புகைப்பட ஆல்பம்:

கோவிந்த நாம சங்கீர்த்தனம் !
1 / 30
வைகுண்ட ஏகாதேசி பெருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சித்திரை வீதிகளில் பஜனை பாடியவாறு வீதி உலா வந்த காட்சி.
2 / 30
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பூர், ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் எம்பெருமான் பக்தர்களுக்கு பரம்பத வாசல் வழியாக எழுந்தருளி காட்சியளித்தார்.
3 / 30
பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் வழியாக கருட வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப் பெருமாள் அருள்பாலித்தார்.
4 / 30
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பரமபத வாசல் வழியாக, பாண்டியன் கொண்டை, கிளி மாலை, ரத்தின அங்கி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.
5 / 30
புதுச்சேரி, தர்ம சம்ரக்ஷண சமிதி நடத்திய மார்கழி பஜனையின் ஒரு அங்கமாக, ராதா மாதவ திருக்கல்யாண மஹோற்சவ விழா புதுச்சேரி விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
6 / 30
கோவை மாவட்டம் ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்கள் சார்பில், டாடாபாத் சத்யநாராயண ஹாலில் நடந்த ஓம்காரம், சுப்ரபாதம் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பக்தர்கள்.
7 / 30
கோவை சத்ய நாராயணா ஹாலில் ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில் 1,008 சஹஸ்ரநாம பாடல்களை பக்தர்கள் பாடினர்.
8 / 30
கோவை சத்திய நாராயணன் ஹாலில் ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில் 1008 பஜன் ஸஹஸ்ரநாம பாடல்கள் பக்தர்கள் பாடினர்.
9 / 30
கோவை உடையாம்பாளையம் முதியா ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவிலில் மார்கழி மாதத்தை ஒட்டி பஜனை நிகழ்ச்சி நடந்தது.
10 / 30
திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின்பகல் பத்து நான்காம் திருநாளில் அர்ஜுன மண்டபத்தில் நாச்சியார் திருமொழி கண்ணன் என்னும் கருந்தெய்வம் பாசுரத்திற்கு ஏற்ப, ஆண்டாள் கொண்டை அணிந்து, நாச்சியார், அழகிய மணவாளன் பதக்கம் , மகரி, சந்திர ஹாரம், வயிர 3 அடுக்கு மகர கண்டிகை, அடுக்கு பதக்கங்கள், வயிர அபயஹஸ்தத்துடன், செந்தூர வர்ண வஸ்திரம், தங்கப்பூண் பவள மாலை, 2 வட பெரிய முத்து சரம், பொட்டு நெல்லிக்காய் மாலை முன் மார்பில் சாற்றிக் கொண்டு, பின் சேவையாக - பங்குனி உத்திர பதக்கம், புஜ கீர்த்தி, தாயத்து தொங்கு சரம் கைகளில் சாற்றி, சேவை சாதித்தார்.
11 / 30
திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல்பத்து மூன்றாம் திருநாளில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து, சவுரி கொண்டை, ரத்தின நெத்திச்சூடி, கையில் ரத்தின கிளி, ரத்தின அபயஹஸ்தம், பஞ்சாயுத மாலை, முத்துமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் தரித்து அர்ச்சுன மண்டபத்துக்கு எழுந்தருளினார்.
12 / 30
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் உற்சவர் ஆஞ்சநேயர், ஒரு லட்சத்து எட்டு வடைமாலை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
13 / 30
திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி பெருவின், பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று (டிச.23 ) நம்பெருமாள் ரத்தின நீள்முடி கிரீடம், கபாய் சட்டை, ரத்தின அபய ஹஸ்தம், காசு மாலை, நெல்லிக்காய் மாலை, உள்ளிட்ட திருஆபரணங்கள் தரித்து, மூலஸ்தானத்தில் இருந்து அர்ச்சுன மண்டபத்துக்கு எழுந்தருளினார்.
14 / 30
மார்கழி மாத சிறப்பை ஒட்டி, கோவை உக்கடம் கோட்டைமேடு கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ பூமி-நீளா நாயகி சமேத அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த கரி வரதராஜ பெருமாள்.
15 / 30
மார்கழி பிறப்பையொட்டி புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகரில் உள்ள தேசமுத்து மாரியம்மன் கோவில் பஜனை குழுவினர், பாரதியார் பல்கலைக் கூட இசைத்துறை மாணவர்களுடன்பஜனை பாடியவறே வீதிகளில் வலம் வந்தனர்.
16 / 30
மார்கழி மாத பஜனை துவங்கியது...: மார்கழி முதல் நாளில் கோவில் பஜனையின் இசை அழகு. இடம்: கோவை ராம்நகர் கோதண்டராமர் கோவில்.
17 / 30
மார்கழி மாத முதல் நாளையொட்டி கோவை சித்தாபுதூர் ஸ்ரீ ஜெகநாதப் பெருமாள் கோயில் பக்தர்கள் பஜனை பாடியபடி திருவீதி உலா வந்தனர்.
18 / 30
மார்கழி மாத முதல் நாளையொட்டி கோவை பாப்பநாயக்கன்பாளையம் சீனிவாச பெருமாள் கோயில் பக்தர்கள் பஜனை பாடியபடி திருவீதி உலா வந்தனர்.
19 / 30
மார்கழி முதல் நாளை முன்னிட்டு கோவை ஒலம்பசிலுள்ள நரசிங்க பெருமாள் கோவிலில் பக்தர்கள் பஜனையில் ஈடுபட்டனர்.
20 / 30
மார்கழி முதல் நாளை முன்னிட்டு கோவை வரதராஜபுரம் பெருமாள் கோவிலில் பக்தர்கள் கோலாட்டம் ஆடி மார்கழி மாதத்தை வரவேற்றனர்.
21 / 30
மார்கழி மாதத்தை முன்னிட்டு பொள்ளாச்சி ஜோதி நகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில் அருகே ஜோதி நகர் பஜனை குழுவினர், திருப்பாவை திருவெம்பாவை பாடல்களை பாடி சென்றனர்.
22 / 30
சிவகங்கை காசி விஸ்வநாதர் கோயிலில் மார்கழி அஷ்டமியை முன்னிட்டு படி அளக்கும் உலாவில் எழுந்தருளி சுவாமிகள்.
23 / 30
மார்கழி முதல் நாளை முன்னிட்டு கோவை வரதராஜபுரம் பெருமாள் கோவிலில் பக்தர்கள் கோலாட்டம் ஆடி மார்கழி மாதத்தை வரவேற்றனர்.
24 / 30
திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவில் திருமுறை கழகம் சார்பில், திருவாசகம் மற்றும் திருமுறை படித்தபடி மாடவீதி சுற்றி வந்த சிவ பக்தர்கள்.
25 / 30
மார்கழி முதல்நாளில், பஜனை பாடிக் கொண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலை சுற்றி உள்ள மாடவீதிகளில் வலம் வந்த பஜனை குழுவினர்.
26 / 30
மார்கழி முதல்நாளில், பஜனை பாடிக் கொண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலை சுற்றி உள்ள மாடவீதிகளில் வலம் வந்த பஜனை குழுவினர்.
27 / 30
மார்கழி மாதம் முதல் நாளையொட்டி கோவை வைசியாள் வீதி ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தானம் கோவிலில் பக்தர்கள் பஜனை பாடினர்.
28 / 30
கோவை சித்தாபுதூர் ஸ்ரீ ஜெகநாதப் பெருமாள் கோயில் பக்தர்கள் பஜனை பாடியபடி திருவீதி உலா வந்தனர்.
29 / 30
மார்கழி மாத முதல் நாளையொட்டி கோவை பாப்பநாயக்கன்பாளையம் சீனிவாச பெருமாள் கோயில் பக்தர்கள் பஜனை பாடியபடி திருவீதி உலா வந்தனர்.
30 / 30
மார்கழி மாத முதல் நாளையொட்டி கோவை சித்தாபுதூர் ஸ்ரீ ஜெகநாதப் பெருமாள் கோயில் பக்தர்கள் பஜனை பாடியபடி திருவீதி உலா வந்தனர்.
Advertisement