குளோபல் ஷாட் ஆல்பம்:

24-Sep-2012
1 / 10
நேபாளத்தின் கூர்க்கா மாவட்டத்தில் உள்ள மானஸ்லு மலையின் மீது 50 பேர் கொண்ட குழுவினர் மலை ஏறிக்கொண்டிருந்தனர். பனி பாறை சரிவு ஏற்பட்டதில் வெளிநாட்டினர் ஒன்பது பேர் பலியாயினர். எட்டு பேரை காணவில்லை. காயமடைந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்படுகின்றனர்.
2 / 10
உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான புரூனே நாட்டு சுல்தானின் இளைய மகள் ஹபிசாவுக்கும், முகமதுவுக்கும் 1,700 அறைகள் கொண்ட அரண்மனையில் திருமணம் நடந்தது. தாய்லாந்து, பிலிப்பைன்ஸ்,கம்போடியா நாட்டு தலைவர்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.
3 / 10
பங்களாதேசில் இஸ்லாமிய தலைவரை இழிவுப்படுத்தும் வகையில் திரைப்படம் தயாரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்காவில் முஸ்லீம்கள் ஊர்வலம் நடத்தினர்.
4 / 10
பெலாரஸ், மின்ஸ்க்கில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரு பெண் ஓட்டு சாவடியில் குழந்தையுடன் வந்து ஓட்டு போடுகிறார்.
5 / 10
பிரேசில், பார்சுரா அருகில் உள்ள சாவேன்டீஸ் பாலத்தில் டிரக் ஒன்று விபத்துக்குள்ளாகி அந்தரத்தில் தொங்கியது. டிரைவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
6 / 10
பதினாறாம் போப் பண்டிட் ரோமில் ஏஞ்சலஸ் பிரார்த்தனையில் கலந்து கொண்டு அனைவரும் வாழ்த்தினார்.
7 / 10
மாசிடோனியாவில் மக்கள் வார்தர் நதியின் மேல் உள்ள ஸ்டோன் பாலத்தின் நினைவை கூறும் வகையில் அனைவரும் பாலத்தில் அமர்ந்து காலை உணவு அருந்தினார்கள்.
8 / 10
பெல்ஜியம், இஸ்லூவில் நடந்த 267 கிலோ மீட்டருக்கான ஆண்கள் உலக சாம்பியன்சிப் சைக்கிள் போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள்.
9 / 10
பாகிஸ்தான் , லாகூரில் போராட்டக்காரர்கள் இஸ்லாமிய தலைவரை இழிவுப்படுத்தும் வகையில் திரைப்படம் தயாரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
10 / 10
இத்தாலி, மிலனின் மார்னி விமன்ஸ் ஸ்பிரிங்ஸ் சம்மர் 2013 கலெக்சன் பேஷன் ஷோவில் கலந்து கொண்ட மாடல் அழகிகள்.
Advertisement