புகைப்பட ஆல்பம்:

படம் தரும் பாடம்
1 / 50
வீட்டிற்குள் புகுந்த மழை நீரில் இருந்து வெளியேற வழியின்றி தத்தளிக்கிறார்-ராஜ்கோட்,குஜராத்
2 / 50
சபாஷ் மாணவர்களே!:விடுமுறை தினமான இன்று ஒன்று கூடிய மாணவர்கள் கடற்கரையை சுத்தம் செய்தனர்-மும்பை
3 / 50
சிங்கப்பெண்கள்:நடைபெற இருக்கும் ஏஎப்சி கால்பந்தாட்ட போட்டியில் பங்கேற்க பயிற்சி பெற்றுவரும் இந்திய பெண்கள் கால்பந்து அணி-ஷாம்ஜெட்பூர்,ஜார்கன்ட்.
4 / 50
உள்ளாட்சி தேர்தலில் அமைதியை நிலைநாட்ட கிளம்பிவிட்ட பெண் போலீசார்-கரீமூர்,பிகார்.
5 / 50
அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியை வாஷிங்டன் விமான நிலையத்தில் அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் வரவேற்றனர்.
6 / 50
சுற்றுலா துறை சூடுபிடிக்கிறது:கொச்சிக்கு சொகுசு கப்பலில் வந்த பயணியர் பராம்பரிய இசையோடு வரவேற்க்கப்பட்டனர்
7 / 50
ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் நமது ராணுவத்தின் பீரங்கிகளின் செயலாக்கம் பரிசோதிக்கப்பட்டது.
8 / 50
மத்தியபிரதேசம் போபாலில் ராஜ்யசபா உறுப்பினராக போட்டியிட மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
9 / 50
கொரோனா காரணமாக நீண்ட காலமாக மூடிக்கிடந்த பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன,வாசலை தொட்டுக்கும்பிட்டு உள்ள வரும் மாணவியர்-குருகிராம்,டில்லி
10 / 50
நாற்பது அடி உயர விநாயகரை திரளான பக்தர்கள் இன்று ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைத்தனர்-ஹைதரபாத்
11 / 50
துர்கா பூஜையை வரவேற்கும் விதமாக கலைஞர் ஒருவர் உருவாக்கும் துர்கா தேவியின் உருவம்-கோல்கட்டா
12 / 50
தமிழக புதிய கவர்னராக ஆர்.என். ரவி பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
13 / 50
நாடு முழுவதும் பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.காசியில் உள்ள முஸ்லீம் பெண்கள் பிரதமர் படத்திற்கு ஆரத்திகாட்டி வாழ்த்தினர்.
14 / 50
பிரதமர் மோடியின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு தொண்டர்கள் அவரது படத்திற்கு கேக் வழங்கும் காட்சி-பாட்னா,பிகார்.
15 / 50
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நமது ராணுவத்தினர் ஹெலிகாப்டர் விமான சாகச பயண ஒத்திகையில் ஈடுபட்டனர்
16 / 50
பெட்ரோல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து மாட்டு வண்டி செலுத்தும் போராட்டத்தை எதிர்கட்சி தலைவரான சீதாராமையா நடத்தினார்-பெங்களூரு,கர்நாடகா
17 / 50
நீட் நுழைவுத் தேர்வு அரங்கிற்குள் நுழையும் கடைசி நிமிடம் வரை புத்தகத்தை புரட்டும் மாணவி-டில்லி
18 / 50
தீவிர தடுப்பூசி திட்டம் காரணமாக ஆட்டோ ஒட்டுனர்களை நடுரோட்டிலேயே நிறுத்தி தடுப்பூசி போடப்படுகிறது-ஆமதபாத்,குஜராத்
19 / 50
பஞ்சாப்,அமிர்தசரஸில் கனமழை பெய்துவருகிறது,ரோடுகளில் பெருக்கெடுத்து ஒடும் மழை நீரில் விளையாடிபாடி செல்லும் மாணவியர்.
20 / 50
விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் விதத்தில் தயாரகியுள்ள பாலவிநாயகர்-மும்பை
21 / 50
விநாயகர் சதுர்த்தியை களைகட்ட வைப்பதற்காக தயராகியுள்ள சிலைகளுக்கு நிறைவாக வண்ணம் பூசப்படுகிறது-மும்பை
22 / 50
இலவசமாக தடுப்பூசி போடுவதுடன் இலவசமாக மாஸ்க்கும் வழங்கி அதை அணியவும் பயிற்சி தருவது நல்லது-ஆஜ்மீர்,ராஜஸ்தான்.
23 / 50
கர்நாடகா மாநிலத்தில் 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது, மாணவச் செல்வங்களை மலர்களோடு வரவேற்கும் ஆசிரியர்கள்-சிக்மகளூர்.
24 / 50
வேளாண்சட்டங்களுக்கு எதிராக மகா பஞ்சாயத்து என்ற பெயரில் உ.பி.,முசார்பூரில் இன்று விவசாயிகள் மாநாடு நடைபெற்றது.
25 / 50
வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மாடுகள் ராணுவத்தினரால் மீட்கப்பட்டன-கவுகாத்தி,அசாம்
26 / 50
விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டி வாங்கிய விநாயகருடன்-காங்கரா,இ.பி.
27 / 50
டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் வென்ற வீராங்கனைகள் இடமிருந்து கனடா மாரிசா (வெண்கலம்) நெதர்லாந்து மர்லினா (தங்கம்) ஜெர்மனி இர்ம்காடு (வெள்ளி)
28 / 50
ஆப்கானிய பிரச்னைக்கு பிறகு நமது எல்லையில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது-பூன்ச்.,காஷ்மீர்
29 / 50
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் துவங்கியது. பிரார்த்தனையோடு வகுப்புகள் ஆரம்பம்-ஜபல்பூர், ம.பி.
30 / 50
உடல் ஊனமுற்றவர்களுக்காக டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் சுமித்
31 / 50
கிருஷ்ணர் ஜெயந்தி விழாக் கொண்டாட்டம் காரணமாக அலங்கரிக்கப்பட்ட கோவிலின் வாசலில் கிருஷ்ணர் வேடமிட்ட குழந்தை-அமிர்தசரஸ்,பஞ்சாப்
32 / 50
கிருஷ்ண ஜெயந்தி விழாவினை முன்னிட்டு கிருஷ்ணருக்கான ஊஞ்சலை வாங்க முற்படும் அம்மாவும் பிள்ளையும்
33 / 50
சந்தோஷ சவாரி:தளர்வு காரணமாக மீண்டும் மக்கள் அனுமதிக்கப்பட்ட கடற்கரையில் அந்தி சாயும் வேளையில் குதிரை சவாரி:மும்பை
34 / 50
சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் விடப்பட்டுள்ள புதிய ரயில்-கவுகாத்தி,அசாம்
35 / 50
தடுப்பூசி போடுவதில் வேகம் காட்டிவரும் கர்நாடகா அரசு ஆட்டோ ஒட்டுனர்களுக்கு ஊசி போட்டு வருகின்றனர்-பெங்களூரு
36 / 50
6,7,8 மற்றும் 9 ம் வகுப்புகள் திறக்கப்பட்டு மாணவியர் படித்து வருகின்றனர்-மொராதாபாத்,உ.பி.,
37 / 50
மணிப்பூர் மாநிலத்தின் கவர்னராக பொறுப்பேற்க உள்ள பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் ஓரிக்கை மணி மண்டபத்தில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அருகில் 'தினமலர்' நாளிதழ் கோவை பதிப்பின் வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம். இடம்: காஞ்சிபுரம்
38 / 50
வரவிருக்கும் துர்கா பூஜைக்கு தேவையான தாமரை மலர்களை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்-பிர்ஹாம்,மே.வங்கம்
39 / 50
இந்திய பத்திரிகை கூட்டமைப்பின் தலைவரும், கோவை தினமலர் வெளியீட்டாளருமான எல்.ஆதிமூலம்,மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.
40 / 50
சென்னை வந்துள்ள மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகனை, இந்திய பத்திரிகைகள் சங்க (ஐ.என்.எஸ்.,) தலைவரும், கோவை தினமலர் வெளியீட்டாளருமான இல.ஆதிமூலம் சந்தித்தார். சந்திப்பின் போது, கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அகில இந்திய பத்திரிகைகள் சார்பில், கோரிக்கை மனுவினை அளித்தார்.
41 / 50
ஆப்கானில் தவித்த இந்தியர்கள் தனி விமானம் மூலம் அழைத்து வரப்பெற்றனர்-காஜியாபாத்,உ.பி.
42 / 50
ரக்சா பந்தன் நாளான இன்று நாட்டைக் காக்கும் அண்ணன்களின் கைகளில் வீட்டைக்காக்கும் தங்கைகள் மங்கள கயிற்றைக்கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்-அகர்தலா,திரிபுரா
43 / 50
வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு திருப்பதி பத்மாவதி தாயார் கோயிலில் அம்பாள் சர்வ அலங்காரத்துடன் வரலட்சுமி கோலத்தில் அருள்பாலித்தார்
44 / 50
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவகத்திற்கு வந்து மரியாதை செலுத்திய காங்.தலைவர் ராகுல்-டில்லி1
45 / 50
வரலட்சுமி பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் மார்கெட்டிற்கு வந்து குவிந்துள்ள பூக்கள்-பெங்களூரு
46 / 50
தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது,மும்பை மருத்துவமனை வாசலில் நீண்ட வரிசையில் நின்றவர்கள்.
47 / 50
உ.பி.,யில் இன்று முதல் 9,10,11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கப்பட்டது,முதல் பேட்ஜ் வகுப்பை முடித்து வெளியே வரும் மாணவியர்.
48 / 50
நாடு முழுவதும் சுதந்திர தினவிழா எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது,75 அடி நீள கொடியிைனை ஏந்தியபடி ஊர்வலத்தில் வந்த மகளிர்-பெங்களூரு.
49 / 50
அன்பே சிவம்:மனைவியை விட பெரிய சொத்து எதுவும் இல்லை என்பதை நன்கு உணர்ந்தவர் என்பதால் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றி துாக்கிச் செல்கிறார்-பாட்னா,பிகார்.
50 / 50
முகங்களும் சொல்லுதே ஜெய்ஹிந்த்:சுதந்திர தினத்தை வரவேற்கும் விதமாக கை முகங்களில் மூவர்ணம் பூசிய பெண்கள்-அமிர்தசரஸ்,பஞ்சாப்.
Advertisement