விளங்கவேண்டியவர்களுக்கு விளங்குமா?- கார்ட்டூன்: மதுரை ஜெயராமன்: விளங்கவேண்டியவர்களுக்கு விளங்குமா?- கார்ட்டூன்: மதுரை ஜெயராமன்
நமது உயிர் ஆதாரமான நீர் நிலைகளை எல்லாம் ‘பிளாட்’ போட்டு
விற்றுவிட்டோம், மணலை சுரண்டி, சுரண்டியே ஈரப்பதம் தங்காமல்
செய்துவிட்டோம், கழிவு நீரைக் கலந்து ஆறுகளை
சாக்கடையாக்கிவிட்டோம், குப்பைகளை கொட்டி நகரின் மிகப்பெரும் திறந்தவெளி
குப்பைக்கிடங்காக மாற்றிவிட்டோம்
இப்படி நமது ஆறுகளுக்கு எதிராக எவ்வளவு கேடுகளை ஏற்படுத்த முடியுமோ,
அவ்வளவு கேடுகளையும் ஏற்படுத்திவிட்டு, நீர் நிலைகளை கெடுத்து குட்டி
சுவராக்கிவிட்டு, பிறகு நீர் ஆதாரம் கெட்டுவிட்டது என்று
புலம்புவதும்,அண்டை மாநிலத்தில் தண்ணீர் தர கெஞ்சுவதும் உண்மையில் அவலமான
நிலையே என்பதை தனது கார்ட்டூன் மூலம் விளக்கியுள்ளார் இவர்.
விளங்க வேண்டியவர்களுக்கு விளங்குமா?