வானத்தில் மின்னல் ஜாலம் காட்டும் இடம் : புதுடில்லி.
2 / 50
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 2000க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான மணல் சிற்பத்தை உருவாக்கிய மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக். இடம்: புரி கடற்கரை, ஒடிசா.
3 / 50
ஒடிசாவில் 3 ரயில்கள் மோதிக்கொண்டதில் சீர்குலைந்த ரயில் பாதைகள் சீரமைக்கப்படுகின்றன.
4 / 50
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் மோதியதில் ரயில் பெட்டிகள் சிதறுண்டு கிடக்கிறது.
5 / 50
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. அதில் சிக்கிய பயணியரை மீட்கும் பணி நடைபெறுகிறது.
6 / 50
நாக்பூரில் நடந்த ஆர்எஸ்எஸ்., தொண்டர்கள் பங்கேற்ற பேரணியை மேடையில் இருந்தவாறு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பார்வையிட்டார்.
7 / 50
காகம் ஒன்று தாகத்துடன் நீர் பருகும் இடம்: புதுடில்லி.
8 / 50
தலைநகர் டில்லியில் பெய்த மழையில், நனைந்தபடி செல்லும் இளம்பெண்கள்.
9 / 50
கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரின் சுராசந்த்பூர் பகுதியில் கொடி அணிவகுப்பு நடத்திய ராணுவ வீரர்கள்.
10 / 50
பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் பைனலில், குஜராத்தை வீழ்த்திய சென்னை அணி, 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. கோப்பையுடன் சென்னை அணி வீரர்கள். இடம்: நரேந்திர மோடி ஸ்டேடியம், ஆமதாபாத்.
11 / 50
ஸ்ரீ ஹரிகோட்டா ராக்கெட் தளத்தில் இருந்து விண்ணுக்கு சென்ற ஜி.எஸ்.எல்.வி., எப்.12 ராக்கெட்டின் மாதிரியை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் காட்டிய ( இடது ) இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகள் .
12 / 50
புதிய பார்லிமென்ட்டின் சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ள செங்கோல் உடன் (இடமிருந்து வலமாக) ரவீந்திரநாத் எம்.பி. மத்திய அமைச்சர் எல்.முருகன், தினமலர் வெளியீட்டாளர் இல.ஆதிமூலம், தினத்தந்தி குழும தலைவர் சி. பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மற்றும் பலர் உள்ளனர்.
13 / 50
டில்லியில் நடந்த பார்லி., திறப்பு விழாவில் சிருங்கேரி மட வேத பண்டிட்கள் ஹோமம் மற்றும் வாஸ்து பூஜை நடத்தினர்.
14 / 50
புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவில், செங்கோல் முன், தரையில் விழுந்து பிரதமர் மோடி தலை வணங்கினார். இடம்: புதுடில்லி
15 / 50
ஜில்லான மலைப்பகுதியில் ஒரு கூலான சைக்கிள் ரேஸ். நாடு : இத்தாலி.
16 / 50
வயலில் இருந்து விவசாயிகள் முலாம்பழங்களை விற்பனை செய்ய எடுத்து செல்கின்றனர். இடம்: புலந்த்ஷாஹர், உ.பி
17 / 50
டில்லியில் புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் செங்கோல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க உள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஹிந்து சமய ஆதினங்கள்.
18 / 50
சந்தையில் விற்பனைக்கு வந்த வெங்காயத்தை தரம் பிரிக்கும் ஊழியர்கள். இடம்: நாக்பூர், மஹாராஷ்டிரா
19 / 50
தையல் தொழிலாளியின் மகன் சூரஜ் திவாரி, இரண்டு கால்கள், ஒரு கையை இழந்த நிலையிலும், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டதால், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். அவரது பெற்றோர் மற்றும் கிராமத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இடம்: உ.பி
20 / 50
கோல்கட்டாவில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வாடிக்கையாளர்கள் கொடுத்த ரூ.2000 தாள்களுடன் சோகமாக நிற்கும் பங்க் உரிமையாளர்.
21 / 50
சாலையில் டிரக்கும் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 7 பேர் பலியாகினர். 13 பேர் காயம். இடம்: மஹாராஷ்டிரா
22 / 50
கட்சி நிர்வாகிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை கண்டித்து மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
23 / 50
மேகங்களின் ஆர்ப்பரிப்பு: அணை நிரம்பி வழிவது போல, மேகங்கள் மலை முகடுகளில் வழிந்து செல்ல பார்க்கின்றனவோ? இடம்: மூணாறு அருகே பள்ளிவாசல் எஸ்டேட் பகுதி மலை, கேரளா.
24 / 50
ஜி -20 மாநாடு நடக்க உள்ள ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் படை வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
25 / 50
ஜப்பானில் நடந்த ஜி -7 மாநாட்டில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.
26 / 50
கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் பங்கேற்றனர்.
27 / 50
காஷ்மீரில் ஜி20 மாநாடு நடைபெறவிருப்பதையொட்டி முகத்தில் மூவர்ண கொடியை அலங்காரமிட்டு மகிழ்ந்த கல்லூரி மாணவிகள். இடம்: ஜம்மு.
28 / 50
உச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த கே.வி.விஸ்வநாதன் இன்று (மே 19) பதவியேற்றார். அவருக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
29 / 50
சர்வதேச அருங்காட்சியகம் தினம் கடைபிடிக்கப்பட்டதையொட்டி ஹிமாச்சல் பிரதேசம் சிம்லாவில் ஏற்பாடு செய்திருந்த கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற நாட்டுப்புற கலைஞர்கள்.
30 / 50
கர்நாடக முதல்வராக காங்கிரஸ் மேலிடத்தால் சித்தராமையா அறிவிக்கப்பட்டதை அவரது ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.
31 / 50
மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், பாஜ., தேசிய தலைவர் நட்டா சாமி தரிசனம் செய்தார். அப்போது கோவில் நிர்வாகம் சார்பில், நட்டாவுக்கு பொன்னாடை அணிவித்து, விநாயகர் போட்டோ வழங்கப்பட்டது.
32 / 50
ஜம்மு - காஷ்மீரில், 'ஜி - 20' அமைப்பின் கூட்டம் நடக்கவுள்ளதை தொடர்ந்து அங்கு கடற்படையின், 'மார்கோஸ்' எனப்படும், 'கடற்படை கமாண்டோ'க்கள், ஸ்ரீநகரில் தால் ஏரியில், ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
33 / 50
மீன்களுக்கு உணவு கொடுத்து மகிழ்ந்த அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி. இடம்: ஜமா மசூதி, மும்பை
34 / 50
வங்கக் கடலில் உருவான 'மோக்கா' புயல், அதி தீவிரமாக மாறி, ஆசிய நாடுகளான மியான்மர் மற்றும் வங்கதேசம் இடையே கரையை கடந்த சேதமான வீடு. இடம்:மேற்கு வங்கம்
35 / 50
இந்தியா வந்துள்ள அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, ஆமதாபாத்தில் உள்ள சபர்மதி காந்தி ஆசிரமம் சென்று பார்வையிட்டார். அப்போது அங்குள்ள ராட்டையை சுற்றி நூல் நூட்றார்.
36 / 50
கருவில் சுமந்து, தோளில் சுமந்து எத்தனை பாரம் இருந்தாலும், தாய்க்கு சுமையே சுகம். இன்று அன்னையர் தினம். இடம்: மேற்கு வங்கம்
37 / 50
வளர்ப்பு செல்லப்பிராணி இடம் தனது அன்பு மற்றும் பாசத்தையும் வெளிப்படுத்தும் சிறுவன். கிளிக் ஆன இடம்: பதர்வா, ஜம்மு காஷ்மீர்.
38 / 50
சி.பி.எஸ்.இ பிளஸ் 2 ரிசல்ட் வெளியான நிலையில், தேர்ச்சி அடைந்த சந்தோஷத்தை நண்பர்களுடன் கொண்டாடிய மாணவர்கள். இடம்: அமிர்தசரஸ்
39 / 50
இயற்கை முறையில், விவசாயம் செய்த நெல் கதிர்களை, அறுவடை செய்ய, விவசாயிகள் மாட்டு வண்டியில் ஏற்றி சென்றனர். இடம்: நாடியா, மேற்கு வங்கம்.
40 / 50
ராஜஸ்தான் சென்ற பிரதமர் மோடி, நாத்வாரா என்ற இடத்தில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் வழிபாடு நடத்தினார். அவரை, வரவேற்ற கோயில் நிர்வாகிகள்.
41 / 50
மேற்குவங்கத்தில் கவிஞர் ரபீந்திரநாத் தாகூரின் பிறந்த நாளையொட்டி நடந்த கலைநிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது. இடம்: கோல்கட்டா.
42 / 50
மத்திய பிரதேசத்தில் கர்கோனில் பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
43 / 50
மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக போலீசாரின் தடுப்பான்களை உடைத்தும், வீசி எறிந்து போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள். இடம்; ஜந்தர் மந்தர், டில்லி.
44 / 50
கேரளாவில் படகு கவிழ்ந்ததில் 21 பேர் பலியாகினர்.
45 / 50
கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க மண்பானைகளில் வைக்கப்பட்டுள்ள, குளிர்ந்த நீரை அருந்துங்கள். விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள வண்ண..வண்ண..மண்பானைகள். இடம்: மேற்கு வங்கம்
46 / 50
பெங்களூருவில் பிரதமர் மோடி பங்கேற்ற மெகா பேரணியில் ஹனுமன் போன்ற வேடங்களில் வந்து பலர் அசத்தினர்.
47 / 50
கர்நாடகா பெங்களூரில் உள்ள மஹாபோதி சொசைட்டில் நடந்த புத்த ஜெயந்தியில், இளம் துறவிகளுக்கு பக்தர்கள் உணவழித்து வழிபட்டனர்.
48 / 50
" கிளிக் " ஆன இடம் மேற்கு வங்கம், நாடியா மாவட்டம்
49 / 50
மதுரையில் பச்சைப்பட்டு உடுத்தி, வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளினார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
50 / 50
கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் புதுடில்லியில் கடமை பாதையில் நேற்று நிலவிய பனி மூட்டம்.