நீங்கள் முதல் முறை பெற்றோரா? அப்போ இது உங்களுக்குத்தான்!
ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள். மற்ற குழந்தைகளின் வளர்ச்சி, குணாதிசயங்களுடன் ஒப்பிடாமல், உங்கள் குழந்தையின் வளர்ச்சியை மட்டும் கண்காணிக்க வேண்டும்.
வயதுக்கேற்ற வளர்ச்சி உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
முதல் ஆறு மாதம் கட்டாயம் தாய்ப்பால் வேண்டும். ஆறு மாதத்திற்கு மேல் இணை உணவு சேர்க்க வேண்டும்.
தடுப்பூசிகளை சரியான நேரத்தில் போட வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் அனைத்து தகவல்களையும் நம்பாமல், குழந்தைகள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
குழந்தைகள் வளர்ச்சி ஒவ்வொருவருக்கும், சிறிய வித்தியாசத்துடன் இருக்கும்.
18 மாதங்கள் கடந்தும் நடக்காவிட்டாலோ, அர்த்தமுள்ள ஒரு சிறு வார்த்தை கூட பேசாவிட்டாலோ, பெற்றோரின் குரல், கண் தொடர்பு, அழைப்புக்கு பதிலளிப்பதில் குறைபாடு இருந்தாலோ...
இரண்டு வயதிலும் இரண்டு வார்த்தைகள் இணைத்து பேச முடியவில்லை என்றாலோ, அவை தாமத வளர்ச்சி. உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரை அணுக வேண்டும்.