புகைப்பட ஆல்பம்:

படம் தரும் பாடம்
1 / 50
வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவுகிறது. ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள காய்கறி சந்தையில், தீமூட்டி குளிர் காய்ந்த வியாபாரிகள்.
2 / 50
தலைநகர் டில்லியில் கோடை வெப்பம் தீவிரமடைந்துள்ள நிலையில், குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது, லட்சுமி பாய் நகர் குடியிருப்பு பகுதியில், லாரியில் இருந்து குடிநீர் பிடிக்க காத்திருந்த பொதுமக்கள்.
3 / 50
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, பீஹாரின் பாட்னா கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் இருந்த, 18ம் நூற்றாண்டு கட்டடங்கள், 'புல்டோசர்' உதவியுடன் இடிக்கப்பட்டன.
4 / 50
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் வெளுத்து வாங்கிய கனமழையால் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது. பாதுகாப்பான இடம் நோக்கி செல்லும் பெண்கள்.
5 / 50
கேரளாவுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கொச்சி நகரில் நேற்று கருமேகங்கள் சூழ்ந்து இருண்டு காணப்பட்டது.
6 / 50
டில்லியில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், ராஜ்பாத் பகுதியில் தோன்றிய கானல் நீர்.
7 / 50
ஒடிசாவின் புரியில் உள்ள ஜெகன்நாதர் கோவிலில், ஜூலை 1ம் தேதி உலக பிரசித்தி பெற்ற ரத யாத்திரை விழா துவங்க உள்ளது. இதையொட்டி, ரதங்களை கட்டமைக்கும் பட்டறைக்கு, சக்கரத்தை சுமந்து சென்ற தொழிலாளர்கள்.
8 / 50
அசாமின் திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள பல இடங்களில், இன்று கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு வெள்ளம் சூழ்ந்தது. இதில், தண்டவாளம் இருக்கும் இடம் தெரியாத அளவுக்கு காட்சி அளித்த ரயில்வே ஸ்டேஷன்.
9 / 50
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு புத்தபிட்சுகள் மெழுகு ஏற்றி வழிப்பட்டனர். இடம்: அகர்தலா, திரிபுரா.
10 / 50
சர்வதேச யோகா தினம், ஜூன் 21ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஜம்மு - காஷ்மீரின் ஜம்மு புறநகர் பகுதியில், நேற்று காலை சூரிய உதயத்தின்போது, பயிற்சியில் ஈடுபட்ட இளைஞர்கள்.
11 / 50
டில்லியில் கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க துணிகளால் தலையை மூடிச்செல்லும் பொதுமக்கள்.
12 / 50
அசாம் மாநிலத்தில் மழை கொட்டி தீர்க்கிறது. நவ்கான் மாவட்டத்தில் நெற்பயிர்களை காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள்.
13 / 50
இடம்: நாடியா மாவட்டம், மேற்குவங்கம் .
14 / 50
கரை தேடி செல்லும் இடம்: மொராதாபாத். உ .பி., மாநிலம்.
15 / 50
சர்வதேச செவிலியர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை செவிலியர்கள், 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.
16 / 50
சுதந்திரமாக சுவைக்கும் இடம் சென்னை.
17 / 50
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் முன்பு போட்டோ எடுத்து கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணி.
18 / 50
உலக செவிலியர் தினம் நாளை( மே 12) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் தனியார் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற செவிலியர்கள், மன அழுத்தத்தை போக்குவதற்காக நடனமாடினர்.
19 / 50
பிரிட்டன் பார்லிமென்ட் கூட்டம் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனையில் நேற்று துவங்கியது. பார்லி., கூட்டத்துக்கு வந்த இளவரசர் வில்லியம்.
20 / 50
ராஜ்யசபா தினத்தை முன்னிட்டு பார்லிமென்ட் வளாகத்தில் நடந்த விழாவில், இடம்பெற்ற கலாசார நிகழ்ச்சி.
21 / 50
திரிசூர் பூரம் திருவிழாவை முன்னிட்டு வடக்குநாதன் கோயிலில் கோபுர வாசல் திறப்பு முன்னிட்டு சம்பிரதாய நிகழ்ச்சி நடந்தது.
22 / 50
தர்மபுரி மாவட்டம் ஒக்கனேக்கல் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் பரிசலில் ஜாலி டூர் கிளம்பிடாங்க. 1
23 / 50
உத்தர்கண்ட் மாநிலம் பத்ரிநாத் கோவிலில் வழிபாடு நடத்திய பக்தர்கள்.
24 / 50
கோடை வெயிலை சமாளிக்க மத்தியபிரதேசம் போபாலில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் பெண்கள் ஜாலிக்குளியல் போடுகின்றனர்.
25 / 50
வங்கக் கடலில்அந்தமான் அருகில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, இன்று புயலாக மாறுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஒடிசா மீனவர்கள்.
26 / 50
கோல்கட்டாவில் நடந்த சுற்றுலா துறை சார்பில் நடந்த விழாவில் பிரபல ஒடிசா நடன கலைஞர் டோனா கங்குலியின் கலை நிகழச்சி நடந்தது.
27 / 50
எங்கு பார்த்தாலும் இல்லை, இல்லை என்றே இலங்கையில் குரல் கேட்கிறது. பெட்ரோல், டீசல், காஸ் நிரப்ப நீண்ட வரிசையில் காத்து நிற்கும் ஆட்டோக்கள்
28 / 50
கூண்டில் ஊஞ்சலாடும் குருவிகள். மாநிலம் : மேற்கு வங்கம்.
29 / 50
உக்ரைனின் மரியூபோல் நகரத்தை கைப்பற்றியுள்ள ரஷ்ய படையினர்.
30 / 50
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்ற பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் வரவேற்றனர்.
31 / 50
சர்வதேச யோகா தினம் அடுத்த மாதம் 21ல் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சிக்கிம் மாநிலத்தில் 17 ஆயிரம் அடி உயரத்தில் கடும் குளிரில் யோகா பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படையினர்.
32 / 50
பிரான்ஸ் சென்றிருந்த பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் இமானுவெல் மெக்ரானை அதிபர் மாளிகையான எல்ஸிபேலசில் சந்தித்தார். இடம்:பாரீஸ்.
33 / 50
டென்மார்க் அரசி இரண்டாம் மார்கிரெதேவை சந்திக்க சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இடம்: கோபன்ஹேகன்
34 / 50
அக் ஷய திருதியை முன்னிட்டு, மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில், தக் ஷினேஷ்வர் கோவிலில் வழிபட நேற்று குவிந்த பக்தர்கள்.
35 / 50
ரம்ஜான் பண்டிகையையொட்டி, டில்லி ஜூம்மா மசூதியில் நடந்த சிறப்பு தொழுகையில் பங்கேற்ற சிறுமியர், தங்கள் கைகளில் வைத்திருந்த மருதாணியை காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
36 / 50
ரமலான் பண்டிகையை முன்னிட்டு டில்லி ஜூம்மா மசூதியில் பலர் குவிந்தனர்.
37 / 50
கோடை வெயிலுக்கு இதமாக குளிக்கும் யானைகள். இடம்: ஆக்ரா.
38 / 50
நாட்டின் பல மாநிலங்களில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது.டில்லியில் உடல் வெப்பத்தை தணிக்க குழாயில் தண்ணீரை பிடித்து தலை மீது ஊற்றி விளையாடிய சிறுவர் சிறுமியர்
39 / 50
இன்று உழைப்பாளர் தினம்: தொழிலாளி ஒருவர் செங்கல்சூளையில் பணியாற்றுகிறார். இடம்: பாட்னா, பீகார்.
40 / 50
உலக சிரிப்பு தினத்தை (மே.1) முன்னிட்டு பலர் மொத்தமாக சிரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நொய்டா, உ.பி., மாநிலம்.
41 / 50
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் காலிஸ்தான் ஆதரவு அமைப்பினர் , சிவசேனா தொண்டர்களுடன் மோதிக்கொண்டனர். இதில் வாள் கொண்டு விரட்டும் நபர்கள்.
42 / 50
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள்.
43 / 50
கொளுத்தும் கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க, ஆற்றில் உற்சாகமாக குளித்த சிறுவன். இடம்: அமிர்தசரஸ், பஞ்சாப்.
44 / 50
அசாமின் கர்பிஆங்லாம் மாவட்டத்தில் நடந்த பொது கூட்டத்தில் பங்கேற்க வந்த, பிரதமர் மோடியை வரவேற்ற பெண்கள்.
45 / 50
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் அழகிய தோற்றம்.
46 / 50
சீனாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளதை அடுத்து, தலைநகர் பீஜிங்கில் பரிசோதனையில் ஈடுபட்டுள்ள சுகாதாரத்துறை ஊழியர்கள்.
47 / 50
சி.பி.எஸ்.இ., 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வுகள், நேற்று முன்தினம் துவங்கின. தேர்வு மையத்தில் நேற்று, தேர்வு எழுதிய பின், சக தோழியரிடம் விடைகளை கேட்டறிந்த 10ம் வகுப்பு மாணவியர். இடம்: மொராதாபாத், உ.பி.,
48 / 50
ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் அமைந்துள்ள சர்வதேச எல்லை பகுதி வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ முடியாதபடி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பிஎஸ்எப் வீரர்கள்.
49 / 50
மேற்கு வங்க மாநிலத்தில் வெயில் சுட்டெரிக்கிறது. இங்குள்ள நடியா நகரில் வசிக்கும் சிறுவர்கள், வெப்பத்தை தணிக்க ஆற்றில் ஆனந்தமாக குளித்து கும்மாளம் போட்டனர்.
50 / 50
கோடை உஷ்ணத்தை குறைக்க ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் அருகே குளியல் போடும் இருவர்.
Advertisement