நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

12-நவ.,-2019
1 / 10
கலாசார நடனம்: கோவை அவிநாசி ரோட்டில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் இன்னர் வீல் டிஸ்ட்ரிக் 320 பொன்விழா கொண்டாட்டத்தில் சுவர்ண பந்தன் என்ற தலைப்பில் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த இந்திய பாரம்பரிய கலாச்சார நடனம் நடந்தது,இதில் கேரள மாநிலத்தின் நடனம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது
2 / 10
பிரித்து எடுப்பு: சின்ன வெங்காயத்தை பிரித்து எடுக்கும் பணியில் விவசாயிகள் . இடம்: கோவை, தொண்டாமுத்தூர் வாய்க்கால்
3 / 10
விவசாய பணி: திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் பகுதியில் பருத்தி செடிகளில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுப்பட்ட விவசாயி.
4 / 10
நாங்களும் இருக்கோம்: பயிர்களின் நடுவே தலை தூக்கும் தேசிய பறவைகள். இடம் .கோவை, வீரகேரளம்
5 / 10
காற்று மாசு: புது வண்ணாரப்பேட்டை கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் பனிமூட்டம் போல் படர்ந்துள்ள காற்று மாசு.
6 / 10
உற்சாக குளியல்: கள்ளக்குறிச்சியில் உள்ள கோட்டைமேடு தடுப்பணையில் நீர் நிரம்பி நிற்பதால் உற்சாக குளியல் போடும் வாலிபர்கள்.
7 / 10
அரிவாள் மூக்கன் பறவைகள்: சென்னை துரைப்பாக்கம் சதுப்புநில பகுதியில் இரைதேடி குவிந்துள்ள, அரிதாக காணப்படும் க்ளாஸி இல்பிஸ் என்னும் அரிவாள் மூக்கன் பறவைகள்.
8 / 10
ரேலியா அணை: குன்னூர் அருகே பெட்டட்டி , பகுதியில் உள்ள ரேலியா அணையில், மழைக்கு நீர்மட்டம் உயர்ந்து உபரி நீர் வெளியே செல்கிறது.
9 / 10
கும்கி யானை: பொள்ளாச்சி அருகே காட்டுயானையை பிடிக்க வந்திருக்கும் கும்கியானை
10 / 10
பனிமூட்டமா: மணலி பகுதியில் பனிமூட்டம் போல் படர்ந்துள்ள காற்று மாசு.