2022 - டாப் 5 ஹீரோக்கள், ஹீரோயின்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக கடந்த 40 வருடங்களை கடந்த கமல்ஹாசனுக்கு, இதுவரை கிடைக்காத வெற்றி, அதிக வசூல் இந்தாண்டில் வெளிவந்த விக்ரம் படத்திற்குக் கிடைத்துள்ளது.
இந்தாண்டில் விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய மூன்று படங்களும் லாபத்தை அள்ளித் தந்ததால், திரையுலகப் பயணத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறார் கார்த்தி.
பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடல் விஜய்யின் பிரபலத்தை இன்னும் ஒரு படி மேலே உயர்த்தியுள்ளது. அடுத்து வெளிவர உள்ள வாரிசு படத்தின் வெற்றிதான் யார் நம்பர் 1 என்பதை தீர்மானிக்கும்.
இந்தாண்டில் வெளிவந்த வலிமை படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இருப்பினும், 2 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தை திரையில் பார்த்ததையே அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.
முன்னணி ஹீரோக்களின் சில படங்களே இந்த ஆண்டில் தடுமாறிக் கொண்டிருந்த போது, தனது 'லவ்டுடே' படம் மூலமாக கோலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியவர் பிரதீப் ரங்கநாதன்.
குந்தவையாக த்ரிஷாவா என அதிர்ச்சியான பலரும் படத்தைப் பார்த்த பின் ஆச்சரியப்பட்டனர். முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயை விடவும் த்ரிஷாவுக்குப் பாராட்டுக்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.
பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் அனைவரையும் வசீகரித்த ஐஸ்வர்ய லெட்சுமி, கட்டா குஸ்தி படத்தில் குஸ்தி வீராங்கனையாக நடித்து வியக்க வைத்துள்ளார்.
தமிழ் சினிமா இன்னும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாத சாமர்த்தியசாலி சாய் பல்லவி. இருப்பினும் இந்த ஆண்டில் இவரின் நடிப்பில் வெளிவந்த 'கார்கி' திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்த ஒரு படமாக இருந்தது.
'திருச்சிற்றம்பலம்' படத்தில் நித்யா மேனன் ஏற்று நடித்த, ஷோபனா
கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் நிரந்தரமாகப் பேசப்படக் கூடிய ஒரு
கதாபாத்திரம் என்பதை மறுக்க முடியாது.
முன்னணி நடிகைகளே இந்தாண்டில் தடுமாறிக் கொண்டிருந்த போது, கதாநாயகி வாய்ப்பு தந்த 'லவ் டுடே' குழுவினருக்கு, தன் திறமையான நடிப்பின் மூலம் நன்றியைப் பதிவு செய்துள்ளார் இவானா.