புகைப்பட ஆல்பம்:

படம் தரும் பாடம்
1 / 50
எல்லையில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ள வீராங்கனைகள்-ஜம்மு
2 / 50
புதிய வைரசான ஒமைக்கிரான், தடுப்பூசி போடாதவர்களைத்தான் தாக்குகிறது என்று தகவல் பரவுவதை அடுத்து தடுப்பூசி போட மக்கள் திரண்டு வருகின்றனர்-ஜலந்தர்,பஞ்சாப்
3 / 50
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 372 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்கள் கோப்பையுடன் உற்சாக போஸ் அளித்தனர்.
4 / 50
கோவிட் தடுப்பூசிக்காக காத்திருக்கும் பெண்கள். இடம்: நாடியா மாவட்டம், மேற்கு வங்கம் .
5 / 50
ஜாவா புயலை எதிர்கொள்ள தயாராக பாதுகாப்பு படையினர் கடற்கரையில் ரோந்து செல்கின்றனர்-பூரி,ஒடிசா .
6 / 50
பார்லி.,பொதுக்கணக்கு குழு நூற்றாண்டு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இடம்: டில்லி; பார்லி., சென்ட்ரல் ஹால்.
7 / 50
ஜாவத் புயல் தாக்க உள்ள நிலையில் மீட்பு படையினர் ஒடிசாவில் தயாராகின்றனர்.
8 / 50
இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் பிறந்த நாளில் அவரது சிலைக்கு மாணவிகள் மலர் தூவி வணங்கினர்.
9 / 50
திரிபுரா மாநிலம் அகர்தலா மாநகராட்சி தேர்தலில் பெற்ற வெற்றியை இன்று கொண்டாடிய பாஜக.,வினர்
10 / 50
விளைந்த கதிர்களை எருமை மாட்டு வண்டியில் கொண்டு செல்லும் விவசாயிகள். இடம்: நாடியா மாவட்டம், மே.வங்கம்.
11 / 50
காஷ்மீரில் நிலவும் கடும் குளிரில் இருந்து விடுபட நெருப்பு மூட்டி அதில் குளிர்காய்கின்றனர்.
12 / 50
தீ மிதி திருவிழாவை பூ மிதி திருவிழாவாக்கி மகிழும் பக்தர்கள்-சிக்கமளூர்.
13 / 50
இந்திய புதிய கடற்படை தளபதியாக பொறுப்பேற்ற ஹரிகுமார் வீரர்களின் அணிவகுப்பை பார்வையிட்டார்.
14 / 50
இந்தியா, நியூஸிலாந்து இடையிலான கிரிக்கெட் போட்டியை காண வந்த ரசிகை , இந்திய வீரர்களை உற்சாகப்படுத்திய காட்சி. இடம்: கிரீன் பார்க் ஸ்டேடியம், கான்பூர் .
15 / 50
மேற்குவங்கம் நாடியா மாவட்டம் ஹூக்களி நதியில் நடந்த படகு போட்டியில் பங்கேற்றவர்கள்.
16 / 50
திரிபுரா மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் பா.ஜ., அமோக வெற்றி பெற்றது. பா.ஜ., மகளிரணியினர் இதனை கொண்டாடுகின்றனர்.
17 / 50
இந்தியா வந்த மாலத்தீவு பாதுகாப்பு துறை அமைச்சர் மரியா அகம்மதுவுக்கு கடலோர காவல் படையினர் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். இடம்: எலிமலா, கன்னூர், கேரளா.
18 / 50
மேற்குவங்கம் நாடியா மாவட்டத்தில் பனிக்கு குளிர்காய்கின்றனர்.
19 / 50
பயங்கரவாதிகளுக்கு எதிராக செயல்பட்டு உயிரைவிட்ட மும்பை போலீஸாருக்கு நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.
20 / 50
ராமாயண யாத்திரை ரயில் சிப்பந்திகள் காவி சீருடையில் பணியாற்றுவதற்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து சீருடையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது-டில்லி
21 / 50
பெயருக்கு ஏற்ப மழை நீரால் சூழப்பட்டுள்ள ஜலகண்டேஸ்வர் கோவில்-வேலுார்
22 / 50
நவம்பர் மாத பனிப்பொழிவு ரம்மியமாக விழுகிறது விவசாய வேலையும் நடைபெறுகிறது-ஜம்மு
23 / 50
தொடரும் மழை காரணமாக சென்னையில் உள்ள பல இடங்களில் இன்னமும் மழை நீர் தேங்கியுள்ளது-மணலி.
24 / 50
ஆந்திராவில் பலத்த மழை காரணமாக பஸ் ஒன்று தண்ணீருக்குள் மூழ்கிய காட்சி. இடம்: கடப்பா மாவட்டம்.
25 / 50
துன்பம் வரும் வேளையிலே மீன் பிடிங்க:ரோட்டில் வெள்ளமாய் ஓடும் மழை நீரில் மீன் பிடிக்கும் இளைஞர்கள்-திருப்பதி,ஆந்திரா
26 / 50
வேளாண் சட்டம் வாபஸ் பெறப்பட்டதாக பிரதமர் மோடி அறிவித்ததை டில்லியில் விவசாயிகள் கொண்டாடினர்.
27 / 50
குடியிருப்பில் உள்ள சிசிடிவியில் ஒரு சிறுத்தை நடந்து போன காட்சி பதிவானதில் இருந்து அந்தப் பகுதியே கலகலத்து போயுள்ளது, வனத்துறை சிறுத்தையை தேடி வருகிறது-காஜியாபாத்,உ.பி.,
28 / 50
நாடு முழுவதும் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த துவங்கிவிட்டனர்-கோல்கட்டா.
29 / 50
மத்திய பிரதேசம் போபாலில் பழங்குடியின மக்கள் கொண்டாடிய திருவிழாவில் பங்கேற்ற கலைஞர்கள்.
30 / 50
டில்லியில் நடந்துவரும் சர்வதேச கண்காட்சியில் இடம் பெற்றுள்ள பராம்பரியப் பொருட்கள்
31 / 50
பழங்குடி இன தலைவர் பிர்சாமுன்டாவின் பிறந்தநாளில் பார்லி.,யில் நடந்த விழாவில் கலைஞர்களின் இசையை பிரதமர் மோடி ரசித்தார்.
32 / 50
டிரோன் மூலமாக தடுப்பூசியை விரைவாகவும் எளிதாகவும் கொண்டு செல்லும் திட்டம் பெங்களூருவில் துவங்கப்பட்டது
33 / 50
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் புகழ்பெற்ற புஷ்கர் திருவிழாவுக்கு புறப்பட்டு செல்கிறார் இவர்.
34 / 50
எல்லை பாதுகாப்பு படையினரின் சாகச நிகழ்ச்சிகளில் ஒன்று-போபால்
35 / 50
உ .பி., மாநிலம் நொய்டாவில் சாட் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் புனித நீராடினர்.
36 / 50
தீபாவளி முடிந்த கையோடு தடுப்பூசி போட்டுக் கொள்ள திரளாக வந்தவர்கள்-சூரத்,குஜராத்
37 / 50
யமுனை ஆற்றில் மாசு ஏற்பட்டதை அடுத்து நஞ்சான நுரைகள் பொங்கி வருகிறது-டில்லி
38 / 50
ஷாட் திருவிழாவை முன்னிட்டு கங்கை நதியில் புனித நீராடும் பக்தர்கள்.
39 / 50
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையை சூழ்ந்துள்ள மழைநீர். இடம். பெரியமேடு.
40 / 50
நதியை தாய் என்பது எல்லாம் வெற்று வார்த்தை தானா?:மே.வங்கத்தில் பாய்ந்தோடும் ஹீக்ளி நதியில் காளி பூஜை முடித்த குப்பைகளை வீசி நதியை மாசு படுத்தியதன் காரணமாக நதி தன் வழி தெரியாமல் தவிக்கிறது.
41 / 50
வட மாநிலங்களில் வளர்பிறையை முன்னிட்டு கொண்டாடப்படும் பாய் தூஜ் திருவிழாவை முன்னிட்டு யமுனை நதியில் பெண்கள் புனித நீராடினர். இடம் : பிரயாக்ராஜ் .
42 / 50
பிரதமர் மோடி கேதார்நாத்தில் ஆதி சங்காாச்சாரியார் சிலையை திறந்து வைத்து அவரை வழிபட்டார்.
43 / 50
மே.வங்க முதல்வர் மம்தா கோல்கட்டாவில் காளி கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
44 / 50
தீபாவளி திருநாளை பிரதமர் மோடி காஷ்மீர் சென்று ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். மேலும் வீரர்களுக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தார்.
45 / 50
எல்லை படை வீரர்கள் பட்டாசு கொளுத்தி தீபாவளியை கொண்டாடினர்-ஜம்மு.
46 / 50
தீபாவளியை ஒட்டி கொண்டாடப்படும் ஜன் தந்திராஸ் பண்டிகைக்காக நகைகள் வாங்கும் பெண்:ஜம்மு.
47 / 50
தீபாவளிக்கு ஒரு சில தினங்களே உள்ள நிலையில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதத்தில் வர்த்தக நிலையங்கள் அலங்கரிக்கப்பட்டு உளளன-டில்லி
48 / 50
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் புதிதாக திறக்கப்பட்ட பாலத்தின் அழகிய தோற்றம். 1
49 / 50
தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்-டில்லி
50 / 50
இன்று அங்கு நாளை இங்கு:ராஜாஸ்தான் மாநிலம் பிகானீரில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 119 ரூபாய்கு விற்கப்பட்டது.
Advertisement