ஆற்றை அசுத்தம் செய்யாதீர்...: ஓடும் நதிகளை நம் தாய்க்கும் சமமாக மதிக்க வேண்டும், அந்த நதிகளை அசுத்தம் செய்யாமல் அதன் புனிதத்தை மதித்து காப்பாற்றினால் அது நம்மை மதிக்கும்.ஆற்றில் பழைய துணியை கழட்டிவிடுதல்,குப்பையை கொட்டுதல்,சாக்கடையை திருப்பிவிடுதல் போன்றவைகளை கைவிட வேண்டும்.திருவையாற்றில் ஆற்றில் குளிக்கும் இடத்தில் துணியை போடாமல் தனியாக போடுவதற்கு ஒரு கூண்டு அமைத்துள்ளனர். நல்ல முயற்சி பாராட்டவேண்டும்.படம்:எல்.முருகராஜ்
2 / 20
இதுவும் ஒரு அறமாகும்...: திருவண்ணாமலையில் தெரு நாய்களுக்கான இலவச சரணாலயம் இயங்குகிறது.இதன் வாசலில் ஒரு நாட்டின் பெருமையையும் அறத்தின் வளர்ச்சியையும் அங்கு விலங்குள் நடத்தப்படுவதைக் கொண்டே மதிப்பிடலாம் என மகாத்மா சொன்னதாக எழுதிவைத்துள்ளனர்.
3 / 20
மரம் நடு விழா: வழக்கமாக ஏதேனும் விழா நடந்தால் அதையொட்டி மரம் நடுவார்கள் ஆனால் கரூர் ரோட்டரி கிளப் அமைப்பினர் மரம் நடுவதையே பெரிய விழாவாக அறிவித்து தனியாக அழைப்பிதழ் அடித்து அழைத்துள்ளனர் பாராட்டவேண்டிய விஷயமே.
4 / 20
பிளாஸ்டிக்கை ஒழிக்க: பிளாஸ்டிக் உபயோகத்தை குறைப்பதற்காக ஒசூரில் உள்ள ஒரு ஒட்டலில் பார்சல் வாங்க வருபவர்களுக்காக வைக்கப்பட்டுள்ள வரவேற்கத்தக்க அறிவிப்பு.
5 / 20
மழை விட்டுரும்னு சொன்னாங்களே: ஆறாம் தேதியுடன் மழை விட்டுரும்னு சொன்னாங்களே ஆனால் இன்னும் விடலையே என்று பேசியபடி பைக்கில் பயணம் செய்யும் சென்னை தம்பதியினர்.படம்:எல்.முருகராஜ்.
6 / 20
செய்தித்தாள் மக்காத குப்பையா...: சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையின் பல இடங்களில் இது போல மக்கும் குப்பையை போடுவதற்கான ஒரு பெட்டி, மக்காத குப்பையை போடுவதற்காக ஒரு பெட்டி என்று வைத்துள்ளனர்.எது மக்கும் குப்பை எது மக்காத குப்பை என்று யாருக்காவது சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக பெட்டியின் வெளியே பட்டியலை ஒட்டியுள்ளனர்.ஆனால் மக்காத குப்பை பட்டியலில் செய்தித்தாளை சேர்த்துள்ளதுதான் புரியவில்லை. செய்தித்தாள் மக்காத குப்பையா?
7 / 20
நிக்கான் வழங்கும் சிறப்பு சலுகை...: சென்னையில் நடந்துவரும் கேமிரா பேர் எனும் தொழில்நுட்ப கண்காட்சியில் நிக்கான் நிறுவனத்தின் பென்டிரைவ், டிசர்ட், தொப்பி ஆகிய மூன்று பொருட்களை 599 ரூபாய் கொடுத்து வாங்கிக்கொண்டால், பிறகு நிக்கான் பொருள் எப்போது வாங்கினாலும் இந்த 599 ரூபாயை கழித்துக்கொள்வார்களாம், நல்லாயிருக்கே அப்ப இது இலவசம்தான்..
8 / 20
எவ்ளோ பெரிய நாமம்: நம்ம முகத்திற்கு இவ்வளவு பெரிய நாமத்தை போட்டது யாராக இருக்கும் என்ற பலத்த யோசனையில் ஆழ்ந்து இருக்கிறதோ இந்த குழந்தை?! படம்;எல்.முருகராஜ் .
9 / 20
செல்பி கோவிந்தா: திருமலை பிரம்மோற்சவ விழாவிற்கு வரும் பக்தர்கள் முதலில் பார்ப்பது பஸ் நிலையம் அருகில் உள்ள இந்த பெருமாள் படத்தைதான் .பக்தர்களை வரவேற்கும் விதத்தில் உள்ள இந்த படம் முன்பாக நின்று அனைவரும் செல்பி எடுத்துக்கொள்வதால் இவர் இப்போது செல்பி கோவிந்தாவாக அழைக்கப்படுகிறார். படம்:எல்.முருகராஜ்
10 / 20
துணை முதல்வர் கலந்துக்கலையா?: இணைந்தது முதல், முதல்வரும், துணை முதல்வரும் இணைந்தே விழாக்களில் கலந்து கொள்கின்றனர், இந்த நிலையில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், துணை முதல்வர் பெயர் இல்லாத பேனர்.
11 / 20
இது எல்எல்ஆர் வரிசை....: ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் இல்லை என்றால் மூன்று மாத சிறைத்தண்டனை என்ற அறிவிப்பை அடுத்து டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்காக ஆர்டிஒ அலுவலகத்தில் கூட்டம் அலைமோதுகிறது.இது சென்னை அண்ணாநகர் ஆர்டிஒ.,அலுவலகம்.
12 / 20
வேண்டாம்..வேண்டாம்...: சீர்திருத்தம் என்ற பெயரில் விரும்பாத விஷயங்களை திணிக்காதீர் என்று சொல்லி அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். சென்னையில் வேண்டாம் வேண்டாம் என்ற கோஷமிட்ட ஊழியர்களின் கரங்கள்.
13 / 20
மோடிகிட்டே சொல்லிவிடுவோம்..: நீர் நிலை ஆக்ரமிப்பாளர்களை கண்டித்து, சென்னையில் பாஜக.,நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காணப்பட்ட பதாகை
14 / 20
நீட் வேண்டாம்...: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நீட் தேர்வு வேண்டாம் என மாணவர்களும் அவர்தம் பெற்றோரும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.படம்:வீரமணிகண்டன்.
15 / 20
உங்களை நீங்களே பார்த்துக்குங்க...: டெங்கு காய்ச்சலில் இருந்து மக்களை காப்பாற்ற மருத்துவமனைக்கோ மருத்துவர்களுக்கோ போதுமான நேரமில்லை அது டெங்குவா? இல்லையா? என்ற முடிவெடுப்பதற்குள்ளாகவே பலரது வாழ்க்கை முடிவிற்கு வந்துவிடுகிறது, ஆகவே வரும் முன் காப்பது என்ற முடிவுடன் நிலவேம்பு கசாயம் எங்கு கிடைத்தாலும் வாங்கி சாப்பிடுங்கள், சென்னையில் எங்கும் இலவசமாக கிடைக்கிறது, கொடுத்த வச்ச ஊர் என்று எண்ணாதீர்கள் எளிதில் பரவும் அளவிற்கு கொசு நிறைந்த ஊர் அதான்..
16 / 20
டெங்குவை ஒழிப்போம்...: எதிரிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவதை விட, கொசுவிடம் இருந்து மக்களைக் காப்பாற்றுவதுதான் இப்போது முக்கியம் என்று நினைத்து விட்ட இந்த சென்னை திருவல்லிக்கேணி குழந்தைகள் சுதந்திரதினத்தன்று டெங்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
17 / 20
குழந்தை கிருஷ்ணர்...: கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் நடந்த விழாவில் பங்கேற்ற குழந்தைகள்.
18 / 20
குடிப்பதற்கு ஒரு இடம் இல்லை...: டாஸ்மாக்கிற்கு எதிராக பெண்கள் பெரும்புரட்சி நடத்திக் கொண்டிருந்தாலும் ஒரு பக்கம் குடிப்பவர்கள் எண்ணிக்கை அதிலும் இளைஞர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.சென்னை தாம்பரம் பகுதியில் குளிர்பானம் குடிப்பது போல ஒருவர் டாஸ்மாக் சரக்கை குடித்துக்கொண்டே நடக்கிறார்.படம்:மாரியப்பன்,தாம்பரம்.
19 / 20
மறக்க மனம் கூடுதில்லையே...: தகவல்கள் வாட்ஸ்அப்பிலும்,எஸ்எம்சிலும் இறக்கை கட்டி பறந்து கொண்டு இருக்கும் நிலையில் இப்போதும் தபால் பெட்டியை தேடி தபால் போடுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இடம்:சென்னை வியாசர்பாடி.
20 / 20
மாறவே மாட்டீங்களாப்பா...: ஜெயலலிதா முதல்வராக இருந்த போது எங்கே போனாலும் வந்தாலும் பொதுமக்களைப் பற்றி கவலை இல்லாமல் நடைபாதை முழுவதையும் ஆக்ரமித்து பிளக்ஸ் பேனர் வைப்பார்கள் ஜெயலலிதாவிற்கு பிறகு இந்த பிரச்னை இல்லாமல் இருந்தது. இப்போது மீண்டும் முளைத்துவிட்டது சென்னை திருவொற்றியூர் பாலத்தை திறந்துவைக்க வருகைதந்த முதல்வர் பழனிசாமியை வரவேற்று வைத்திருந்த பிளக்ஸ் பேனர்கள்.