தமிழகம்ஆல்பம்:

25-Sep-2012
1 / 20
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னை முழுவதும் வைக்கப்பட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.முன்னதாக ஆட்டம் பாட்டத்துடன் வாகனங்களில் அணிவகுத்து ஊர்வலமாக சென்ற சிலைகள். இடம்:நூறடிச் சாலை, அண்ணாநகர் மேற்கு.
2 / 20
மாமல்லபுரம் கோனேரி மண்டபம் அருகில், சமூகவிரோதிகளால் தீ வைத்து எரிக்கப்பட்ட பழங்காலத்து காட்டுவா மரம்.
3 / 20
காஞ்சிபுரம் - சென்னை சாலையில், பொன்னேரிக்கரை அருகே கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.
4 / 20
டூவிலர்களில் செல்வோர் "ஹெல்மெட்' அணிந்து செல்ல வலியுறுத்தி, சாத்தூரில் ஊர்வலமாக சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்.
5 / 20
கோவை இந்திய தொழில் வர்த்தகசபை சார்பில் "மணி மேட்டர்ஸ்' எனும் தலைப்பிலான கருத்தரங்கு, நடந்தது. இதில், சென்னை ஓரியண்டல் ஸ்டாக்ஸ் நாகப்பன் உள்படம்: "மணி மேட்டர்ஸ்' எனும் தலைப்பில் பேசினார்.
6 / 20
கற்பகம் பல்கலை சார்பில் நடந்த, தென் இந்திய அளவிலான வாலிபால் போட்டியில், பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கலை, அறிவியல் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.
7 / 20
ஊட்டி 17வது வார்டு மெயின்பஜார் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பார் இல்லாததால்,"குடிமகன்கள்' சாலையில் குடிப்பது தொடர்கிறது.
8 / 20
ஊட்டி அருகே கல்லட்டி பகுதியில் "ஆசியன் பேரிபூளுபேட்' பறவைகள் சாலையோர மரங்களில் அதிகளவில் காணப்படுகின்றன.
9 / 20
பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில், நாய்கள் தொந்தரவு அதிகரித்துள்ளது.
10 / 20
உடுமலை அருகே அந்தியூர் வரதராஜப்பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
11 / 20
வால்பாறையில் வனத்துறை சார்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவியர்.
12 / 20
திருப்பூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் மனைவி நல வேட்புநாள் விழா வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற தம்பதியினர் மாலை மாற்றி வாழ்த்து தவம் இயற்றினர்.
13 / 20
நெல்லிக்குப்பம் அடுத்த வான்பாக்கத்தில் கரும்பில் வெள்ளை ஈக்கள் தாக்குதலால் சோகைகள் காய்ந்துள்ளன.
14 / 20
பண்ருட்டி அடுத்த எலந்தம்பட்டு ஊராட்சியில் லட்சுமி நாராயணா மருத்துவமனை சார்பில் இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம் நடந்தது.
15 / 20
மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிக்கு வீரர்கள் தேர்வு முகாம் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது.
16 / 20
பழங்கள் விற்பனை "ஜோர்'... கோடை முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையாததால் கள்ளக்குறிச்சி பகுதிகளில் முலாம், தர்பூசணி, சாத்துக்குடி பழங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இடம் : வ.உ.சி., நகர்
17 / 20
மழை வேண்டி, ராஜபாளையம் சொக்கர்கோயில் தெருவை சேர்ந்த, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற, செவ்வாடை பக்தர்கள் கஞ்சி கலசம் ஏந்தி, ஊர்வலமாக சென்றனர்.
18 / 20
மேல்மலையனூர் ஒன்றியம் மேல்வயலாமூரில் இருந்து எதப்பட்டு செல்லும் தார் சாலை பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாததால் மண் சாலையாக மாறி உள்ளது.
19 / 20
விழுப்புரம் ரயிலடி செல்வ விநாயகர் கோவிலில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் தர்ஷிணி இசை பயிலக மாணவிகள் பக்தி பாடல்களை பாடினர்.
20 / 20
கண்டாச்சிபுரம் அடுத்த பீமாபுரத்தைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகள் களிமண் கலவையை நிரப்பி, தங்கள் விடுமுறை நாட்களை பயனுள்ளதாக மாற்றினர்.
Advertisement