புகைப்பட ஆல்பம்:

படம் தரும் பாடம்
1 / 50
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற மார்க்கெட், ரஷ்ய ராணுவ தாக்குதலில் உருக்குலைந்து காணப்படுகிறது.
2 / 50
பிளாஷ்டிக் ஒழிப்பு தொடர்பான ஒரு விழிப்புணர்வு கண்காட்சியில் இது போன்ற மர பொருட்கள் இடம் பெற்றிருந்தன. இடம்: புதுடில்லி.
3 / 50
புகழ்பெற்ற குஜராத் மாநிலம் ஆமதாபாத் ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
4 / 50
ஒடிசா மாநிலம் புரியில் பிரசித்தி பெற்ற ரத யாத்திரை இன்று துவங்குகிறது. இதையொட்டி, ஜெகன்னாதர், பால்பத்ரா, சுபத்ரா ஆகியோரின் ரதங்கள், தேரோட்டம் புறப்படும் பகுதிக்கு கொண்டு வரப்பட்டன.
5 / 50
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த ஒரு போராட்டத்திற்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார்.
6 / 50
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று(ஜூன் 30) மாலை 6:02 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ள 'பி.எஸ்.எல்.வி., - சி53' ராக்கெட்டுக்கான 25 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று தொடங்கியது. இதில் மூன்று செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட உள்ளன.
7 / 50
ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் மழை பெய்த போதிலும், குடைபிடித்தபடி குவிந்த சுற்றுலா பயணிகள்.
8 / 50
ஒடிசா மாநிலம் புரி ஜெகன்னாதர் கோவிலின் உலகப் பிரசித்தி பெற்ற தேர்த்திருவிழா வரும் 1ம் தேதி கோலாகலமாக நடக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடக்கின்றன.
9 / 50
உ.பி., மாநிலம் வாரணாசியில் பெய்த கன மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் சிரமத்துடன் சென்ற வாகன ஓட்டிகள்.
10 / 50
தாய் ஈன்றெடுத்த மூன்று அணில் குட்டிகள் தனது சொந்த வீடான மரப்பொந்தில் எட்டிப் பார்க்கிறது. இடம். கடலூர் மாவட்டம் சிதம்பரம்.
11 / 50
உக்ரைனில் உள்ள வர்த்தக கட்டடம் மீது ரஷ்ய படை தாக்குதலில் தீ பற்றி எரிகிறது.
12 / 50
ஜி-7 மாநாடு நடக்கும் ஜெர்மனியின் முனிச் நகரில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.
13 / 50
ஜி-7 மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி அர்ஜென்டினா அல்பர்ட்டோ பெர்னாண்டஸ் மற்றும் அந்நாட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
14 / 50
மத்திய பழங்குடியினர் நலத்துறை சார்பில், ஜார்கண்ட் மாநிலம் குந்தி நகரில் நேற்று நடத்தப்பட்ட 'மெகா' மருத்துவ முகாமில், கொட்டும் மழையிலும் ஏராளமானோர் குடைகளுடன் வந்திருந்து பரிசோதனை செய்து கொண்டனர்.
15 / 50
ஜி-7 மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு வாழும் இந்திய மக்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.
16 / 50
மேற்குவங்கம் நாடியாவில் ஜெகன்நாதர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு சுவாமி சிற்பங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.
17 / 50
ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் பா.ஜ., கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு வேட்பு மனு தாக்கல் செய்தார். அருகில் பிரதமர் மோடி. மற்றும் மத்திய அமைச்சர்கள் . இடம்: பார்லி., அலுவலகம் , புதுடில்லி.
18 / 50
நிலநடுக்கத்தால் எல்லாம் இழந்து வயதான காலத்தில் நடுங்கி போய் பரிதவிப்புடன் உதவிக்காக காத்து அமர்ந்திருக்கிறார் . நாடு: ஆப்கானிஸ்தான்.
19 / 50
ரஷ்யாவின் செயின்ட்பீட்டர்ஸ்பர்க்கில் கோடை கொண்டாட்டங்கள் துவங்கி உள்ளன. இதன் ஒரு பகுதியாக நேவா ஆற்றில் நடத்தப்படும் படகு போட்டிகளுக்கான பயிற்சியில் ஈடுபட்ட படகின் எழில்மிகு தோற்றம்.
20 / 50
அ.தி.மு.க.,பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்த குரல் ஓங்கி ஒலித்ததால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் வெளியேறிய காட்சி.
21 / 50
ஆந்திராவின் விஜயவாடாவில் உள்ள கிருஷ்ணா நதியை வழிபட்டு அங்குள்ள துர்கா படித்துறையில் கற்பூர் ஆரத்தி காட்டப்பட்டது.
22 / 50
எத்தியோப்பியா சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அடிஸ் அபாபா நகரில் புதிதாக கட்டப்பட்ட இந்திய தூதரக அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார்.
23 / 50
கிராமத்தினர் பலர், தங்களுக்கு தேவையான பொருட்களை மட்டும் எடுத்து கொண்டு, வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு நடந்தே சென்றனர். இடம்: கவுகாத்தி, அசாம்
24 / 50
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மைசூரு அரண்மனை வளாகத்தில் யோகாவில் ஈடுபட்ட பிரதமர் மோடி .
25 / 50
சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தை சேர்ந்த சிறுவர் - சிறுமியர் கடுமையான ஆசனங்களை நேற்று ஒத்திகை பார்த்தனர்.
26 / 50
சர்வதேச யோகா தினத்தை (ஜூன் 21) முன்னிட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ள பெண்கள். தாவி நதிக்கரையோரம். மாநிலம் : ஜம்மு காஷ்மீர்.
27 / 50
பயப்படும்படி ஏதும் இல்லை. தேசிய பாதுகாப்பு படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். நகரம்: ஆமதாபாத்.
28 / 50
இந்த காட்சி கிளிக் ஆன நாடு :சுவிஸ்.
29 / 50
இந்திய விமானப் படையில் பயிற்சி பெற்ற அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் விமானப் படையின், 'சூர்யகிரண்' என்ற சிறப்பு குழுவை சேர்ந்தவர்கள் நிகழ்த்திய சாகச காட்சி. இடம்: ஹைதராபாத், தெலுங்கானா.
30 / 50
தனது தாயாரின் 100 வது பிறந்த நாளை முன்னிட்டு குஜராத் சென்ற பிரதமர் மோடி அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்.
31 / 50
படம் கிளிக் ஆன நகரம் ஆமதாபாத்.
32 / 50
டில்லி ஜூம்மா மசூதி அருகே 'ட்ரோன்' மூலம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
33 / 50
பசியாறும் பறவை கிளிக் ஆன நாடு: ஆஸ்திரேலியா.
34 / 50
சர்வதேச யோகா தினம் வரும் 21ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, யமுனை ஆற்றில் நடந்த யோகா பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள். இடம்: பிரயாக்ராஜ், உத்தர பிரதேசம்
35 / 50
காட்சி கிளிக் ஆன இடம்: புதுடில்லி.
36 / 50
சீனாவில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. தென்கிழக்கு சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள ஷூய்கோ நீர் மின் நிலையத்தின் மதகுகள் திறக்கப்பட்டதை அடுத்து தண்ணீர் ஆர்ப்பரித்து வெளியேறியது.
37 / 50
சர்வதேச யோகா தினம் நெருங்குவதை முன்னிட்டு, குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் யோகா பயிற்சியில் ஈடுபட்ட பள்ளி மாணவிகள்.
38 / 50
ஜம்மு - காஷ்மீரின் இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோவிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்க தரிசனம், 30ம் தேதி துவங்குகிறது. இந்த ஆண்டுக்கான பிரதான பூஜை நேற்று துவங்கியது.
39 / 50
அசாம் மாநிலம், கவுகாத்தியில் கனமழை பெய்து வருகிறது. இங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை தேசிய பேரிடர் மீட்புப்படையினர் படகுகள் வாயிலாக மீட்டனர்.
40 / 50
கிளிக்கான இடம்: புதுடில்லி
41 / 50
கிளிக்கான இடம் : புதுடில்லி .
42 / 50
என்.சி.சி., எனப்படும் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவியருக்கு ஜம்முகாஷ்மீர் நகரில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மாணவி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு பயிற்சி செய்தார்.
43 / 50
போரே நடந்தாலும் எங்கள் ரிலாக்சுக்கு யாரும் தடை போட முடியாது என்கின்றனரோ இவர்கள் ? டினிபர் நதி, நகரம்: கியூ, நாடு : உக்ரைன்.
44 / 50
தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் அஜ்மீர், ராஜஸ்தான் மாநிலம்.
45 / 50
குஜராத்தில் மலைவாழ் மக்கள் வசிக்கும் நவ்சரி பகுதிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
46 / 50
கழிவு பொருட்கள் இடையே புனித நீராடும் பெண் பக்தர்கள். இடம்: வாரணாசி.
47 / 50
'கங்கா தசரா' கொண்டாட்டத்தையொட்டி, கங்கை நதியில் ஆயிரக்கணக்கில் புனித நீராடிய மக்கள். இடம்: பாட்னா, பீஹார்.
48 / 50
கங்கா தசரா முன்னிட்டு கங்கை ,யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் பகுதியில் பக்தர்கள் சிறப்பு ஆரத்தி எடுத்தனர்.
49 / 50
மஹாராஷ்டிராவில் 12-ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் நேற்று வெளியாயின. தேர்வில் பெற்ற வெற்றி கொண்டாடும் மாணவிகள். இடம்: மும்பை.
50 / 50
காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டம் துல்முலாவில் உள்ள ரகன்யா பகவதி கோவிலில், கீர்பவானி திருவிழாவை முன்னிட்டு விளக்கேற்றிய பக்தர்கள்.
Advertisement