தமிழகம்ஆல்பம்:

19-ஆக-2019
1 / 10
சென்னையில் பெய்த மழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் தேங்கிய மழைநீரில் செல்லும் வாகனங்கள்.
2 / 10
தாய் தன் மூச்சு காற்றை விற்று தன் பிள்ளையை வளர்த்த கடனை தீர்க்கத்தான் இன்று அவளுக்கு துணையாக நிற்கிறான் இந்த பிள்ளை. இடம் . கோவை காந்திபுரம்
3 / 10
கோபி கொடிவேரி நீர்த்தேக்க அணையில் இருந்து ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுகிறது
4 / 10
கோவையின் நீர் ஆதாரமாக உள்ள உக்கடம் பெரியகுளம்,குறிச்சி குளம் நிரம்பி வழிந்த அழகிய காட்சி.
5 / 10
சென்னை தாம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து காலை வேளையில் மழை பெய்து வருவதால், ஜிஎஸ்டி சாலையில் தேங்கிய தண்ணீரில் ஆர்ப்பரித்து கொண்டு வேகமாக வரும் வாகனங்கள். இடம்: பெருங்களத்தூர்.
6 / 10
பசுமையை போர்த்திய வனங்களில் நடந்து, எல்லையில்லா பயணங்களில் கடந்து வந்து, சென்று வந்த பாதைகளை திரும்பி பார்த்து நினைவு கூற வைக்கும் புகைப்பட தினம் இன்று. இடம்: வால்பாறை அருகே காடம்பாறை வனப்பகுதி.
7 / 10
எல்லையில்லா பயணங்களிலும் மறக்க முடியாத அனுபவங்களும் பதிவதும், மீண்டும் பார்ப்பதும் புகைப்படங்களில் தான் என்பதை நினைவு கூறும் புகைப்பட தினம் இன்று . இடம்: வால்பாறை அருகே
8 / 10
மெட்ராஸ் ஹெரிட்டேஜ் மோட்டாரிங் கிளப் சார்பில் சென்னை ஹெரிட்டேஜ் ஆட்டோ கண்காட்சி நேற்று நடந்தது, இதனை ஆர்வமுடன் பார்வையிட்ட பொதுமக்கள்.இடம் : திருவான்மியூர், சென்னை
9 / 10
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விருத்தாச்சலத்தில் விநாயகர் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
10 / 10
மலரில் உள்ள தேனை ருசிக்க வந்த தேன் சிட்டு குருவி. இடம்: மதுரை