிறுத்தப்பட்ட பஸ்கள்
195 / 344
மகராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் நின்று போயிருந்த மெட்ரோ ரயில் பணிகள் மீண்டும் துவக்கப்பட்டது
196 / 344
கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் பயணிகள் பஸ் போக்குவரத்தை துவங்குவதற்கு முன்னோட்டம் பார்க்கப்பட்டது
197 / 344
குஜராத் மாநிலம் சூரத்தில் வைரத்தொழிற்சாலை தனது உற்பத்தியை துவங்கியது
198 / 344
நமக்கு ்அலங்கரிக்கப்பட்ட காரும் வராது தேரும் வராது டூ வீலர் கிடைச்சதே பெருசு -ஜம்மு
199 / 344
ரோடே எங்களுக்கு வீடாகிப்போயிருச்சு-தானே,மகராஷ்ட்ரா
200 / 344
வெயில் காலத்தில் பாலத்தின் அடியில் இருக்கும் நிழலில் கொஞ்ச நேரம் தஞ்சம்-தானே,மகராஷ்ட்ரா
201 / 344
ரயில் வந்துச்சா வந்துச்சான்னு சும்மா வநது வந்து பார்க்கமுடியல அதான் ரயில் வரும்வரை இங்கேயே படுத்து்க்குரேன்-மும்பை
202 / 344
மனைவி பத்து மாதம் சுமந்தது போல நானும் முடிந்த வரை சுமக்கிறேன்-டில்லி
203 / 344
கர்ப்பிணி பெண்கள் நடப்பது நல்லதுதான் ஆனால் நடந்து கொண்டே இருப்பது நல்லதல்ல-டில்லி
204 / 344
எல்லையில்லா விசுவாசம்-பெங்களூரு
205 / 344
குடும்பம் கொஞ்சம் பெருசு அதுனால யாரையும் விட்டுட்டு போகமுடியாது-கர்நுால்,அரியானா
206 / 344
எப்படியோ ஊர் கொண்டு வந்து சேர்த்திட்டீங்க ரொம்ப நன்றிங்க-ராஞ்சி,ஜார்ஹண்ட்
207 / 344
மேடம் காவல் துறையின் சிறப்பான பணிக்கு அவர்களில் ஓருவரான உங்களை பூத்துாவி வாழ்த்துகிறோம்-பெங்களூரு,கர்நாடாகா.
208 / 344
சாப்பாடு முக்கியம் பாஸ் இந்தக்கையை விட்டாலும் அந்தக் கையை விட்டுறாதீங்க-ஜபல்பூர்,ம.பி.
209 / 344
அம்மா,உன்னையும் தம்பியையும் நான் பார்த்துக்குவேன்- ஹைதரபாத்,தெலுங்கானா
210 / 344
மாலத்தீவில் இருந்து கப்பலில் சொந்த நாடு திரும்பியவர்களை பரிசோதிக்கப்பட்டனர்-கொச்சி,திருவனந்தபுரம்
211 / 344
பை வாங்க காசு இல்லீங்கண்ணா அதான் லுங்கியில வாங்கிட்டு போறேன்
212 / 344
மாநில எல்லையில் அடிச்சீங்க இப்ப மாவட்ட எல்லையிலும் அடிக்கிறீங்க எப்பதான் அடிக்கிறத விடப்போரீங்க-மும்பை,மகராஷ்ட்ரா
213 / 344
ஊர் போய்ச் சேரும் வரை இந்த செருப்பு தாங்குமா என அதில் விழுந்துள்ள ஒட்டையை வைத்து அளவிடுகிறார்-ைஹதரபாத்,தெலுங்கானா
214 / 344
கொளுத்தும் வெயிலில் ஒரு பிஞ்சு தந்தையின் கைபிடித்து நடக்கிறது -காசியாபாத்,உ.பி.
215 / 344
அழத்தான் முடியும்:வாகன விபத்தில் சிக்க உயிரிழந்த புலம் பெயர்ந்தவர்களின் உறவுகள் துக்கத்தில்-வைசாலி,பிகார்
216 / 344
கல்லையும் கரையவைக்கும் கண்ணீர்: சோறு தண்ணீர் இல்லாமல் நடந்துவரும் சோகத்தை பகிர்ந்து கொள்கிறார்- புதுடில்லி.1
217 / 344
மொட்டை மாடியில் சைக்கிளிங் உடற்பயிற்சி -கோல்கத்தா,மேற்குவங்கம்
218 / 344
டிரெய்ன வரப்போகுது சாப்பிடுன்னு சொல்லியே நாலு நாளா சொல்றே ஆனா டிரெய்ன் வரவே மாட்டாங்குதே-தானே,மகராஷ்ட்ரா
219 / 344
நடந்தே ஊர் போகிறவர்களுக்கு தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ள புதுச்செருப்புகளை தானம் செய்துள்ளனர்-போபால்,ம்.பி.
220 / 344
ஊர் போய்ச் சேர்வதற்குள் என்னவெல்லாம் சாகசம் செய்யவேண்டி உள்ளது-டில்லி
221 / 344
சமூக இடைவெளியில் தண்ணீர் சப்ளை-ஜபல்பூர்,ம.பி.
222 / 344
இங்கேயும் அப்பர் பர்த் ‛வசதி' உண்டு-லக்னோ,உ.பி.
223 / 344
நடந்த களைப்பில் குழந்தைகள் உறங்குகின்றனர் அம்மா துாக்கம் துறந்து குழந்தைகளை பாதுகாக்கிறார்-டில்லி
224 / 344
நடந்து செல்லும் புலம் பெயர்ந்தவர்களுக்கு அடு்த்த சோதனையாக வழியில் புயல் காற்று வீசியது மழையும் பெய்தது-நொய்டா,டில்லி.
225 / 344
நடந்து செல்லும் புலம் பெயர்ந்தவர்களுக்கு மேலும் சோதனையாக வழியில் புயல் காற்றுடன் மழை பெய்தது-நொய்டா,உ,பி.
226 / 344
கோடை விடுமுறையில் குதுாகலத்தை தொலைத்த குழந்தைகளில் ஒன்று-பெங்களூரு
227 / 344
தண்ணீருக்கும் பிரச்னை:பாட்டில் மூடியில் தண்ணீர் கொடுத்து தம்பியை சமாளிக்கும் சகோதரி -டில்லி
228 / 344
சிறப்பு ரயிலில் வந்த பிள்ளையை ரொம்ப நாளைக்கு பிறகு ஆரத்தழுவப் போகிறேன் கொரோனாவே குறுக்கே வராதே-பெங்கூளூரு.
229 / 344
தன்னை விட தன் ஆட்டின் மதிப்பு அதிகம் என்று நினைக்கிறார் போலும்-விஜயவாடா,ஆந்திரா
230 / 344
நடந்து நடந்தே செருப்பை தேய்த்தவர்களுக்கு புதுச்செருப்பு வழங்கும் போலீஸ் அதிகாரி-டில்லி
231 / 344
இவர்களுக்கு ஒரு நிம்மதியான பயணத்திற்கு ஏற்பாடு செய்யவேண்டும் நடந்த களைப்பில் கிடைத்த இடத்தில் ஒய்வு எடுக்கின்றனர்-ஜலந்தர்,பஞ்சாப்
232 / 344
ரயில்,பஸ் போகாத ஊர்களை சேர்ந்தவர்கள் லாரி போன்ற வாகனங்களில் பயணம் மேற்கொள்கின்றனர்-மும்பை,மகராஷ்ட்ரா
233 / 344
விழிப்புணர்வையும் பயத்தையும் ஏற்படுத்திய கொரோனா பொம்மைகள் தற்போது திருஷ்டி பொம்மைகள் போலாகிவிட்டன-அகர்தலா,திரிபுரா
234 / 344
தங்கள் சொந்த ஊருக்கு போக உதவிய அதிகாரிகளுக்க நன்றி தெரிவிக்கும் குழந்தைகள்-ஹீப்ளி,கர்நாடகா
235 / 344
தொழில் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை துவங்கியுள்ளது செல்போன் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள்-நொய்டா,உ.பி.
236 / 344
சில வித மாற்றங்கள் செய்யப்பட்ட பஸ்சில் மக்கள் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர்-கோல்கத்தா,மேற்குவங்கம்.
237 / 344
எங்களுக்காக உழைக்கும் உங்களுக்கு உலக செவிலியர் தின வாழ்த்துக்கள்
238 / 344
சிறப்பு ரயிலில் பயணிப்பவர்கள் போதுமான சமூக இடைவெளியுடன் பயணிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது-டில்லி
239 / 344
எப்படியும் ஊர் போகவேண்டும் என்பற்க்காக லாரியில் பயணிப்பவர்கள்-ரேவா,அரியானா.
240 / 344
சிறப்பு ரயிலில் பயணம் செயவதர்க்காக திரண்ட புலம் பெயர்ந்தவர்கள்-ஜலந்தர்,பஞ்சாப்.
241 / 344
மாருதி கார் நிறுவன ஊழியர்கள் தங்கள் வேலைக்கு திரும்பினர்-குர்ஹாம்,அரியானா
242 / 344
சொந்த மாநிலத்திற்கு திரும்பிய புலம் பெயர்ந்தவர்களை சமூக இடைவெளியுடன் சொந்த ஊருக்கு செல்கின்றனர்.-மும்பை
243 / 344
பிரெஞ்ச் கட்டெல்லாம் எங்களுக்கு தெரியாது சார் உசிரை வாங்காதா-கோல்கத்தா மேற்குவங்கம்.
244 / 344
இதுதான் சிறப்பு சும்மா சோறு போட்டு சோம்பேறியாக்குவதை விட ரிக்சா வாங்கிக் கொடுத்து பிழைக்க வைப்பது-ராஞ்சி,ஜார்ஹண்ட்
245 / 344
எங்களுக்கு பாதுகாப்பு ட்ரஸ் கொடுத்தது எல்லாம் சரி கூடவே குப்பை அள்ள ஒரு வண்டி கொடுத்திருக்கலாம்-பாட்டியலா,பஞ்சாப்.
246 / 344
தொட்டிக்குள்ளார நான் ஏற்கனவே முழுசா பார்த்துட்டேன் ஒண்ணும் இல்ல வேஸ்ட் பெரியவரே-ஜம்மு,காஷ்மீர்.
247 / 344
ரயில் ஒடப்போகுது தண்டவாளத்தில் உட்காருங்காதீங்க தம்பிகளா-ஆமதபாத்,குஜராத்
248 / 344
நாளை முதல் ரயில்கள் ஒட இருக்கும் நிலையில் தண்டவாளங்கள் சீர் செய்யபடுகின்றன-மும்பை
249 / 344
கட்டிலின் நிழலை பிள்ளைக்கு தந்துவிட்டு வெயிலில் செங்கல் சூளையில் வேலை செய்யும் அன்னையர்களின் தியாகத்திற்கு அளவே இல்லை-ஜம்மு,காஷ்மீர்.
250 / 344
சோதனை மேல் சோதனை:டில்லியில் திடீரென புயல் காற்று வீசியதை அடுத்து தெருவில் நடமாடிய மக்கள் சிரமப்பட்டனர்
251 / 344
உயிரற்ற பொருள்களை ஒழுங்காக அடுக்கி எடுத்துச் செல்வர் இங்கே உயிருள்ள மனிதர்களை ்அள்ளிப்போட்டுச் செல்கின்றனர்-மும்பை
252 / 344
கண்களில் வழியும் இந்த கனத்த சோகத்திற்கு காரணம், ஊருக்கு போய் என்ன செய்வது என்பதால் இருக்குமோ?-டில்லி.
253 / 344
வண்டி வாகனமில்லாத இந்த நேரத்தல ரோட்டை நல்லாவே போடுவோம்-அகர்தலா,திரிபுரா
254 / 344
எவ்வளவு நாளாச்சு பீடா போட்டு ரோட்டுல துப்பி நாலு செட் கொடு சேட்-பிரயாக்ராஜ்,உ.பி.
255 / 344
வெளிநாட்டு இந்தியர்களை விமானத்தில் கூட்டிட்டு வர்ரீங்க, ஆனா எங்களை இன்னும் நடக்கவிடுறீங்களே-ஆமதாபாத்,குஜராத்.
256 / 344
கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த தாய்-மகன் சிலை பயன்படுகிறது- ஐதராபாத்
257 / 344
எவ்வளவு பஸ் ரயில் விட்டாலும் நாங்க எங்க ஊருக்கு நடந்துதான் போவோம்-மும்பை
258 / 344
இலவச உணவு தரும் இடத்தில் பயனாளிகள் தங்களது வரிசையை இப்படி ரிசர்வ் செய்து வைத்துள்ளனர் -டில்லி
259 / 344
இது நல்ல ஐடியாவா? அ்லலது பட்ஜெட் பிரச்னையா?-ராஞ்சி,ஜார்ஹண்ட்.1
260 / 344
எங்க மீன் வாங்கினாலும் நாங்க இப்படித்தான் எதையும் பார்க்காமல் ஒண்ணு கூடிவிடுவோம்-கோழிக்கோடு,கேரளா
261 / 344
விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு சம்பவத்தில் காப்பாத்த வந்தவர்களையே காப்பாற்ற வேண்டிய நிலமை
262 / 344
நம் உழைப்பை பார்த்து கொரோனா ஒடி ஒளிய வேண்டும் -கோல்கத்தா,மேற்குவங்கம்.
263 / 344
இப்ப அந்த ‛தண்ணிக்கு' பிரச்னையே இல்லை ஆனால் குடிதண்ணீருக்குதான் வரிசையில் காத்திருக்கணும்-டில்லி
264 / 344
காய்கள் காய்வதற்குள் மார்கெட்டிற்கு கொண்டு சென்றால்தான் நாலு காசு பார்க்கமுடியும் என்பதற்காக கூடையுடன் ஒடுகின்றனர்-பாட்னா,பிகார்.
265 / 344
விசாகப்பட்டினம் விஷ வாயுவில் பாதிக்கப்பட்ட மகனை காப்பாற்ற மருத்துவமனை நோக்கி ஒடும் தந்தை.1
266 / 344
கொரோனாவிற்கு நான் மருந்து கண்டுபிடிச்சுட்டேன்-பெங்களூரு.
267 / 344
அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்பது பெற்றோர்களுக்குதான் கவலை குழந்தைகளின் சந்தோஷத்திற்கு ஒரு ஜன்னல் ஒரம் போதும்-ஜலந்தர்,புஞ்சாப்.
268 / 344
எல்லோரும் ஊரடங்கு முடிஞ்ச மாதிரி சுத்திக்கிட்டு இருக்காங்க இவரு இப்பதான் ஸ்கேன் பண்ணவே ஆரமபிச்சுருக்காகு-சன்டிகர்,பஞ்சாப்.
269 / 344
அடுத்டுத்த வேலையை பார்ப்போம் என்று பாதியில் நிற்கும் பால வேையை கையில் எடுத்துக் கொண்ட தொழிலாளர்கள்-லக்னோ,உ.பி.
270 / 344
சரக்கு வாங்கப் போறவங்க சுத்த பத்தமா போங்கோ- பரிதாபாத்,அரியானா.
271 / 344
தாய் மண்ணே வணக்கம் ஒரு வழியாக வந்து சேர்ந்துவிட்டோம்-ராஞ்சி,ஜார்கண்ட்.
272 / 344
நாங்க நல்லாயிருக்கோம் பாருங்க அரசாங்கம் எ்ங்களுக்கு சீல் வைச்சுருக்கு-பாட்னா,பிகார்
273 / 344
எதுக்கு ரிஸ்க் எல்லாத்தையும் துவைச்சு காயவைச்சே உபயோகிப்போம்-கவுகாத்தி,அசாம்.
274 / 344
இந்த ஏர்கூலரா எடுத்துட்டு ஏசியா பிட் பண்ணுங்கப்பா வெயிலுக்கு இது சரிப்பட்டு வரல.-நாக்பூர் மிருகக்காட்சி சாலை,மகாராஷ்ட்ரா.
275 / 344
என் கடன் பணி செய்து கிடப்பதே என்பதற்கு ஏற்ப நகரை சுத்தமாக்க சாக்கடையை அள்ளுவதில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்கள்-மும்பை
276 / 344
சோறு தண்ணி இல்லை என்றாலும் சொந்த மண்ணையும் மக்களையும் பார்த்தால் மகிழ்ச்சிதான-பாட்னா,பிகார்
277 / 344
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று வாழ்ந்த சாதுக்களும் சாமியார்களும் கூட கொரோனா காரணமாக சொந்த ஊர் திரும்பிவிட்டனர்,ஹூக்ளி,மேற்கு வங்கம்.
278 / 344
ஆமா..சார்‛ சரக்கு 'வாங்கிற கூட்டம் அதிகமாயிட்டே போகுது கூடுதலா போர்ஸ் அனுப்புங்க -டில்லி
279 / 344
ரத்த தான முகாம் நடக்காததால் மருத்துவ மனைகளில் ரத்தத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது ராணுவத்தினர் முன்வந்து தானம் செய்கின்றனர் -பெங்களூரு.
280 / 344
சொந்த ஊருக்கு போக முடியாத ஆ்த்திரத்தில் தீ வைப்பு மற்றும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள்-சூரத்,குஜராத்.
281 / 344
மொத்தமா( ஊருக்கு) போறதுன்னு முடிவு எடுத்து இருக்காங்கலாம்-பெங்களூரு.
282 / 344
இது போதும் எனக்கு மே 17 வரை இது போதும் எனக்கு..ததும்பி வழியும் சரக்கு மற்றும் உற்சாகத்துடன் நாட்டின் எதிர்காலம்-டில்லி
283 / 344
ஊரடங்கு தளர்த்தியவுடன் ஆர்வமுடன் வேலைக்கு திரும்பியவர்கள் அல்ல மதுவாங்கும் ஆர்வத்தில் நீ..ண்ட வரிசையில் நிற்பவர்களே-டில்லி
284 / 344

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் உயர்ந்த நோக்குடன் மதுக்கடை முன் கூடிய குடிமகன்களை' இப்படி ஒட ஒட அடித்து விரட்டலாமா?-டில்லி.


285 / 344

சுதந்திரம் வாங்க அடிபட்டது முந்தைய தலைமுறை மது வாங்க அடிபடுவது இன்றைய தலைமுறை-டில்லி


286 / 344
மலர்ந்த முகமே வாழ்க்கையில் இன்பம்.மீண்டும் டில்லியில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
287 / 344
கொரோனாவிற்கு எதிரான போரில் இரவு பகலாக போராடிவரும் மருத்துவர்களுக்கு, கப்பல் படையினர் இரவு வெளிச்சம் பாய்ச்சி மரியாதை செய்தனர்-மும்பை.
288 / 344

இந்த சூழ்நிலையில் கூட எல்லையில் தொல்லை தரும் எதிரிகளை அழித்தொழிக்க கடமை அழைக்கிறது -பிரயாக்ராஜ்,உ.பி.


289 / 344

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? ஏரியில இருந்துக்கிட்டு காய்கறி விக்கிறீங்க.வஞ்சிரம்,வாலை,ஏரான்னு எதுவும் இல்லையாம்மா-ஸ்ரீநகர்,காஷ்மீர்.


290 / 344

நல்ல துாக்கம் திடீர்னு சென்னையில் எல்லாத்தையும் தளர்த்திட்ட மாதிரி பயங்கரமான கனவு துாக்கிவாரிப்போட்டுருச்சு துாக்கமும் கலைஞ்சு போச்சு


291 / 344

இத்தனை நாளாய் எங்கு இருந்தாய்


நீண்ட இடைவெளிக்கு பிறகு திறக்கப்பட்ட மதுக்கடையில் மதுப்பிரியர்-கவுகாத்தி,அசாம்.


292 / 344
இப்ப நாங்க ஸ்டடி'யா நிப்போம் நீண்ட இடைவெளிக்கு பிறகு திறக்கப்பட்ட மதுக்கடை முன் மதுப்பிரியர்கள்-கவுகாத்தி,அசாம்
293 / 344

இந்த மாதமும்வீட்டு வாடகையை தள்ளுபடி செய்வாங்களா? கரண்ட் பில் கட்ட காலக்கெடு தருவாங்களா? என்பது போன்ற எந்த பிரச்னையும் இல்லை என்ன முழிச்சுக்கிட்ட பசிக்குது துாங்குற மாதிரியே நடிச்சு வயித்தை சமாதானப்படுத்த வேண்டியிருக்கு அது மட்டும்தான் பிரச்னை-டில்லி


294 / 344

நம்ம கிட்ட இருககிற லக்கேஜ்க்கு பஸ் சரிப்படாதாம் லாரி அனுப்புறேன் ஆபிசர் சொல்லிப் போயிருக்காரு -பெஜவார்,ராஜஸ்தான்


295 / 344

சமூக விலகலை பிரமாதமா கடைப்பிடிச்சு பஸ் ஏறுறீங்க பலே பலே-பெங்களூரு,கர்நாடாகா


296 / 344
நாடு முழுவதும் உள்ள நமது நாயகர்களான மருத்துவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்கள் பணியாற்றும் மருத்துவமனைகள் மீது நமது இந்திய ராணுவ விமானங்கள் இன்று மலர் துாவி கவுரவித்தது.- புதுடில்லி.
297 / 344
ஏத்துறா சைக்கிள நடு வழியில பஸ் நின்னாலும் நாம சைக்கிள ஒட்டிட்டு ஊர் போய்ச் சேர்ந்துவிடுேவோம்-பிரயாக்ராஜ்.
298 / 344
போறதுன்னு முடிவு பண்ணீட்டிங்க எப்படிபோறதுன்னும் நீங்களே முடிவு பணணிட்டீங்க நாங்க தடுத்தால் கேட்கவா போரீங்க-ஜபல்பூர்.
299 / 344
அந்த நாலு பேருக்கு மன்னிக்கவும் காடு வரை கடைசி வரை வந்த சுகாதார பணியாளர் ஒருவருக்கு மட்டும் நன்றி-டில்லி
300 / 344
சேர்ந்தே போவோம் சேர்ந்ே வருவோம் சேர்ந்தே கொரோனாவ வாங்குவோம்-டில்லி
301 / 344
இன்னும் ரோடு எங்க கண்ட்ரோல்லதான் இருக்கு அவசரப்படாதீங்க மே 17 க்கு பிறகு பார்ப்போம்-டில்லி
302 / 344
ஊர் போற வரை இந்த எல்லையை தாண்டி நீங்களும் வரக்கூடாது நாங்களும் வரமாட்டோம்-பிரயாக்ராஜ்.
303 / 344
சொந்த மண்ணை பார்க்கப் போகும் மகிழ்ச்சி: நாடு முழுவதும் புலம் பெயர்ந்தவர்கள் பஸ் ரயில் மூலம் அவரவர் இடத்திற்கு செல்கின்றனர்-பிரயாக்ராஜ்.
304 / 344
தம்பி அடங்குங்க, கிருஷ்ணகிரியும் இப்ப ஆரஞ்சு மண்டலமாயிடுசசு ‛கடை' திறக்க வாய்ப்பில்லை
305 / 344
அண்ணா..அண்ணா...இன்னும் பதினைந்து நாள் தாக்குப்பிடிககணும் அந்த வாழைப்பழத்தை எனக்கு கொடுங்கண்ணா-பிரயாக்ராஜ்.
306 / 344
மக்கள் ராத்திரியில் வெளியே வர்ரதா தகவல் வந்தது அதுனால நைட் ரோந்த ஆரம்பிச்சுட்டோம்-ஆமதபாத்
307 / 344
ரயிலே எதிர்பார்த்தா நடக்காது பிரதர் நம்ம சைக்கிளிலேயே கிளம்பிடுவோம்-முசாப்பூர்நகர்
308 / 344
வரிசையில் வைக்க என்கிட்ட தட்டு இல்ல,இருந்த தட்ட ராத்திரி சாப்பாட்டு வரிசையில வச்சுட்டேன் -மும்பை
309 / 344
சாதம் வெந்திருக்கு சாம்பார்ல பருப்பு இருக்கு அமைச்சருங்கோ யாரோ அன்னதானம் பண்ணியிருக்காங்க-கோல்கத்தா
310 / 344
ஒய்வு ஊதியம் வாங்கிறதுக்கு பாங்கின் வாசலில் காத்து கிடந்தே ஒய்வு காலம் முடிஞ்சுடும் போல இருக்கே-பீகானீர்.
311 / 344
இனத்தாலும் மதத்தாலும் வேறுபட்டு இருந்தாலும் எங்கு காய்கறி வாங்கும் போது நாம் இந்தியர் என்று ஒன்றுபட்டு நிற்போம்-டில்லி
312 / 344
தொழிலாளர் தின வாழ்த்து எல்லாம் இருக்கட்டும் வெயில் அதிகமாக இருக்கு ஐந்து ரூபாய் கூடக்கொடுங்க அது போதும்.
313 / 344
கொஞ்சம் கோதுமை மாவை இரண்டு கல் எரிக்க விறக மட்டும் கொடுத்துட்டு எத்தனை நாள் வேணும்னாலும் ஊரடங்க நீட்டிச்சுங்குய்யா-சண்டிகர்.
314 / 344
எதுக்குத்தான் போலீசுக்கு பயப்படறதுன்னு விவஸ்தை இல்லாம போயிடுச்சு சீக்கிரம் முடிவெட்டிவிடுப்பா-பெங்களூரு.
315 / 344
கொஞ்சம் காற்று வாங்க நடக்க விடுங்கப்ப, வீட்டிற்குள்ளேயே இருந்து மூட்டு வலி இடுப்பு வலி எல்லாம் வந்துடுச்சு- டில்லி
316 / 344
என்னை தாங்கிப் பிடிக்க இத்தனை பேர் இருக்கும் போது எத்தனை பேர் தாக்கினாலும் தாங்குவேன் என்கிறார் இந்த பஞ்சாப் போலீஸ் அதிகாரி-அமிர்தசரஸ்
317 / 344
ரொம்ப நாள் கழித்து பஸ் ஒட்டுறோம் இப்பல்லாம் ‛மோட்டல்' இருக்காது ஒழுங்கா இங்கேயே சாப்பாடு வாங்கிட்டு போயிடுவோம்- பிரயாக்ராஜ்.
318 / 344
ஒரு வழியா சொந்த ஊருக்கு போறதுக்கு நானும் பஸ் ஏறிட்டேன்-பிரயாக்ராஜ்.
319 / 344
செங்கல் சூளையில் தங்கள் வேர்வையைச் சிந்தி உழைக்க களம் இறங்கிவிட்ட தொழிலாளர்கள்-பாட்னா
320 / 344
காய்கறி வாங்கும் உற்சாகத்தில் பெண்கள்- ைஹதரபாத்.
321 / 344
உழைப்பு தரும் உற்சாகத்திற்கு எது நிகர் என்பதை உணர்ந்த தொழிலாளர்கள் சாலையோர வேலையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்-கவுகாத்தி.
322 / 344
போக்குவரத்து நேரத்தில் உபயோகித்த நடை மேம்பாலத்தை நீண்ட இடைவெளிவிட்டு ஒருவர் பயன்படுத்த நினைக்கிறார்-பெங்ளூரு.
323 / 344
சொந்த ஊர் தரும் நம்பிக்கையை மட்டுமே சுமந்து கொண்டு நடந்தே ஊர் திரு்மபும் மக்கள் ஆங்காங்கே ஒய்வு எடுக்கின்றனர்-தானே.
324 / 344
கொரோனா போரில் வெறறி பெற்ற இந்தியா கொஞ்சம் கொஞ்சமாய் இயல்பு நிலைக்கு திரும்புகிறது,வேலைக்கு திரும்பும் ஊழியர்கள்-போபால்.
325 / 344
வாழ்த்துகிறோம் மருத்துவர்களே:கொரோனா போர் வீரர்களான மருத்துவர்களை மலர்துாவி வாழ்த்துக்கின்றனர்-அமிர்தசரஸ்.
326 / 344
உழைப்பு தந்த களைப்பு காரணமாக வீதி ஒரத்தில் அப்படியே படுத்து உறங்குகிறார் காவலர் ஒருவர்- பிரயாக்ராஜ்.
327 / 344
பிகார் மாநிலத்தில் இருந்து வெளியே வேலைக்கு சென்றவர்கள் சொந்த ஊருக்கு சைக்கிளிலேயே திரும்ப வந்து சேர்ந்தனர்.
328 / 344
தட்ட ஒழுங்கா பிடிங்கம்மா
329 / 344
வீட்டைவிட்டு வெளியே வந்தா எமன் நான் பிடிச்சுட்டு போயிருவேன் உள்ளே போ-டில்லி
330 / 344
வீட்டு அத்தியாவசிய தேவைக்கு காய்கறி வாங்கிட்டு போறார் வேற ஒண்ணுமில்லை
331 / 344
அடுத்தடுத்து கஸ்டமர் வெயிட்டிங்ல இருக்காங்க அதுனால கட்டிங் மட்டும்தான் நோ சேவிங்...
332 / 344
கோல்கத்தாவில் ஒரு நாள்:சொன்னா நம்புங்க சார் வீட்ல நடக்கமுடியாத புள்ள இருக்கு அதுக்கும் சேர்த்து இன்னோரு கரண்டி போடுங்க ஐயா
333 / 344
கோல்கத்தாவில் ஒரு நாள்:இன்னும் கொஞ்ச துாரம்தான் போனால் சாப்பாடு வாங்கிட்டு திரும்பிரலாம்...
334 / 344
கோல்கத்தாவில் ஒரு நாள்:நேத்து எல்லாம் இந்த நேரம் சாப்பாடு வந்துருச்சு இன்னைக்கு இரண்டு மணி நேரமாச்சு இன்னும் வரலை
335 / 344
கோல்கத்தாவில் ஒரு நாள்:எப்படியும் அம்மாவும் அப்பாவும் சாப்பாடு வாங்கிட்டு வந்துருவாங்கல்ல
336 / 344
கோல்கத்தாவில் ஒரு நாள்:ஆகா..இன்னைக்கு சாப்பாடு கிடைச்சுருச்சு
337 / 344
வாழ்க்கை சக்கரம் ஒட என் வண்டி சக்கரம் ஒடித்தானாக வேண்டும்-கோல்கத்தா
338 / 344
கூட்டமாய் விளையாடுபவர்களை டிரோன் கேமிராக்கள் பறந்து பறந்து விரட்டிப்பிடிக்காத இடம் இப்போதைக்கு இந்த குப்பைகிடங்குதான் -மும்பை
339 / 344
நிற்க நேரமில்லாமல் வாடகை டாக்சி ஒட்டிக்கொண்டு இருந்தவர்கள் இப்போது கால்கடுக்க நிற்கின்றனர் உணவுக்காக-கோல்கத்தா
340 / 344
அழும் குழந்தைகளுக்காக தடைகள் பல தாண்டி சைக்கிளில் பால் கொ்ணடு செல்பவர்-பிரயாக்ராஜ்.
341 / 344
சாப்பிடறோம் துாங்குறோம் சாப்பிடறோம் துாங்குறோம் -பிரயாக்ராஜ்.
342 / 344
உண்டா மயக்கம் இல்லீங்க உண்ணாததால் ஏற்பட்ட மயக்கமுங்க- ைஹதரபாத்
343 / 344
காய்கறியோடு கொரோனாவையும் சேர்த்து கொண்டுவர்ர மாதிரி இருக்கே மினிமம் பாதுகாப்பு நடவடிக்கை கூட கிடையாதா?-பாட்னா
344 / 344
யாருப்பா அது என்னை கொண்டுவந்து நடுரோட்டில் போட்டது உங்களுக்கு பொழுது போகலைன்னா நான்தான் கிடைச்சேனே-கோல்கத்தா
Advertisement