வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் மீட்பு படையினர். இடம்: நர்மதா மாவட்டம், குஜராத்
2 / 50
அக்னிபாத் திட்டத்தில் ராணுவத்தில் சேர்ந்து தேர்ச்சி பெற்ற வீரர்கள் தங்களது மகிழச்சியை வெளிப்படுத்தினர். இடம்: பாட்னா, பீஹார்.
3 / 50
டில்லியில் நடந்த மஹோஸ்த்வ விழாவையொட்டி ஒடிசா கலைஞர்களின் நடனம் பார்வையாளர்களை கவர்ந்தது.
4 / 50
ராஜஸ்தான் சென்றுள்ள பிரதமர் மோடி சித்தோர்கரில் உள்ள ஸ்ரீ சன்வாரியா சேத் கோயிலில் வழிபாடு நடத்தினார்.
5 / 50
தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் பிறந்தநாளில் மதுரை தினமலர் அலுவலகத்தில் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
6 / 50
ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், வெள்ளம் பாதித்த பகுதியிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் மக்கள். இடம்: பீர்பூம் மாவட்டம், மேற்கு வங்கம்
7 / 50
டில்லியில் மல்யுத்த வீரர் அங்கித் பையன் பூரியாவுடன் இணைந்து பிரதமர் மோடி தூய்மை பணியில் ஈடுபட்டார்.
8 / 50
தைவாங் மாரத்தான் போட்டியை கொடியை அசைத்து துவக்கி வைத்தார் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ. இடம்: தைவாங், அருணாச்சல் பிரதேசம்
9 / 50
காசியில் அதிருத்ர சகஸ்ர சண்டி ஹோமம் 8 நாட்களாக நடந்தது. தொடர்ந்து ஒரு லட்சம் மோதக கணபதி ஹோமம் நடைபெற்றதை தொடர்ந்து காசிவிஸ்வநாதசுவாமிக்கு கலசாபிஷேகத்தை காஞ்சி காமகோடி பீடம் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செய்து வைத்தார்.
10 / 50
பலத்த மழை காரணமாக அமெரிக்காவின் நியூயார்க் நகரம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.
11 / 50
மாகாளயபட்சம் துவங்கியதை அடுத்து முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுக்க கங்கை நதிக்கரையில் பலர் குவிந்திருந்தனர்.
12 / 50
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்கள் நிறைவடைந்ததை அடுத்து, பிரமாண்ட சிலைகளை கடலில் கரைத்த இளைஞர்கள். இடம்: மும்பை, மஹாராஷ்டிரா.
13 / 50
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பந்த் நடந்தது. இதனையடுத்து ஹூப்ளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்.
14 / 50
விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவையொட்டி ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் ஓவியர் ஒருவர் மணற்சிற்பம் உருவாக்கி அஞ்சலி செலுத்தினார்.
15 / 50
இளைஞர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள, கிரிக்கெட் "பேட்" களை செய்யும் தொழிலாளர்கள். இடம்: ஜம்மு காஷ்மீர்
16 / 50
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ராமர் கோவில், 2024 ஜனவரியில் திறக்கப்படவுள்ளது. வரும் டிசம்பருக்குள் நிறைவடைய உள்ளதால் விறுவிறுப்படைந்துள்ள கட்டுமான பணிகள்.
17 / 50
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார். பணி நியமண ஆணைகளை பெற்ற இளைஞர்கள் பிரதமர் மோடியின் பதாகை முன்பு மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
18 / 50
டெங்கு காய்ச்சல் அதிகம் பாதித்த மேற்குவங்கம் நாடியாவில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
19 / 50
திருமலை ஸ்ரீவாரி பிரம்மோத்ஸவத்தின் 8ம் நாளான இன்று(செப்., 25) மலையப்பசுவாமி, இரு தேவியருடன் கம்பீரமாக தேரில் வலம் வந்து அருள்பாலித்தார்.
20 / 50
பலத்த மழையால் வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு மாற்று இடத்திற்கு மீட்பு படையினர் அழைத்து சென்றனர். இடம்: நாக்பூர், மஹாராஷ்ட்டிரா.
21 / 50
திருநெல்வேலியில் நேற்று நடந்த "வந்தே பாரத்" துவக்க விழாவில் செல்பி எடுத்துக் கொண்ட பள்ளி மாணவியர்.
22 / 50
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023-ல் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் பதக்கங்களை வென்ற வீராங்கனைகள்.
23 / 50
திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தில் இன்று(செப்.,24) ராமகிருஷ்ணா கோவிந்தா அலங்காரத்தில் சூரிய பிரபா வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த மலையப்ப சுவாமி.
24 / 50
ஆசிய விளையாட்டு போட்டிக்கான துவக்கவிழா சீனாவில் கோலாகலமாக நடந்தது. கண்கவர் கலைநிகழ்ச்சியில் பல நாட்டு தேசிய கொடிகளுடன் கலைஞர்கள் ஆடினர்.
அரியானா குருகிராமில் நடந்த கலைநிகழ்ச்சியில் நடன மங்கைகள்.
30 / 50
புதிய பார்லிமென்ட் கட்டடத்தை பார்வையிட வந்த பாலிவுட் நடிகைகள் பார்லி.,வளாகம்முன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். இடம்: டில்லி.
31 / 50
மத்திய பிரதேச மாநிலம், கந்த்வா மாவட்டம் ஓம்காரேஸ்வரர் நகரில், நர்மதை நதிக்கரையில் நிறுவப்பட்ட, 108 அடி உயர ஆதிசங்கரர் சிலை திறக்கப்பட்டது.
32 / 50
திருப்பதி பிரம்மோற்சவத்தின் 4ம் நாளான இன்று(செப்.,21) மலையப்பசுவாமி கல்ப விருட்ச வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்தார்.
33 / 50
விநாயகர் சதுர்த்திக்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் குளத்தில் விசர்ஜனம் செய்யப்படுகிறது. இடம்: பெங்களூரு , உல்சூர் குளம்.
34 / 50
மஹாராஷ்டிராவின் புனேவில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டது. அங்குள்ள விநாயகர் கோவிலில் ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் திரண்டு வழிபாடு செய்தனர்.
35 / 50
திருப்பதி பிரம்மோற்சவம் 3ம் நாளில் சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
36 / 50
விநாயகர் சதுர்த்தியையொட்டி, உலக அமைதிக்காக, , 1,000 இரும்பு பொருட்களால் ஆன, பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கால் உருவாக்கப்பட்ட விநாயகரின் மணல் சிற்பம். இடம்: ஒடிசா ,மாநிலம் புரி கடற்கரை
37 / 50
திருப்பதி பிரம்மோற்சவம் 2ம் நாளில் சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா வந்து அருள்பாலித்தார்.
38 / 50
வத்தல் குகைக்குள் செல்பி எடுக்கும் பெண்கள். இடம்: சீயோல், தென்கொரியா.
39 / 50
ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் மழை பெய்ததையடுத்து, நகரை போர்வைபோல் சூழ்ந்துள்ள மேகங்கள்.
40 / 50
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தாமரை, யானை வாகனத்தில் விநாயகர் காட்சியளித்தார். இடம்: சிவகங்கை
41 / 50
ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வேகத்தில் 50 ரன்களுக்கு இலங்கை அணி சுருண்டது. எளிய இலக்கை துரத்திய இந்தியஅணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 'சாம்பியன்ஸ்' பட்டத்தை தட்டிச் சென்றது. வெற்றி கோப்பையுடன் இந்திய அணி வீரர்கள். இடம்: கொழும்பு இலங்கை
42 / 50
விநாயகர் சிலைக்கு வர்ணம் தீட்டும் தொழிலாளி. இடம்: போபால், மத்திய பிரதேசம்
43 / 50
ஹிந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில், சென்னை பூக்கடை, சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து திருப்பதி திருக்குடை ஊர்வலம் துவங்கியது.
44 / 50
விவசாயத்தை காப்போம்!: நாத்து நடும் பணியில் ஈடுபட்டுள்ள வட மாநிலத்தவர்கள். இடம்: தஞ்சாவூர்
45 / 50
மத்திய பிரதேசம் பினாவில் நடந்த பல்வேறு வளர்ச்சிப்பணிகள் திட்ட துவக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
46 / 50
என்கவுண்டரில் ராணுவ கர்னல், மேஜர், போலீஸ் டிஎஸ்.பி.., என மூன்று பேர் வீரமரணம் அடைந்ததால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இடம்: அனந்தநாக் மாவட்டம், ஜம்மு
47 / 50
மகா காலேஷ்வர் கோயிலில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் வழிபாடு நடத்தினார். இடம்: உஜ்ஜைன், மத்திய பிரதேசம்
48 / 50
சுற்றுலா பயணியரை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தின் சிலைகள். இடம்: கோட்டாவில் உள்ள சம்பல் நதிக்கரை, ராஜஸ்தான்.
49 / 50
கார் பார்க்கிங் அல்ல!: மழை காரணமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள். இடம்: ஹரியானா, குருகிராம்
50 / 50
சவுதி இளவரசரும், பிரதமருமான முகம்மது பின் சல்மான் பின் அப்துல்லாஜீஸ் அல் சவுத்துக்கு டில்லி ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அருகில் ஜனாதிபதி திரவுபதி, பிரதமர் மோடி.