போட்டூன்

25-மே-2019
1 / 20
பாரதி தரிசனம்: பாரதியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் அவர் வாழ்ந்த வீடு இந்த வருடம் நன்கு அலங்கரிக்கப்பட்டு இருந்தது.வீட்டி ன் வெளியில் இருந்து பார்த்தாலே பாரதியின் படத்தை பார்க்கும்படியாக வைத்திருந்தனர்.படம்:கருணாகரன்,புதுச்சேரி
2 / 20
வாழைப்பூ வடை கடையாம்...: திருவண்ணாமலை கிரிவலம் வருபவர்கள் வாழைப்பூ வடை எதுவும் வாங்கிச் சாப்பிடவேண்டும் என்பது சங்கல்பம் போலும் வழியெங்கும் வாழைப்பூ வடை கடை.கடையை ஞாபகப்படுத்துவதைப் போல வாழைப்பூவாலேயே தோரணம்கட்டி உள்ளனர்.
3 / 20
ரொம்பவே 'மூத்த' வேட்பாளர்...: நீண்ட அரசியல் இழுபறிக்கு பிறகு ஆர்கே நகர் இடைத்தேர்தலின் அதிமுக வேட்பாளராக மதுசூதனன் நிறுத்தப்பட்டுள்ளார்.மூத்த உறுப்பினர் என்ற முறையில் இவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதாக கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.இவ்வளவு மூத்த வேட்பாளர் தொகுதியில் ஒடியாடி வேலை செஞ்சா சரி.
4 / 20
உன்னைவிட ...: சென்னையில் மாற்றுத்திறனாளிகளின் நடிப்பு உள்ளிட்ட திறமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் 'நடிப்புக் கொட்டகை' பயிற்சி மையம் துவக்கப்பட்டு உள்ளது. இதனை குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்க பார்வையாளராக வந்திருந்த மாற்றுத்திறனாளி ஒருவரையே அழைத்து, விழாவிற்கு சிறப்பு சேர்த்தனர்.படம்:எல்.முருகராஜ்.
5 / 20
செல்பி எடுக்கிற இடமாப்பா இது...: ஊரில் உள்ள கழிவுகளை எல்லாம் கொண்டு போய் கலந்ததாலோ என்னவோ சென்னை மெரினா கடலின் நிறமே கறுப்பாக மாறிவிட்டது.இதனை வேடிக்கை பார்க்க வந்தவர்களில் இப்படி செல்பி எடுத்துக்கொண்டோரும் உண்டு ஒரு அலை பெரிதாக வந்தால் லைக்வராது லைப்போயிரும்...படம்:எல்.முருகராஜ்
6 / 20
எவ்வளவு பெரிய்ய்ய வெடி...: தீபாவளி கொண்டாட்டத்தை கொண்டுவரும் விதத்தில் சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் பெரியளவில் வெடிக்காத டம்மி வெடிகளை கண்காட்சியாக வைத்துள்ளனர்.
7 / 20
இதுவன்றோ கடமை...: திருமலையில் உள்ள ஸ்ரீவாரி புஷ்கரணி எனப்படும் குளத்தில் குளித்து எழுபவர்களின் அனுபவ பேட்டியை சுடச்சுட எடுப்பதற்காக அவர்கள் கரைக்கு வரும்வரை கூட காத்திருக்காமல் தண்ணீருக்கு உள்ளேயே இறங்கி பேட்டி எடுக்கும் மீடியா...
8 / 20
மனிதர்களின் முதுகில் குதிரை: மனிதர்களை குதிரைதான் துாக்கணுமா? ஒரு மாறுதலாக இங்கே மனிதர்கள் குதிரையை துாக்கி செல்கின்றனர்.பொம்மை குதிரையை துாக்கி செல்வது திருமலை தேரில் பொருத்துவதற்காக..படம்: எல்.முருகராஜ்
9 / 20
மண்ணும் மனமும் குளிருது.. : திருமலையில் பிரம்மோற்சவம் ஆரம்பித்த நாள் முதல் மழை பெய்துவருகிறது.வழக்கமாக இந்த திருவிழாவின் போது தண்ணீர் பிரச்னை காணப்படும் இப்போது பெய்துவரும் மழை காரணமாக தண்ணீர் பிரச்னை இல்லை பக்தர்கள் மனமும்,மண்ணும் குளிர்ந்து போயுள்ளது. படம்:எல்.முருகராஜ்
10 / 20
டில்லியில் தமிழன் படும்பாடு...: விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பிரச்னைகளுக்காக டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை பாதுகாப்பு படையினர் அப்புறப்படுத்திய லட்சணம்.
11 / 20
தண்ணிய பார்த்தால் குளிச்சுரணும்...: சென்னையில் இன்னமும் முழுமையாக தண்ணீர் பிரச்னை தீர்ந்தபாடில்லை.தினசரி குளிப்பது எனபது பலருக்கு இயலாத காரியமாக போய்க்கொண்டு இருக்கிறது.இதனால்தானோ என்னவோ ரயிலில் நீர் நிரப்பும் தண்ணீர் குழாயில் இருந்து வீணாக வெளியேறும் தண்ணீரை பார்த்த உடன் ஒரு அப்பாவும் பிள்ளையும் குளித்தனர்.
12 / 20
போதைப்பொருள் உஷார்...: தமிழகத்தில் இளைஞர்கள்,மாணவர்களை குறிவைத்து விதவிதமான போதைப்பொருள்கள் ஊடுருவி வருகிறது.சென்னையில் பிடிபட்ட 100 கிலோ மாவா என்ற போதைப்பொருள் இது. டாஸ்மாக் அரக்கனையே ஒழிக்க முடியாத நிலையில் இப்படி புதுப்புது போதைப்பொருள் வருவது பகீரென்கிறது, பெற்றோர்களும் இளைஞர்களும் உஷராக இருக்கணும்.
13 / 20
அதிமுகவில் இது எந்த அணி?: திருச்சி வந்த முதல்வர் பழனிசாமியை வரவேற்க வந்த அதிமுகவின் சிறுவர் அணி?படம்:வீரமணிகண்டன்,திருச்சி.
14 / 20
இப்ப சொல்லுங்க பஸ் யாருது...: சென்னை அரசு பஸ்சில் பயணம் செய்யும் இரு கல்லுாரி மாணவர்கள், யாருக்கு அதில் அதிகம் உரிமை என்பதில் தகராறு செய்து கொண்ட தில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.இரு கல்லுாரி மாணவர்களையும் போலீசார் பிடித்துச் சென்று காவல் நிலையத்தில் உட்காரவைத்தனர்.பின் இது பொதுமக்களுக்கான பஸ் இனிமேல் நாங்கள் எந்த தொந்திரவும் செய்யமாட்டோம் என எழுதிவாங்கிக்கொண்டு அனுப்பினர்.படம்:எஸ்.ரமேஷ்
15 / 20
பெருங்கலவரத்தூர்...: நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு ஒட்டுமொத்தமாக சென்னை திரும்பியவர்களின் வாகனங்களால் பெருங்களத்தூர் போக்குவரத்து சிக்கலில் சிக்கி பெருங்கலவரத்துாரா கியது.காலை 6 மணிக்கு பெருங்களத்துார் வந்தவர்கள் 8 மணிக்கு பிறகே பெருங்களத்துாரை தாண்டினார்கள், அநேகமாக பலர் ஐந்தாவது நாளும் விடுமுறை எடுத்திருப்பர்.படம்:மாரியப்பன்,சென்னை.
16 / 20
குனியாமல் கும்பிடு...: சென்னையில் சுதந்திரதினவிழாவிற்கு வந்த முதல்வர் பழனிச்சாமியை அமைச்சர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் குனியாமல் நிமிர்ந்து நின்றே கும்பிட்டு வரவேற்றனர்.
17 / 20
தாயின் மணிக்கொடி...: 70வது சுதந்திர தினவிழாவினை கொண்டாட நாடு முழுவீச்சில் தயராகிக்கொண்டு இருக்கிறது.காஷ்மீர் இளைஞர்கள் தேசியக்கொடியுடன் உலா வருகின்றனர்.
18 / 20
நானும் ஒத்திகை பார்த்துக்கிறேன்...: சென்னையில் நடந்த சுதந்திர தின ஒத்திகையின் போது...படம்:காயத்ரி.
19 / 20
எங்கெங்கும் டெங்கு: கொசுவினால் பரவும் டெங்கு நோய் அதிகம் பரவுதை தடுக்க பொது இடங்களில் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டு வருகிறது சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்ட நிலவேம்பு. கஷாயம்.
20 / 20
முடியல மிஸ்டர் சூரியன்...: மே மாதத்தோடு உஷ்ணத்திற்கு ஓய்வு கொடுக்கவேண்டிய சூரியன், ஜூன் போய் ஜூலையும் முடியப்போகிறது இன்னும் அக்னி நட்சத்திர வெயில் போல உஷ்ணத்தைக் கொடுத்து கொண்டிருந்தால் மக்கள் எப்படித்தான் தாங்குவார்கள்.சென்னை அரசு விழாவிற்கு வந்த பொதுமக்கள் வெயில் தாங்காமல் தவித்தனர்.
Advertisement