தமிழில் வழக்காடுவோம்...: ஐகோர்டில் தமிழில் வழக்காடும் உரிமையை வலியுறுத்தி சென்னை ஐகோர்ட் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர்.படம்:ராஜேஷ்நீங்களும் இது போன்ற பேனர்,போஸ்டர்,சுவர் ஓவியம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உண்மையானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும், மறக்காமல் போன் எண்ணைக்குறிப்பிடவும், நன்றி!
2 / 20
மரமாக்கியதற்கு நன்றி...: ஆசிரியர் தினத்தை தினமலர் நேற்று பள்ளி,கல்லூரிகளில் குதூகலமாக கொண்டாடியது. மிகப்பெரிய பேனர் வைத்து அதில் ஆசிரியர்களை வாழ்த்தி ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியரை கையெழுத்திட வைத்தது.இதன் மூலம் மாணவ சமுதாயத்திற்கு நெகிழ்ச்சியும், ஆசிரியர் சமுதாயத்திற்கு மகிழ்ச்சியும் ஏற்பட்டது.வெறும் கையெழுத்துடன் நின்றுவிடாமல் ஒரு மாணவி விதையாய் விழுந்த என்னை மரமாய் மாற்றியதற்கு நன்றி என்று அசத்தலாக எழுதியிருந்தார். அவர் எழுதுவதை பார்க்கவேண்டுமா அப்ப இணையதளத்தின் போட்டூன் பக்கத்திற்கு சிரமம் பார்க்காது போய் பாருங்களேன்.படம்: எல்.சீனிவாசன்நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர், பேனர், சுவர் ஓவியம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உண்மையானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். மறக்காமல் போன் எண்ணைக்குறிப்பிடவும், நன்றி!
3 / 20
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...: ஆயிரம்தான் சொல்லுங்கள் நமக்கு அறிவு கொடுத்த ஆசிரியர்களுக்கு நிகர் ஆசிரியர்கள்தான்.அவர்களுக்கான தினத்தை ரொம்ப சந்தோஷமாகவே கொண்டாடுவோமுங்க.படம்:சத்யசீலன்,சென்னைநீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,சுவர் ஓவியம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும், மறக்காமல் போன் எண்ணைக்குறிப்பிடவும்,நன்றி!
4 / 20
புரிஞ்சா சொல்லுங்க...: பங்குனி மாதத்து வெயில் இந்த ஆவணி மாதத்திலும் அடிக்கிறது,அதற்கு என்ன இப்போ என்கிறீர்களா?சென்னையில் அதிமுக விசுவாசி ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டருக்கும் அடிக்கும் வெயிலுக்கும் சம்பந்தம் இருக்கிறதா எனத்தெரியவில்லை ,எனேனில் போஸ்டரில் உள்ள வாசகங்கள் எதுவும் புரியவில்லை உங்களுக்கு புரிந்தால் சொல்லுங்கள்.படம்:எஸ்.ரமேஷ்,சென்னைநீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர், பேனர், சுவர் ஒவியம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் படங்கள் வித்தியாசமானதாகவும், உண்மையானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். மறக்காமல் போன் எண்ணைக்குறிப்பிடவும், நன்றி!
5 / 20
கருணாசின் அடையாளம்...: லொடுக்கு பாண்டியாக வந்து காமெடி செய்து சிரிக்கவைத்தார்,அதற்கு பிறகு பல படங்களில் காமெடி செய்துவருகிறார்,சிரிப்புதான் வரமாட்டேன் என்கிறது. இப்போது அரசியல் செய்யலாம் என்று எண்ணி முதல் கட்டமாக சாதியை கையில் எடுத்துக்கொண்டுள்ளார் போலும். பொதுவாக கலைஞன் என்பவன் சாதி,மத சங்கிலிகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் அனைவருக்கும் பொதுவானவர்களாக, இறகுகள் விரித்து சுதந்திரமாக பறப்பார்கள்,ம்.. அது அந்தக்காலம்.படம்:எல்.சீனிவாசன்,சென்னைநீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,சுவர் விளம்பரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமனதாகவும்,உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்,மறக்காமல் போன் எண்ணைக்குறிப்பிடவும்,நன்றி!
6 / 20
நாட்டுக்கு செய்யும் நல்ல பணி: சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்துள்ள கொளத்தூர் செக்போஸ்டில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி, அங்கு பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி தன் கைப்பட இப்படி எழுதிவைத்துள்ளார்.படம்:ஏ.கோபி,மேட்டூர்நீங்களும் இது போன்ற போஸ்டர்,பேனர்,சுவர் ஒவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்,மறக்காமல் போன் எண்ணைக்குறிப்பிடவும்,நன்றி!
7 / 20
வாய் திறக்காதது ஏன்?: சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது மெட்ராஸ் கபே படம் மட்டுமல்ல, அது தொடர்பாக ஒட்டப்படும் போஸ்டர்களும் தான்.படம்: எல்.சீனிவாசன், சென்னைநீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர், பேனர், சுவர் ஓவியம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உண்மையானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். மறக்காமல் போன் எண்ணைக் குறிப்பிடவும், நன்றி!
8 / 20
வளருதே...வளருதே...: செடி, கொடி, மரங்களை வளர்ப்பதும் இல்லை. எங்கேயும் வளரவிடுவதும் இல்லை என்று மக்கள் முடிவெடுத்த பிறகு, எங்காவது ஒரு கொழு கொம்பை பிடித்தாவது வளர முடியுமா என்று தாவரங்கள் தவிப்பது இயற்கை தானே. இங்கே சென்னை அண்ணா நகரில் உள்ள வழிகாட்டும் பலகையை பிடித்துக்கொண்டு ஒரு கொடி வளர்கிறது.படம்: நந்தகோபால்,சென்னைநீங்களும் இது போன்ற வித்தியாசமான போர்டு, பேனர், போஸ்டர் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உண்மையானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும், மறக்காமல் போன் எண்ணைக் குறிப்பிடவும்,நன்றி!
9 / 20
எப்படியோ போங்க...: ஊருக்கு போக வழிகாட்டாவிட்டாலும் வழிகாட்டுவதற்காக வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகைகளில் உள்ள விவரங்களை கிழித்தெறிந்து தனது ஊர்மானத்தை காஞ்சிபுரத்தில் வெளிப்படுத்தியுள்ளார் ஒருவர்.படம்: மாசிலாமணி,காஞ்சிபுரம்நீங்களும் இது போன்ற வித்தியாசமான படம்,போஸ்டர்,பேனர்,சுவர் ஒவியம் போன்றவைகளை வரைந்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும், மறக்காமல் போன் எண்ணைக்குறிப்பிடவும்,நன்றி!
10 / 20
நல்லா வருவீங்கய்யா...: சென்னை நடைபாதை வாசிகளை நடக்கவிடுவதில்லை என்ற முடிவுடன் நித்தமும் ஒருவர் முதல்வரை வானளாவப்புகழ்ந்து பேனர் வைத்து வருகின்றனர்.இந்த பேனரை வைத்துள்ளவர் எம்ஜிஆர் தொண்டர்கள் கட்சி என்று எழுதியுள்ளனர்.முதல்வர் பிரதமராகி ஒரு ரூபாயின் மதிப்பை அமெரிக்காவின் ஒரு டாலருக்கு இணையாக்கணுமாம், அதன் மூலம் இந்திய பொருளாதாரம் சீராகணுமாம்.இந்திய பொருளாதாரத்தை சீராக்கணும்ங்ற அளவில சிந்திக்கிற அளவிற்கு அவ்வளவு நல்லவரா இருந்துட்டு ஏய்யா இப்படி நடைபாதையில் மக்களை நடக்கவிடாம பேனர் வச்சே.படம்:எஸ்.ரமேஷ்,சென்னைநீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர், பேனர், சுவர் ஒவியம், தட்டியில் வரையப்பட்ட கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உண்மையானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும், மறக்காமல் போன் எண்ணைக்குறிப்பிடவும், நன்றி!
11 / 20
சந்தோஷ‘கரை’...: கூடங்குளம் அணுமின் நிலையம் சார்பாக இடிந்த கரையில் உள்ள ஏழை,எளிய மீனவ மக்களுக்கு மீன் வலைகள் வழங்கிய அணுசக்தி நிலையத்திற்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.படம்:வெங்கடேஷ்,தூத்துக்குடி.நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்,மறக்காமல் போன் எண்ணைக்குறிப்பிடவும்,நன்றி!
12 / 20
வேண்டாம் மெட்ராஸ் கபே...: மெட்ராஸ் கபே என்ற படம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழியில் வெளியாக இருக்கிறது.இதில் இலங்கை தமிழர்களுக்கு எதிரான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளதாம்.இதன் காரணமாக இந்த படத்தை தமிழகத்தில் தடை செய்யச்சொல்லி சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்திய போது பிடித்திருந்த பேனர்.படம்:ஏ.கோபி,மேட்டூர்நீங்களும் இது போன்ற வித்தியாசமான பேனர்,போஸ்டர்,சுவர் ஒவியம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்,மறக்காமல் போன் எண்ணைக்குறிப்பிடவும்,நன்றி!
13 / 20
தடைபாதை...: வேற்று கட்சிக்காரர்கள் இது மாதிரி நடைபாதைகளில் பேனர் வைக்கவே தடைவிதிக்கும் சென்னை மாநகராட்சி, அம்மா கட்சியினர் வைத்துள்ள பேனரை எடுக்கச் சொல்லவே தயங்குகின்றனர்.விழா நடந்து முடிந்து பல நாளாகியும் கூட, நடைபாதையை தடைபாதையாக்கும் இந்த பேனர்களை எப்போது தான் அகற்றுவார்களோ..படம்: எல்.சீனிவாசன், சென்னைநீங்களும் இது போன்ற வித்தியாசமான படங்கள்,பேனர்,சுவர் ஓவியம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உண்மையானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். மறக்காமல் போன் எண்ணைக்குறிப்பிடவும், நன்றி!
14 / 20
உள்ளங்கள் அழகானால்...: சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்துள்ள கொளத்தூரில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் அழகர்சாமி. காக்கி சீருடைக்குள் இருக்கும் கவிஞர் இவர். எதைப்பற்றியும் பார்த்த மாத்திரத்தில் கவிதை படைக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர்.அவ்வப்போது தனது கவிதையை தனது வாகனத்தின் பக்கவாட்டில் எழுதிவைத்து விடுவார்.சமீபத்தில் எழுதிய கவிதை இது.படம்:எஸ்.கோபி,மேட்டூர்.நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,சுவர் ஓவியம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்,நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும், மறக்காமல் போன் எண்ணைக்குறிப்பிடவும், நன்றி!
15 / 20
ஜஸ்ட் ஒரு மிஸ்டு கால்...: திருவள்ளூர் மாவட்டத்தில் ஏர் டெல் நிறுவனம் பதித்துள்ள கண்ணாடி இழை கேபிள்களை ஏதாவது ஒரு துறையினர் தோண்டும்போது சேதராம் செய்துவிடுகின்றனராம். இதனால் இந்த பகுதியில் தோண்டும் போது ஒரு போன் கூட செய்யவேண்டாம் ஜஸ்ட் ஒரு மிஸ்டு கால் கொடுங்க நாங்க பேசிக்குறோம் என்று போர்டு வைத்துள்ளனர்.படம்:சீனிவாசன்,திருவள்ளூர்நீங்களும் இது போன்ற போர்டு,பேனர்,சுவர் ஒவியம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உண்மையானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும், மறக்காமல் போன் எண்ணைக் குறிப்பிடவும்,நன்றி
16 / 20
வாழ்க,நடராஜன்...: நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த ஐந்தாவது வார்டு கவுன்சிலர் நடராஜன்
,இவருக்கு ஒவியர் என்றொரு இன்னோரு முகமும் உண்டு.இதன் காரணமாக தனது
வார்டில் யார் அனுமதிக்கிறார்களோ அவரது வீட்டின் சுவரில் ரத்த தானம்,மரம்
வளர்ப்பு உள்ளீட்ட விஷயங்களை வலியுறுத்தி தன் செலவில் அழகாக வரைந்து
கொடுத்துவருகிறார்.படம்:எஸ்.செந்தில்குமார்,சீர்காழிநீங்களும்
இது போன்ற சுவர் ஒவியம்,போஸ்டர்,பேனர் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள
முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள்
தரமானதாகவும், உங்களுடையதாகவும்,உண்மையானதாகவும் இருக்கட்டும்.மறக்காமல்
போன் எண்ணைக்குறிப்பிடவும்,நன்றி!
17 / 20
இப்போதுதான் தோன்றுகிறதா...: கடந்த இரண்டு வருடங்களாக சரியான மழை இல்லாமல் வாடிப்போயிருந்த மண்ணில் நாகை மாவட்டத்தில் உள்ள சீர்காழி மண்ணும் ஒன்றாகும்.இப்போது கொஞ்சம் மழை பெய்து வருகிறது.மழை இல்லாத போது தண்ணீரின் அருமையை உணர்ந்த நகரசபை நிர்வாகம் இப்போது மழை நீர் சேகரிப்பையும்,தண்ணீரின் அருமையையும் விளக்கி ஆங்காங்கே பேனர் வைத்துள்ளது.படம்:எஸ்.செந்தில்குமார்,சீர்காழிநீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு அனுப்பலாம்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்,மறக்காமல் போன் எண்ணைக்குறிப்பிடவும்,நன்றி!
18 / 20
அதென்னங்க உண்மை விசுவாசி...: இப்போதெல்லாம் அதிமுக பிரபலங்கள் ஏதாவது ஒரு பேனர் வைத்து அதில் அம்மாவின் உண்மை விசுவாசி என்று எழுதிவருகின்றனர்.அப்படியானால் பொய்யான விசுவாசிகள் நிறைய பேர் இருக்கிறார்களோ? என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது.இங்கே எங்கும் காணமுடியாத வண்ண மயமான மூளையின் படத்தைப்போட்டு அதன் முன்னால் முதல்வரின் படத்தையும் போட்டு மறக்காமல் உண்மை விசுவாசி என்று எழுதிவைத்துள்ளார் இவர்.படம்:சத்யசீலன்,சென்னை.நீங்களும் இது போன்ற பேனர்,போஸ்டர்,சுவர் ஒவியம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உண்மையானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும், மறக்காமல் உங்கள் போன் எண்ணைக்குறிப்பிடவும்,நன்றி!
19 / 20
வெளியில் விடவேண்டியது...: சின்னியம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தின் வாசலில் எழுதி வைத்துள்ள இந்த வாசகத்தால் கவரப்பட்ட வாசகர் ஒருவர் தனது மொபைல் போன் கேமிராவில் இதனை பதிவு செய்து அனுப்பியுள்ளார்,ஆனால் தனது பெயரை பதிவு செய்ய மறந்துவிட்டார்.நீங்களும் இது போன்ற வித்தியாசமான சுவர் எழுத்து,பேனர்,போஸ்டர் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின் அஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்,மறக்காமல் போன் எண்ணைக்குறிப்பிடவும்,நன்றி!
20 / 20
இவர்களுக்கும் கொடுக்கலாமே...: சாதி,மதத்தில் ஏற்ற தாழ்வு பாராமல் படிக்க விரும்பும் அனைத்து ஏழை,எளிய மாணவ, மாணவியருக்கும் கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மழையையும் பொருட்படுத்தாமல் நிறைய ஏழை மாணவர்கள் அதற்கான பாததகைகளை பிடித்தபடி வந்திருந்தனர்,நிறையவே பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் போலும்.இந்த மாணவர்கள் கேட்பது போல ஏழை,எளிய இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்குவதில் என்ன சிரமமோ புரியவில்லைபடம்:எஸ்.ரமேஷ்,சென்னைநீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர், பேனர், சுவர் ஒவியம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உண்மையானதாகவும் உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும், மறக்காமல் உங்கள் போன் எண்ணைக்குறிப்பிடவும், நன்றி!