புகைப்பட ஆல்பம்:

படம் தரும் பாடம்
1 / 50
இடம்: நாடியா மாவட்டம், மேற்குவங்கம் .
2 / 50
கிளிக் ஆன இடம்: புஷ்கர், ராஜஸ்தான்.
3 / 50
கடற்படை பயிற்சி முடித்த அமெரிக்க வீரர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடுகின்றனர். இடம்: அன்னபோலிஸ்.
4 / 50
ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை சுற்றி வளைக்கும் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
5 / 50
பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைக்க சென்னை வந்த பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
6 / 50
பரதநாட்டியம் ஆடி பிரதமர் மோடியை வரவேற்ற மாணவியர் மற்றும் விழா மேடையில் வாழ்த்துக்களை தலை வணங்கி ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி. இடம்: சென்னை
7 / 50
சென்னையில் இன்று பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி தொண்டர்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தார்.
8 / 50
மும்பை கடற்கடரையில் குதிரை வண்டி ஓட்டி பொழுது போக்கும் நபர்கள்.
9 / 50
உக்ரைன் போர் துவங்கி 90 நாட்கள் கடந்துள்ள நிலையில், இடிபாடுகளுக்கு இடையே இயல்பு வாழ்க்கையும் துவங்கியுள்ளது. பரோட்யன்கா பகுதியில் ரஷ்ய தாக்குதலில் உருக்குலைந்து கிடக்கும் கட்டடத்தின் அருகில் விளையாட்டு சைக்கிளை ஓட்டிச் செல்லும் சிறுவன்.
10 / 50
புத்தமத தலைவர் தலாய்லாமா நீண்ட நாட்கள் வாழ வேண்டி, ஹிமாச்சல பிரதேசம் தர்மசாலாவில் வழிபாடு நடந்தது. அதில், பங்கேற்க வந்த தலாய்லாமாவை வரவேற்கும் விதமாக இடம்பெற்ற நிகழ்ச்சி.
11 / 50
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற மார்க்கெட், ரஷ்ய ராணுவ தாக்குதலில் உருக்குலைந்து காணப்படுகிறது.
12 / 50
குஜராத் மாநிலம் சூரத் நகரில், ஜெகன்னாதர் கோவிலில் ரத யாத்திரை ஜூலை 1ல் நடக்கிறது. இதற்கான தேர்ச்சக்கரங்களை தயார் செய்யும் பணியில், லங்கா விஜய் ஹனுமன் கோவில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
13 / 50
ஹிமாச்சல பிரதேசத்தில் மழை பெய்து ஓய்ந்த பின், சிம்லா நகரில் நிலவிய கடும் பனிப்பொழிவு.
14 / 50
உக்ரைன்- ரஷ்யா போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில் சுவர் எழுப்பப்பட்டு அதில் மறைந்தவர்களின் உருவங்கள் பதிக்கப்பபட்டுள்ளது. இடம்: கியூ நகரம்.
15 / 50
உ .பி., மாநிலம் வாரணாசியில் அடித்த சூறைக்காற்றில் மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கிறது.
16 / 50
தலைநகர் டில்லியில் அதிகாலையில் கொட்டிய பலத்த மழை காரணமாக டில்லி - நொய்டா விரைவுச் சாலையில் அக்ஷர்தாம் அருகே போக்குவரத்து ஸ்தம்பித்தது. சுட்டெரித்த வெயிலால் அவதிப்பட்ட டில்லி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
17 / 50
குவாட் மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அங்கு வாழும் இந்தியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
18 / 50
சர்வதேச யோகா தினம், ஜூன் 21ல் கொண்டாடப்படுகிறது. இதற்காக, உ.பி., மாநிலம் வாரணாசியில், கங்கை நதிக்கரையில் உள்ள 'நமோ காட்' என்ற இடத்தில், யோகா பயிற்சி முகாம் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
19 / 50
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் நீர் கொட்டுகிறது.
20 / 50
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாளையொட்டி டில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்., தலைவர் சோனியா , அவரது மகள் பிரியங்கா அஞ்சலி செலுத்தினர்.
21 / 50
கர்நாடக மாநில மாம்பழ வளர்ச்சி மற்றும் விற்பனை நிறுவனம் தபால் துறையுடன் இணைந்து ஆன்லைன் வாயிலாக மாம்பழ விற்பனையை துவங்கியுள்ளது. முதல் நாளில் பெங்களூரு வாடிக்கையாளர்களுக்கு மாம்பழம் எடுத்து சென்ற தபால் துறையினர்.
22 / 50
டில்லி, பஞ்சாப், உ.பி., உள்ளிட்ட வட மாநிலங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில், இரு சக்கர வாகனத்தில் ஒருவர், முகம் முழுவதையும் துணியால் மூடியபடி சென்றார்.
23 / 50
கிளிக்கான மாநிலம் திரிபுரா.
24 / 50
கிளிக்கான இடம்: ஜம்மு காஷ்மீர். 1
25 / 50
சர்வதேச யோகா தினம் ( ஜூன்-21) கொண்டாடப்பட உள்ளது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் யோகா பயிற்சியில் ஈடுபட்டார். இடம்: புதுடில்லி.
26 / 50
தலைநகர் டில்லியில் கோடை வெப்பம் தீவிரமடைந்துள்ள நிலையில், குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது, லட்சுமி பாய் நகர் குடியிருப்பு பகுதியில், லாரியில் இருந்து குடிநீர் பிடிக்க காத்திருந்த பொதுமக்கள்.
27 / 50
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, பீஹாரின் பாட்னா கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் இருந்த, 18ம் நூற்றாண்டு கட்டடங்கள், 'புல்டோசர்' உதவியுடன் இடிக்கப்பட்டன.
28 / 50
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் வெளுத்து வாங்கிய கனமழையால் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது. பாதுகாப்பான இடம் நோக்கி செல்லும் பெண்கள்.
29 / 50
கேரளாவுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கொச்சி நகரில் நேற்று கருமேகங்கள் சூழ்ந்து இருண்டு காணப்பட்டது.
30 / 50
டில்லியில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், ராஜ்பாத் பகுதியில் தோன்றிய கானல் நீர்.
31 / 50
ஒடிசாவின் புரியில் உள்ள ஜெகன்நாதர் கோவிலில், ஜூலை 1ம் தேதி உலக பிரசித்தி பெற்ற ரத யாத்திரை விழா துவங்க உள்ளது. இதையொட்டி, ரதங்களை கட்டமைக்கும் பட்டறைக்கு, சக்கரத்தை சுமந்து சென்ற தொழிலாளர்கள்.
32 / 50
அசாமின் திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள பல இடங்களில், இன்று கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு வெள்ளம் சூழ்ந்தது. இதில், தண்டவாளம் இருக்கும் இடம் தெரியாத அளவுக்கு காட்சி அளித்த ரயில்வே ஸ்டேஷன்.
33 / 50
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு புத்தபிட்சுகள் மெழுகு ஏற்றி வழிப்பட்டனர். இடம்: அகர்தலா, திரிபுரா.
34 / 50
சர்வதேச யோகா தினம், ஜூன் 21ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஜம்மு - காஷ்மீரின் ஜம்மு புறநகர் பகுதியில், நேற்று காலை சூரிய உதயத்தின்போது, பயிற்சியில் ஈடுபட்ட இளைஞர்கள்.
35 / 50
டில்லியில் கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க துணிகளால் தலையை மூடிச்செல்லும் பொதுமக்கள்.
36 / 50
அசாம் மாநிலத்தில் மழை கொட்டி தீர்க்கிறது. நவ்கான் மாவட்டத்தில் நெற்பயிர்களை காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள்.
37 / 50
கரை தேடி செல்லும் இடம்: மொராதாபாத். உ .பி., மாநிலம்.
38 / 50
சர்வதேச செவிலியர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை செவிலியர்கள், 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.
39 / 50
சுதந்திரமாக சுவைக்கும் இடம் சென்னை.
40 / 50
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் முன்பு போட்டோ எடுத்து கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணி.
41 / 50
உலக செவிலியர் தினம் நாளை( மே 12) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் தனியார் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற செவிலியர்கள், மன அழுத்தத்தை போக்குவதற்காக நடனமாடினர்.
42 / 50
பிரிட்டன் பார்லிமென்ட் கூட்டம் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனையில் நேற்று துவங்கியது. பார்லி., கூட்டத்துக்கு வந்த இளவரசர் வில்லியம்.
43 / 50
ராஜ்யசபா தினத்தை முன்னிட்டு பார்லிமென்ட் வளாகத்தில் நடந்த விழாவில், இடம்பெற்ற கலாசார நிகழ்ச்சி.
44 / 50
திரிசூர் பூரம் திருவிழாவை முன்னிட்டு வடக்குநாதன் கோயிலில் கோபுர வாசல் திறப்பு முன்னிட்டு சம்பிரதாய நிகழ்ச்சி நடந்தது.
45 / 50
தர்மபுரி மாவட்டம் ஒக்கனேக்கல் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் பரிசலில் ஜாலி டூர் கிளம்பிடாங்க. 1
46 / 50
உத்தர்கண்ட் மாநிலம் பத்ரிநாத் கோவிலில் வழிபாடு நடத்திய பக்தர்கள்.
47 / 50
கோடை வெயிலை சமாளிக்க மத்தியபிரதேசம் போபாலில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் பெண்கள் ஜாலிக்குளியல் போடுகின்றனர்.
48 / 50
வங்கக் கடலில்அந்தமான் அருகில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, இன்று புயலாக மாறுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஒடிசா மீனவர்கள்.
49 / 50
கோல்கட்டாவில் நடந்த சுற்றுலா துறை சார்பில் நடந்த விழாவில் பிரபல ஒடிசா நடன கலைஞர் டோனா கங்குலியின் கலை நிகழச்சி நடந்தது.
50 / 50
எங்கு பார்த்தாலும் இல்லை, இல்லை என்றே இலங்கையில் குரல் கேட்கிறது. பெட்ரோல், டீசல், காஸ் நிரப்ப நீண்ட வரிசையில் காத்து நிற்கும் ஆட்டோக்கள்
Advertisement