புகைப்பட ஆல்பம்:

படம் தரும் பாடம்
1 / 50
மகரசங்கராந்தியை முன்னிட்டு கங்கை நதியில் புனித நீராடும் பெண்கள்.
2 / 50
குடியரசு தின விழாவை முன்னிட்டு, லடாக் யூனியன் பிரதேசத்தின் எல்லையில் உள்ள பனி மூடிய மலைப்பகுதியில், 15 ஆயிரம் அடி உயரத்தில் இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையினர் தேசியக்கொடியை ஏற்றினர். இப்பகுதியில் வெப்பநிலை மைனஸ் 40 டிகிரி செல்சியஸ்
3 / 50
காய்கறி மூடைகளை ஏற்றியபடி செல்லும் வியாபாரி. இடம்: புதுடில்லி.
4 / 50
கோல்கட்டாவில் நடந்த பறவைகள் கண்காட்சியில் தான் வளர்த்த கிளியை காட்டுகிறார்.
5 / 50
சென்னை வடபழநி ஆண்டவர் கோயில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்தது. சிவாச்சார்யர்கள் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றினர்.
6 / 50
குடியரசுதின ஒத்திகையில் ஈடுபட்டுள்ள பெண்கள்: இடம்: உத்தரகண்ட்.
7 / 50
சென்னை வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் (நாளை, ஜன-23) நடைபெறுகிறது. கும்பாபிஷேகம் காணவிருக்கும் கோவிலின் ராஜகோபுர தங்கக் கலசங்கள்.
8 / 50
கோவிட் பாதித்த நோயாளிகளுக்கு யோகா வகுப்புகள் நடைபெற்றது. இடம்: கன்னியாகுமரி .
9 / 50
மஹாராஷ்டிராவில் நீர்வழி போக்குவரத்திற்காக அடுத்த மாதம் படகு டாக்சி சேவை துவங்கப்பட உள்ளது. இதற்காக, மும்பையில் உள்ள மஜ்கோன் உள்நாட்டு கப்பல் முனையத்தில் நடந்த சோதனை ஓட்டத்தில் படகு டாக்சியில் பயணித்தவாறு செல்பி எடுத்து மகிழ்ந்த ஊழியர்.
10 / 50
டில்லியில் வரும் 26ம் தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ராஜபாதையில் ஒத்திகையில் ஈடுபட்ட ஹரியானா மாநில பள்ளி மாணவிகள்.
11 / 50
குடியரசு தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகர் லால்சவுக் பகுதிக்கு வந்தவர்களிடம் பாதுகாப்பு படையினர் திடீர் சோதனை நடத்தினர்.
12 / 50
உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள, நாட்டின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ்., விக்ராந்த், வரும் ஆகஸ்டில் இந்திய கடற்பகுதியில் இணைக்கப்பட உள்ளது. கேரளாவில் கொச்சியில் உள்ள கடற்பகுதியில் மூன்றாவது கட்ட பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு புறப்பட்ட ஐ.என்.எஸ்., விக்ராந்த்.
13 / 50
வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவுகிறது. ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள காய்கறி சந்தையில், தீமூட்டி குளிர் காய்ந்த வியாபாரிகள்.
14 / 50
டில்லியில் உள்ள காமன்வெல்த் கிராமத்தில் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமில் கோவிட் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கும் மருத்துவர்கள்.
15 / 50
போகி பண்டிககை முன்னிட்டு வைக்கோல் மூலம் கோவிட் விழிப்புணர்வு உருவாக்கப்பட்டுள்ளது. இடம்: நகுவான் மாவட்டம் , அசாம்.
16 / 50
குடியரசுதின ஒத்திகையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினர். இடம்: பாட்னா.
17 / 50
மாஸ்க் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒடிசாவின் புரி கடற்கரையில் வரையப்பட்டுள்ள மணற்சிற்பம்.
18 / 50
ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு. பரபரப்பான சென்ட்ரல் ரயில் நிலையம் அமைதியாக காணப்பட்டது.
19 / 50
ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவில் உறைந்து போன கார்கள்.
20 / 50
மே.வங்க மாநிலம் தெற்கு தியான்ஜ்பூரில் முதல் டோஸ் கோவிட் தடுப்பூசி கொண்ட மகிழ்ச்சியில் பள்ளி மாணவிகள்.
21 / 50
குடியரசுதின ஒத்திகையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினர். இடம்: புதுடில்லி.
22 / 50
ஹிமாச்சல பிரதேச மாநிலம் மணாலியில் நிலவும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக ஏற்பட்ட நெரிசலில் சிக்கி நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள்
23 / 50
பனிப்பொழிவில் அமெரிக்காவில் அழகு மிகுந்த மாளிகையை பார்வையிடும் சுற்றுலா பயணிகள் .
24 / 50
15 வயது முதல் 18 வயது வரை கோவிட் தடுப்பூசி போடும் பணி துவங்கியது. இடம்; லக்னோ .
25 / 50
குளிர்கால திருவிழாவை முன்னிட்டு நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற பஞ்சாப் குழுவினர். இடம்; மணாலி, ஹிமாசல் பிரதேசம்.
26 / 50
புதிய புத்தாண்டு பிறந்ததும் வண்ண விளக்குகள் ஜொலித்தன. நகரம்: பாங்காங்க்.
27 / 50
புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல வண்ணங்களில் கேக் தயாராகிறது. இடம்: ஐதராபாத்.
28 / 50
மும்பையில் கோவிட் பரவல் அதிகரித்துள்ள நிலையில், சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையத்தில் குவிந்த மக்கள் கூட்டம்.
29 / 50
கோவிட் பரவல் காரணமாக டில்லியில் போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பயணிகள். இடம்: அக்சர்தம் மெட்ரோ ரயில் நிலையம், புதுடில்லி.
30 / 50
இரவு நேர ஊரடங்கை கண்காணிக்கும் பணியில் டில்லி போலீசார்.
31 / 50
கங்கை நதிக்கரையில் நடந்த சிறப்பு ஆராதனை நிகழ்ச்சி. இடம் : வாரணாசி.
32 / 50
கென்யாவின் மொம்பாசா கடற்கரையில் குவிந்த மக்கள் கூட்டம்.
33 / 50
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 97 வது பிறந்த நாளில் அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
34 / 50
கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாட்டம் . இடம்: ஜபல்பூர், மத்திய பிரதேசம்.
35 / 50
பரிசுகளை அள்ளித்தரும் கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மையுடன் கிறிஸதுமஸ் பண்டிகையை கொண்டாட தயராகிறார்-நடியா,மே.வங்கம்
36 / 50
டில்லியில் நடந்த கைத்தறி கண்காட்சியில் நடந்த கலைவிழாவில் பங்கேற்ற கலைஞர்கள்.
37 / 50
தேசிய கமிட்டி உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
38 / 50
சமீப காலத்தில் தாஜ்மகால் சுற்றுலா வரும் பயணிகள் அதிகரித்துள்ளது. பனி படர்ந்த சூழலில் எடுக்கப்பட்ட கிளிக்.
39 / 50
கிறிஸ்துமஸ் நெருங்குவதை முன்னிட்டு ஆங்காங்கே கொண்டாட்டங்கள் துவங்கி உள்ளது. கரகாஸ், வெனிசூலா.
40 / 50
மேற்குவங்கம் கோல்கட்டாவில் உள்ளாட்சி தேர்தலில் ஓட்டளிக்க வருபவர்களிடம் போலீசார் சோதனை நடத்துகிறார்.
41 / 50
பட்டப்படிப்பு முடித்த விமான படை வீரர்கள் கூட்டு பயிற்சியில் ஈடுப்பட்டனர். இடம்: ஐதராபாத்.
42 / 50
இந்தியா திரும்பிய பிரபஞ்ச அழகி ஹார்னஸ் விமான நிலையத்தில் தனக்கு தரப்பட்ட வரவேற்பைக்கண்டு மகிழ்ந்தார்-மும்பை
43 / 50
பாகிஸ்தான் உடனான போரில் இந்தியா வெற்றிப்பெற்ற 50வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் என்.சி.சி., மாணவர்கள் மரியாதை செலுத்திய செல்பி எடுத்து கொண்டனர்.
44 / 50
வங்கதேசம் டாகா சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அங்குள்ள போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
45 / 50
புதுப்பிக்கப்பட்ட வாரணாசி காசிவிஸ்வநாதர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு கங்கை ஆரத்தி நிகழ்ச்சியில் தீபங்கள் ஜொலிக்கிறது.
46 / 50
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து 10ம் நாள் (டிச.13 ) நம்பெருமாள் நாச்சியார் கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் ரத்தினக்கிளி, தலையில் நாகாபரணம், பவளமாலை, அடுக்கு பதக்கம், ஏலக்காய் ஜடை தரித்து எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
47 / 50
ஒரு வருட போராட்டத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய விவசாயிகளை மேளதாளத்துடன் மக்கள் வரவேற்றனர்-அமிர்தசரஸ்,பஞ்சாப்
48 / 50
எருது ஓட்டும் போட்டியில் சீறிப்பாயும் காளை. இடம்: மங்களூரு.
49 / 50
ராணுவ தளவாடங்கள் இடம்பெற்ற கண்காட்சியில் குழந்தை ஒன்று குறி பார்க்கிறது. இடம்: மேற்கு வங்கம் .
50 / 50
விடை பெற்றார் வீரத்திருமகன்:தலைமைத் தளபதியும் தந்தையுமான பிபின் ராவத்தின் உடலுக்கு தீமூட்டி இறுதி சடங்குகளை நடத்திய மகள்கள் கீர்த்திகா,தாரிணி-டில்லி .
Advertisement