தமிழகம்ஆல்பம்:

29-Dec-2012
1 / 20
ராமநாதபுரம் சாலைத்தெருவில் வணிக வளாகங்களில் "பார்க்கிங்' வசதி இல்லை. இதனால் ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
2 / 20
பொங்கல் பண்டிகையை யொட்டி வீட்டின் வாசலில் கட்டப்படும் கூரைப்பூ சாத்தனி கிராமத்தில்அதிக அளவில் பூத்துள்ளது.
3 / 20
சிவகாசியில் நடந்த ஆருத்ரா தரிசனத்தில், நடராஜர், சிவகாமி அம்பாள், பத்திரகாளியம்மன், மாரியம்மன் ஆகியோர், செவ்வந்தி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்களில், வீதி உலா வந்தனர்.
4 / 20
தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்காக, விருதுநகர் என்.சி.சி., மாணவர்களுக்கு, ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர். பாலிடெக்னிக்கில் பயிற்சி வழங்கப்பட்டது.
5 / 20
சிவகங்கை மதுரை முக்கு ரோட்டில் மழை நீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்பதால் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.
6 / 20
தேவகோட்டை தாலுகா அலுவலகம் அருகே பிளாஸ்டிக் கழிவு,குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது.
7 / 20
போதிய மழை பெய்யாததால், விருதுநகரின் குடிநீர் ஆதாரமான ஆனைக்குட்டம் அணை, வறண்டு காணப்படுகிறது.
8 / 20
அருப்புக்கோட்டை சொக்கநாதர் கோயிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
9 / 20
பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில், சிவகாம சுந்தரி சமேத நடராஜமூர்த்தி ஆருத்ரா தரிசனத்தன்று, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
10 / 20
சிவகங்கை அரண்மனை அருகே ரோட்டின் மையப்பகுதி வரை வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது
11 / 20
சிவகாசியில் நடந்த ஆருத்ரா தரிசனத்தையொட்டி, விற்பனைக்காக வந்த செங்கரும்புகள். விலை அதிகமானாலும் ஆர்வத்துடன் வாங்கிய மக்கள்.
12 / 20
ராஜபாளையம் வனத்துறை செக்@பாஸ்ட் அருகே, தகவல் அழிந்த நிலையில் உள்ள, Œõம்பல் நிற அணில் சரணாலய விழிப்புணர்வு போர்டு.
13 / 20
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள காவல் கட்டுப்பாட்டு அறையின் முன்பகுதி வாகன ஸ்டாண்ட்டாக மாறி வருகிறது.
14 / 20
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் நடராஜர், சிவகாமிஅம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
15 / 20
தைப்பூசத்தை முன்னிட்டு, தற்போதே ஏராளமான பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரையாக வர துவங்கியுள்ளனர்.
16 / 20
பழநி திருஆவினன்குடி கோயில் தெற்கு நுழைவு பகுதி அருகே, கழிவு நீர் ரோட்டில் செல்வதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்
17 / 20
கதிரவனின் ஒளிக்கீற்று தென்னை மரங்களில் பட்டு, அழகாய் ஊடுருவிய காட்சி. இடம் :தேனி முத்துதேவன்பட்டி
18 / 20
திண்டுக்கல் அனுமந்தநகர் ரோடு சேதமடைந்துள்ளது. சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
19 / 20
பழநி கோயில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தும் பின்புறத்தில், குப்பையை தீ வைத்து எரிப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
20 / 20
கரட்டுப்பட்டி-அணைப்பட்டி அகலப்படுத்தும் பணி நின்று போனதால், விளாம்பட்டி அருகே ரோடு மோசமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக உள்ளது.