ஆலியாவின் ரூ.20 கோடி வைர நெக்லஸ் இணையத்தில் டிரெண்டிங்!
இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரும் கூட.
'ஆர்ஆர்ஆர்' படத்தில் கதாநாயகியாக நடித்ததால் தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கும் அறிமுகமானவர்.
சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற 'ஹோப் காலா' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொகுத்து வழங்கியுள்ளார்.
நீல நிற சபையர் கல், வைரம் பதித்த அந்த நெக்லஸ் ஆலியாவின் அழகான கழுத்தை அலங்கரித்துள்ளது. அதன் மதிப்பு சுமார் ரூ.20 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
அது அவரின் ரெட் ஒயின் நிற கவுனிற்கு பொருத்தமாக இருந்தது.
நெக்லஸைத் தவிர, இத்தாலிய நகை பிராண்டான பல்கேரியில் இருந்து பொருத்தமான நீலக்கல் மோதிரத்தையும் அவர் அணிந்திருந்தார்.
பேஷன் உலகில் லட்சங்களில் ஆடைகள், ஹேண்ட் பேக்குகள், ஷுக்கள் என கடந்து அவர் அணிந்த நெக்லஸ் பாலிவுட்டின் காஸ்ட்லி பேஷனாக கருதப்படுகிறது.
இந்தியாவில் உள்ள ஆதரவற்ற இளம் வயதினருக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சியில்தான் ஆலியா அந்த நெக்லஸை அணிந்து விழாவைத் தொகுத்து வழங்கியுள்ளார்.