போட்டூன்

27-ஏப்-2016
1 / 20
கையது கொண்டு மெய்யது பொத்தி:: போதும்,போதும் இதுக்கு மேலே பம்முனுங்கீனின்னா? பார்க்கிறவங்க என்னைய என்னன்னு நினைப்பாங்க..கிணத்துக்கடவு திமுக வேட்பாளர் பிரபாகரனும்,கனிமொழியும்.படம்:சிவகுருநாதன்,கோவை
2 / 20
எனக்கொரு கவலை இல்லை...: சும்மாவே அரசியல்வாதிகள் பரபரப்பாக இருப்பர்,இப்போது தேர்தல் நேரம் இறக்கை கட்டாத குறையாக பறப்பார்கள்,ஆனால் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கோ முதலில் டென்னிஸ் விளையாட்டு மற்றதெல்லாம் பிறகுதான்.படம்:புருஷோத்தமன்,புதுச்சேரி
3 / 20
சூரியனை தாங்கமுடியாத சூரியன்...: திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் தனது பிரச்சாரத்தை வெயிலில் துவக்கினார்.குளு குளு வேனில் இருந்து மேடைக்கு வருவதற்குள் அவருக்கு வேர்த்து கொட்டியதால், தனது துண்டால் துடைத்தபடியே வந்தார்.படம்:எல்.முருகராஜ்.
4 / 20
எப்பிடி குறைக்கிறது: 'அம்மா' மீட்டிங் போகணும் வெய்யில் உட்காரணும் அதுனால நல்லா தண்ணி சாப்பிட்டுவிட்டு வாங்கண்டு சொன்னத ரத்தத்தின் ரத்தங்கள் தப்பா புரிஞ்சுகிட்டாங்கா போலும்.சேலம் மகுடஞ்சாவடி டாஸ்மாக் கடையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்,உங்களை நம்பி எப்பிடிப்பா படிப்படியா குறைக்கிறது.
5 / 20
முதல் தியாகி மரம்தானே...: சென்னை,தாம்பரத்தில் மூன்றாவது ரயில் முனையம் ஏற்பட இருப்பதையொட்டி அந்த பகுதியில் உள்ள மரங்கள் பலவும் வெட்டப்பட்டு வருகின்றன.வளர்ச்சிக்காக என்றாலும் வளர்ந்த மரத்தை வெட்டும் போது ஒரு வருத்தம் வரத்தான் செய்கிறது,பதிலுக்கு பத்து மரம் நட்டால் பராவாயில்லை.படம்:தாம்பரம்,மாரியப்பன்.
6 / 20
கள் வாங்கலையோ கள்...: தேர்தல் நேரத்தில் ஒரு பிரச்னையை சொன்னால் அதை ஏற்றுக்கொள்கிறார்களோ? இல்லையோ? ஆனால் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள்.தமிழ்நாடு கள் இறக்கும் இயக்கத்தினர் திருச்சியில் கள் விற்பனை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டதும் அந்தவகையை சேர்ந்ததுதான் போலும்.
7 / 20
தோழி இல்லாமலா: முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்யும் இடங்களுக்கு கூடவே செல்லும் தோழி சசிகலாவிற்கு பிரச்சார மேடைக்கு பக்கத்திலேயே நாற்காலி போடப்படுகிறது.முதல்வர் ஜெயலலிதா சென்னையில் பேசிய அதே பேச்சைத்தான் திரும்ப திரும்ப பேசுகிறார் என்றாலும் அப்போதுதான் கேட்கும் பொதுமக்கள் போலவே தானும் கேட்டு கைதட்டி தோழியை உற்சாகப்படுத்துகிறார்.
8 / 20
ஏன் உம்முனு இருக்காரு: மாமண்டூர் மக்கள் நல கூட்டணி மாநாட்டிற்கு வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வாசன் மட்டும் முகத்தில் அதிகம் மகிழ்ச்சியை காட்டாமல் உம் மென்றே இருந்தார்,காரணம் என்னவோ...படம்:எல்.முருகராஜ்.
9 / 20
துண்டு போட்டுவைப்பது என்பது இதுதானோ...: சென்னையில் அதிமுக முதல் பிரச்சார கூட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கிவைத்தார்.இந்த கூட்டத்தில் அறிமுகப்படுத்த இருந்த வேட்பாளர்கள் எங்கே உட்கார வேண்டும் என்று ஜெயலலிதா வருவதற்கு முன் பயிற்சி கொடுக்கப்பட்டது.பயிற்சிக்கு பிறகு எழுந்து சென்ற வேட்பாளர் எங்கே நமது நாற்காலி பறிபோய்விடும் என நினைத்தாரோ என்னவோ தனக்கான கட்சி துண்டை போட்டுவிட்டு போனார்.படம்:எல்.முருகராஜ்.
10 / 20
இதுல எத்தனை பேர் தேறுவாங்களோ...: அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றவர்கள் சென்னையில் முதல்வரை பார்க்க பூங்கொத்துகளுடன் வந்தனர்.வேட்பாளர் பட்டியல் மாறிக்கொண்டே இருக்கும் சூழ்நிலையில் எத்தனை பேருக்கு பூங்கொத்து செலவு தண்டமாகப்போகிறதோ...படம்:சுரேஷ் கண்ணன்
11 / 20
வெட்றா குழியை போட்றா மின் விளக்கை...: பல மாதமாக தெருவிளக்கு இல்லாமல் இருண்டு கிடந்த சென்னை ஆர்கேநகர் தொகுதியில் நேற்று முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுவதாக அறிவிப்பு வந்த உடனேயே அவசரஅவசரமாக ரோட்டை வெட்டி மின்விளக்குகள் அமைப்பதற்காக வேலையை வேகமாக செய்தனர்.படம்:சத்யா
12 / 20
ஏதோ கருத்தா சொல்றாங்க போல...: கருத்து கணிப்பு வந்தாலும் வந்தது இப்பவே ஆட்சிக்கு வந்தது போல அதிமுகவினர் செயல் வீரர்கள் கூட்டத்தில் ரொம்ப மும்முரமாக இருக்கின்றனர். திருச்சியில் நடந்த ஒரு செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் வளர்மதி பேசுவதை ரொம்ப உன்னிப்பா நடிகர் ராமராஜன் கவனிக்கிறார்.
13 / 20
மழை 'தெய்வத்திற்கு' ஒய்வு...: 'அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்'... எனச்சொல்லியதன் மூலம் பள்ளி மாணவருக்கு விடுமுறையை வாரி வழங்கி மழை தெய்வமாக போற்றப்பட்ட சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர். ரமணன் ஒய்வு பெற்றார்.
14 / 20
யாராச்சும்....: பாஜகவின் சென்னை தேர்தல் அலுவலக திறப்பு விழாவின் போது எச்.ராஜாவின் பார்வை யாரையோ எதிர்பார்க்கிறதே..படம்:ராம்கிஷன்,சென்னை
15 / 20
'டைம்' வந்துருச்சா...: சென்னையில் நடந்த திமுக கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதியும்,ஸ்டாலினும் பேசிக்கொண்டிருக்க,துரை முருகனும்,அன்பழகனும் குட்டியாய் துாக்கம் போட்டுக்கொண்டிருக்க, பின்னால் இருப்பவர் அடிக்கடி தனது கைக்கெடிகாரத்தை பார்த்துக்கொண்டார்.
16 / 20
அப்ப பூ வாங்க வரலையா நீங்க...: பூ விற்கும் பெண்களிடம் துண்டு பிரசுரத்தை கொடுத்து பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி விருதுநகரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
17 / 20
காப்பாத்தமாட்டாங்க...: நீலகிரி, கூடலுார் பகுதியில் மக்களை மிரட்டிக்கொண்டு இருக்கும் ஆட்கொல்லி புலியை பிடிக்க பரண் அமைத்து துப்பாக்கியுடன் காத்திருக்கும் வனத்துறையினர்.ஆக மொத்தத்துல புலிகள்கிட்ட இருந்து மக்களையும் காப்பாத்தமாட்டாங்க,உயிர்ச்சுழலுக்கு அவசியமான புலிகளையும் காப்பாத்தமாட்டாங்க.
18 / 20
இப்பவே ஆரம்பிச்சாச்சா...: இன்னும் கூட்டணி முடிவாகவில்லை, தொகுதி பிரிக்கப்படவில்லை, வேட்பாளர் அறிமுகப்படுத்தவில்லை, அதற்குள் யாருக்கு பணம் பட்டுவாடா செய்யப்போகிறார்கள் என்பது புரியவில்லை.திருச்சியில் பறக்கும் படையால் கைப்பற்றப்பட்ட இரண்டு கோடியே எண்பது லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்...படம்:மணிகண்டன்,திருச்சி.
19 / 20
கிரகணம் பார்க்கிறோம்...: சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது என்பதற்காக அதற்கான விசேஷ கண்ணாடியின் மூலம் சென்னை பெசண்ட் நகரில் பார்வையிட்ட மக்கள்.படம்:திருப்பதி,சென்னை
20 / 20
நாங்களும் குத்தாட்டம் போடுவோம்ல...: சென்னையில் எந்தஅரசியில் கட்சி கூட்டம் என்றாலும் அதில் மகளிர் அணியினரின் குத்தாட்டம் தவறாமல் இடம்பெறும். இந்த குத்தாட்டம் இப்போது திருச்சிக்கும் பரவிவிட்டது.அங்கு நடைபெற்ற திமுக மகளிர் அணி கூட்டத்தில் இடம் பெற்ற தப்பாட்டத்திற்கு குத்தாட்டம் போட்டனர்.படம்:மணிகண்டன்,திருச்சி.
Advertisement