காகம் ஒன்று தாகத்துடன் நீர் பருகும் இடம்: புதுடில்லி.
2 / 50
புதிய பார்லிமென்ட் கட்டடத்தை பார்வையிட வந்த பாலிவுட் நடிகைகள் பார்லி.,வளாகம்முன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். இடம்: டில்லி.
3 / 50
மத்திய பிரதேச மாநிலம், கந்த்வா மாவட்டம் ஓம்காரேஸ்வரர் நகரில், நர்மதை நதிக்கரையில் நிறுவப்பட்ட, 108 அடி உயர ஆதிசங்கரர் சிலை திறக்கப்பட்டது.
4 / 50
திருப்பதி பிரம்மோற்சவத்தின் 4ம் நாளான இன்று(செப்.,21) மலையப்பசுவாமி கல்ப விருட்ச வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்தார்.
5 / 50
விநாயகர் சதுர்த்திக்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் குளத்தில் விசர்ஜனம் செய்யப்படுகிறது. இடம்: பெங்களூரு , உல்சூர் குளம்.
6 / 50
மஹாராஷ்டிராவின் புனேவில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டது. அங்குள்ள விநாயகர் கோவிலில் ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் திரண்டு வழிபாடு செய்தனர்.
7 / 50
திருப்பதி பிரம்மோற்சவம் 3ம் நாளில் சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
8 / 50
விநாயகர் சதுர்த்தியையொட்டி, உலக அமைதிக்காக, , 1,000 இரும்பு பொருட்களால் ஆன, பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கால் உருவாக்கப்பட்ட விநாயகரின் மணல் சிற்பம். இடம்: ஒடிசா ,மாநிலம் புரி கடற்கரை
9 / 50
திருப்பதி பிரம்மோற்சவம் 2ம் நாளில் சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா வந்து அருள்பாலித்தார்.
10 / 50
வத்தல் குகைக்குள் செல்பி எடுக்கும் பெண்கள். இடம்: சீயோல், தென்கொரியா.
11 / 50
ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் மழை பெய்ததையடுத்து, நகரை போர்வைபோல் சூழ்ந்துள்ள மேகங்கள்.
12 / 50
வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் மீட்பு படையினர். இடம்: நர்மதா மாவட்டம், குஜராத்
13 / 50
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தாமரை, யானை வாகனத்தில் விநாயகர் காட்சியளித்தார். இடம்: சிவகங்கை
14 / 50
ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வேகத்தில் 50 ரன்களுக்கு இலங்கை அணி சுருண்டது. எளிய இலக்கை துரத்திய இந்தியஅணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 'சாம்பியன்ஸ்' பட்டத்தை தட்டிச் சென்றது. வெற்றி கோப்பையுடன் இந்திய அணி வீரர்கள். இடம்: கொழும்பு இலங்கை
15 / 50
விநாயகர் சிலைக்கு வர்ணம் தீட்டும் தொழிலாளி. இடம்: போபால், மத்திய பிரதேசம்
16 / 50
ஹிந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில், சென்னை பூக்கடை, சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து திருப்பதி திருக்குடை ஊர்வலம் துவங்கியது.
17 / 50
விவசாயத்தை காப்போம்!: நாத்து நடும் பணியில் ஈடுபட்டுள்ள வட மாநிலத்தவர்கள். இடம்: தஞ்சாவூர்
18 / 50
மத்திய பிரதேசம் பினாவில் நடந்த பல்வேறு வளர்ச்சிப்பணிகள் திட்ட துவக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
19 / 50
என்கவுண்டரில் ராணுவ கர்னல், மேஜர், போலீஸ் டிஎஸ்.பி.., என மூன்று பேர் வீரமரணம் அடைந்ததால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இடம்: அனந்தநாக் மாவட்டம், ஜம்மு
20 / 50
மகா காலேஷ்வர் கோயிலில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் வழிபாடு நடத்தினார். இடம்: உஜ்ஜைன், மத்திய பிரதேசம்
21 / 50
சுற்றுலா பயணியரை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தின் சிலைகள். இடம்: கோட்டாவில் உள்ள சம்பல் நதிக்கரை, ராஜஸ்தான்.
22 / 50
கார் பார்க்கிங் அல்ல!: மழை காரணமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள். இடம்: ஹரியானா, குருகிராம்
23 / 50
சவுதி இளவரசரும், பிரதமருமான முகம்மது பின் சல்மான் பின் அப்துல்லாஜீஸ் அல் சவுத்துக்கு டில்லி ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அருகில் ஜனாதிபதி திரவுபதி, பிரதமர் மோடி.
24 / 50
என்சிசி எனப்படும் தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவர்கள் ஜம்மு காஷ்மீரின் ஜம்முவில் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டனர்.
25 / 50
ராஜஸ்தான் சென்றுள்ள காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா உடன் ஆர்வத்துடன் செல்பி எடுத்து கொண்ட தொண்டர்கள்.
26 / 50
மரம் வளர்ப்போம்! மண் வளத்தை காப்போம்!: மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள். இடம்: கவுகாத்தி, அசாம்
27 / 50
டில்லியில் நடக்கும் ஜி20 மாநாட்டிற்கு இடையே செல்பி எடுத்துக் கொண்ட அமெரிக்க அதிபர் பைடன், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா. நடுவில், ஷேக் ஹசீனா மகள் சைமா வாசித்.
28 / 50
விநாயகர் சதுர்த்தி நெருங்கி வருவதையொட்டி, விநாயகர் சிலைக்கு வர்ணம் தீட்டி தயார்ப்படுத்தும் தொழிலாளி. இடம்: ஜம்மு
29 / 50
ஜி - 20 மாநாடு நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது. இதனையொட்டி டில்லி வரும் தலைவர்கள் தங்கும் பிரபல இம்பீரியல் ஓட்டல் தேசிய கொடி வண்ணத்தில் மிளிர்கிறது.
30 / 50
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பெய்த கனமழை காரணமாக சாலையில் தேங்கிய தண்ணீரில் மெதுவாக ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
31 / 50
இந்தோனேஷியாவில் நடந்த ஆசியான் மாநாட்டில் பங்கேற்ற பின்னர் இந்தியாவுக்கு புறப்பட்ட பிரதமர் மோடி. இடம் : ஜகார்த்தா.
32 / 50
செப்.18 நடக்க உள்ள சிறப்பு கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களை வரவேற்க தயார் நிலையில் உள்ள புதிய பார்லிமென்ட் கட்டடம். இடம்: புதுடில்லி.
33 / 50
கிருஷ்ண ஜென்மாஷ்டாமியையொட்டி பள்ளிக்குழந்தைகள் கிருஷ்ணர் வேடமிட்டு வகுப்புக்கு வந்தனர். இடம்: பாட்னா. பீஹார் .
34 / 50
கிருஷ்ணரின் பிறந்த நாளான ஜென்மாஷ்டமி இன்று கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு, கிருஷ்ணர் வேடமிட்ட குழந்தைகள் உறியடி விழாவை கொண்டாடினர். இடம்: கொச்சி, கேரளா.
35 / 50
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் வேடமிட்டு கொண்டாடிய சிறார்கள். இடம்: மும்பை, மஹாராஷ்டிரா
36 / 50
அன்னை தெரசா 26 வது நினைவுதினத்தை முன்னிட்டு கோல்கட்டாவில் உள்ள அவரது மிஷனரியில் கன்னியாஸ்திரிகள் மரியாதை செலுத்தினர்.
37 / 50
கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேஷமிட்டு மகிழ்ந்த பெண். இடம்: நாடியா, மேற்கு வங்கம்.
38 / 50
வரும் 9 , 10 தேதிகளில் டில்லியில் நடக்கவுள்ள ஜி-20 மாநாட்டு ஏற்பாடு பணிகளை கவர்னர் சக்சேனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
39 / 50
விநாயகர் சதுர்த்தி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி சிலை தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்து வருகிறது. இடம் அமிர்தசரஸ். பஞ்சாப்.
40 / 50
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, கிருஷ்ணர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் தொழிலாளர்கள். இடம்: புதுடில்லி
41 / 50
கேரளாவில் பல நூற்றாண்டுகளாக ‛வல்லம் களி' எனப்படும் பாரம்பரிய பாம்பு படகு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. மலையாள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் நிறைவடைந்ததை அடுத்து நடந்த ஆறன்முளா படகு பந்தயத்தில் ஏராளமான வீரர்கள் போட்டிப்போட்டு துடுப்பசைக்க தண்ணீரில் சிறீப்பாய்ந்த படகுகள். இடம்: பத்தனம்திட்டா.
42 / 50
குரங்கார் ருசிக்கும் இடம் புதுடில்லி.
43 / 50
நகர்ப்புற ஒலிம்பிக்கில் கயிறு இழுத்தல் போட்டியில் பங்கேற்ற பெண்கள். இடம்: ராஜஸ்தான், பிகானீர்
44 / 50
கவுன்ட்டவுன் ஸ்டார்ட்..!: சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 விண்கலம் இன்று (செப்.02) விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட்டவுன் துவங்கியது. தயார் நிலையில் இருப்பதை காட்டும் புகைப்படம்: இடம்: பெங்களூரு.
45 / 50
உலக கோப்பை செஸ் தொடரில் பைனலுக்கு முன்னேறிய இந்தியாவின் பிரக்ஞானந்தா 2வது இடத்தை பிடித்து வெள்ளி வென்று சாதனை படைத்தார். அவரை பிரதமர் மோடி டில்லியில் நேரில் பாராட்டினார். அருகில் அவரது பெற்றோர்.
46 / 50
உத்தரகண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள பரமார்ந்த நிகேதன் குருகுலத்தில் படிக்கும் மாணவர்கள் கங்கை நதியை வழிபட்டனர்.
47 / 50
சந்திரனில் லேண்டரை இறக்கி, ரோவரை ரோந்துவரச் செய்து சாதனை படைக்கும் இந்தியாவில் தான், மனிதன் சாக்கடையில் இறங்கி கழிவுகளை கையால் அகற்றும் அவலம் தொடர்கிறது. விண்ணில் சாதிக்கும் நாம், சகமனிதனை சாக்கடை மனிதனாக்கும் மனிதாபிமானம் அற்றவர்களாக இருக்கிறோம். அரசும் நீதிமன்றமும் கழிவுகளை அகற்ற கருவிகளைத்தான் பயன்படுத்த வேண்டும்; மனிதர்களை மலக்குழிக்குள் இறக்கக் கூடாது என்று உத்தரவிட்டும், மதுரை தெப்பக்குளம் போலீஸ் ஸ்டேஷன் அருகே பாதாள சாக்கடை கழிவில் பணி செய்கிறார் இந்த பரிதாபப் பணியாளர். (துாய்மை பணியாளர் நலன் கருதி அவர்களின் முகம் மறைக்கப்பட்டுள்ளது).
48 / 50
ரக்ஷா பந்தனை முன்னிட்டு பள்ளி மாணவிகள் பிரதமர் மோடிக்கு 'ராக்கி' கயிறு கட்டி மகிழ்ந்தனர். இடம்: புதுடில்லி
49 / 50
'ரக் ஷா பந்தன்' பண்டிகையையொட்டி தங்கள் சகோதரர்களிடம் அன்பை வெளிப்படுத்தும் ராக்கி கயிற்றை தங்கள் கைகளில் கட்டி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவியர். இடம்: நாடியா, மேற்கு வங்கம்.
50 / 50
'ரக்ஷா பந்தனை' முன்னிட்டு நாடு முழுவதும் காஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்ததற்கு பிரதமரின் 'கட்-அவுட்'க்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பெண்கள். இடம்: ஆமதாபாத், குஜராத்