புகைப்பட ஆல்பம்:

படம் தரும் பாடம்
1 / 50
உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு 2வது முறையாக பதவியேற்று 100 நாட்கள் முடிந்துள்ளதை அடுத்து மாநிலம் முழுதும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லக்னோவில் சட்டசபை வளாகம் முன் நடனமாடிய நாட்டுப்புற கலைஞர்கள்.
2 / 50
சுதந்திரதினத்தை முன்னிட்டு டில்லியின் முக்கிய பகுதிகளில் துப்பறியும் நாய்கள் உதவியுடன் சோதனை நடத்தப்படுகிறது.
3 / 50
75-வது சுதந்திர தினத்தை மூவர்ண ஆடையில் உற்சாகத்துடன் வரவேற்க தயாராகும் பெண்கள்: இடம்: போபால், ம.பி.,
4 / 50
டில்லியில் நடக்கவிருக்கும் சுதந்திரதினத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு படையினர் விஐபி களுக்கு அளிக்க வேண்டிய ஒத்திகை நடத்தினர்.
5 / 50
மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பந்த்ரா-வோர்லியை இணைக்கும் கடல் பாலம் மூவர்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டுள்ளதை பார்த்து ரசிக்கும் மக்கள்.
6 / 50
இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நடக்கும் இடத்தை சோதனை செய்யும் பாதுகாப்பு படையினர். இடம்: கவுகாத்தி, அசாம்.
7 / 50
துணை ஜனாதிபதியாக பதவியேற்ற ஜக்தீப் தங்கர் ஜனாதிபதி திரவுபதிமுர்மு, பிரதமர் மோடியுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.
8 / 50
டில்லியில் நடந்த ஒரு கலை நிகழ்ச்சியில் கலாசார நடனமாடிய பெண் கலைஞர்கள்.
9 / 50
சுதந்திர தின 75வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள சட்டசபை வளாகத்தில், பள்ளி மாணவியர் தேசியக் கொடி ஏந்தியபடி சாகசம் செய்தனர்.
10 / 50
மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அறையில், இட நெருக்கடியில் குழந்தைகள் உறங்கும் இடம். அங்கன்வாடி, அலங்காநல்லூர், மதுரை மாவட்டம்.
11 / 50
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் லிங்கராஜா கோயிலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்று தரிசனம் செய்தார்.
12 / 50
பிரிட்டனின் பர்மிங்காமில் நடக்கும் காமன்வெல்த் போட்டியில் மகளிர் பிரிவு குத்துச்சண்டையில் இந்தியாவின் நீத்து கங்காஸ் தங்கம் வென்றார்.
13 / 50
ரக்சா பந்தன் விழாவையொட்டி ராணுவ வீரர்களுக்கு நெற்றியில் திலமிட்டு வாழ்த்து தெரிவித்த பள்ளி மாணவிகள்.இடம்: ஜபல்பூர். ம.பி.,
14 / 50
வாத்துக்கூட்டங்கள் அணிவகுத்து செல்லும் அழகு காட்சி. புஷ்கர், ராஜஸ்தான்.
15 / 50
மழைக்காலத்தில் மேகம் சூழ்ந்து ரம்மியமான மாலை வேளையில் யமுனை நதிக்கரையோரம் கண்களுக்கு விருந்தளிக்கும் தாஜ்மஹாலின் அழகிய தோற்றம். இடம்:ஆக்ரா.
16 / 50
விலைவாசி உயர்வை கண்டித்து டில்லியில் போராட்டம் நடத்திய காங்., தற்காலிக தலைவர் சோனியாவின் மகள் பிரியங்காவை பெண் போலீசார் வலுக்கட்டாயமாக அழைத்து போலீஸ் வேனில் ஏற்றினர்.
17 / 50
ஜிஎஸ்டி , வேலையின்மை விலைவாசி உயர்வை கண்டித்து பார்லி.,முன்பாக காங்., எம்.பி., ராகுல் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது.
18 / 50
விமானத்திலிருந்து மூன்று கதவுகள் வழியே வெளியேறும் வசதியை இன்டிகோ நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இடம்: புதுடில்லி விமான நிலையம்.
19 / 50
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு கோயிலில் ஜெயின் துறவி மகாவீரர் சிலைக்கு அபிஷேகம் செய்கிறார்.
20 / 50
பர்மிங்காமில் நடந்துவரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய வீராங்கனை பூர்ணிமா பான்டே 87 கிலோ எடையை தூக்கி பதக்கத்திற்கு குறி வைக்கிறார்.
21 / 50
கங்கை நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும் ஆபத்தை உணராமல் குளித்து விளையாடும் சிறுவன்: இடம்: பாட்னா, பீஹார்.
22 / 50
நர்மதை ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து யாத்திரை செல்லும் சிவபக்தைகள். இடம்: ஜபல்பூர், ம.பி.,
23 / 50
கனமழையால், கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்.
24 / 50
துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி ஓட்டுபெட்டிகளை தேர்தல் அதிகாரிகள், பாராளுமன்றம் கொண்டுவந்தனர். இடம்: டில்லி.
25 / 50
இந்தியாவின் சுதந்திர தினம் நெருங்கி வருவதை முன்னிட்டு தேசியக்கொடி தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இடம்: புதுடில்லி.
26 / 50
பர்மிங்காமில் நடந்துவரும் காமன்வெல்த் போட்டியில் நடந்த ஜூடோவில் இந்திய வீராங்கனை மேரி கிறிஸ்ட்டைன் , மொரிசியஸ் வீராங்கனையை புரட்டி போடுகிறார்.
27 / 50
விவசாய பணியில் ஈடுபட்டுள்ள பெண். மாவட்டம்: நாடியா, மாநிலம்: மேற்குவங்கம்.
28 / 50
சோமவாரத்தை முன்னிட்டு கங்கை நதியில் புனித நீராடும் பக்தர்கள்.
29 / 50
இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடக்கும் காமன்வெல்த் விளையாட்டு பளுதுாக்குதலில் இந்தியாவின் ஜெரிமி லால்ரின்னுங்கா (67 கிலோ) தங்கம் வென்றார்.
30 / 50
பீகார் மாநிலம் பாட்னாவில் பா.ஜ., சார்பில் நடந்த பேரணியில் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை மேள, தாளம் முழங்கிட வரவேற்றனர்.
31 / 50
சர்வதேச புலிகள் தினத்தையொட்டி, பெங்களூரில் உள்ள பள்ளி ஒன்றில் புலிகள் போன்று முகமூடி அணிந்து போஸ் கொடுத்த மாணவர்கள்.
32 / 50
ஹிமாசல பிரதேசம் குளு பகுதியில் மழை தொடர்ந்து பெய்ததால் நதியில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
33 / 50
சென்னையில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் போட்டிக்கான துவக்க விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக்சிங் தாகூர், சென்னையில் உள்ள கோவை தினமலர் பதிப்பு வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம் வீட்டிற்கு வருகை தந்தார். அப்போது அங்கிருந்த ஊடகதுறை அதிபர்களுடன் கலந்துரையாடினார். இடமிருந்து எல்.ஆதிமூலம், மத்திய அமைச்சர், இந்து குழுமம் என்.ரவி, புதிய தலைமுறை சத்யநாராயணா, ராஜ் டி.வி.,ரகு, பாலிமர் டி.வி., கல்யாணசுந்தரம், நியூஸ் 7 டி.வி., சுப்பிரமணியன், இந்தியன் எக்ஸ்பிரஸ் மனோஜ்குமார் சந்தோலியா, மத்திய அமைச்சரின் உதவியாளர், ஆனந்த விகடன் சீனிவாசன் ஆகியோர்.
34 / 50
ஜனாதிபதி திரவுபதி முர்மு குறித்து காங்கிரஸ் எம்.பி., ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பார்லிமென்ட் வளாகத்தில் போராட்டம் நடத்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பா.ஜ., எம்.பி.,க்கள்.
35 / 50
'கன்வர் யாத்திரை' செல்லும் பக்தர்கள், உ.பி., மாநிலம் வாரணாசியில் உள்ள கங்கை நதியில் புனித நீராடினர்.
36 / 50
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் பரபரப்பான சூழ்நிலையில் பார்லி. வளாகத்திற்குள் சுற்றித்திரிந்த பூனையிடம் விளையாடி மகிழும் திரிணாமுல் காங். எம்.பி., பாரசென் பானர்ஜி. இடம்: புதுடில்லி.
37 / 50
டில்லியில் நடந்த ராணுவ வெடிமருந்துகள் கருத்தரங்கில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கிருந்த துப்பாக்கியை பார்வையிட்டார்.
38 / 50
உ.பி.,யின் ஆக்ராவில் பலத்த மழை பெய்தது. யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை, கொட்டும் மழையிலும், பலர் குடை பிடித்தபடி ரசித்தனர்.
39 / 50
காங்., இடைக்கால தலைவர் சோனியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து டில்லியில் ராகுல் எம்.பி., தர்ணா போராட்டம் நடத்தினார் .
40 / 50
இந்திய ஜனாதிபதியாக பதவியேற்ற திரவுபதி முர்முவுக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.
41 / 50
இந்திய திருநாட்டின் 15 வது ஜனாதிபதியாக பதவியேற்ற திரவுபதி முர்மு பார்லி., மைய வளாகத்தில் உரையாற்றினார் .
42 / 50
சிரவண மாதம் எனும் ஆவணி மாத பிறப்பை வரவேற்கும் விதமாக நடந்த விழாவில், பாரம்பரிய உடையில் வந்திருந்த இளம்பெண்கள், 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். இடம்: ஜபல்பூர், ம.பி.,
43 / 50
அமெரிக்காவில் நடந்த உலக தடகள ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ்சோப்ரா வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
44 / 50
வட மாநிலங்களில், சிரவண மாதத்தையொட்டி, சிவன் கோவில்களில் அபிஷேகம் செய்வதற்காக, கங்கை நதியில் இருந்து புனித நீரை எடுத்து செல்வது கன்வர் யாத்திரை என அழைக்கப்படுகிறது. டில்லியில் நடந்த யாத்திரையில், புனித நீர் எடுத்து சென்ற ஹிந்துக்கள் மீது மலர் துாவி வரவேற்ற முஸ்லிம்கள்.
45 / 50
புதிய ஜனாதிபதியாக திரவுபதி முர்மு தேர்வு செய்யப்பட்டதை கொண்டாடும் அவரது சொந்த மாநிலம் ஒடிசா வாழ் ராய்ரங்பூர் கிராம கலைஞர்கள்.
46 / 50
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற திரவுபதி முர்முவுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி. இடம்: டில்லி.
47 / 50
ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்மு முன்னிலை பெற்றதை அறிந்த உடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள். இடம்: ஒடிசாவின் ராய்ரங்கபூர்.(திரவுபதி முர்மு சொந்த ஊர்).
48 / 50
காங். மூத்த தலைவர் சோனியா அமலாக்கத்துறை முன் இன்று ஆஜராவதையொட்டி டில்லி காங்., தலைமை அலுவலகம் முன்பாக காங்., சேவாதள தொண்டர்கள் குவிந்தனர்.
49 / 50
அடுத்த மாதம் 15ல், நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், குஜராத்தின் சூரத் நகரில் உள்ள ஜவுளி உற்பத்தி தொழிற்சாலையில், மூவர்ண கொடி தயாரிப்பு பணி மும்முரமாக நடக்கிறது.
50 / 50
தாய்லாந்தில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுப்பி வைப்பதற்காக மும்பையில் விநாயகர் சிலை தயாராகி வருகிறது. இறுதிக்கட்ட பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள கலைஞர்.
Advertisement