புகைப்பட ஆல்பம்:

படம் தரும் பாடம்
1 / 50
குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்த கலச யாத்திரையில் உற்சாகத்துடன் பங்கேற்ற பெண்கள், சிறுமியர், முளைப்பாரி எடுத்து வந்து வழிபட்டனர்.
2 / 50
கேரளாவில் சிறப்பாக கொண்டாடப்படும் கலியூத்து திருவிழாவில் திருவனந்தபுரம் வெள்ளயாணிதேவி கோயில் சர்க்கரைபொங்கல் வைத்து வழிப்பட்டனர்.
3 / 50
மழையால் சேதமடைந்த, கோதுமை பயிரை ஆய்வு செய்யும், பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள். இடம்: பஞ்சாப் மாநிலம், ஜலந்தர்
4 / 50
ரமலான் நோன்பு துவங்கியவர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இடம்: தாஜ்மஹால் அருகே ஆக்ரா.
5 / 50
கேரள மாநிலம் இடுக்கியில் எஸ்டேட் பகுதியில் ஹாயாக உணவு வேட்டையில் ஈடுபட்டுள்ள காட்சி.
6 / 50
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய ராகுலுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சூரத் கோர்ட்டில் அவர் ஆஜரானார்.
7 / 50
மராத்தி புத்தாண்டையொட்டி கலாச்சார உடையணிந்து வாகன பேரணி நடத்தி மகிழ்ந்த இளம் பெண். இடம்: மும்பை.
8 / 50
புதுடில்லியில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் 6ஜி குறித்த கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். அருகில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சர்வதே தொலைத்தொடர்பு சங்க செயலாளர் டோரீன் போக்டன் மார்ட்டீன்.
9 / 50
இந்திய கடற்படைக்காக வடிவமைக்கப்பட்டுள்ள ‛ஐ.என்.எஸ்., ஆண்ட்ரோத்' என்ற நீர் மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பல் நாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது. இடம்: கோல்கட்டா, மேற்குவங்கம்.
10 / 50
பாழாய் போறது பசும் வயிற்றில் போகட்டும் என்பார்கள் ஆனால் பாலே வீணா போகுதே , பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எழுமலை ரோட்டில் மா.பாறைப்பட்டி என்ற இடத்தில் பாலை கொட்டி போராட்டம் நடத்தினர். 1
11 / 50
இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் பியூமோ கிஷிதா, பிரதமர் மோடியுடன் டில்லி புத்தா ஜெயந்த் பார்க்கில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.
12 / 50
குருவிகள் தாய் பாசத்துடன் கொஞ்சும் காட்சி கிளிக் ஆன இடம் ஹிமாசல்பிரதேசம்.
13 / 50
உ.பி., மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை முதல்வர் யோகி ஆதித்யநாத் பார்வையிட்டார்.
14 / 50
கன்னியாகுமரிக்கு வந்த ஜனாதிபதி திரவுபதிமுர்மு, விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள பாரதமாதா சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
15 / 50
அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் சமீபத்தில் தேனியில் காலமானார். சென்னையில் உள்ள பன்னீர்செல்வம் வீட்டிற்கு, தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் ஆர்.லட்சுமிபதி (நடுவில் ) மற்றும் தினமலர் இயக்குனர் எல்.ஆதிமூலம் ஆகியோர் நேரில் சென்று தாயார் மறைவிற்கு ஆறுதல் தெரிவித்தனர்.
16 / 50
புதுடில்லியில் பிரதமர் மோடியை சந்தித்த போது நினைவுப்பரிசு வழங்கிய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்.
17 / 50
கொச்சி கடற்படை தளத்திற்கு சென்ற ஜனாதிபதி திரவுபதிமுர்மு , ஐ.என்.எஸ்., விக்கிராந்த் போர்க்கப்பல் முன்பு நின்று படம் எடுத்து கொண்டார்.
18 / 50
உ.பி., மாநிலம் பிருந்தாவனில், கடவுள் ரங்கநாதர் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்.
19 / 50
உத்தர பிரதேசத்தின், பிரயாக்ராஜில், பூசணி அறுவடை களைகட்டி உள்ளது. விளைந்து குவிந்துள்ள பூசணிக்காய்களை ஒட்டகத்தில் ஏற்றும் விவசாயி.
20 / 50
இந்திய விமானப்படையில், விளையாட்டில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டிய விமானப்படை தளபதி விஆர் சவுத்ரி.
21 / 50
ராணுவம் குறித்து பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், 'உங்கள் ராணுவத்தை அறிந்து கொள்ளுங்கள்' என்ற நிகழ்ச்சியில் , தானியங்கி துப்பாக்கி செயல்படும் விதம் குறித்து அறிந்து கொண்ட சிறுவன். இடம்: ஷோகத் அலி ஸ்டேடியம், பாராமுல்லா மாவட்டம், காஷ்மீர்.
22 / 50
மஹாராஷ்ட்டிரா மாநிலம் நாக்பூர் அருகே வனப்பகுதியில் வண்ணத்துப்பூச்சிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
23 / 50
ஜம்மு - காஷ்மீரில் வசந்த காலம் பிறந்துவிட்டதை உணர்த்தும் விதமாக, பாதாம் மரங்களில் பூத்துக் குலுங்கிய வண்ண மலர்களை ஆவலுடன் வருடிப் பார்த்து மகிழ்ந்து சிறுமி. இடம்: புல்வாமா, தெற்கு காஷ்மீர்.
24 / 50
லாஸ் ஏஞ்சல்சில் நடந்த ஆஸ்கர்' விருது வழங்கும் விழாவில் தி எலிபென்ட் விஸ்பர்ஸ்' என்ற ஆவண படத்தின் ஊட்டியை சேர்ந்த பெண் இயக்குனர் கார்த்திகி கன்சால்வஸ் விருது பெற்றார். அடுத்த படம் நாட்டு, நாட்டு என்ற பாடலின் இசையமைப்பாளர் கீரவாணி.
25 / 50
ஆமதாபாத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் கோஹ்லி சதமடித்தார். ஆஸி., கேமரூன் ( இடது படத்தில்) பந்து வீசகிறார்.
26 / 50
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் நடந்த பெண்கள் விளையாட்டு போட்டியில், ஜாலியாக பங்கேற்ற பெண்கள்.
27 / 50
ஜனாதிபதி திரவுபதி முர்மு வீட்டிற்கு சென்ற பிரதமர் மோடி சந்தித்து நாட்டின் தற்போது நிலவும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு சூழல் குறித்து விவாதித்தனர்.
28 / 50
ஜம்முவில் நடந்த 2023ம் ஆண்டு கால்நடை கண்காட்சியில் கம்பீரமாக நடனம் ஆடும் குதிரைகள்.
29 / 50
இந்தியா வந்துள்ள அமெரிக்க வர்த்தக துறை அமைச்சர் கினாரெய்மோண்டா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.
30 / 50
பஞ்சாபின் அனந்தபுர் சாகிப்பில், இரண்டு குதிரைகளில் பயணித்து சாகசம் செய்த சீக்கியர்.
31 / 50
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த போட்டியை பிரதமர் மோடியுடன் இணைந்து ஜாலியாக ஆஸ்திரேலிய பிரதமர் கண்டு ரசித்தார்.
32 / 50
ஹோலி பண்டிகையை நடனமாடி உற்சாகமாக கொண்டாடிய சிஆர்பிஎப் வீரர்கள். இடம்: ஸ்ரீநகர், காஷ்மீர்.
33 / 50
வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை இன்று வட மாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயிலின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்த இளைஞர்கள். இடம்: பாட்னா, பீஹார்.
34 / 50
நாகாலாந்து மாநிலம் கோஹிமாவில் முதல்வர் பதவியேற்பு விழா நடந்தது. அதில்மாநில முதல்வராக நெய்பு ரியோவுக்கு கவர்னர் இல.கணேசன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
35 / 50
கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்
36 / 50
ஹோலி கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணங்களில் மிரட்டுகிறார் இந்த மங்கை. இடம்: கோல்கட்டா.
37 / 50
மத்திய பிரதேச மாநிலத்தில் ஹோலி பண்டிகையை ஜாலியாக கொண்டாடி மகிழும் பெண்கள்.
38 / 50
திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி பெருந்திருவிழா தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது1
39 / 50
குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதிஅம்மன் கோயில் மாசிகொடை விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றனர்.
40 / 50
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சர்க்கரதேவி கோயிலில் நடந்த கலியூட்டு திருவிழாவில் பாரம்பரிய கலாசார கலைநிகழ்ச்சி நடத்தினர்.
41 / 50
கர்நாடகாவில் பா.ஜ., எம்எல்ஏ., மகன் லஞ்சம் பெற்றதை கண்டித்து காங்கிரஸ் கடசியின் மூத்த தலைவர் முன்னாள் முதல்வர் சித்தராமையா போராட்டம் நடத்தினார்.
42 / 50
பங்குனி மாதத்தின் வளர்பிறை தினமான ரங்பாரி ஏகாதசியையொட்டி மயானத்தில் உள்ள சிதையிலிருந்து சாம்பலை எடுத்து வழிபடும் சிவபக்தர்கள்.இடம்: வாரணாசி, உத்தர பிரதேசம்
43 / 50
லண்டன் சென்ற காங்., எம்.பி., ராகுல் கேம்பிரிட்ஜ் பல்கலை., மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
44 / 50
இந்தியா வந்த இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனிக்கு சிறப்பு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி வரவேற்றார்.
45 / 50
உத்திரபிரதேசம் நந்தகான் பகுதியில் ஹோ லி கொண்டாட்டத்தில் மக்கள்.
46 / 50
நாடு முழுவதும் வரும் 8ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், மேற்குவங்க மாநிலம் நாடியாவில் முன்னதாகவே களை கட்டத் துவங்கியுள்ளது. இந்த கொண்டாட்டத்தில் வண்ணப் பொடிகளை பூசி மகிழ்ந்த பெண்கள்.
47 / 50
வெங்காய விலை உயர்வை கண்டித்து மஹாராஷ்டிராவில் எதிர்கட்சி எம்எல்ஏ.,க்கள் வெங்காய மாலை அணிந்து வந்தனர்.
48 / 50
கர்நாடக மாநிலம் பெலாகவிக்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்க கூடிய மக்கள்.
49 / 50
வயலில் அறுவடை செய்த உருளைக்கிழங்குகளை மார்கெட் நோக்கி கொண்டு செல்லும் விவசாயிகள்: இடம்: உத்திரபிரதேசம்.
50 / 50
தைவானில் தைபேயில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நடந்த 'செல்லப்பிராணிகளுக்கு தேவையான பொருட்களின் விற்பனை கண்காட்சியில்', தங்கள் செல்லப்பிராணிகளுக்கான பொருட்களை வாங்கி மகிழ்ந்த மக்கள்.
Advertisement