புகைப்பட ஆல்பம்:

படம் தரும் பாடம்
1 / 50
சுதந்திர தின 75வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள சட்டசபை வளாகத்தில், பள்ளி மாணவியர் தேசியக் கொடி ஏந்தியபடி சாகசம் செய்தனர்.
2 / 50
திருமலை திருப்பதி பிரம்மோற்ஸவ விழாவில் மலையப்ப சுவாமி வீதி உலா நடந்தது.
3 / 50
துர்கா பூஜையையொட்டி, மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் செய்யப்பட்ட துர்கா சிலை, சீல்டா என்ற இடத்திற்கு அனுப்பி வைப்பதற்காக, நாடியா ரயில் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டது.
4 / 50
மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள ஸ்ரீமகாலட்சுமி கோவில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நவராத்திரி பண்டிகை விழாவில் பங்கேற்ற கேரள கவர்னர் ஆரிப் முகமது கான்.
5 / 50
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, பாரம்பரிய 'கர்பா' நடனம் ஆடிய இளம்பெண்கள். இடம்: ஆமதாபாத், குஜராத்.
6 / 50
நவராத்திரி தினத்தை முன்னிட்டு, இரண்டாவது நாளாக வேண்டுதலை நிறை வேற்ற கோரி கோயிலில் தீபம் ஏற்றி வழிப்பட்ட இளைஞர். இடம்: ஜம்மு
7 / 50
டில்லி ஸ்ரீ ராம் பாரதிய கலா கேந்திராவில் நடந்த கலைநிகழ்ச்சி பலரை கவர்ந்தது.
8 / 50
உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு துவக்கி வைத்தார். இடம்: பெங்களூரு:
9 / 50
உலக சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற வீரர்கள். நகரம்: வாலாங்கோங், நாடு: ஆஸ்திரேலியா.
10 / 50
புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளிப் படை நிலையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 9 ராக்கெட், ஸ்டார்லிங்க் இணைய செயற்கைக்கோள்களை சுமந்து விண்ணில் பாய்ந்தது.
11 / 50
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் துர்கா பூஜைக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கின்றன. முற்றிலும் வாழை மரத்தை வைத்து அமைக்கப்பட்டுள்ள பந்தல் மற்றும் சிற்பங்கள்.
12 / 50
நவராத்திரி துவங்குவதை முன்னிட்டு துர்கா சிலை வடிவமைக்கும் பணி துரிதமாக நடக்கிறது. நகரம்: கோல்கட்டா.
13 / 50
பித்ரு பக்ஷத்தின் போது, பக்தர்கள் தங்கள் முந்தைய தலைமுறையினர் ஆன்மாக்களுக்கு தீபம் எற்றி வழிப்பட்டனர். இடம்: கயா, பீகார்
14 / 50
கேரளாவில் பி.எப்.ஐ., அமைப்பினர் நடத்திய பந்த் காரணமாக சில இடங்களில் அரசு பஸ்கள் மீது கல் வீசி தாக்கப்பட்டது.
15 / 50
இமயமலை தொடரில் உள்ள ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில், கனமழைக்குப் பின் நகரை மூடியிருந்த மேகங்கள்.
16 / 50
துர்கா பூஜைக்காக கடவுள் சிலைகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் சிற்ப கலைஞர். இடம்: காரத், மஹாராஷ்டிரா.
17 / 50
நவராத்திரி விழாவை முன்னிட்டு மூவர்ணத்தில் ஜொலித்த உமியாதம் கோயில். இடம்: சூரத்
18 / 50
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார்.
19 / 50
நவராத்திரி விழாவை முன்னிட்டு பாரம்பரிய 'கர்பா' நடன பயிற்சியில் ஈடுபட்ட பெண்கள். இடம்: ஆமதாபாத், குஜராத்
20 / 50
பிரிட்டன் அரசி 2ம் எலிசபெத் உடல் அடக்கம் செய்ய எடுத்து செல்லப்பட்ட போது. அருகில் மன்னர் சார்லஸ்.
21 / 50
பிரிட்டன் அரசி 2ம் எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு , மன்னர் சார்லஸ்சிடம் துக்கம் விசாரித்தார்.
22 / 50
கேரளா சென்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் திரிசூரில் உள்ள குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் தரிசனம் செய்தார்.
23 / 50
ஒற்றுமையை வலியுறுத்தி பாரத் ஜோடோ பாத யாத்திரை மேற்கொண்டுள்ள காங்., எம்.பி., ராகுல் கால்பந்து ஆடியபடி சென்றார். ஆலப்புழா, கேரளா மாநிலம். 1
24 / 50
நமீபியாவில் இருந்து இந்தியா கொண்டு வரப்பட்ட 8 சிறுத்தைகளை மத்திய பிரதேச மாநிலத்தில் விட்ட பிரதமர் மோடி காமிராவில் படமெடுத்தார். 2
25 / 50
உஸ்பெகிஸ்தானில் நடக்கும் ஷாங்காய் மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
26 / 50
உஸ்பெகிஸ்தானில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் போட்டோவுக்கு போஸ் கொடுத்த பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின் உள்ளிட்ட தலைவர்கள். இடம்: சாமர்கண்ட்.
27 / 50
பூடான் சென்ற மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கர் அந்நாட்டு மன்னர் ஜிக்மி கேசாரை சந்தித்து பேசினார்.
28 / 50
பிரிட்டன் ராணி 2ம் எலிசபெத் அஞ்சலி செலுத்தும் நிகழ்வை லைவ் டெலிகாஸ்ட்டில் பார்க்க லண்டனில் குவிந்திருக்கும் மக்கள். 1
29 / 50
வடகிழக்கு மாநிலங்களில் கொண்டாடப்படும் விஸ்வகர்மா பூஜை பண்டிகையையொட்டி , விஸ்வகர்மா சிலைகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் கலைஞன். இடம்: கவுகாத்தி, அசாம்.
30 / 50
டில்லி வந்துள்ள பூடான் அரசர் ஜிக்மி கேசர் நாம்ஜியேல் வாங்சுக், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
31 / 50
இந்தியா மற்றும் ஜப்பான் கடற்படைகள் கூட்டு பயிற்சியின்போது ஒத்திகையில் பங்கேற்ற நம் கடற்படை போர்க் கப்பல்கள். இடம்: விசாகப்பட்டினம்
32 / 50
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் குழந்தைகளுடன் செல்பி எடுத்து கொண்டார்.
33 / 50
போதை பொருள் இல்லாத இந்தியா திட்டத்தின் கீழ் புதுடில்லியில் நடந்த நிகழ்ச்சியில், உறுதிமொழி ஏற்ற தேசிய மாணவர் படை மாணவர்கள்.
34 / 50
சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறையாளர்கள் சிலிநாட்டின் சாண்டிகோ நகரில் போலீசார் வாகனத்திற்கு தீ வைத்தனர்.
35 / 50
பாகிஸ்தானில் பெரும் வெள்ளம் காரணமாக பாதித்தவர்கள் தங்களின் காலநடைச்செல்வங்களை அழைத்தபடி மாற்று இடத்திற்கு செல்கின்றனர் .
36 / 50
புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரி 50 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி உதய் உமேஷ் லலித் சிறப்பு மலரை வெளியிட்டார். சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ராம சுப்பிரமணியன், சுந்தரேஷ், கவர்னர் தமிழிசை, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி ,முதல்வர் ரங்கசாமி, சென்னை ஐகோர்ட் நீதிபதி ராஜா ,சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய். சரவணகுமார், எம்பி செல்வகணபதி உள்ளிட்டோர்.
37 / 50
புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரி 50 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி உதய் உமேஷ் லலித் சிறப்பு மலரை வெளியிட்டார். சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ராம சுப்பிரமணியன், சுந்தரேஷ், கவர்னர் தமிழிசை, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி ,முதல்வர் ரங்கசாமி, சென்னை ஐகோர்ட் நீதிபதி ராஜா ,சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய். சரவணகுமார், எம்பி செல்வகணபதி உள்ளிட்டோர்.
38 / 50
பிரிட்டன் அரசி 2ம் எலிசபெத் (செப்.8 ) காலமானார். அவரது பக்கிங்ஹாம் அரண்மனையில் பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
39 / 50
பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒடிசா கடற்கரையில் வரையப்பட்டுள்ள மணற்சிற்பம் பார்வையாளர்களை கவர்ந்தது. இடம்: புரி.
40 / 50
பாதயாத்திரை மேற்கொண்டுள்ள காங்., எம்.பி., ராகுல் செல்லும் கேரவன் வாகனங்களில் தங்குவதற்கு ஏ.சி. அறைகள் வசதி உள்ளது. 1
41 / 50
யுனைடெட்-ஏர்லைன்ஸ் விமான டாக்ஸி மின்சாரத்தில் இயங்கும் ரம்மியான காட்சி, பார்பவர்களை வியக்க வைக்கிறது.
42 / 50
அமெரிக்க கலிபோர்னியாவில் பற்றிய காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர்.
43 / 50
காங்கிரஸ் எம்.பி., ராகுல் பாரத் ஜோடோ 2வது நாள் பாத யாத்திரை அகத்தீஸ்வரத்தில் துவங்கியது.
44 / 50
ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள திரிக்கக்கரா வாமன சுவாமி கோவிலில், நேற்று நடந்த பூரம் ஊர்வலத்தில் அணிவகுத்து வந்த யானைகள்.
45 / 50
செவ்வானத்தின் அழகியலுக்கு இடையே லோயர் ஏரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் இடம்: போபால், மத்தியபிரதேசம்
46 / 50
பிரிட்டன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் டிரஸ், ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரலில் ராணி எலிசபெத்தை சந்தித்தார்.
47 / 50
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, பள்ளி ஒன்றில் கயிறு இழுக்கும் போட்டியில், ஆர்வமுடன் பங்கேற்ற மாணவியர். இடம்: ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர்.
48 / 50
ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், 45வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஆதரவாளர்களால் வரவேற்கப்பட்டார். இடம்: ஜெய்ப்பூர்
49 / 50
பழங்குடியின இளைஞர்கள் பாரம்பரிய விழாவை கொண்டாடினர். இடம்: ராஞ்சி, ஜார்க்கண்ட்
50 / 50
இந்தியா வந்துள்ள, வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு, விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இடம்: டில்லி
Advertisement