புகைப்பட ஆல்பம்:

படம் தரும் பாடம்
1 / 50
உள்ளாட்சி தேர்தலில் அமைதியை நிலைநாட்ட கிளம்பிவிட்ட பெண் போலீசார்-கரீமூர்,பிகார்.
2 / 50
நுாறு கோடி தடுப்பூசி போடப்பட்டதை கொண்டாடி மகிழும் செவிலியர்-மும்பை
3 / 50
உத்தர்கண்ட் மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற நைனிடால் மலை வாசஸ்தலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மாட்டிக் கொண்ட சுற்றுலா பயணியரை மீட்கும் ராணுவத்தினர்
4 / 50
கனமழை காரணமாக கேரளாவின் பெரிய அணையான இடுக்கி அணை நிரம்பி நீர் வெளியேறுகிறது
5 / 50
அவசரத்திற்கு கைகொடுத்த அண்டா:குறித்த நேரத்துக்குள் கல்யாண மண்டபத்திற்கு போகணும், வழியெங்கும் மழை வெள்ளம், வாகனம் எதுவும் கிடைக்கவில்லை, பெரிய அண்டாவை எடுத்து அதில் மணமக்களை வைத்து அழைத்துச் சென்றனர்-ஆழப்புழா,கேரளா
6 / 50
மழைப்பொழிந்து கண்ணுக்கு குளூமையாக காட்சி அளிக்கும் சிம்லா.
7 / 50
மழை நீருக்கு வந்த பக்தி:கடும் மழை காரணமாக கோயிலுக்குள் புகுந்த தண்ணீர்-திருவாபர்மன் கோவில்,நாகர்கோவில்
8 / 50
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு படையினர்.
9 / 50
யமுனை நதியில் குவிந்த பண்டிகை கால கழிவுகளை அகற்றும் பணியில் ஊழியர்கள்-ஆக்ரா,உ.பி.
10 / 50
கர்நாடக மாநிலம் மைசூருவில் நடந்த தசரா கொண்டாட்டம்.
11 / 50
கோயில்களில் குழந்தைகளுக்கு எழுத பயிற்சி தரும் வித்யாரம்பம் நிகழ்வு இன்று விமரிசையாக நடைபெற்றது-திருவனந்தபுரம்.
12 / 50
லே லடாக் பகுதிக்கு சென்றுள்ள ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த்திற்கு வீரர்கள் அணிவகுப்பு மரியாதை வழங்கினர்
13 / 50
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் இன்று சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி
14 / 50
தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் பொங்கிவரும் வெள்ளம்
15 / 50
தசரா பண்டிகை முன்னிட்டு டில்லி ராம்லீலா மைதான வளாகத்தில் நடந்துவரும் ராமாயண நாடகத்தில் ஒரு காட்சி.
16 / 50
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ ஐந்தாம் நாளான இன்று காலை மோகினி அலங்காரத்தில் சுவாமி தந்தப்பல்லக்கில் எழுந்தருளினார்.
17 / 50
எல்லா உயிர்களும் உயர்வானதே: வளர்ப்பு பிராணிகளை ஆசீர்வதிக்கும் நிகழ்வில் தனது செல்லங்களுடன் கலந்து கொண்டவர். இடம்: மும்பை .
18 / 50
திருமலையில் நடந்துவரும் பிரம்மோற்சவ விழாவின் ஒரு பகுதியாக மலையப்பசுவாமிக்கு நடைபெற்ற திருமஞ்சன மண்டபம் தாமரை போல மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
19 / 50
குளமா? குப்பைக்கூடையா?:முன்னோர்களை திருப்திப்படுத்த மகாளாய அமாவசையன்று நீர் நிலைகளின் அருகே பூஜை நடத்தியவர்கள்,பூஜைக்கு பயன்படுத்திய பொருட்களை எல்லாம் குளத்தில் போட்டதால், அதைத்தின்ற மீன்கள் செத்து மிதந்தன-வாகேஸ்வரர் கோவில் குளம்,மும்பை2
20 / 50
திருமலை பிரம்மோற்சவ மூன்றாள் நாளான இன்று காலை சிம்ம வாகத்தில் மயைப்பசுாமி எழுந்தருளினார்.
21 / 50
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை உற்சவரான மலையப்பசுவாமி தேவியருடன் சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளினார்.
22 / 50
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளான இன்று கொடியேற்றம் நடைபெற்றது
23 / 50
நாடு முழுவதும் நீர் நிலைகளின் அருகில் முன்னோர் வழிபாடு நடந்தது -பாகியா நதி,போபால்
24 / 50
துர்கா பூஜை நாளை துவங்க இருக்கும் நிலையில் துர்காவிற்கு நிறைவு அலங்காரம் செய்யப்படுகிறது
25 / 50
நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நடன ஒத்திகையில் ஈடுபட்டுள்ள பெண்கள். சூரத், குஜராத்.
26 / 50
மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து வருகை தந்த மாணவியர் ஆரத்தி எடுத்து வரவேற்கப்பட்டனர்-மும்பை
27 / 50
உ .பி.,யில் ஏற்பட்ட வன்முறையில விவசாயிகள் கொல்லப்பட்ட லக்கிம்பூர் கேரிக்கு செல்ல முற்பட்டபோது காங்., பொதுசெயலர் பிரியங்கா தடுத்து நிறுத்தப்பட்டு சித்பூரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் வைக்கப்பட்டார். அங்கு அவர் துடைப்பம் கொண்டு சுத்தம் செய்தார்.
28 / 50
மேவங்க முதல்வர் மம்தாவின் வெற்றியை தொண்டர்கள் மிக உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்-கோல்கட்டா
29 / 50
‛மாஸ்க்' அணிந்த துர்கா:கொல்கட்டாவில் துர்கா பூஜை கொண்டாட்டம் அடுத்த வாரம் துவங்குகிறது இதை முன்னிட்டு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‛மாஸ்க்' அணிந்த துர்கா தேவி உருவாக்கப்பட்டு உள்ளார்.
30 / 50
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டில்லி ராஜ்காட்டில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
31 / 50
மகாத்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு மணல் கலைஞர் அஜய் உருவாக்கியுள்ள மணல் சிற்பம்-புஷ்கர்,ராஜஸ்தான்.
32 / 50
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் 76 வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவரது இல்லத்திற்கு சென்று பூச்செண்டு அளித்து வாழ்த்து தெரிவித்தார்.
33 / 50
ஆகா நம்ம ஊரு, ரொம்ப ஜோரு:கொரோனா கொரோனான்னு சொல்றாங்க அப்படின்னா என்னாதுங்க என்று கேட்டபடி ரயிலில் நெருக்கியடித்து பயணம் செய்யும் கூட்டம்-காஜியாபாத்,உ.பி.,
34 / 50
மழையில் கரைபுரண்டு ஒடிவரும் புதுவெள்ளத்தில் மீனைத்தேடி வலைவீசும் மீனவர்-ஹூக்ளி நதி,மே.வங்கம்
35 / 50
பாட்டியை நல்லா வளர்த்திருக்காங்க:பந்த் நேரத்தில் வாகனங்களில் சென்றவர்களை குச்சியால் அடித்து நிறுத்தும் மூதாட்டி-சோனாபட்,மகாராஷ்ட்ரா
36 / 50
என்னது எறும்புகள் சாரை, சாரையாக வருவது போல உள்ளதா ? டில்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தால் பாதிக்கப்பட்ட போக்குவரத்து ஸ்தம்பிப்பு.
37 / 50
கொரோனா கன்பர்ம் ஆனா கயித்தை அவிழ்த்து விட்டுருவாரோ?:சிறைக் கைதிகளுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்படுகிறது-கொல்கத்தா
38 / 50
சபாஷ் மாணவர்களே!:விடுமுறை தினமான இன்று ஒன்று கூடிய மாணவர்கள் கடற்கரையை சுத்தம் செய்தனர்-மும்பை
39 / 50
சிங்கப்பெண்கள்:நடைபெற இருக்கும் ஏஎப்சி கால்பந்தாட்ட போட்டியில் பங்கேற்க பயிற்சி பெற்றுவரும் இந்திய பெண்கள் கால்பந்து அணி-ஷாம்ஜெட்பூர்,ஜார்கன்ட்.
40 / 50
அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியை வாஷிங்டன் விமான நிலையத்தில் அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் வரவேற்றனர்.
41 / 50
சுற்றுலா துறை சூடுபிடிக்கிறது:கொச்சிக்கு சொகுசு கப்பலில் வந்த பயணியர் பராம்பரிய இசையோடு வரவேற்க்கப்பட்டனர்
42 / 50
ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் நமது ராணுவத்தின் பீரங்கிகளின் செயலாக்கம் பரிசோதிக்கப்பட்டது.
43 / 50
மத்தியபிரதேசம் போபாலில் ராஜ்யசபா உறுப்பினராக போட்டியிட மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
44 / 50
கொரோனா காரணமாக நீண்ட காலமாக மூடிக்கிடந்த பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன,வாசலை தொட்டுக்கும்பிட்டு உள்ள வரும் மாணவியர்-குருகிராம்,டில்லி
45 / 50
நாற்பது அடி உயர விநாயகரை திரளான பக்தர்கள் இன்று ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைத்தனர்-ஹைதரபாத்
46 / 50
துர்கா பூஜையை வரவேற்கும் விதமாக கலைஞர் ஒருவர் உருவாக்கும் துர்கா தேவியின் உருவம்-கோல்கட்டா
47 / 50
தமிழக புதிய கவர்னராக ஆர்.என். ரவி பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
48 / 50
நாடு முழுவதும் பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.காசியில் உள்ள முஸ்லீம் பெண்கள் பிரதமர் படத்திற்கு ஆரத்திகாட்டி வாழ்த்தினர்.
49 / 50
பிரதமர் மோடியின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு தொண்டர்கள் அவரது படத்திற்கு கேக் வழங்கும் காட்சி-பாட்னா,பிகார்.
50 / 50
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நமது ராணுவத்தினர் ஹெலிகாப்டர் விமான சாகச பயண ஒத்திகையில் ஈடுபட்டனர்
Advertisement