புகைப்பட ஆல்பம்:

சித்திரை திருவிழா
1 / 38
மதுரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார். அப்போது பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சு அடித்து கொண்டாடினர்.
2 / 38
மதுரையில் பக்தர்கள் வெள்ளத்தில், ஜொலித்த தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார்.
3 / 38
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் நடந்து வரும் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
4 / 38
தேவகோட்டை சிவன் கோயிலில் சித்திரைத் திருவிழா முன்னிட்டு குதிரை வாகனத்தில் அம்பாள்.
5 / 38
சித்திரை திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் அபிராமியம்மன் கோயிலில் திருக்கல்யாணத்தை காண கூடியிருந்த பக்தர்கள் பக்தர்கள்.
6 / 38
சித்திரை திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் அபிராமியம்மன் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில் சுவாமியுடன் அம்பாள்.
7 / 38
திருப்பூர் மாவட்டம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேர் திருவிழாவில், பக்தர்கள் வெள்ளத்தில் வந்த தேர்.
8 / 38
திருப்பூர் மாவட்டம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. அதில் தேரின் வடகயிறை தூக்கியபடி வந்த பக்தர்கள்.
9 / 38
கோவை பொள்ளாச்சி மெயின் ரோடு, ஒத்தக்கால்மண்டபம் ஸ்ரீ புற்றிடங்கொண்டீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி நடந்த தேரோட்டம்.
10 / 38
சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது
11 / 38
மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் கோயில் தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
12 / 38
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்கல்யாணம் இன்று மே 2ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.
13 / 38
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவில் சித்திரை திருவிழா 7ம் நாள் மண்டகப்படியில் அம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளினார்.
14 / 38
தேவகோட்டை சிவன் கோவில் சித்திரை திருவிழா முன்னிட்டு அலங்காரத்தில் சுவாமி அம்பாள்.
15 / 38
மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா துவக்கமாக காப்பு கட்டுதலின் போது உற்சவர் வீர அழகர் ஸ்ரீதேவி,பூதேவியுடன் எழுந்தருளினார்.
16 / 38
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவில் சித்திரை திருவிழா 6ம் நாள் மண்டகப்படியில் சோமநாதர் சுவாமி பிரியாவிடையுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார்.
17 / 38
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் 9ம் நாளான்று (மே 1) நடந்த திக்கு விஜயம் நிகழ்ச்சியில் இந்திர விமானத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர். .
18 / 38
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் 9ம் நாளான்று (மே 1) நடந்த திக்கு விஜயம் நிகழ்ச்சியில் இந்திர விமானத்தில் அம்மன்.
19 / 38
சித்திரை மாத சுக்ல பக்ஷ ஏகாதசியை முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
20 / 38
தஞ்சாவூர் பெரிய கோவிலில் நடந்து வரும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
21 / 38
தஞ்சாவூர் பெரிய கோவில் நடந்து வரும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் கோலாகலமாக மே 1ல் நடந்தது.
22 / 38
சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழாவை யொட்டி தேரோட்ட நிகழ்ச்சியில் கைலாய வாத்தியங்கள் வசிக்கப்பட்டது.
23 / 38
சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழாவை யொட்டி சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் தேரோட்டம் மே 1ல் நடந்தது.
24 / 38
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் 8 ம் நாளான்று(ஏப்.,30) நடந்த பட்டாபிஷேகத்தில் செங்கோலுடன் அம்மன்.
25 / 38
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவில் சித்திரை திருவிழா 5ம் நாள் மண்டகப்படியில் சோமநாதர் பிரியா விடையுடன் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.
26 / 38
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா முன்னிட்டு அலங்காரத்தில் பெருமாள்
27 / 38
மதுரை மீனாட்சி அம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று ( மே 2ம் தேதி) கோலாகலமாக நடைபெற்றது.
28 / 38
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, சென்னை பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில், அதிகார நந்தி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சிவபெருமான் மற்றும் அம்பாள்.
29 / 38
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு மூன்று நாள் கருடசேவை உற்சவம் நடந்தது . இதில் கருட வாகனத்தில் வீரராகவர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்
30 / 38
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு மூன்று நாள் கருடசேவை உற்சவம் நடந்தது. இதில் கருட வாகனத்தில் வீரராகவர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இடம் திருவள்ளூர் டோல்க அருகே உள்ள மண்டபம்
31 / 38
கோவை தண்டு மாரியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழாவை ஒட்டி அக்னி சட்டி ஊர்வலம் நடந்தது.
32 / 38
திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. வீரராகவர், ஸ்ரீதேவி பூதேவியுடன் சப்பரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்
33 / 38
திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சம், கொடியேற்றத்துடன் தொடங்கியது
34 / 38
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.
35 / 38
காரணீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா துவக்க நாளான்று(ஏப்.,25)கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.இடம் : சைதாப்பேட்டை, சென்னை.
36 / 38
கோவை தண்டு மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்களில் ஒரு பகுதியினர்.
37 / 38
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரை திருவிழாவிற்கு (ஏப்.,23) அன்று தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றி தீபாராதனை காட்டப்பட்டது. அடுத்த படம்: அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்.
38 / 38
சித்திரை திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் அபிராமியம்மன் கோயிலில் (ஏப்.,23 அன்று) கொடியேற்றம் நடந்தது.
Advertisement