இறந்தவர்களின் 'ஏஐ' குரல் பதிவு : குடும்பத்தினரிடம் அனுமதி பெற்றதாக ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் விஷ்ணு விஷால், விக்ராந்த் சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் 'லால் சலாம்'.

இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் 'திமிறி எழுடா' என்ற பாடல் 'ஏஐ' மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

மறைந்த பாடகர்களான ஷாகுல் அமீது, பாம்பே பாக்யா ஆகியோரது குரலை 'ஏஐ' மூலம் உருவாக்கி அப்பாடலை அமைத்திருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.

அது குறித்து பலரும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்திருந்தார்கள்.

டெக்னாலஜி மூலம் மறைந்தவர்களது குரலையும், உருவத்தையும் பயன்படுத்துவது சரியல்ல என்றும் சொன்னார்கள்.

அவர்களது குடும்பத்தினரிடம் இதற்காக அனுமதி பெற்றோம். மேலும, நல்லதொரு சம்பளமும் அதற்காக அளிக்கப்பட்டுள்ளது. - ஏ.ஆர்.ரஹ்மான்

'டெக்னாலஜி என்பதை சரியாகப் பயன்படுததினால் அது ஆபத்தல்ல, தொல்லையும் அல்ல…' எனக் குறிப்பிட்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.