போஸ்டர்ர்ர்...

13-Apr-2013
1 / 20
பார்ரா...மனிதநேயத்தை...: மூலப்பொருட்கள் விலையேறும் போது ஏற்றிய விலையை யாரும் குறைப்பது இல்லை,அதிலும் குறிப்பாக ஒட்டல்காரர்களைப் பொறுத்தவரை ஒன்வேதான்.,விலையை ஏற்றினால் ஏற்றியதுதான்.இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒட்டலில் மூலப்பொருட்கள் விலை குறைந்ததால் தாங்களும் உணவுப்பொருளின் விலையை குறைத்தாக எழுதிவைத்துள்ளனர்.பாரட்டப்பட வேண்டிய விஷயம்தான்.படம்:பி.வேல்முருகன்நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,சுவர் ஒவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
2 / 20
எப்படியெல்லாம் சொல்லவேண்டியிருக்கு...: இலங்கை தமிழரை காப்பாற்றுவதற்குள் இங்குள்ள நம் மீனவ தமிழர்கள் பலரை இழந்துவிடுவோம் போலிருக்கிறது. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், கைது நடவடிக்கை போன்றவை முன்பு எப்போதவாது நடந்து கொண்டு இருந்தது. இப்போதோ அது அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது. கேரள மீனவர்கள் சுடப்பட்ட சம்பவத்தில் கொந்தளித்த பிரதமர் தமிழக மீனவர்கள் விஷயத்தில் ஏன் அநியாயமாக மவுனம் சாதிக்கிறார் என்பது புரியாததால், தமிழக மீனவர்களும் இந்தியர்களே என்று பொருள்படும்படி சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் களமிறங்கியிருந்தனர்.படம்: எஸ்.ரமேஷ்நீங்களும் இது போன்ற பேனர், போஸ்டர், கேலிச்சித்திரம், சுவர் ஓவியம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உண்மையானதாகவும்,< உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். நன்றி!
3 / 20
இங்கே எந்த பஸ் நிற்கும்...?: சென்னை யானை கவுனியில் பொதுமக்கள் உபயோகத்திற்காக திறக்கப்பட்ட பஸ் நிலையத்தில் முதல்வரின் படம், அவரது சாதனைகள் என்று திரும்பிய பக்கமெல்லாம் தெரியும்படியாக ஒட்டிவைத்திருந்தனர். சந்தோஷம். ஒரு பஸ் நிலையம் கட்டி கொடுத்திட்டு இதைக்கூட செய்யலைன்னா அப்புறம் அது நம்ம கலாச்சாரத்திற்கே இழுக்காயிற்றே... நாம சொல்ல வந்தது என்னவென்றால், இவ்வளவு எழுதியவர்கள் ஒரு ஒரத்தில், இந்த நிறுத்தத்தில் எந்த ,எந்த பஸ், எத்தனை மணிக்கு வரும் என்பது போன்ற விவரத்தை ஒரு ஓரத்திலாவது எழுதியிருக்கலாமே என்பதுதான்.படம்: சந்திரசேகர்நீங்களும் இது போன்ற வித்தியாசமான படங்கள், பேனர், போஸ்டர் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உண்மையானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். அவசியம் உங்கள் தொடர்பு எண்ணைக் குறிப்பிடவும். நன்றி!
4 / 20
பாலசந்திரனை வைத்து...: சமீபகாலமாக அதிகம் அடிக்கப்பட்ட போஸ்டர்,எழுதப்பட பேனர்,சிங்கள சிப்பாய்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பாலகன் பாலச்சந்திரனுடையதாகத்தான் இருக்கும்.இப்போது அதிமுகவினரால் சென்னையில் பிரம்மாண்டமான பேனர் வைக்கப்பட்டுள்ளது.இதில் முன்னாள் முதல்வரை சனி என்றும் என்றும் டில்லி காங்கிரசை பிணி என்றும் கவிதையாலேயே வசைபாடி இருக்கின்றனர்.நாற்பதை வென்ற பிறகு கச்சத்தீவை மீட்கவேண்டும்,அதன்பிறகு மிச்சத்தீவையும் சேர்க்கவேண்டும் என்று முதல்வரை கேட்டுக்கொண்டுள்ளனர்.எல்லாம் சரி, இந்த அரசியலில் பாலசந்திரனை பகடையாக உருட்டுவதுதான் வேதனையாக இருக்கிறது.படம்:சிவாநீங்களும் இது போன்ற வித்தியாசமான பேனர்,போஸ்டர்,கேலிச்சித்திரம்,சுவர் ஒவியம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்.உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
5 / 20
உழவாரப்பணிக்கு வாரீங்களா..: காஞ்சிபுரம் என்றாலே கோயில் நகரம் என்றுதான் சொல்லவேண்டும்.,அந்த அளவிற்கு கோவில்கள் நிறைந்த காஞ்சியில் உள்ள ஸ்தல சயனப்பெருமாள் கோவில் ரொம்பவே சிதிலமடைந்து போய்விட்டதாம்.,சம்பந்தபட்ட நிர்வாகம் கவனிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்,நாமே சேர்ந்து சுத்தப்படுத்தலாம் வாருங்கள் என்று இந்த போஸ்டரின் மூலம் அழைப்பு விடுத்துள்ளனர்.படம்:மாசிலாமணிநீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,சுவர் ஒவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
6 / 20
சொல்லுங்க நியாயமாரே...: மலிவு விலை உணவகத்தில் அதாங்க அம்மா உணவகத்தில் மகளிர் சுய உதவி குழுவில் இருப்பவர்களுக்குதான் முதல் வாய்ப்பு தரவேண்டும் என்று உள்ளதாம்.இந்த விதியை மீறி உறுப்பினராக இல்லாத அதிமுக பிரமுகர்களின் மணைவிமார்களுக்கு இடம் கொடுப்பது நியாயமா?என்று பாமகவைச் சேர்ந்த வனிதா குபேந்திரன் போஸ்டர் ஒட்டி நியாயம் கேட்டுள்ளார்.சொல்லுங்க நியாயமாரே...படம்:எம்.ராஜேஷ்நீங்களும் இது போன்ற போஸ்டர்,பேனர்,சுவர் ஒவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். அவசியம் உங்கள் தொடர்பு எண்ணைக்குறிப்பிடவும்.நன்றி!
7 / 20
ஆமாம்...ரொம்ப கரெக்டுங்க...: வீட்டில சும்மா சாப்பிட்டுவிட்டு,செலவுக்கு பணம் வாங்கிக்கொண்டு,வேலை வெட்டி இல்லாம சுத்திகிட்டு இருக்கிறவங்க, நாட்டில ரொம்ப பேரு இருக்காங்க...இதுல திருவள்ளூரைச் சேர்ந்த இவரும் ஓருத்தர் போல.,தான் வேலையில இல்லைங்றதை நகைச்சுவையாக தனது வண்டியில எழுதிப்போட்டிருக்காரு...வாசிக்கும் போது சிரிப்பாத்தான் இருக்கு.,ஆனா வாழ்க்கையே சிரிப்பாயிடாம பார்த்துக்கிறது நல்லது.படம்:சீனிவாசன்நீங்களும் இது போன்ற வித்தியாசமான படங்கள்,போஸ்டர்,பேனர்,கேலிச்சித்திரம்,சுவர் ஒவியம் போன்றவைகளை கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.அவசியம் போன் எண்ணைக்குறிப்பிடவும்.நன்றி!
8 / 20
எப்படி துண்டு போடுறாங்கப்பா...: ஈழத்தமிழருக்கான திருச்சி சிவாவின் குரலை,மாநிலங்களவையில் கேட்டது போல மக்களவையிலும் கேட்க வேண்டுமாம்... லோக்சபா தேர்தல் அறிவிப்பே வரவில்லை, ஆனால் அதற்குள் திருச்சி தொகுதி எம்.பி.,சீட்டை , சிவாவிற்கு நாசூக்காக கேட்கும் விதத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.படம்:தியாகராஜன்நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,கேலிச்சித்திரம்,சுவர் ஒவியம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.அவசியம் உங்கள் தொடர்பு எண்ணைக்குறிப்பிடவும்.நன்றி!
9 / 20
எங்களுக்கும் உணர்வு இருக்கு...: இலங்கை தமிழர் பிரச்னையில் அதிகம் விமர்சனத்திற்கும், கோபத்திற்கும் உள்ளாகியிருப்பவர்கள், இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு அடுத்தபடியாக காங்கிரஸ்காரர்கள் என்றுதான் சொல்லவேண்டும். பொதுக்கூட்டம் கூட நடத்தமுடியாத அளவிற்கு பயந்து போயிருக்கின்றனர்.ஆனாலும் இலங்கை தமிழர் நலனில் எங்கள் தலைவர் வாசன் என்னவெல்லாம் நடவடிக்கை எடுத்திருக்கிறார் பாருங்கள் என்று சொல்லும் விதத்தில் சென்னை முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.படம்: எம்.ராஜேஷ்நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர், சுவர் ஓவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். நன்றி!
10 / 20
என்றும் வாழ்வார்...: ஒருவர் இறக்கப்போகிறார் என்று தெரிந்தால், கண் முதல் கல்லீரல் வரை உடலின் பல்வேறு உறுப்புகளை தானம் செய்யலாம். தானம் செய்யும் உறுப்புகளுக்காக பலர் பல காலமாக ஆஸ்பத்திரிகளில் படுத்த படுக்கையாக இருக்கிறார்கள். இருந்தாலும் இறந்தபிறகு தானம் செய்வது குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. இந்த நிலையில் சென்னை ஆல்தோட்டம் வியாபாரிகள் சங்க தலைவர் தங்கராஜ் இறந்ததும், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ததன் மூலம் ஆறு பேர் பலன் அடைந்துள்ளனர். உண்மையில் தங்கராஜ் இறக்கவில்லை, இந்த ஆறு பேரின் உருவத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.படம்: சிவாநீங்களும் இது போன்ற போஸ்டர், பேனர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து அனுப்பலாம். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உண்மையானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். அவசியம் உங்கள் தொடர்பு எண்ணைக்குறிப்பிடவும். நன்றி!
11 / 20
முதல் படி..: ஒரு பெண் ஆடை உடுத்தியிருப்பதை பார்த்தால் கும்பிடத்தோன்ற வேண்டும்... என்று ஒரு பழமொழி உண்டு. அதை வலியுறுத்தும் வகையில் ராமநாதபுரத்தில் ஓடும் இந்த ஆட்டோவின் பின்னால் எழுதப்பட்டு உள்ளது.படம்: தியோடர்நீங்களும் இது போன்ற வித்தியாசமான படங்கள், போஸ்டர், பேனர், கேலிச்சித்திரம், சுவர் ஓவியம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உண்மையானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். நன்றி!
12 / 20
ஊறுகாய்கூட கொண்டுவரக்கூடாது...: படவிளக்கம்: சென்னை வடசென்னையில் உள்ள டாஸ்மாக் கடையோடு இணைந்த ‘பார்’ பகுதியில், டாஸ்மாக் கடைக்கு வருகிறவர்கள் ‘சைடு டிஷ்ஷாக’ எதுவும் கொண்டு வரக்கூடாது, ஊறுகாய் வேணும்னாலும் அதையும் நாங்கதான் தருவோம், எல்லாத்துக்கும் காசு மட்டும் நீங்க தந்தா போதும்... என்ற அர்த்தத்தில் எழுதிவைக்கப்பட்டுள்ள போர்டு. உள்ளே வருபவர்களிடம் இருப்பதை எல்லாம் பெரும்பாலும் உறிஞ்சிவிட்டு, டவுசரோடுதானே வெளியே துõக்கிப் போடுகின்றனர். அப்புறம் எதுக்கு இந்த போர்டு.
படம் :எம்.ராஜேஷ்
13 / 20
இன்று யார் தினம்?: இப்போது ஏதோ ஒரு வகையில் எல்லா நாளுமே, நாம் முட்டாளாக்கப்படும் நாளாக இருப்பதால், முன்பு போல ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு, முன்பு இருந்த முட்டாள் தின முக்கியத்துவம் இல்லை.,இருந்தாலும் நெல்லை-செங்கோட்டைக்கு இடையே கூடுதல் பயணிகள் ரயில் விடுவதாகக்கூறி காலங்கடத்தி எங்களை முட்டாளாக்காதீர் என்று இந்த போஸ்டர் சொல்லுகிறது.படம்:பாலாஜி சுந்தர்நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,சுவர் ஒவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்,அவசியம் உங்கள் தொடர்பு எண்கைக்குறிப்பிடவும்.நன்றி!
14 / 20
தலைகுனியச் செய்யும் மது...: மதுவின் தீமைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.எந்த குற்றம் நடந்தாலும், அதன் பின்னனியில் மது ஒட்டிக்கொண்டு உள்ளது.இதன் காரணமாக மதுவிற்கு எதிரான பிரச்சாரங்களும் தீவீரப்படுத்தப்பட்டு உள்ளது.மதுவை ஒழித்து வீட்டிற்கும்,நாட்டிற்கும் நல்லது நடக்க விரும்பும் இயக்கத்தினர் சமுதாயத்தின் மீது கொண்டுள்ள அக்கறை காரணமாக வைத்துள்ள மது எதிர்ப்பு பேனர்.படம்:நந்தகோபால்.நீங்களும் இது போன்ற பேனர்,போஸ்டர்,சுவர் ஒவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.மறக்காமல் உங்கள் தொடர்பு எண்ணைக்குறிப்பிடவும்.நன்றி!
15 / 20
புறப்படும்போது சரியாத்தான் இருக்கு...: பிள்ளைகளை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்பும் பெற்றோர்கள், ஐந்து பேருக்கு மேல் இருந்தால் அனுப்பாதீர்கள் என்று போலீஸ் போர்டு வைத்துள்ளது.,நம்ம வீட்ல வந்து ஏற்றும் போது,‘ உங்க பிள்ளை மட்டும்’தான்னு சொல்லித்தானே ஏத்துராங்க...பள்ளிக்கூடத்திற்கு போய் இறக்கும் போதுல்ல தெரியுது, இருபதாவது புள்ளைய நம்ம புள்ள நசுங்கி இறங்குதுன்னு...இதுல ஆட்டோ ஒட்டுனர் மற்றும் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கையாம்,ஊரில் ஒடும் பாதி ஆட்டோக்களின் உரிமையாளர்களே போலீஸ்காரங்கதான், அப்புறம் எப்படி கடும் நடவடிக்கை என்று தெரியவில்லைபடம்:சி.மாரியப்பன்.நீங்களும் இது போன்ற போஸ்டர்,சுவர் ஒவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.மறக்காமல் உங்கள் தொடர்பு எண்ணைக்குறிப்பிடவும்.நன்றி!
16 / 20
இதுக்கு ஒரு வரவேற்பா?: தண்ணியில்லாமா காய்ஞ்சுகிடக்கிற மண்ணையும், மனுஷங்களையும் பார்த்து ஆறுதலும், தேறுதலும் சொல்லி மேற்கொண்டு ஆகவேண்டியதை பார்க்க வேண்டியது அமைச்சர்களோட கடமை. ஆனால் ஏதோ பூச்சொரியல் விழாவிற்கு வர்ரவங்களை வரவேற்கிற மாதிரி வரவேற்று, பேனர் வச்சிருக்கிறதைப் பார்த்தா சம்பந்தபட்டவங்க இன்னும் நொந்துபோகமாட்டாங்க?.படம்: அரவிந்தன்.நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர், பேனர், சுவர் ஓவியம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உண்மையானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். தொடர்புக்கு உங்கள் போன் எண்ணை அவசியம் குறிப்பிடவும். நன்றி!
17 / 20
இதற்குமா அம்மாவின் ஆணை தேவை?: சுள்ளென்று அடிக்கும் இந்த வெயில் காலத்தில் உடல், மன கஷ்டத்துடன் படியேறிவரும் பக்தர்களுக்கு எது தருகிறோமோ இல்லையோ குடிப்பதற்கு நல்ல குடிநீர் தருவது என்பது மிக முக்கியம். இதற்கு யாருடைய உத்தரவையோ, ஆணையையோ எதிர்பார்க்காமல் தங்களுக்கு உள்ள அதிகாரத்தின்படியே திருத்தணி கோவில் நிர்வாகம் தந்திருக்கலாம்.,ஆனால் அம்மாவின் ஆணைக்கிணங்க என்று குடிநீர் தந்துவருகிறார்கள், எப்படியோ தாகம் தீர்த்தால் சரி.படம்:சீனிவாசன்நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,சுவர் ஒவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.அவசியம் உங்கள் போன் எண்ணைக்குறிப்பிடவும்.நன்றி!
18 / 20
இந்த நாடு எங்கே இருக்கு?: தமிழ்பற்று இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும்,காட்ட வேண்டிய இடத்தில் காட்டவேண்டும்.,எல்லோருக்கும் பொதுவான நம்பர் பிளேட்டில் இப்படி எழுதினால் எப்படி,அதுவும் போக தமிழ்நாடு என்று வர வேண்டிய இடத்தில் திருமா நாடு என்று வேறு எழுதியுள்ளனர்,அந்த நாடு எங்கே இருக்கு என்று சொன்னால் தேவலை.படம்:வெங்கட் நீங்களும் இது போன்ற வித்தியாமான படங்கள்,போஸ்டர்,பேனர்,சுவர் ஓவியம் போன்றவைகளை கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்,உங்கள் தொடர்பு போன் அவசியம் குறிப்பிடவும்.நன்றி!
19 / 20
மதுவை ஒழிப்போம்...: மதுவின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது போல ,மதுவிற்கு எதிரான பிரசாரமும் அதிகரித்து வருகிறது,கொஞ்சம் ஆறுதலான விஷயம்தான்.ஒரு டீக்கடைக்காரர் ஆழமான அர்த்தத்துடனும்,அக்கறையுடனும் வைத்துள்ள பேனர்.படம்:ஆர்.சீனிவாசகம்நீங்களும் இது போன்ற வித்தியாசமான படங்களை எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உண்மையானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.படங்களுடன் அவசியம் உங்கள் தொடர்பு எண்ணைக்குறிப்பிடவும்.,தொடர்பு எண் இல்லாமல் வரும் படங்கள் ஏற்கப்பட மாட்டாது. நன்றி!
20 / 20
அப்பவே செஞ்சிருக்கலாமே...?: கூட்டணியில் இருந்து விலகல்,அமைச்சரவை ராஜினாமா என, இலங்கை தமிழருக்கு ஆதரவாக திமுக தலைவர் கருணாநிதி தற்போது எடுத்துவரும் முடிவுகள் தொடர்பாக சென்னை எங்கும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.படம்:சத்தியசீலன்நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,கேலிச்சித்திரம்,சுவர் ஒவியம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தொடர்பாக உங்களிடம் பேசிவிட்டே படங்களை பிரசுரிக்கவேண்டி இருப்பதால் அவசியம் உங்களுக்கான தொடர்பு எண்ணை குறிப்பிடவும்.நன்றி!
Advertisement