புகைப்பட ஆல்பம்:

படம் தரும் பாடம்
1 / 50
நாட்டின் எல்லை பாதுகாப்பில் வீரதீரத்தடனும், தியாக உணர்வுடனும் பணியாற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களை அங்கீகரிக்கும் விதமாக வரும் டிச.,1ல் எழுச்சி தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான அணிவகுப்பு பயிற்சி ஒத்திகையில் ஈடுபட்ட வீரர்கள். இடம்: அமிர்தசரஸ், பஞ்சாப்
2 / 50
ஜனாதிபதி திரவுபதி முர்மு, இன்று(டிச.,05) திருப்பதி கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு, திருப்பதி அறங்காவலர் குழு தலைவர் வரவேற்பு அளித்தார்.
3 / 50
குஜராத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபன் ஓட்டளித்தார். உடன் பிரதமரின் சகோதரர் பங்கஜ்மோடி.
4 / 50
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்திய கடற்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சி.
5 / 50
இந்திய கடற்படை தினத்தை யொட்டி, டில்லியில் அமைந்துள்ள தேசிய போர் நினைவிடத்தில் தியாகிகளுக்கு கடற்படை தலைவர் ஆர்.ஹரிகுமார், விமானப்படை தளபதி வி.ஆர்.சௌத்ரி, துணைராணுவ தளபதி பி.எஸ்.ராஜு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
6 / 50
கலாச்சார நடன திருவிழா 2022 ஒடிசாவில் துவங்கியது. இதில் ஒடிசி கலைஞர்களின் நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது. இடம்: புரி, ஒடிசா.
7 / 50
மான்களுக்கு இரை வழங்கும் இடம்: பிகானூர், ராஜஸ்தான்.
8 / 50
ஹிமாச்சல பிரதேசத்தில் பல்கலை இளைஞர் திருவிழா கோலாகலமாக துவங்கியது. இதில் பங்கேற்ற மாணவியர் சிலர், பாரம்பரிய உடை மற்றும் நகைகள் அணிந்து வந்து அசத்தினர்.
9 / 50
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த கோயில் திருவிழாவில் பங்கேற்றவர்கள் பஜனை பாடினர்.
10 / 50
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி முகத்தில் வர்ணம் பூசி விழிப்புணர்வு பேரணி நடத்திய பள்ளி மாணவிகள் . இடம்: ஜலாந்தர், பஞ்சாப்.
11 / 50
குஜராத் சட்டசபை தேர்தலில் மக்கள் ஆர்வமாக ஓட்டளித்து வருகின்றனர். முதியவர் ஒருவருக்கு உதவி செய்யும் பாதுகாப்பு படையினர்.
12 / 50
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த கலாசாரவிழாவில் பங்கேற்ற கலைஞரின் நடனம் அனைவரையும் கவர்ந்தது.
13 / 50
அதிகாலை பனிமூட்டத்திற்கு இடையே, உற்சாகமாக உடற்பயிற்சியில் ஈடுபட்ட இளைஞர்கள். இடம்: ஜம்மு.
14 / 50
மாலைப்பொழுதில் தாஜ்மஹால் பின்னால் மறைந்து ஒளி வீசும் செங்கதிரோன். . இடம்: ஆக்ரா.
15 / 50
ம.பி.,யில் 'பாரத் ஜோடோ' யாத்திரை மேற்கொண்டுள்ள காங்., எம்.பி., ராகுல், உஜ்ஜயினியில் உள்ள மகாகாளேஸ்வரர் கோயிலில் வழிபாடு நடத்தினார்.
16 / 50
இந்திய - அமெரிக்க ராணுவ கூட்டுப் பயிற்சியின் போது, ‛அர்ஜூன்' என்ற பருந்துக்கு, எதிரி நாட்டு ட்ரோன்களை கண்டறிந்து துவம்சம் செய்யும் பயிற்சி அளிக்கப்பட்டது. இடம்: அவுலி, உத்தரகண்ட்.
17 / 50
அதிகாலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டாலும் மாட்டு வண்டியுடன் தன் நிலத்துக்கு சென்ற விவசாயி. இடம்: அமிர்தசரஸ், பஞ்சாப்.
18 / 50
அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ள ஆர்எஸ்எஸ் தொண்டர்கள். இடம்: நாக்பூர்.
19 / 50
குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டத்திற்கு பா.ஜ.,வின் காவித்தொப்பி அணிந்து வந்திருந்த குழந்தை பார்வையாளர்களை கவர்ந்தது. இடம்: பாலிடானா
20 / 50
கங்கை நதி நீர் திட்ட புதிய அணை பீகாரில் திறந்து வைக்கப்பட்டது. அதன் அழகிய தோற்றம்
21 / 50
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற் கோயில் வளாகத்தில், சீக்கியர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
22 / 50
மும்பை பயங்கரவாத தாக்குதல் 14 வது ஆண்டு நினைவு நாளில் மும்பை ரயில்வே நிலையத்தில் போலீசார் மற்றும் துப்பறியும் நாய் தரப்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
23 / 50
ஜம்மு-காஷ்மீரில் கடும் குளிர்காலம் துவங்கிவிட்டது. எலும்பு வரை ஊடுருவும் பனியில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள நெருப்பு மூட்டி குளிர் காயும் கிராமத்தினர். இடம்: ஜம்மு.
24 / 50
வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலில் தரிசிக்க வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்.
25 / 50
உ.பி., மாநிலம் கான்பூரில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில், படிப்பை முடித்து பட்டம் பெற்ற மகிழ்ச்சியில், துள்ளி குதித்த மாணவியர்.
26 / 50
மேற்கு வங்க கவர்னராக ஆனந்தபோஸ் பதவியேற்று கொண்டார். அவருக்கு கோல்கட்டா ஐகோர்ட் தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இடம்: கோல்கட்டா.
27 / 50
கேரள மாநிலம், கொச்சி அருகேயுள்ள ஸ்ரீ பூர்ணத்ராயீசர் கோவிலின் பிரசித்தி பெற்ற, 'விருச்சிகோற்சவம்' நிகழ்வு நடந்தது. இதில், தங்ககவசம் உள்ளிட்ட அணிகலன்கள் அணிவிக்கப்பட்ட யானைகளின் உற்சவத்தை பார்ப்பதற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
28 / 50
கேரள மாநிலம கொச்சியில் நடந்த கலாசார விழாவில் கதகளி நடனம் ஆடிய கலைஞர்கள்.
29 / 50
கத்தாரில் துவங்கியுள்ள உலக கால்பந்து போட்டியை வரவேற்கும் விதமாக மணற்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இடம்: புரி, ஒடிசா.
30 / 50
அறுவடை செய்யப்பட்ட முள்ளங்கியை தண்ணீரில் சுத்தம் செய்து, விற்பனைக்கு அனுப்பும் பணியில் ஈடுப்பட்ட விவசாயி. இடம்: ஜம்மு
31 / 50
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்தநாளை முன்னிட்டு டில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்., தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் சோனியா மரியாதை செலுத்தினர்.
32 / 50
அறுவடை செய்த நெற்பயிரை கடவுளுக்கும் படைக்கும் ‛ நபனா உற்சவம்' பண்டிகை கொண்டாட, தங்கள் நிலத்தில் அறுவடையான நெற்பயிருடன் வீடு திரும்பிய விவசாயிகள். இடம்: மேற்கு வங்கம், தெற்கு தினாஜ்புர் மாவட்டம்
33 / 50
சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
34 / 50
ஒற்றுமையை வலியுறுத்தி பாரத் ஜூடோ யாத்திரை மேற்கொண்டுள்ள காங்., எம்.பி., ராகுல் மஹாராஷ்ட்டிராவில் மாறுவேடம் அணிந்து வந்த மாணவிகளுடன் படம் எடுத்து கொண்டார்.
35 / 50
கேரள மாநிலம் பாலக்காட்டில் நடந்த தேரோட்ட விழாவில் பங்கேற்ற மக்கள் கூட்டத்தினர்.
36 / 50
இந்தோனேஷியாவின் பாலி தீவில் நடக்கும் ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் 17 வது உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியும், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசித்தனர்.
37 / 50
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்த நாளை முன்னிட்டு பார்லி., வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நாட்டுப்புறக் கலைஞர்கள் பராம்பரிய நடனம் ஆடினர்.
38 / 50
இந்தோனேஷியாவின் பாலி தீவில் நடக்கும் ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் 17 வது உச்சி மாநாட்டிற்கு இடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி.
39 / 50
கங்கை நதியில் காலை, சூரியன் உதிக்கும் நேரத்தில், பறவைகளுக்கு உணவளித்து மகிழ்ந்த இளைஞர். இடம்: புதுடில்லி
40 / 50
கம்போடியா சென்றுள்ள துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், அவரது மனைவி சுதேஷ் தங்கர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர், அங்கர் வாட் கோவிலை பார்வையிட்டனர்.
41 / 50
கிருஷ்ணரை வழிபடும் ‛ராஸ்' பண்டிகை மேற்கு வங்காளத்தில் கொண்டாடப்படுகிறது. நாடியா நகரில் நடந்த விழாவில் உ.பி., மாநிலம் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலின் மாதிரி வடிவம் வண்ண விளக்குகளால் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த ரம்மியான காட்சி.
42 / 50
ஹிமாசல்பிரதேசம் சட்டசபை தேர்தலில் ஓட்டளித்த மத்திய இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் மற்றும் அவரது குடும்பத்தினர்.
43 / 50
இலையுதிர் காலத்தில், மரங்கள் தோற்றத்தை தோட்டத்திற்கு சென்று, பார்வையிட்ட இளைஞர்கள். இடம்: ஜம்மு காஷ்மீர் ,ஸ்ரீநகர்.
44 / 50
மைசூரு - சென்னை செல்லும் வந்தேபாரத் ரயிலை பெங்களூருவில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
45 / 50
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை சுற்றி பார்த்த புத்த மத துறவிகள். இடம்: ஆக்ரா, உ.பி.,
46 / 50
ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள சுவாமி ஜெகன்நாதர் கோயிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, வழிபாடு செய்தார்.
47 / 50
பனிப்பொழிவில் சிக்கி நிற்கும் கார். இடம்: ஹிமாசல்பிரதேசம் .
48 / 50
ஹிமாச்சல பிரதேசத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், கல்கா - சிம்லா நகரங்களுக்கு இடையே கட்டமைக்கப்பட்ட உலகப் பாரம்பரிய சின்னமாக திகழும் ரயில் பாதையில், பழைமை வாய்ந்த நீராவி இஞ்சின் ரயில் இயக்கப்பட்டது. சிம்லாவுக்கு வந்த ரயிலை மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
49 / 50
ஹிமாச்சல பிரதேச மாநிலம், சம்பி பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு நினைவுப்பரிசு வழங்கிய பா.ஜ., நிர்வாகிகள்.
50 / 50
சீக்கிய மத தலைவரான குருநானக்கின் பிறந்தநாளையொட்டி, அமிர்தசரஸ் நகரில் அமைந்துள்ள பொற்கோவில், நேற்று வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. பொற்கோவில் குளத்தில் விளக்கேற்றிய பெண்.
Advertisement