முதலாம் ஆண்டு திருமண நாளில்... குழந்தைகளுடன் நயன்தாரா உற்சாகம் !
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் நயன்தாரா.
இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்த நிலையில், கடந்த ஜூன் 9ல் கோலாகலமாக திருமணம் நடந்தது.
தொடர்ந்து, கடந்த அக்., 9ம் தேதி இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக, விக்னேஷ் சிவன் சோஷியல் மீடியாவில் தெரிவித்திருந்தார்.
வாடகைத்தாய் மூலம் குழந்தைகளைப் பெற்றது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என பெயரிட்டனர்.
இந்நிலையில், நயன்தாரா -விக்னேஷ் சிவனுக்கு திருமணமாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.
இதை கொண்டாடும் வகையில், குழந்தைகளுடன் நயன்தாரா உற்சாகமாக உள்ள புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
சோஷியல் மீடியாவில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.